திங்கள், 24 ஏப்ரல், 2017

முருகன் இயற்கை வழிபாடு திரு.வி.க மதம் மெய்யியல்

aathi tamil aathi1956@gmail.com

9/8/15
பெறுநர்: எனக்கு
பார்க்கவன் தமிழன் என்பவர்
தமிழ்வேந்தன் தமிழன் மற்றும் 25 பேர் ஆகியோருடன்
முருகன் எவன்? முருகையுடையவன் முருகன். முருகு என்றால் என்ன? முருகு
என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்பாய்
குறிக்க தக்கன நான்கு. அவை மணம்,அழகு,இறைதண்மை,இளமை என்பனவாகும்.
______________________
இயற்கை உணர துவங்கிய மாந்தர் தம் இயற்கையின் அழகையும் இளமையும்
மணத்தையும் அதனுள் அடங்கியிருக்கும் இறைத்தன்மையை வழிபட துவங்கினர் அதுவே
முருகு வழிபாடு.
# பின்னை_திரிபுகள் .
மொழி வளர்ந்து ஆக்கம் பெறப் பெற முருகனை பற்றிய பாடல்கள் பல எழுந்தன.
புலவர்கள் நேர இயற்கையில் நாட்டங்கொண்டு பாடிவருகையில் செம்மையாகவே
இருந்தது.
பின்நாட்களிலே இயற்கையை நாடாது ஒவிய எடுப்புக்களையே பொருளாய் கருதி
பாடப்பெற்றபோது அம் மெய்யியல் நெறி திரிய துவங்கிற்று.
வரலாற்று உலகிலே புகுந்து நோக்கினாற் நமது நாட்டிலே எத்துணை
கொள்கையுடையோர் புகுந்தனர் என்பது தெரிய வரும். அவரவர் விரும்பியவார்
செம்மை நெறியை திரித்து விட்டனர் என திரு.வி.க குறிப்பிடுகிறார்.
நமது நாட்டிலே மெய்யியல் செந்நெறியை பல கவட்டைகளாக பிரிக்கப்பட்டன. அவை
ஆசிவகம், சைவம், விண்ணவம், சமண, பெளத்தம் என பலவராய். இச் சமயங்கொண்ட
அறிஞரோ இயற்கைக் குரிய வழிகளாகவே அவைகளை கோலினர். அவர்தம் வழி வந்த
சழக்கர் கூட்டங்கள் இடையே நடந்த வாத தர்க்கத்தாலும் மெய்யியல் நெறி
திரிந்து சமய மூடதனங்கள் பிறந்தாயிற்று. இப்போராடத்தில் பல மறுப்பு
நூல்கள் எழ துவங்கிற்று அவையாவும் தத்தம் சமய வெறிய கக்கின. அதனால்
முருகனை பற்றிய பல திரபட்ட கதைப் புரட்டுகளும் முருகன் விமர்சனங்களும்
உருவாயிருப்பது கண்கூடு.
முருகன் இயற்கையை உடாலாக்கொண்ட உயிர் எனும் பழந்தமிழர் கொள்கையை உணர்ந்து
மெய்யியல் நெறியை கடைபிடித்தலே சரி. இதை பற்றி மேலும் விரிவாய் ஒரு
கட்டுரை பின்னர் எழுதுகிறேன். அதனில் இருந்து நீங்கள் உணரலாம் முருகு
வழிபாடு மெய்யியல் செந்நெறி வழிபாடு என- பார்க்கவன் தமிழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக