|
22/6/15
| |||
பன்னாட்டு ஓக நாளை முன்னிட்டு
சென்னையில் நடைபெற்ற தமிழர் ஓகப்
பயிலரங்கம் ! தமிழர் ஓக வரலாறும்
கலைகளும் மீட்பு !
உலகமே இன்று கொண்டாடும் ஓகம் என்னும்
உடல் உயிர் ஓம்பும் பயிற்சியானது
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள்
இவ்வுலகிற்கு கொடுத்த கொடையாகும்.
இதை வழங்கியது தமிழகத்தில் தோன்றிய
சித்தர்கள் ஆவர். மனிதன் தன்னுடைய
உடலையும் உயிரையும் செம்மைப்படுத்த
அறிவர்களாகிய சித்தர்கள் இந்த ஓகக் கலையை
உருவாக்கினர். இக்கலையை அறிந்து கொள்ள
உலக நாடுகளில் இருந்து பல அறிஞர்
பெருமக்கள் தமிழகம் வந்துள்ளனர். இங்குள்ள
சித்தர்களும் பல தேசங்களுக்கு சென்று அந்த
தேசங்களின் மொழியிலேயே ஓகத்தை குறித்து
எழுதியுள்ளனர். இந்திய கண்டத்தின் வடதிசை
சென்று அங்கு வடமொழியில் ஓகப்பயிற்சி
குறித்து எழுதியுள்ளனர். வடமொழியில்
இப்பயிற்சி எழுதப்பட்டதால் வடவர்களும்,
இந்தியர்களும் இப்பயிற்சி இந்தியர்கள் தான்
கண்டுபிடித்தனர் என்ற தவறான முடிவுக்கு
வந்தனர். சித்தர்கள் வழங்கிய இந்த ஒப்பற்ற
ஓகக்கலையை வட இந்திய வேத மதத்தினர்
தான் அறிமுகப்படுத்தினர் என்று பலரும்
நம்பவும் தொடங்கினர்.
இந்த தவறான கருத்தியலை முறியடிக்கும்
விதத்திலும், தமிழர் கலையை மீட்கும்
பொருட்டிலும் சென்னையில் உள்ள 'தமிழர்
உலகம்' அலுவலகத்தில் ஓகம் குருகுலமும்
தமிழர் பண்பாட்டு நடுவமும் இணைந்து
தமிழர் ஓகப் பயிலரங்கத்தை ஏற்பாடு
செய்தனர் . இணையத்தின் ஊடக இதற்கான
அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள்
பலரும் இந்த அழைப்பை ஏற்று நேரடியாக
இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உடலை பேணுவதற்கு தேவையான அடிப்படை
ஓகப் பயிற்சிகளை தமிழர் முறைப்படி ஓக
ஆசான் திரு. அசித்தர் அவர்கள் எல்லோருக்கும்
அறிமுகப்படுத்தினார். ஓக குருகுலத்தில்
பயிலும் சிறுவர்கள் தமிழ் மொழியில் ஓக
இருக்கைகளின் பெயர்களுக்கு ஏற்ப பல்வேறு
ஓக இருக்கைகளை செய்து காட்டினர். சிலம்பக்
கலையின் அடிப்படையும் இந்நிகழ்வில்
அசித்தர் அவர்கள் கற்றுக் கொடுத்தார். தமிழர்
மெய்யியலோடு சேர்ந்த ஓக வரலாறும் ,
ஓகத்தின் பல்வேறு நுணுக்கங்களையும்
சிறப்பாக செய்முறை விளக்கங்களோடு
எடுத்துரைத்தார் ஓக ஆசான் அசித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய இராச்குமார்
பழனிசாமி தமிழர் மதத்தின் வரலாறும், தமிழர்
ஓகம் எவ்வாறு தோன்றியது என்பதை
குறித்தும், தமிழ்க் கடவுளர்களை பற்றியும்,
தமிழர்களின் இயற்கை சார்ந்த வழிபாட்டு
முறைகளை பற்றியும் விளக்கிக் கூறினார்.
ஓகம் என்ற சொல்லின் வேர் எங்கிருந்து
வந்தது , சங்க இலக்கியங்களில் எங்கு
சொல்லப்பட்டுள்ளது போன்ற தகவலை
வழங்கினார். ஓகம் மட்டுமல்லாது பல்வேறு
தமிழர் கலைகள் எவ்வாறு வடவர்களால்
களவாடப்பட்டது, பெயர் மாற்றம் பெற்றது
போன்ற தகவலையும் வழங்கினார்.
அடுத்ததாக தமிழ் சித்தர்கள் இவ்வுலகிற்கு
வழங்கிய உயிர் வளர் கலையான தமிழ்
உயிரெழுத்து ஓகம் என்னும் பயிற்சியை
வந்திருந்தவர்களுக்கு செய்து காட்டினார்.
தமிழ் எழுத்துக்களின் ஓசையால் உடலை
இயக்கும் இக்கலையை அனைவரும்
பொறுமையுடன் , மகிழ்ச்சியுடன் கற்றுக்
கொண்டனர். நமது உடலில் உள்ள ஆற்றல்
சக்கிரங்களை எவ்வாறு தமிழ் எழுத்துக்களை
வைத்து இயக்குவது என்பதை
செய்முறையோடு விளக்கினார் இராச்குமார்
பழனிசாமி.
இதனை தொடர்ந்து மனத்தை
ஒருநிலைப்படுத்தவும், இயற்கையோடு நம்
உயிரை இணைக்கவும் ஒளிநிலை ஓகப்பயிற்சி
செய்து காண்பிக்கப்பட்டது. வள்ளலார்
இவ்வுலகிற்கு வழங்கிய இந்த ஒளியின் ஊடாக
அண்டத்தை அறியும் ஒளிநிலை ஓகம் என்னும்
இப்பயிற்சியை எல்லோரும் எளிமையாக
கற்றுக் கொண்டனர். சுமார் பத்து நிமிடங்கள்
இப்பயிற்சியை மேற்கொண்டாலே எளிமையாக
நமது மனதை கட்டுப்படுத்தலாம். நமது
எண்ண ஓட்டத்தை சீர்படுத்தலாம். தமிழர்கள்
ஒவ்வொருவரும் அறிய வேண்டிய
பயிற்சிமுறை இது.
இப்படியாக பல அரிய தகவல்களுடன் இந்த
தமிழர் ஓகப் பயிலரங்கம் நிறைவு பெற்றது,
இப்படியான தமிழர் ஓகப் பயிலரங்கம்
ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டும்
என்று வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் கேட்டுக்
கொண்டனர் . இதற்கான வாய்ப்புகள்
அமைந்தால் நிச்சயம் தமிழகத்தில் உள்ள பல
பகுதிகளுக்கு சென்று நாம் இப்பயிலரங்கங்கள
ை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
தமிழ் ஆர்வலர்கள் அவரவர் இடங்களில் இது
போன்ற தமிழர் ஓகப் பயிலரங்கை நடத்தி
தமிழர்களின் நலனை உறுதி செய்ய
முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இழந்த நம் வரலாற்றை, பண்பாட்டை,
கலைகளை, அடையாளங்களை மீட்போம்.
தமிழர் என்ற பெருமையுடன் தரணியில்
வாழ்வோம். வாழ்க தமிழ் !
சென்னையில் நடைபெற்ற தமிழர் ஓகப்
பயிலரங்கம் ! தமிழர் ஓக வரலாறும்
கலைகளும் மீட்பு !
உலகமே இன்று கொண்டாடும் ஓகம் என்னும்
உடல் உயிர் ஓம்பும் பயிற்சியானது
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள்
இவ்வுலகிற்கு கொடுத்த கொடையாகும்.
இதை வழங்கியது தமிழகத்தில் தோன்றிய
சித்தர்கள் ஆவர். மனிதன் தன்னுடைய
உடலையும் உயிரையும் செம்மைப்படுத்த
அறிவர்களாகிய சித்தர்கள் இந்த ஓகக் கலையை
உருவாக்கினர். இக்கலையை அறிந்து கொள்ள
உலக நாடுகளில் இருந்து பல அறிஞர்
பெருமக்கள் தமிழகம் வந்துள்ளனர். இங்குள்ள
சித்தர்களும் பல தேசங்களுக்கு சென்று அந்த
தேசங்களின் மொழியிலேயே ஓகத்தை குறித்து
எழுதியுள்ளனர். இந்திய கண்டத்தின் வடதிசை
சென்று அங்கு வடமொழியில் ஓகப்பயிற்சி
குறித்து எழுதியுள்ளனர். வடமொழியில்
இப்பயிற்சி எழுதப்பட்டதால் வடவர்களும்,
இந்தியர்களும் இப்பயிற்சி இந்தியர்கள் தான்
கண்டுபிடித்தனர் என்ற தவறான முடிவுக்கு
வந்தனர். சித்தர்கள் வழங்கிய இந்த ஒப்பற்ற
ஓகக்கலையை வட இந்திய வேத மதத்தினர்
தான் அறிமுகப்படுத்தினர் என்று பலரும்
நம்பவும் தொடங்கினர்.
இந்த தவறான கருத்தியலை முறியடிக்கும்
விதத்திலும், தமிழர் கலையை மீட்கும்
பொருட்டிலும் சென்னையில் உள்ள 'தமிழர்
உலகம்' அலுவலகத்தில் ஓகம் குருகுலமும்
தமிழர் பண்பாட்டு நடுவமும் இணைந்து
தமிழர் ஓகப் பயிலரங்கத்தை ஏற்பாடு
செய்தனர் . இணையத்தின் ஊடக இதற்கான
அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள்
பலரும் இந்த அழைப்பை ஏற்று நேரடியாக
இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உடலை பேணுவதற்கு தேவையான அடிப்படை
ஓகப் பயிற்சிகளை தமிழர் முறைப்படி ஓக
ஆசான் திரு. அசித்தர் அவர்கள் எல்லோருக்கும்
அறிமுகப்படுத்தினார். ஓக குருகுலத்தில்
பயிலும் சிறுவர்கள் தமிழ் மொழியில் ஓக
இருக்கைகளின் பெயர்களுக்கு ஏற்ப பல்வேறு
ஓக இருக்கைகளை செய்து காட்டினர். சிலம்பக்
கலையின் அடிப்படையும் இந்நிகழ்வில்
அசித்தர் அவர்கள் கற்றுக் கொடுத்தார். தமிழர்
மெய்யியலோடு சேர்ந்த ஓக வரலாறும் ,
ஓகத்தின் பல்வேறு நுணுக்கங்களையும்
சிறப்பாக செய்முறை விளக்கங்களோடு
எடுத்துரைத்தார் ஓக ஆசான் அசித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய இராச்குமார்
பழனிசாமி தமிழர் மதத்தின் வரலாறும், தமிழர்
ஓகம் எவ்வாறு தோன்றியது என்பதை
குறித்தும், தமிழ்க் கடவுளர்களை பற்றியும்,
தமிழர்களின் இயற்கை சார்ந்த வழிபாட்டு
முறைகளை பற்றியும் விளக்கிக் கூறினார்.
ஓகம் என்ற சொல்லின் வேர் எங்கிருந்து
வந்தது , சங்க இலக்கியங்களில் எங்கு
சொல்லப்பட்டுள்ளது போன்ற தகவலை
வழங்கினார். ஓகம் மட்டுமல்லாது பல்வேறு
தமிழர் கலைகள் எவ்வாறு வடவர்களால்
களவாடப்பட்டது, பெயர் மாற்றம் பெற்றது
போன்ற தகவலையும் வழங்கினார்.
அடுத்ததாக தமிழ் சித்தர்கள் இவ்வுலகிற்கு
வழங்கிய உயிர் வளர் கலையான தமிழ்
உயிரெழுத்து ஓகம் என்னும் பயிற்சியை
வந்திருந்தவர்களுக்கு செய்து காட்டினார்.
தமிழ் எழுத்துக்களின் ஓசையால் உடலை
இயக்கும் இக்கலையை அனைவரும்
பொறுமையுடன் , மகிழ்ச்சியுடன் கற்றுக்
கொண்டனர். நமது உடலில் உள்ள ஆற்றல்
சக்கிரங்களை எவ்வாறு தமிழ் எழுத்துக்களை
வைத்து இயக்குவது என்பதை
செய்முறையோடு விளக்கினார் இராச்குமார்
பழனிசாமி.
இதனை தொடர்ந்து மனத்தை
ஒருநிலைப்படுத்தவும், இயற்கையோடு நம்
உயிரை இணைக்கவும் ஒளிநிலை ஓகப்பயிற்சி
செய்து காண்பிக்கப்பட்டது. வள்ளலார்
இவ்வுலகிற்கு வழங்கிய இந்த ஒளியின் ஊடாக
அண்டத்தை அறியும் ஒளிநிலை ஓகம் என்னும்
இப்பயிற்சியை எல்லோரும் எளிமையாக
கற்றுக் கொண்டனர். சுமார் பத்து நிமிடங்கள்
இப்பயிற்சியை மேற்கொண்டாலே எளிமையாக
நமது மனதை கட்டுப்படுத்தலாம். நமது
எண்ண ஓட்டத்தை சீர்படுத்தலாம். தமிழர்கள்
ஒவ்வொருவரும் அறிய வேண்டிய
பயிற்சிமுறை இது.
இப்படியாக பல அரிய தகவல்களுடன் இந்த
தமிழர் ஓகப் பயிலரங்கம் நிறைவு பெற்றது,
இப்படியான தமிழர் ஓகப் பயிலரங்கம்
ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டும்
என்று வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் கேட்டுக்
கொண்டனர் . இதற்கான வாய்ப்புகள்
அமைந்தால் நிச்சயம் தமிழகத்தில் உள்ள பல
பகுதிகளுக்கு சென்று நாம் இப்பயிலரங்கங்கள
ை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
தமிழ் ஆர்வலர்கள் அவரவர் இடங்களில் இது
போன்ற தமிழர் ஓகப் பயிலரங்கை நடத்தி
தமிழர்களின் நலனை உறுதி செய்ய
முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இழந்த நம் வரலாற்றை, பண்பாட்டை,
கலைகளை, அடையாளங்களை மீட்போம்.
தமிழர் என்ற பெருமையுடன் தரணியில்
வாழ்வோம். வாழ்க தமிழ் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக