சனி, 29 ஏப்ரல், 2017

கேரளா தமிழ் நிலம் காமராசர் விட்டது மண்மீட்பு 1956 மலையாளி

aathi tamil aathi1956@gmail.com

18/4/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
கேரளத்திலிருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள்
முழுமையாக
==============================
=======================
தமிழகத்தோடு இணைந்ததா???
=============================
1956 வரை தமிழகத்தில் கன்னியாகுமரி என்ற
மாவட்டம் இருந்ததில்லை. மொழி வாரி மாநிலங்கள்
உருவாக்க என்று ஒரு ஆணையம் 1956 ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. எஸ்.பசல் அலி, கே.எம். பணிக்கர்
என்ற மாதவ பணிக்கர் மற்றும் ஹெச்.என். குன்ஸ்ரூ
ஆகியோர் அடங்கிய இக்கமிஷன் மொழி வாரி
மாநிலங்கள் அமைக்க சில பரிந்துரைகள்
மேற்கொண்டது. இப்பரிந்துரைகள் ஒருதலைப்
பட்சமானதும் தமிழர்களுக்கு எதிரானதுமாக
அமைந்தது. இது குறித்து அப்போதைய திராவிட
அமைப்புகள் பாராமுகமாக இருந்து விட்டன. மார்ஷல்
நேசமணி மற்றும் ம.பொ. சிவஞானம் ஆகியோர் மட்டுமே
பெரும் போராட்டங்களை நடத்தினர். பெருந்தலைவர்
காமராஜர் முதல்வராக இருந்ததால் அனைத்துப்
பழிகளும் அவர் மேல் விழுந்தன. காமராஜர் மீது
பழிகள் எவ்வாறு விழுந்தன என்பதை நாம் ஆராய்வோம்.
அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர்கள்
பெரும்பான்மையாக வசித்த வட்டங்கள் (தாலுகா)
இருந்தன. அவை, தோவாளை, கல்குளம், அகஸ்தீஸ்வரம்,
விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு,
புணலூர், சடையமங்கலம், சாத்தனூர், பீர்மேடு,
நெடுங்குன்னம், தேவிகுளம் மற்றும் கொச்சின்-சித்தூ
ர் மாநிலத்தின் சித்தூர் தத்தமங்கலம், மன்னார்காடு
ஆகியவை ஆகும். மாநில மறுசீராய்வு கமிஷனில்
இருந்த கே.எம்.பணிக்கர் ஒரு இனவெறி மலையாளி
ஆவார். இவர் பண்டித நேருவுக்கு நெருக்கமான
நபரும் ஆவார். இவர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும்
தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் அகஸ்தீஸ்வரம்
ஆகிய வட்டங்களை தமிழகத்தோடு இணையும் என்று
அறிவிக்கப்பட்டன. எனினும், நெய்யாற்றின்கரை,
நெடுமங்காடு ஆகிய வட்டங்கள் கேரளத்தோடு தொடரும்
என்று அறிவிக்கப் பட்டது. இவ்வட்டங்களில்
தமிழர்களே பெரும்பான்மை ஆவர். மார்ஷல் நேசமணி
குறைந்த பட்சம் நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு,
புணலூர், பீர்மேடு, தேவிகுளம் மற்றும் சித்தூர்
தத்தமங்கலம் ஆகிய வட்டங்களை இணைக்க வேண்டுமென
முறையிட்டார்.
புணலூர், சாத்தனூர் மற்றும் சடையமங்கலம் ஆகிய
வட்டங்கள் கொல்லம் மாவட்டத்திலும், தேவிகுளம்,
நெடுங்குன்னம் மற்றும் பீர்மேடு ஆகிய வட்டங்கள்
இடுக்கி மாவட்டத்திலும், சித்தூர் தத்தமங்கலம்
மற்றும் மன்னார்காடு ஆகிய வட்டங்கள் பாலக்காடு
மாவட்டத்திலும் உள்ளன. மார்ஷல் நேசமணி எவ்வளவோ
முறையிட்டும் மாநில மறுசீராய்வு கமிஷன் அவரது
முறையீடுகளை கணக்கில் கொள்ளவில்லை. இதற்கு
கே.எம்.பணிக்கரின் இன வெறியும் ஜவஹர்லால்
நேருவிடம் அவருக்கிருந்த நெருக்கமும் காரணங்கள்
ஆகும். இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க
நேசமணி கடும் போராட்டங்கள் நடத்தினார்,
இப்போராட்டங்களை மாநில அரசு கண்டு கொள்ளவில்லை.
காமராஜர் மேடாவது குளமாவது எல்லாம்
இந்தியாவுக்குள் தானே இருக்கிறது என்று அறிக்கை
விட்டதாக வரலாறு செப்புகிறது.
குமரியை இணைத்த காமராஜர் ஏன் இடுக்கியை கண்டு
==============================
=================
கொள்ளவில்லை???
===================
நண்பர்களே இந்த இந்தியாவால் தமிழர்கள் இழந்தது
ஏராளம். இன்னமும் தமிழர்களின் பகுதிகள் அண்டை
மாநிலங்களில் உள்ளன. அங்கும் தமிழர்கள் இரு
மொழியாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். குமரி
மாவட்டம் என்ற மாவட்டம், கேரளத்தில் இருந்து
பிரிக்கப் பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு
மற்றும் கல்குளம் ஆகிய வட்டங்களை வைத்து 1956 ஆம்
ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பகுதிகளில்
தமிழர்களான நாடார்கள் 70 விழுக்காட்டுக்கும்
அதிகமாக உள்ளனர். இப்போது ஒரு கேள்வி
எழுகிறது, அப்படியெனில் எஞ்சிய பகுதிகளை ஏன்
காமராஜர் வென்றெடுக்க எந்த முயற்சியும்
எடுக்கவில்லை என்று. அந்த பகுதிகளில் காமராஜர்
சார்ந்த நாடார்கள் குறைவாக இருப்பதே அக்காரணம்
என்று ஒரு மலிவான பரப்புரை முன்வைக்கப்
படுகிறது.
இப்படியான பரப்புரை தவறானது. மார்ஷல் நேசமணி
அவர்கள் நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை, புணலூர்,
சாத்தனூர், சடையமங்கலம், தேவிகுளம், பீர்மேடு
மற்றும் சித்தூர் தத்தமங்கலம் ஆகிய பகுதிகளை
தமிழகத்தோடு இணைத்திட தீவிரம் காட்டினார். கேரள
அரசோ இப்படி எல்லாப் பகுதிகளையும் தமிழகத்தோடு
இணைத்தால் கேரளத்துக்கு ஒரு வளமும் கிடைக்காது
என்று முறையிட்டமையால், நேசமணி அவர்கள்
சாத்தனூர் மற்றும் சடையமங்கலம் பகுதிகளை
தமிழகத்தோடு இணைத்திட கோராமல் எஞ்சிய
நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை, புணலூர்,
தேவிகுளம், பீர்மேடு மற்றும் சித்தூர் தத்தமங்கலம்
ஆகிய பகுதிகளை இணைத்திட போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றார். ஆனால் கேரள அரசு
மலைவளம் மற்றும் நீர் வளம் மிக்க நெடுமங்காடு,
நெய்யாற்றின்கரை மற்றும் புணலூர் ஆகிய வட்டங்களை
விட்டுத் தர மறுத்துவிட்டது. காமராஜர்
இப்பகுதிகளை தமிழகத்தோடு இணைத்திட புவியியல்
பூர்வமாக இணைத்திட சாத்தியம் இல்லை என்ற கருத்தை
பதிவு செய்தார். இத்தனைக்கும் நெடுமங்காடு
மற்றும் நெய்யாற்றின்கரை வட்டங்களில் தமிழர்களான
நாடார்களே இன்றளவும் பெரும்பான்மையாக
வாழ்கின்றனர்.
கொல்லம் மாவட்டம், புணலூர் வட்டத்தை தமிழகத்தோடு
இணைக்க நேசமணி அவர்கள் போராடியபோது அதே
புவியியல் கருத்தினை முன்னிறுத்தி புணலூரை
கேரளத்துடன் தொடர மொழி வாரி மாநில கமிஷன்
பரிந்துரைத்தது. புணலூரில் இரு மொழியாளர்களான
மலங்கரை கத்தோலிக்க நாடார்களே பெரும்பான்மை,
சாதியை முன்னிறுத்தி காமராஜர் அரசியல்
செய்திருந்தால் நினைத்திருந்தால் புணலூர்
தமிழகத்தோடு இணைந்திருக்கும், ஆனால் காமராஜர்
அப்படிச் செய்யவில்லை.
இப்போது இடுக்கி மாவட்டத்திற்கு வருவோம், கடந்த
காலத்தில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்
கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளைக்கொண்டது இடுக்கி
மாவட்டம். இங்கு சுமார் 70% தமிழர்கள் ஆவர்.
தமிழர்களில் மலங்கரை கத்தோலிக்க நாடார்களே
பெரும்பான்மை ஆவர். அய்யா வழி நாடார்கள், பிரமலை
கள்ளர்கள், மறவர், பள்ளர் ஆகியோரும் குறிப்பிடத்தக்க
எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இங்கு மலையாளிகள்
25% மட்டுமே உள்ளனர். உடும்பன்சோலை, பீர்மேடு,
தேவிகுளம், தொடுபுழை ஆகிய தொகுதிகளில்
நாடார்கள் கணிசமானோர் உள்ளனர். இதனால் இதனை
வலியுறுத்தி மார்ஷல் நேசமணி போராடினார். ஆனால்,
மலையாள இனவெறி பிடித்த கே.எம்.பணிக்கர் தமக்கு
அங்கு எஸ்டேட்கள் பல உள்ளதால் அதனை விட்டுத்
தரமுடியாது என்று நேருவிடம் பகிரங்கமாக
தெரிவித்தார். இதனை காமராஜரிடம் தெரிவித்த
நேரு, இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க
கே.எம்.பணிக்கர் மறுப்பதால் அதனை விட்டுத் தர
வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இந்திய
தேசியவாதியான பெருந்தலைவர் காமராஜர்
“குளமாவது மேடாவது, எல்லாம் இந்தியாவிற்குள்
தான் உள்ளது” என்று கூறி மார்ஷல் நேசமணி
அவர்களின் போராட்டத்தை ஒடுக்கினார். இன்றளவும்
நாடார்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடுக்கி
மாவட்டம், கேரளத்தில் உள்ளதற்கு இது தான் காரணம்.
இப்போது சித்தூர் தத்தமங்கலம் வருவோம். இப்பகுதி
பாலக்காட்டு கணவாய்க்கு அப்பால் இருந்தது. இங்கு
கொங்கு நாடார், கொங்கு வெள்ளாளர், பாலக்காட்டு
மன்றாடியார், பள்ளர், பளியர் ஆகியோர் கணிசமாக
உள்ளனர். அருகில் உள்ள காசர்கோடு மாவட்டம்
மாப்பிள்ளை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள
மாவட்டம், அவர்களுக்கு அடுத்த நிலையில் கொங்கு
நாடார்களே இங்கு குறிப்பிடத்தக்க நிலையில்
உள்ளனர். கண்ணூர் மாவட்டத்திலும் இந்நிலையே. ஆனால்,
சாதிய அரசியலில் நம்பிக்க இல்லாத காமராஜர்
சித்தூர் தத்தமங்கலம் கணவாய்க்கு அப்பால் உள்ளதால்
அதனை கோவை மாவட்டத்தோடு இணைக்க ஆதரவு
தரமுடியாது என்று நேசமணி அவர்களது
போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தார். எனவே
சித்தூர் பகுதி தமிழகத்தோடு இணைய முடியாமல்
போனது. இது தான் உண்மையும் கூட...
http://ta.wikipedia.org/wiki/
ஏ._நேசமணி —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக