|
12/6/15
| |||
Kathir Nilavan
"தென் எல்லைக் காவலன்"
மார்சல் நேசமணி
பிறந்த நாள்
12.6.1895
மொழி, இனம், தாயகம் இந்த மூன்றும் ஒரு
தேசிய இனத்தின் அடிப்படைக் கூறுகள்.
1956க்கு முன் இந்தியத்துணைக் கண்டத்தில்
மொழிவழித் தாயகங்கள் உருவாக்கப்பட
வில்லை. இந்திய விடுதலைக்கு முன்னரே
மொழிவழித் தேசிய உணர்வு பெற்று
மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள்,
மராட்டியர்கள் மொழிவழி மாநிலம் கேட்டு
போராடி வந்தனர்.
தமிழர்களுக்காக இயக்கம் கண்ட நமது திராவிட
இயக்கத் தலைவர்களோ மொழிவழித் தேசிய
உணர்ச்சியின் தேவையை உணர்ந்தும் போராட
மறுத்தனர். குறிப்பாக தந்தை பெரியார்
அவர்கள் "மொழிக்காக நாடு பிரிய வேண்டும்
என்பது சுயநலமென்றும், சாதியின் மீதும்
(திராவிட)இனத்தின் மீதும், மதத்தின் மீதும்
பிரிவதில் மட்டுமே அர்த்தம் உண்டு" என்றார்.
காங்கிரசு பேரியக்கத்தில் தொண்டாற்றிய
ம.பொ.சி., மார்சல் நேசமணி ஆகியோர்
மட்டுமே மொழிவழித் தாயக கோரிக்கையின்
தேவையை உணர்ந்தனர். காங்கிரசு ஆதரவு தர
மறுத்த நிலையிலும் தனி இயக்கம் கண்டனர்.
வடக்கெல்லைப் போரில் சென்னை, திருத்தணி
அதன் சுற்றியுள்ள பகுதிகளை ம.பொ.சி.
அவர்களும், தென் எல்லைப்போரில்
கன்னியாகுமரி அதன் சுற்றியுள்ளப்
பகுதிகளை நேசமணி அவர்களும் பெரிய
அரசியல் கட்சிகளின் ஆதரவின்றியே போராடி
நமக்கு மீட்டுத் தந்தனர்.
திருவிதாங்கூர் சமசுதானத்தில் நிலவிய
சாதிய ஒடுக்குமுறை, மலையாள மொழித்
திணிப்பு, தாயக மண் பறிப்பு ஆகிய மூன்று
நிலைகளிலும் தமிழர் விடுதலை காண
வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பியவர்
மார்சல் நேசமணி.
இவர் நேருவின் மீது மிகுந்த மரியாதை
கொண்டவர். ஆனாலும் திருவிதாங்கூர்
சமசுதானத்தில் வாழும் தமிழர்கள் விடுபட்டு
சென்னை மாகாணத்தோடு சேர்ந்து
வாழ்வதற்கு நேருவும், காமராசரும்
தடைக்கற்களாக இருப்பதை உணர்ந்தார்.
இருவரின் இரண்டகத்திற்கு பதிலடி தரும்
வகையில் 8.9.1947 இல் திருவிதாங்கூர்
தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தை
தொடங்கினார்.
1947இல் திருவிதாங்கூரில் தேர்தல்
அறிவிக்கப்பட்டது. மலையாளிகளின் பலத்த
எதிர்ப்புகளுக்கிடையில் 13 இடங்களில் வெற்றி
பெற்றார். நேசமணி எதிர்க்கட்சித்
தலைவரானார். 1949இல் பிரதமர் நேரு
மலையாளிகளின் இன்னொரு தனித் தாயகமாக
இயங்கிய கொச்சி, மலபார் சமசுதானப்
பகுதிகளை திருவிதாங்கூர் சமசுதானத்தில்
இணைக்க உத்தரவிட்டார். இது
அறிவிக்கப்படாத ஐக்கிய கேரளமாக இயங்க
ஆரம்பித்தது.
நேருவின் நயவஞ்சகச் செயல் மார்சல்
நேசமணிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
தனது ஐக்கிய தமிழக கோரிக்கையை பரிசீலிக்க
மீண்டும் வேண்டினார்.
1954 இல் இணைக்கப்பட்ட திரு.கொச்சி சட்ட
மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கேரள
மலையாள காங்கிரசுக்கு ஆதரவாக
காமராசரும், நேருவும் களம் கண்டனர்.
அப்போது காமராசர் அவர்கள் தேர்தல்
பரப்புரையின் போது, "மார்சல் பட்டத்தை
நேசமணிக்கு எவன் கொடுத்தான்? நேசமணி
எந்த யுத்த களத்திற்குப் போனார்? மார்சல்
பட்டமென்ன கடைச்சரக்கா?" என்று கிண்டல்
செய்தா
"தென் எல்லைக் காவலன்"
மார்சல் நேசமணி
பிறந்த நாள்
12.6.1895
மொழி, இனம், தாயகம் இந்த மூன்றும் ஒரு
தேசிய இனத்தின் அடிப்படைக் கூறுகள்.
1956க்கு முன் இந்தியத்துணைக் கண்டத்தில்
மொழிவழித் தாயகங்கள் உருவாக்கப்பட
வில்லை. இந்திய விடுதலைக்கு முன்னரே
மொழிவழித் தேசிய உணர்வு பெற்று
மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள்,
மராட்டியர்கள் மொழிவழி மாநிலம் கேட்டு
போராடி வந்தனர்.
தமிழர்களுக்காக இயக்கம் கண்ட நமது திராவிட
இயக்கத் தலைவர்களோ மொழிவழித் தேசிய
உணர்ச்சியின் தேவையை உணர்ந்தும் போராட
மறுத்தனர். குறிப்பாக தந்தை பெரியார்
அவர்கள் "மொழிக்காக நாடு பிரிய வேண்டும்
என்பது சுயநலமென்றும், சாதியின் மீதும்
(திராவிட)இனத்தின் மீதும், மதத்தின் மீதும்
பிரிவதில் மட்டுமே அர்த்தம் உண்டு" என்றார்.
காங்கிரசு பேரியக்கத்தில் தொண்டாற்றிய
ம.பொ.சி., மார்சல் நேசமணி ஆகியோர்
மட்டுமே மொழிவழித் தாயக கோரிக்கையின்
தேவையை உணர்ந்தனர். காங்கிரசு ஆதரவு தர
மறுத்த நிலையிலும் தனி இயக்கம் கண்டனர்.
வடக்கெல்லைப் போரில் சென்னை, திருத்தணி
அதன் சுற்றியுள்ள பகுதிகளை ம.பொ.சி.
அவர்களும், தென் எல்லைப்போரில்
கன்னியாகுமரி அதன் சுற்றியுள்ளப்
பகுதிகளை நேசமணி அவர்களும் பெரிய
அரசியல் கட்சிகளின் ஆதரவின்றியே போராடி
நமக்கு மீட்டுத் தந்தனர்.
திருவிதாங்கூர் சமசுதானத்தில் நிலவிய
சாதிய ஒடுக்குமுறை, மலையாள மொழித்
திணிப்பு, தாயக மண் பறிப்பு ஆகிய மூன்று
நிலைகளிலும் தமிழர் விடுதலை காண
வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பியவர்
மார்சல் நேசமணி.
இவர் நேருவின் மீது மிகுந்த மரியாதை
கொண்டவர். ஆனாலும் திருவிதாங்கூர்
சமசுதானத்தில் வாழும் தமிழர்கள் விடுபட்டு
சென்னை மாகாணத்தோடு சேர்ந்து
வாழ்வதற்கு நேருவும், காமராசரும்
தடைக்கற்களாக இருப்பதை உணர்ந்தார்.
இருவரின் இரண்டகத்திற்கு பதிலடி தரும்
வகையில் 8.9.1947 இல் திருவிதாங்கூர்
தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தை
தொடங்கினார்.
1947இல் திருவிதாங்கூரில் தேர்தல்
அறிவிக்கப்பட்டது. மலையாளிகளின் பலத்த
எதிர்ப்புகளுக்கிடையில் 13 இடங்களில் வெற்றி
பெற்றார். நேசமணி எதிர்க்கட்சித்
தலைவரானார். 1949இல் பிரதமர் நேரு
மலையாளிகளின் இன்னொரு தனித் தாயகமாக
இயங்கிய கொச்சி, மலபார் சமசுதானப்
பகுதிகளை திருவிதாங்கூர் சமசுதானத்தில்
இணைக்க உத்தரவிட்டார். இது
அறிவிக்கப்படாத ஐக்கிய கேரளமாக இயங்க
ஆரம்பித்தது.
நேருவின் நயவஞ்சகச் செயல் மார்சல்
நேசமணிக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.
தனது ஐக்கிய தமிழக கோரிக்கையை பரிசீலிக்க
மீண்டும் வேண்டினார்.
1954 இல் இணைக்கப்பட்ட திரு.கொச்சி சட்ட
மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கேரள
மலையாள காங்கிரசுக்கு ஆதரவாக
காமராசரும், நேருவும் களம் கண்டனர்.
அப்போது காமராசர் அவர்கள் தேர்தல்
பரப்புரையின் போது, "மார்சல் பட்டத்தை
நேசமணிக்கு எவன் கொடுத்தான்? நேசமணி
எந்த யுத்த களத்திற்குப் போனார்? மார்சல்
பட்டமென்ன கடைச்சரக்கா?" என்று கிண்டல்
செய்தா
|
12/6/15
| |||
பட்டமென்ன கடைச்சரக்கா?" என்று கிண்டல்
செய்தார்.
மார்சல் நேசமணியோ மீண்டும் 12 இடங்களில்
வெற்றி பெற்று நேரு, காமராசர் இருவரின்
முகத்திலும் கரி பூசினார்.
தேவிகுளம், பீர்மேடு பகுதியில் நேசமணி
செல்வாக்கு பெருகுவதை அன்றைய
மலையாள முதல்வர் பட்டம் தாணுப் பிள்ளை
விரும்பவில்லை. தமிழ்த் தேயிலைத்
தொழிலாளர் மீது அடக்குமுறையை ஏவினார்.
பாதிக்கப்பட்ட தமிழ்த் தொழிலாளரை பார்க்கச்
சென்ற நேசமணி மீது பொய் வழக்குப் போட்டு
திருவனந்தபுரம் சிறையில் அடைத்தார். 1954
ஆகஸ்டு விடுதலை நாள் கிளர்ச்சியை
நேசமணி சார்பில் குஞ்சன் நாடார் அறிவித்தார்.
அப்போது நடந்த கிளர்ச்சியில் 11 தமிழர்கள்
துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தனர்.
தமிழர்களைக் கொன்ற கொடுங்கோலன் பட்டம்
தாணுப் பிள்ளை எந்தவித குற்றவுணர்வுமின
்றி திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரஜா
சோசலிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு வந்தான்.
அப்போது ம.பொ.சி.யின் தமிழரசு
கழகத் தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி
திருப்பி விரட்டியடித்தனர்.
1953இல் 'விசாலா ஆந்திரா' கேட்டு
போராட்டம் தீவிரமடைந்தது. அதனைக் கண்டு
கலக்கமுற்ற நேரு மொழிவழி மாகாணம்
அமைக்க நேரு ஒப்புக் கொண்டார். பசல் அலி
தலைமையில் மாநில புனரமைப்பு ஆணையம்
உருவாக்கப்பட்டது. அதில் ஒரு உறுப்பினராக
பொறுப்பு வகித்த பணிக்கர் எனும்
மலையாளியின் ஆதிக்கம் காரணமாக தமிழர்கள்
அதிகம் வசித்த ஒன்பது வட்டங்களில் நான்கு
வட்டங்கள் மட்டுமே தமிழகத்தோடு இணைக்க
ஒப்புதல் தரப்பட்டது.
அதன்படி தோவாளை, அகஸ்தீஸ்வரம்,
கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை
நகர்ப்பகுதி ஆகிய 5 வட்டங்கள் தமிழகத்தோடு
இணைக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வசித்த
தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை
வனப்பகுதி, நெய்யாற்றின் கரை ஆகிய
வட்டங்களை மலையாளிகள் பிடுங்கிக்
கொண்டனர். இதனைக் கண்டு கோபமுற்ற
நேசமணி பாராளுமன்றத்தில் 1955ஆம் ஆண்டு
14,15,16 ஆகிய மூன்று நாட்கள் வரலாற்று
சான்றாவணங்களைக் காட்டி முழக்கமிட்டார்.
பிற்காலத்தில் முல்லைப்பெரியாற
ு அணைச்சிக்கல் வருமென்று உணர்ந்த
காரணத்தாலோ என்னவோ அதனையும்
உணர்ந்தே பேசினார். அது வருமாறு:
" பெரியாறு நீர் தேக்கத்திற்கு நீர் வடிப்பு 305
சதுர மைல்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில்
1,90,000 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு
தண்ணீர் செல்கிறது... எனவே தேவிகுளம்,
பீர்மேடு இரு தாலுக்காக்கள் தமிழகத்தோடு
இணைக்கப்பட வேண்டும்... தேவிகுளத்திற்குச்
சென்று தேயிலை காடுகளைக் கேளுங்கள்.
தமிழ் மக்களின் நெற்றி வியர்வை சிந்தி
தமிழர்களின் குருதியால் வளர்க்கப்பட்டவை
என்றும், தமிழ் முன்னோர்களின் எலும்பும்
அவர்கள் சாம்பலும் தேயிலைச்செடிகளுக்கு
உரமாயின என்றும், தமிழ் இளவல்களின்
பிஞ்சுக்கரங்களால் நட்டு வளர்க்கப்பட்டவை
அவை என்றும், வரலாறு கூறும் அச்செடிகள்.
அச்செடிகளும் அவ்வூர் மக்களும் கூறுவர்
இது தமிழ்நாடு தான் என்று!"
ஒற்றை மனிதராய் நின்று முழக்கம் செய்த
நேசமணிக்கு ஆதரவாக சென்னை
மாகாணத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கூட
குரல் கொடுக்க முன் வரவில்லை. இது தமிழக
வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகும்.
இழந்த பகுதிகளை மீட்டெடுக்க நேசமணி
பிறந்த நாளில் உறுதியேற்போம்!
செய்தார்.
மார்சல் நேசமணியோ மீண்டும் 12 இடங்களில்
வெற்றி பெற்று நேரு, காமராசர் இருவரின்
முகத்திலும் கரி பூசினார்.
தேவிகுளம், பீர்மேடு பகுதியில் நேசமணி
செல்வாக்கு பெருகுவதை அன்றைய
மலையாள முதல்வர் பட்டம் தாணுப் பிள்ளை
விரும்பவில்லை. தமிழ்த் தேயிலைத்
தொழிலாளர் மீது அடக்குமுறையை ஏவினார்.
பாதிக்கப்பட்ட தமிழ்த் தொழிலாளரை பார்க்கச்
சென்ற நேசமணி மீது பொய் வழக்குப் போட்டு
திருவனந்தபுரம் சிறையில் அடைத்தார். 1954
ஆகஸ்டு விடுதலை நாள் கிளர்ச்சியை
நேசமணி சார்பில் குஞ்சன் நாடார் அறிவித்தார்.
அப்போது நடந்த கிளர்ச்சியில் 11 தமிழர்கள்
துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தனர்.
தமிழர்களைக் கொன்ற கொடுங்கோலன் பட்டம்
தாணுப் பிள்ளை எந்தவித குற்றவுணர்வுமின
்றி திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரஜா
சோசலிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு வந்தான்.
அப்போது ம.பொ.சி.யின் தமிழரசு
கழகத் தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி
திருப்பி விரட்டியடித்தனர்.
1953இல் 'விசாலா ஆந்திரா' கேட்டு
போராட்டம் தீவிரமடைந்தது. அதனைக் கண்டு
கலக்கமுற்ற நேரு மொழிவழி மாகாணம்
அமைக்க நேரு ஒப்புக் கொண்டார். பசல் அலி
தலைமையில் மாநில புனரமைப்பு ஆணையம்
உருவாக்கப்பட்டது. அதில் ஒரு உறுப்பினராக
பொறுப்பு வகித்த பணிக்கர் எனும்
மலையாளியின் ஆதிக்கம் காரணமாக தமிழர்கள்
அதிகம் வசித்த ஒன்பது வட்டங்களில் நான்கு
வட்டங்கள் மட்டுமே தமிழகத்தோடு இணைக்க
ஒப்புதல் தரப்பட்டது.
அதன்படி தோவாளை, அகஸ்தீஸ்வரம்,
கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை
நகர்ப்பகுதி ஆகிய 5 வட்டங்கள் தமிழகத்தோடு
இணைக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வசித்த
தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை
வனப்பகுதி, நெய்யாற்றின் கரை ஆகிய
வட்டங்களை மலையாளிகள் பிடுங்கிக்
கொண்டனர். இதனைக் கண்டு கோபமுற்ற
நேசமணி பாராளுமன்றத்தில் 1955ஆம் ஆண்டு
14,15,16 ஆகிய மூன்று நாட்கள் வரலாற்று
சான்றாவணங்களைக் காட்டி முழக்கமிட்டார்.
பிற்காலத்தில் முல்லைப்பெரியாற
ு அணைச்சிக்கல் வருமென்று உணர்ந்த
காரணத்தாலோ என்னவோ அதனையும்
உணர்ந்தே பேசினார். அது வருமாறு:
" பெரியாறு நீர் தேக்கத்திற்கு நீர் வடிப்பு 305
சதுர மைல்கள் உள்ளன. மதுரை மாவட்டத்தில்
1,90,000 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு
தண்ணீர் செல்கிறது... எனவே தேவிகுளம்,
பீர்மேடு இரு தாலுக்காக்கள் தமிழகத்தோடு
இணைக்கப்பட வேண்டும்... தேவிகுளத்திற்குச்
சென்று தேயிலை காடுகளைக் கேளுங்கள்.
தமிழ் மக்களின் நெற்றி வியர்வை சிந்தி
தமிழர்களின் குருதியால் வளர்க்கப்பட்டவை
என்றும், தமிழ் முன்னோர்களின் எலும்பும்
அவர்கள் சாம்பலும் தேயிலைச்செடிகளுக்கு
உரமாயின என்றும், தமிழ் இளவல்களின்
பிஞ்சுக்கரங்களால் நட்டு வளர்க்கப்பட்டவை
அவை என்றும், வரலாறு கூறும் அச்செடிகள்.
அச்செடிகளும் அவ்வூர் மக்களும் கூறுவர்
இது தமிழ்நாடு தான் என்று!"
ஒற்றை மனிதராய் நின்று முழக்கம் செய்த
நேசமணிக்கு ஆதரவாக சென்னை
மாகாணத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கூட
குரல் கொடுக்க முன் வரவில்லை. இது தமிழக
வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகும்.
இழந்த பகுதிகளை மீட்டெடுக்க நேசமணி
பிறந்த நாளில் உறுதியேற்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக