சனி, 29 ஏப்ரல், 2017

ஆகாயம் தமிழ்ச்சொல்லே வேர்ச்சொல் சொல்லாய்வு வானம்

aathi tamil aathi1956@gmail.com

19/6/15
பெறுநர்: எனக்கு
தமிழ்ச் சொல் - 18
=================
ஆகாயம் என்ற சொல் தமிழ்ச் சொல்லே
ஆ+காயம்=ஆகாயம்
ஆ=முதன்மை, அடிப்படை
1. காயம் மெய் விண் வெண்காயம்
பெருங்காயங் கறி கரித்தல் (சூடாமணி
நிகண்டு)
2. "விண் என வரூஉம்
காயப்பெயர்" (தொல்காப்பியம் 1-8-10) காயம்
<> ஆகாயம்
3. காயமே இது பொய்யடா இது வெறும்
காற்றடைத்த பையடா! (சித்தர் பாடல்)
4. காயத்தில் காயம் ஏற்படின் காயத்தில்
காயத்தை வைத்து கட்டு ( சித்த வைத்தியர்
மந்திவாயனார்)
காயம்=ஆகாயம்(ஆ+காயம்)
காயம்=உடல்
காயம்=வெண்காயம்
காயம்=பெருங்காயம்
காயம்=புண்
ஆகாயம் என்றால் முதன்மையான அடிப்படைக்
காயம்...அதாவது, விண், வானம்...
அயல்(அயலூர்)=அசல்(அசலூர்)
அரயர்=அரசர்
கயம்=கசம்(>கஜம்)
காய்=காசு(காசி)
குயவர்=குசவர்(>கொசவர்)
கைலாயம்=கைலாசம்
தேய்=தேசு
தேயம்=தேசம்(>தேஷ்)
நாயர்=நாசர்
நெய்(நெய்தல்)=நெசு(நெசவு)
நேய்=நேசு
நேயம்=நேசம்(>நேஷ்)
பயல்=பசல்(பசங்கள்)
பரியம்=பரிசம்
பேய்(பேயாமல் இரு)=பேசு(பேசாமல் இரு)
மயானம்=மசானம்
முயல்=முசல்(>மொசல்>மொசக்குட்டி)
மையூர்=மைசூர்(மையூரன்)
வயம்=வசம்
வியாழன்=விசாழன்(>வெசாலன்)
என்பதைப் போல,
காயம்=காசம்
ஆகாயம்=ஆகாசம்(>ஆகாஷ்) எனவும் வரும்...
இச்சொல் தான் சமஸ்கிருதத்தில்
ஆகாயம்=ஆகாசம்>ஆகாஷ் என்று திரிந்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக