சனி, 29 ஏப்ரல், 2017

பள்ளத்திலிருந்து மேட்டுக்கு பாயும் காலிங்கராயன் கால்வாய் நீர்மேலாண்மை அறிவியல் வேளாண்மை விவசாயம் புதுமுயற்சி

aathi tamil aathi1956@gmail.com

17/6/15
பெறுநர்: எனக்கு
ஈரோடு மாவட்டத்தில் பவானியாற்றிலிருந்து பிரிந்து 56 மைல் தூரம்
சீறிப்பாய்ந்து ஓடுகிறது காலிங்கராயன் வாய்க்கால். உலகின் பழமையான
வாய்க்கால்களில் ஒன்றாக காலிங்கராயன் வாய்க்காலை அங்கீகரித்திருக்கிறது
ஐ.நா.சபை. காலிங்கராயன் வாய்க்கால் ஒரு வாய்க்கால் மட்டும் அல்ல
பழம்பெறும் வரலாறும் கூட.

இந்த வாய்க்காலைக் கட்டி அதன் வழியே வரலாறு படைத்தவன் காலிங்கராயன்.
இப்படியாய் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாய்க்காலைப் பற்றி
இந்தியாவுக்காக இந்தியர்கள் அமைப்பைச் சேர்ந்த அகரம் பார்த்திபன்
‘‘தன்னைத்தானே நாடு கடத்திக்கொண்ட ஒரு மன்னன் இருந்தான் என்றால் அவர்தான்
காலிங்கராயன். அன்றைய காலகட்டங்களில் தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய,
தொண்டை, கொங்கு என ஐந்து நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கி.பி
1282&ல் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் பிரதிநிதியாக பூந்துறையைத்
தலைமையிடமாகக் கொண்டு கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காலிங்கராயன். இவரது
சொந்த ஊர் வெள்ளோடு இவர் வாழ்ந்த பகுதிகள் முழுதும் மேட்டுப்பகுதிகள்
என்பதால் இங்கு ஆற்றுப்பாசனம் கிடையாது முழுக்க முழுக்க
கிணற்றுப்பாசனம்தான். போதுமான நீர் வசதி இல்லாததால் இங்கு விவசாயம்
தலைத்தோங்கவில்லை. முக்கிய உணவுப் பயிரான நெல் விளைவிக்கக்கூட முடியாத
புன்செய் நிலங்களாக இருந்ததால் இங்கு புன்செய்ப் பயிர்கள் மட்டுமே
விளைவிக்கப்பட்டு வந்தது.

காலிங்கராயன் தன் மகனுக்கு பெண் கேட்க தஞ்சைப் பகுதியில் வசிக்கும் தன்
சகோதரி வீட்டுக்குப் போன போது அந்த வீட்டின் சமையற்காரன் இவர்களுக்கு
விருந்து சமைக்க பழைய அரிசி போடுவதா புதிய அரிசி போடுவதா
எனக்கேட்டிருக்கிறான் அதற்கு நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த
அரிசியாய் இருந்தாலென்ன என்று எல்லோரும் கேலி செய்கிறார்கள் இதனைக்
கேட்டதும் பொறுத்துக்கொள்ள முடியாத காலிங்கராயன் அவர்களிடம் எங்களது
புன்செய் நிலங்களை எல்லாம் நன்செய்ப் நிலங்களாக்கிக் காட்டுகிறேன்
பாருங்கள் என்று சபதம் எடுக்கிறார். பவானியாற்றிலிருந்து தங்களது
மேட்டுப்பகுதியை நோக்கி வாய்க்கால் வெட்டி நீரைக் கொண்டு வருவதுதான்
காலிங்கராயனின் திட்டம் ஆனால் மேட்டுப்பகுதியை நோக்கி வாய்க்கால்
வெட்டுவது சாத்தியமில்லை என்று பலரும் சொல்லுகின்றனர்.

ஒரு பாம்பு மேட்டை நொக்கி வளைந்து நெலிந்து செல்வது போல இவருக்கு ஒரு
கனவு தோன்றுகிறது. அதன்படி வாய்க்காலையும் வளைத்து நெலித்து வெட்டுவதென
முடிவெடுக்கிறார். வாய்க்கால் வெட்டுவதெற்கென பொருள் கேட்டு இவர் தன் இன
மக்களிடத்தில் மடியேந்திப் போனபோது எவருமே உதவ முன் வரவில்லை இதனால்
காலிங்கராயன் மனம் சோர்ந்து போகிறார். அப்போது இவரது தாயார் ‘‘தயிர்
விற்ற பணம் தாவாரம் வரை கிடக்குது மோர் விற்ற பணம் முகடு வரை கிடக்குது
எடுத்து வாய்க்காலை வெட்டு’’ என்று சொல்லவே வாய்க்கால் வெட்டும் பணியைத்
துவக்குகிறார். காலிங்கராயன் சாத்தந்தை குலத்தைச் சேர்ந்தவர் என்பர்
ஆனால் இந்த வாய்க்காலை வெட்ட சாத்தந்தை குல மக்கள் முன்வராத நிலையில்
தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் பெரும் உழைப்பைக் கொடுத்தனர். தாழ்த்தப்பட்ட
மக்களின் ஆதரவோடு காலிங்கராயனின் பெரு முயற்சியில் காலிங்கராயன்
வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டது. அவர் சபதமெடுத்த படியே புன்செய்
நிலங்களை நன்செய் நிலமாக்கிக் காட்டினார்.

வாய்க்கால் கட்ட எந்த விதத்திலும் உதவாத சாத்தந்தை மக்கள் இந்த
வாய்க்காலைப் பயன்படுத்தக் கூடாது என்று சாபமிடுகிறார். காலிங்கராயன்
தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்காகத்தான் வாய்க்காலை வெட்டிக்கொண்டான் என்று
பலர் காது படப் பேசக்கேட்ட காலிங்கராயன் இந்த வாய்க்காலிலிருந்து நானோ
எனது சந்ததியினரோ ஒரு சொட்டு நீரைக்கூட பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லி
விட்டு ஊத்துக்குளிக்கு இடம் பெயர்ந்து விட்டார்.

உலகிலேயே மேட்டை நோக்கிப்பாய்கிற வாய்க்கால் இதுதான் வளைந்து நெலிந்து
பாய்வதால் இந்த வாய்க்காலை கோணவாய்க்கால் என்பர். கீழ்பவானி வாய்க்கால்
கட்டப்பட்ட பிறகு இதை பழைய வாய்க்கால் எனவும் சின்ன வாய்க்கால் எனவும்
சொல்வர்.

800ஆண்டுகள் பழமையான இந்த காலிங்கராயன் வாய்க்கால் தோல் தொழிற்சாலைக்
கழிவுகளினால் இன்று இறுதி மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது இது வாய்க்கால்
மட்டும் அல்ல தமிழினத்துக்குக் கிடைத்திட்ட தன் மானத் தமிழனின் வரலாறு
காலிங்கராயனைக் காப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக