சனி, 29 ஏப்ரல், 2017

ஏசு தமிழ் தொடர்பு வேர்ச்சொல் இயேசு கிறிஸ்து கிறித் மதம்

aathi tamil aathi1956@gmail.com

6/5/15
பெறுநர்: எனக்கு
யேசு கிருத்து......
மிகவும் சர்ச்சைக்குறிய பதிவு எனபதை அறிந்தே
பதிவிடுகிறேன்.
இருப்பினும் இப்பதிவில் உள்ள வினாக்களுக்கு
ஏவரேனும் விளக்கமளித்தால் நிச்சயம் ஏற்று கொள்வேன்
என்பதையும் தெரிவித்து பதிவை தொடர்கிறேன்....
இயேசு கிருத்து ஒரு இறை தூதர் மக்களுக்கு
நல்வழியினை போதித்தவர். இதனால் சர்வாதிகார
ஆட்சியாளர்களுக்கும், மக்களை ஏமாற்றிய ஒருசில
யூத மத தலைவர்களுக்கும் எதிரியானார். அவர்கள்
சூல்ச்சி செய்து யேசுவை கொண்று விட்டனர், என்பது
அனைவரும் அறிந்த உண்மை.....
இருப்பினும் யேசு பிறப்பிற்கு 500
வருடங்களுக்கு முன் கிரேக்க மற்றும் எகிப்திய
நாகரிகத்தில் அகிம்சையையும் பகுத்தறிவையும்
புகட்டியவராக கருதப்படும் சாக்ரட்டீஸின் வரலாறும்
இவரை போன்றதே. மக்களுக்கு போதித்தார் மத
தலைவர்களின் சதிச்செயலால் கொள்ளப்பட்டார்.
மேலும் சாக்ரட்டீஸ், பிளூட்டோ மற்றும் அரிஸ்டாட்டில்
என்ற மூன்று அறிஞர்களின் முயற்சியினால் உருவான
நாட்காடியே (கிமு 300 களில்) அலெக்சாந்தரால்
ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியா
என அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. அதன் பின்
பரினமித்த ஜூலியன் நாட்காட்டி (ஜூலியஸ் சீசரால்
கிமு 50 களில் உருவாக்கப்பட்டது) தான் நாம் இன்று
பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டியின் மூலமாகும்.
ஜூலியன் நாட்காட்டி தற்கால வடிவம் பெற்றது கிபி
1500 களில் கிரிகோரியன் என்பவரால்.
கிருத்துவுக்கு முன்பே மக்களுக்கு எண்ணற்ற
போதனைகளையும் பகுத்தறிவையும் வழங்கிய
சாக்ரட்டீஸை மக்கள் கடவுளின் தூதுவர் என்று
கருதாததன் காரணம் என்ன???
கிருத்து பிறப்பிற்கு முன் உருவான நாட்காட்டியை
கிபி மற்றும் கிமு என பின்வந்த மததலைவர்கள்
பகுத்ததன் காரணம் என்ன?
கிருத்துவின் வாழ்க்கையில் 12 வயது முதல் 30
வயது வரையான குறிப்புகள் பற்றி மார்கு,
மத்தேயு, லூக்கா மற்றும் யோவான் நற்செய்தி நூல்கள்
விளக்கமளிக்காததன் காரணம் என்ன???
கிருத்து எவரிடமிருந்து இப்போதனைகளை பெற்றார்,
எவ்வாறு பெற்றார்????
மரியா என்ற கன்னித்தாய்க்கு இயேசு பிறந்தார்
என்றால் அவர் உருவாக காரணமாயிருந்தது பரிசுத்த
ஆவி என்பதை எவ்வாறு உறுதி செய்வது?
(இந்து புராணங்களிலும் இது போன்ற கன்னி தாய்
கதைகள் உள்ளதை மறந்து சிலர் மத வெறியால்
மரியாவை அவதூராக பேசுவது கண்டிக்கத்தக்கது).
சுமேரிய, பாபிலோனிய வம்சாவழியினரான
யூதர்களின் கடவுள் பெயர் என்ன? சூரிய கடவுள்
என்று தமிழிலும் Sun God என ஆங்கிலத்தில்
கூறினாலும் எபிரேய மொழியில் என்ன???
இப்படி எண்ணற்ற எப்படி மற்றும் என்ன என்ற
கேள்விகளோடு ஆரம்பித்த தேடல் முடியாமல் சென்று
கொண்டுள்ளது.
அத்தேடலில் இதுவரை நானறிந்த விளக்கங்களை இங்கு
பதிவிடுகிறைன் .
முதலாவதாக, சுமேரிய மொழி அகத்தியன் மொழியே
(தமிழ்) என்று முன்பதிவுகளில் பார்த்தோம்.
அப்படியானால் எபிரேய (Hebrew) மொழியும்
அகத்திய மொழி குடும்பத்தை சார்ந்ததாக இருக்க
வேண்டும் என்ற தேடலில் கிடைத்த விளக்கம்....
யேசு என்பதன் எபிரேய உச்சரிப்பு - யோகசுவா.
(நம்பிக்கை இல்லாதவர்கள் கீழுள்ள இணைப்பை
பாருங்கள்).
http://www.eliyah.com/nameson.html
யோக சுவா - யோகசிவா என்று தமிழாக்கம் செய்தால்
யோக சித்தர் என பொருள் கொள்ளலாம். (சித்தர்களை
சிவா என்று அழைக்கும் வழக்கம் உள்ளதல்லவா?)
யோகசுவா வின் கருத்து என்பதே யேசு கிருத்து என
மறுவியது. கருத்து என்பதே கர்த்தா எனவும்
மாற்றமடைந்தது.
ஆங்கிலத்தில் Chrishna என்பதிலிருந்தே Chrishtina
என்ற பெயர் வந்தது என்ற தகவலும், லூயி
ஜாக்கோலியா 1859 களில் கிருஷ்ணன் வரலாறும்
கிருத்துவின் வரலாறும் ஒன்றுதான் என்ற
கூறியள்ளதன் காரணத்தையும் தேடிய போது கிடைத்த
தகவல் கீழே....
மாய கருத்தினன் என்பதே மாய கிருஷ்ணன் என
மருவியது,
யோசுவ கருத்து என்பதே யேசு கிருத்து என
மருவியது.
கருத்தினன் மற்றும் கர்த்தா இருவரது
வாழ்க்கையிலும் குழந்தை பருவத்திலேயே கொலை
செய்ய தேடப்பட்டனர்.
இவ்விரு ஒற்றுமைகளை மட்டுமே வைத்து லூயி
ஜோக்கோலியா இருவரது கதைகளும் ஒன்று என
கருதியிருக்கக்கூடும்.
எபிரேய மொழியில் சூரிய கடவுளின் பெயர் ப்பால்
(Baal) . அகத்தியன் மொழியில் பேல். இங்கு ப்பாலை
வால் என்றோ அல்லது வேலென்றோ கருதலாம். உண்மையில்
இரண்டும் சண்டைக்கு பயன்படும் ஆயுதங்கள்.
அப்படியானால் ,
கதிரவனிடமிருந்து நீண்டு வந்த கதிர்களை
(குதிரை வால், குரங்கு வால் போன்று நீண்டு
வருவதால்) கதிர்வால் என அழைத்திருக்கலாம் அல்லவா?
மேலும் கதிர்வாலின் ஊடுறுவலை எவராலும் தடுத்து
நிறுத்த முடியாது என்று கருதி உடலை
ஊடுருவும் ஆயுதத்திற்கு வால் என்று பெயர்
வைத்திருக்கலாமோ?
ஆக பால் என்ற சூரிய கடவுளின் பெயர் கதிர்வால்.
இவரையே யூதர்கள் வழிபட்டுள்ளனர். இவரது
சித்திரங்களும் கையில் மின்னலை வேலாயுதமாக
பிடித்திருப்பது போன்றே உள்ளது. சில இடங்களில்
எல் என்ற பெயரும் சூரிய கடவுளைக்கு உள்ளதாக
கிரேக்க மற்றும் எபிரேய மொழியில்
கருதப்படுகிறது. எல் என்றால் தமிழில் சூரியன்
என்றும் பொருள்படும்.
அடுத்து அவர் எங்கிருந்து இத்தகைய தெய்வீக
தன்மையை பெற்றார் என்ற தேடலில் பின்வரும்
பிபிசியின் ஆவனப்படம் கிடைத்தது.
m.youtube.com/watch?v=wnu34EHgcC8
இப்படத்தில் ஈசாக் எனும் பெயர் கொண்ட அரேபிய
இளைஞர் திபெத் பௌத்த மத துறவிகளிடமிருந்து
தரும கருத்துகளையும் வாழ்வியல

aathi tamil aathi1956@gmail.com

6/5/15
பெறுநர்: எனக்கு
வாழ்வியல்
நெரிமுறைகளையும் கற்றதற்கான ஆதாரங்கள்
இருப்பதாக தெரிவித்து, புத்த மற்றும் கிருத்துவ
கொள்கைகளை ஒப்பிட்டும் உள்ளது. மேலும்
கிருத்துவின் மறைக்கப்பட்ட 12 வயது முதலான 30
வயதுவரையிலான காலநேரமும் அவ்விளைஞருடன்
பொருந்திவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எப்போதுமே ஆங்கிலன் ஆராய்ச்சிகளை நம்பாத நான்
பின்வரும் ஆதாரங்களுடன் இதை நம்ப வேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.
1. அரேபிய மாணவனின் கால நேரமும், கிருத்துவின்
மறைக்கப்பட்ட இளமை பருவமும் ஒன்றினைவது.
2. அகிம்சை, பகுத்தறிவு போன்ற புத்த கொள்கைகள்
கிருத்துவத்திலும் உள்ளது.
3. புத்த தத்துவத்தை பாரதத்திலும் யோசுவா
கருத்துகளை எருசலேமிலும் அக்கால மத தலைவர்களே
பெரிதும் எதிர்த்தனர். மக்கள் விரும்பி ஏற்றனர்.
4. சிலுவையில் இருந்து பேசிய வாக்கியம்.
Eli Eli Lama Sapacthani என்று மார்கும்,
Elai Elai Lama Sapcthani என்று மத்தேயுவும்
கூறியுள்ளனர்.
எல்லாளன் எல்லம்மா என்று தமிழில் சூரியனுக்கு
பெயருண்டு, யேசுவும் சூரியனை எல்லாய் என்று
அழைத்திருக்கலாம் என்று ம் சிலரால்
கருதப்படுகிறது.
இதில் உள்ள லாமா என்பதன் விளக்கம் ஏன் புத்த மத
தலைவரான தலைமை லாமாவாக (தலாய்லாமா) இருக்க
கூடாது???
இறுதியாக உள்ள சபக்தானி என்பதை சபித்தாய்நீ
அல்லது சாவுதாநீ என்று பொருள் கொள்ளலாம்.
1. எல்லாய் எல்லாய் லாமா சபித்தாய் நீ.
2. எல்லாய் எல்லாய் லாமா சாவுதா நீ.
1. கடவுளே கடவுளே குருவே சபித்தாயோ நீ?
2. கடவுளே கடவுளே குருவே விரைவில் சாவுதா நீ.
மணர வேதனையில் எவர் இருந்தாலும் அவர்களுக்கு
இவ்விரு வாக்கியங்களும் நிச்சயம் பொருந்தும்.
(புத்தர் மொழி தமிழ் என்பது பல பதிவுகளில்
ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது).
மேலும் இந்த வாக்கியத்திற்கு ஆங்கில
அறிஞர்களுக்கு இதுவரை சரியான விளக்கம்
கிடைக்கவில்லை என்பதே நிதர்சன உண்மை.
வலைதளத்தில் தேடினால் பல விதமான விளக்கங்களும்
முரண்பாடுகளுமே உள்ளது.
மேற்சொன்ன தமிழ் விளக்கம் சரியானது தான் என்பதை
உறுதியாக கூறமுடியாவிட்டாலும் மேற்சொன்ன
மற்றும் பின்வரும் காரணங்களை கொண்டு கிருத்து
புத்த துறவி என்பதை நிச்சயமாக நம்பலாம்.
Salvation Braclet - ஏனோ எழு (சில ஆறு
நிறங்களுடன்) நிறங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவ்வேழு நிறங்களும் பண்டய தமிழரின் வண்ண கொள்கை
நிறங்களான கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள்,
வெண்மை மற்றும் நிறமற்ற நீர்வண்ணம் என்று
ஒன்றினைவதும் தற்செயலாகுமா?
ஆரம்பத்தில் ஏழு தேவதூதர்களை (Arch angels)
வகைபடுத்திய கிருத்துவ மதம் கிரிகோரி அவர்கள்
காலத்தில் அதை மூன்றாக குறைத்ததும், ஆரம்பத்தில்
ஏழுகன்னி ஏழு முனி வழிபாடு கொண்ட தமிழர் ஏதோ
காரணத்தினால் மும்மூர்த்தி வழிபாடு கொண்டதும்
தற்செயலாகுமா?
Archangel பெயர்கள் ஏழும் El என்றே முடிவதும் (எல்
என்ற சொல் சூரியனை உணர்த்துவது), யேசு
வழிபாட்டின் போது சுடர் ஒளியை வணங்கும் வழக்கம்
சூரியனையே உணர்த்துவதும் தற்செயலாகுமா?
இப்படி எண்ணற்ற ஒற்றுமைகளை புத்தர், தமிழர் மற்றும்
கர்த்தாவிடம் காணலாம்.
இருப்பினும் இவர் எவ்வாறு கடவுளாக்கப்பட்டார்,
இவரை வணங்காதவரை மரணக்குழியில் தள்ளுவார் என
எதனால் கூறப்பட்டுள்ளது?
முதல் கேள்வியான சாக்ரட்டீஸ் எதனால் கடவுளின்
தூதர் என்று கூறப்படவில்லை?
Cristmas எதனால் Xmas என எழுதப்படுகிறது?
கிபி, கிமு என வரையறுத்தவர்கள் கிருத்து பிறந்த
நாளை ஜனவரி 1ம் திகதி என்று நிருவாமல்
திசம்பர் (உண்மையில் யேசு பிறந்த நாள் எதுவென்று
எவருக்குமே தெரியாது) 25என வைத்ததன் காரணம்
என்ன?
அரேபிய மதக்கொள்கை உலகம் முழுதும் எப்படி
பரவியது எதனால் பரப்பப்பட்டது?
இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கான விளக்கம் அடுத்த
பதிவில்....
நன்றி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக