சனி, 29 ஏப்ரல், 2017

வண்டிப்பெரியாறு தமிழர் பகுதி மண்மீட்பு 1956 கேரளா மலையாளி

aathi tamil aathi1956@gmail.com

23/5/15
பெறுநர்: எனக்கு
வண்டிப்பெரியாறு வீழ்ந்த
கதை.....
இன்றைய இடுக்கி மாவட்
டத்தில் அமைந்திருக்கும்
அழகிய பேரூர்...தமிழர்கள்
பெருவாரியாக வாழ்ந்த ஊர்
முன்னொரு காலத்தில்...
ஊரைச்சுற்றிலும் தேயிலை
தோட்டங்கள்..MMJ...AVT...
கன்னிமரா என பல கம்பெனி
களிடம் சிக்குண்டு கிடக்கிற
து நிலமும் மலையும்...
எப்போதும் பரபரப்பாக
இருக்கும் ஒரு நகரம் இது...
கோட்டயம் செல்லும்
பாதை...சபரிமலை செல்லும்
பாதை...என்பதால் எப்போது
ம் போக்குவரத்து இருக்கும்..
அதிசயமாய் வண்டிப்பெரி
யாறு பேருந்து நிலையத்தின்
முன்புறம் இரு சிலைகள்
இருக்கிறது....ஒன்று புரட்சி
யாளர் அம்பேத்கர் சிலை....
(கேரளத்திலுள்ள புலையர்
சமூகம்....அச்சமூகப் பிதாம
கன்..அய்யங்காளி சிலைக
ளோடு நிறைய்ய இடங்களி
ல் அம்பேத்கருடைய சிலை
களையும் வைத்திருக்கிறார்
கள்)....
மேலாக உள்ள மற்றொரு
சிலை ஒரு தமிழருடையது...
பீர்மேடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
எம்.எம்.சுந்தரத்தின் சிலை
தான் அது...
அய்யா சுந்தரம் ஒரு நேர்
மையான சட்டமன்ற உறுப்
பினராக பணி செய்தவர்...
தேயிலைத்தோட்ட தமிழ்த்
தொழிலாளிகளின் தோழன்..
மலையாளிகளால் பெரிதும்
மதிக்கப்பட்டவர்....அவரது
சமாதி வண்டிப்பெரியாறு
அரசு மருத்துவமனையின்
பின்புறம் அமைந்துள்ளது...
அதற்குப்பக்கத்திலேதான்
மார்க்சிஸ்ட் குண்டர்களால்
படுகொலை செய்யப்பட்ட
பாலண்ணனின் சமாதியும்
இருக்கிறது....
1956 - வரை தமிழர்கள்
மட்டுமே வாழ்ந்து வந்த பெரி
யாற்று பூமியில் மலையாளி
கள் வந்திறங்கின காலமிது...
கோட்டயம்...கொச்சி சி
றைகளிலிருந்த கொடிய
கைதிகளை விடுவித்து....
அவர்களுக்கு ஐந்து ஏக்கர்
நிலத்தையும்....ஐயாயிரம்
ரூபாய் பணத்தையும்
கொடுத்து இப்பகுதிகளில் குடியேற்றத்தை
ஆரம்பித்து
வைத்தார் அன்றைய கேரள
முதல்வர்.பட்டம்.தாணுப்பி
ள்ளை...
அதுவரை தமிழர்கள் மட்
டுமே வாழ்ந்த பெரியாற்று
பூமியை மலையாளிகள்
பங்கு போட ஆரம்பிததார்கள்
நூறு விழுக்காட்டுத்தமி
ழன் படிப்படியாக குறைந்து
இன்று நாற்பத்தியெட்டு
விழுக்காடாக குறைந்திருக்கி
றான்....
பீர்மேட்டில் தமிழர் மட்
டுமே வெற்றிபெற முடியும்
என்ற நிலை மாறி இன்று
மலையாளிகள் மட்டுமே
வெற்றிபெற முடியும் என்ற
நிலை வந்திருக்கிறது...
வண்டிப்பெரியாறு வர்த்
தகம் தமிழர் கையை விட்டு
மலையாளிகள் கைக்கு இட
ம்மாறி ஆண்டு இருபதை
நெருங்குகிறது....
கடந்த பஞ்சாயத்து தேர்
தல்வரை தமிழர்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்த
வண்டிப்பெரியாறு
பஞ்சாயத்தில்.....இப்போது
தலைவராக இருப்பவர்
விஜயானந் என்ற மார்க்சிய
மலையாளி....
முதலில் நிலம் போனது
பிறகு வர்த்தகம் போனது
இருந்த அரசியல் போனது
இனி எஞ்சியிருப்பது உயிர்..
. அது எப்போது போகும்...
நாளை பேசுகிறேன்....
ச.அன்வர் பாலசிங்கம

aathi tamil aathi1956@gmail.com

23/5/15
பெறுநர்: எனக்கு
வண்டிப்பெரியாறு வீழ்ந்த
கதை.....2.
தேவிகுளத்திற்கு மலயாளிகள் வந்து சேர 1963
ம் ஆண்டைத் தாண்டியது..
காரணம் சாலை வசதி...
நேரியமங்கலம் முல்லையா
ற்றுபாலம் மலயாள நாட்டி
லுள்ள கொச்சி சமஸ்தானத்
தையும்...தேவிகுளம் உள்ளி
ட்ட பூஞ்சார் தமிழ் சமஸ்தா
னத்தையும் அவ்வளவு எளிதாய் இணைக்கவிடவில்
லை....
அந்த நேரியமங்கலம் ஆற்
றுப்பாலம்தான் பழைய்ய
தமிழக கேரள எல்கை....
அந்த நேரியமங்கலம் பாலம்
ஒரு கி.மீ தொலைவு கொண்
டது...1967 வாக்கில் பால
வேலை தொடங்கியதும்
மலையாளிகள் உஷாரானார்
கள்..
அமெரிக்க ஐக்கிய நாட்டு
வரலாற்றில் மண்ணின் மை
ந்தர்களான செவ்விந்தியர்
களை அமேசான் காடுகளைத்
தாண்டி விரட்டியடிக்க....வெள்ளை
ஏகாதிபத்திய வெறியர்கள்
""மேற்கு நோக்கிய பயணம்""
என்று பெயரிடுவார்கள்....
அதுபோலவே இங்கும்
பூஞ்சார் சமஸ்தானத்துக்குட்
பட்ட பழைய்ய பகுதிகளில்
இருந்த மண்ணின் மைந்தர்
களான தமிழ் மக்களை ஒடுக்க ஒரு ""வடக்கு நோக்கிய
பயணத்தை""ஆரம்
பித்தார்கள் மலயாளிகள்...
பட்டம் தாணுப்பிள்ளை
என்ற பயங்கரவாத முதல்வ
ரால் தொடங்கி வைக்கப்ப
ட்ட அந்த இன ஒழிப்புப்பய
ணம் இன்றுவரை தொடர்கி
றது...
தேவிகுளத்தைப்போலல்
லாது..வண்டிப்பெரியாற்றுக்
குள் ஊடுருவ மலயாளிகள்
பெரிய முயற்சியை செய்ய
வேண்டியதில்லாமல் போய்
விட்டது...
காரணம் கோட்டயத்திலி
ருந்து குமுளிவரை சாலை
அமைக்க ஏதுவான ஒரு வழி
இருந்தது...அதைச்சாதகமாக
பயன்படுத்திக்கொண்ட மல
யாளிகள்....எவ்வளவு விரை
வாக முடியுமோ அவ்வளவு
விரைவாக சாலையைப் போ
ட்டார்கள்....இதற்காக அவர்
கள் பெரிய அளவில் மெனக்
கெடவில்லை....
ஈழவர்களே வண்டிப்பெ
ரியாற்றுக்குள் முதலில் ஊடு
ருவிய மலயாளச்சாதி...
அவர்களுக்குப்பின்னால்
சங்கனாச்சேரி..மூவாற்றுப்
புழா போன்ற பேரூர்களிலிரு
ந்து மலபார் முஸ்லிம்கள்
ஊடுருவலானார்கள்.....
புலயர்கள் ஏற்கெனவே அங்
கொன்றும் இங்கொன்றுமாக
இருந்தார்கள்....
இப்படியாக பின்னர் நாயர்
கள் கொஞ்சபேரும்....மார்த்
தோமா கிறித்தவர்கள் ஒரு
கூட்டமும் ஊடுருவலாயி
ற்று....
இந்த மலயாள வருகை
யின் வெளிப்பாடாக பீர்மேடு
வண்டிப்பெரியாறு போன்ற
வை ஒரு பெருநகர்களாக உருவெடுத்தது....
அதுவரை தேயிலை வர்த்தகம் மட்டுமே நடைபெ
ற்ற வண்டிப்பெரியாற்றில்
மலயாள வருகையடுத்து
மத வழிபாட்டுச்சின்னங்கள்
உருவாகின...
தமிழர்கள் கையில் இருந்த அரசியல் படிப்படியா
க ஈழவர் கைகளுக்கு மாற
ஆரம்பித்தது....இன்றைய
வண்டிப்பெரியாறு பஞ்சாயத்
து தலைவர்.விஜயானந் ஒரு
ஈழவர்.
S N D P -Sri Narayanaguru Dharma Pari
palana sangam என்ற ஈழவ
சாதி வெறி அமைப்பும்....
N S S -Nayar Service Socie
ty என்ற நாயர் சாதி வெறி
அமைப்பும் இடுக்கி மாவட்ட
த்தை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர களமிறங்கின.
வண்டிப்பெரியாற்றுத்தமி
ழன் அதற்குப்பலியானான்...
பள்ளர் பறையர் என்ற
பிரிவினை ஊதிப்பெரிதாக்கப்
பட்டது....இரு தமிழ்ச்சமூகமு
ம் ஆங்காங்கே உரச ஆரம்பித்தது....
மலயாளிகள் நினைத்தது
நடந்தது....
1956- ம் ஆண்டு மொழி
வழிப்பிரிவினை வேகமெடுத்
தபோது ...மார்ஷல் நேசமணி
தலைமையில் திருவிதாங்
கூர் தமிழக காங்கிரஸ்
தேவிகுளம்...பீர்மேட்டை
மீட்டெடுக்க களமிறங்கி போராடியபோது.....கணபதி
என்ற ஒரு தோட்டத்தொழி
லாளியை அழைத்த மலை
யாளிகள்....
கணபதி நீ யாருடா ஒரு
தாழ்சாதிக்காரன்....நேசமணி
யாருடா ஒரு சாணான்....
அவன் உனக்காக வந்து போராடுது....ஊர்நாட்டில அவரு
உனக்காக போராடுமா
என அப்பாவி கணபதியை
தூண்டிவிட்டு அவரை கேரள
காங்கிரசு சார்பாக நிறுத்தி
கணபதிக்கு ஆதரவாக ஒரு
சாதியை திருப்பி விட்டது
மலையாள வெறி....
நேசமணியோடு மூணார்
போன போராட்டக்குழுவைச்
சார்ந்த குப்புசாமிக்கு வெட்டு
விழுந்தது....
வண்டிப்பெரியாறு விழுந்த கதை தமிழ் இனச்
சரித்திரத்தில் ஒரு பெருந்து
யர்.....
நாளை பேசுகிறேன்...
ச.அன்வர் பாலசிங்கம்
அமைப்பாளர்.
கேரளத் தமிழர் கூட்டமைப்பு

aathi tamil aathi1956@gmail.com

29/5/15
பெறுநர்: எனக்கு
வண்டிப்பெரியாறு வீழ்ந்த
கதை--3.
( இந்தப்பதிவு இன்று பிறந்த
நாள் காணும் எனது அன்பு
அண்ணன் தமிழன் கலை
அவர்களின் நெடிய தமிழ்த்
தேசிய பயணத்திற்கு.....)
தேவிகுளத்தை கணபதி
என்ற தனிமனிதனை முன்
னிறுத்தி கையகப்படுத்திய
மலயாள காங்கிரசு....
அதே கணபதியை முழு
நேர மலையாளியாக்கி அழகு
பார்த்தார்கள்...கணபதி என்ற
உழைக்கும் சாதித்தமிழன்
அடுத்தடுத்து மூன்று முறை
தேவிகுளத்தின் சட்டமன்ற
உறுப்பினரானார்....
1957-- மொழிவழிப்பிரிவினைப்
பெருந்துயர் இடுக்கி மலை
யகத்தையே அசைத்துப்பார்
த்தபோது...கணபதி என்ற
தமிழன்...கேரளாவிற்கு ஆதர
வாக மூணாறு நகரில்
பெருங்கூட்டத்தோடு ஊர்வலம்
போனான்....மலயாள மண்டு
கள் கைகொட்டி சிரித்தது...
சூரியநெல்லியிலும்
ஆனையிறங்கல்...குமுளி...
பூப்பாறை...நெடுங்கண்டத்
திலும்....மொழிவழிப்பிரிவி
னைக்கு எதிராக எழுந்த தமி
ழர் எழுச்சிகளை ....
கணபதியைக் கொண்டே
முறியடித்தது மலயாள இன
வெறி அரசு....
கேரளச்சட்டமன்றத்தில்
மொழிவழிப்பிரிவினை சரியே....தேவிகு
ளம்..பீர்மேடு
கேரளாவோடு சேர்ந்தது
சரியே....மேற்கண்ட பகுதி
களை மீட்டெடுப்பேன் என
நேசமணி நாடார் சொல்வது
முட்டாள்தனமானது என
கணபதி தூயதமிழில் பேசி
யது காலத்தின் பெருந்துயர்..
அந்தக்கணபதிக்கு மூணா
று தாண்டி சித்ராபுரம் பகுதி
யில் பல நூறு ஏக்கர் வனத்
தை ஒதுக்கிக் கொடுத்தது...
கேரள அரசு...
ஒருநாள் இரவில் மலையாளியான ஐந்து லட்
சம் தமிழர்களின்....அவலமும்..
கண்ணீரும்...சிந்திய செந்
நீரும்...விழலுக்கு இறைத்த
நீராய்ப்போனது...
மொழிவழிப்பிரிவினைக்
குழுவின் உறுப்பினர்...கே.எம்
பணிக்கர்....தமிழகத்தில்
பெரியவர்.ஈ.வெ.ரா.வை
திருச்சி.ரத்தினவேல் தேவர்
மண்டபத்தில் சந்தித்துப்பேசி
யது நல்ல பலனளித்தது....
குளமாவது...மேடாவது
ண்ணேன் என்று அன்றைய
தமிழக முதல்வர் அப்பாவி
காமராசர் அறிக்கை கொடுக்
குமளவிற்கு போனது....
T A T A வின் உடும்புப் பிடி
யில் சிக்கிய தேவிகுளம்
பீர்மேட்டுத் தமிழன்...
மலையாளிகளின் இரும்புப்
பிடிகளுக்குள் சிக்கிக் கொண்
டான்....மலையகமெங்கும்
கண்ணீர் பெருக்கெடுத்து
ஓடியதை எவரும் கவனிக்க
வில்லை....
அப்பாவிகளின் நியாயம்
எந்த நாட்டில் சபையேறியது.
கேரளாவை அடுத்தடுத்து
ஆண்ட காங்கிரசு கம்யூனி
ஸ்ட் ஆகிய ரெண்டு கட்சிக
ளும் மெது மெதுவாக...தேவி
குளம்...பீர்மேட்டை தன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்
டுவந்தது...
பூஞ்சார் என்ற தமிழ்நிலத்
து பெருமன்னனின் கட்டுப்
பாட்டிலிருந்த .....
கோட்டயம் பூஞ்சார் சமஸ்
தானம் மெது மெதுவாக
மரணிக்க ஆரம்பித்திருந்தது..
1878-- ம் ஆண்டு எந்தப்
பூஞ்சார் மன்னரிடத்திலே
இடுக்கி மலையகத்தில்
சின்கோனா பயிரிட உரிமை
கேட்டு ஒப்பந்தம் போட்டா
னோ வெள்ளைப்பறங்கியன்
அந்தப் பெருநிலத்தை.....
வளம் செழித்த இடுக்கி மலையகத்தை
ஒருநாள்
இரவில் இழந்தது தமிழ்நிலம்
கிட்டத்தட்ட 146 ஆண்டு
களுக்கும் மேலாக அழுகை
யும்...கண்ணீருமாக தன்
பெருமை மிகுந்த வாழ்க்கை
யை கழித்துக்கொண்டிருக்கி
றது அப்பாவித் தமிழினம்....
கேட்பதற்கு நாதியற்ற அப்பா
விகள் வீழ்ந்த கதை.....
தொடரும்......
ச.அன்வர் பாலசிங்கம்
அமைப்பாளர்..
கேரளத் தமிழர் கூட்டமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக