சனி, 29 ஏப்ரல், 2017

காவேரி வழக்கு 20 ஆண்டு இழுத்தடிப்பு காவிரி கன்னடர் இனவெறி கர்நாடகா நதிநீர் அணை நீதிமன்றம்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
ராஜா பொட்டிப்புரம்
பிறகு 1983ல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள்
நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி
மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர்
மன்றம் அமைக்கும்படி கேட்டது. அதன் பிறகு
தமிழக அரசு 1986ல் மத்திய அரசிடம் நடுவர்
மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது.
இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின்
வழிகாட்டுதலுடன் திரு. வி.பி. சிங்கின்
மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு
காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970
முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள்,
முதல்வர்கள் போன்றோர் 21 முறை
இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த
முடிவும் எட்டப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நடுவர்
மன்றமே கூட அன்றைய நிலையில் காங்கிரஸ்
பாரதியஜனதா போன்ற பெரிய கட்சிகள் அன்றி
வி.பி.சிங்கை பிரதமராகக் கொண்ட தேசிய
முன்னணியின் முயற்சியால் தமிழக
கோரிக்கையின்படி அமைக்கப்பட்டதாக
ும்.நடுவர் மன்றத்தீர்ப்பு 25/6/91 தேதியிட்ட
இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக
தமிழகத்திலுள்ள மேட்டூர் அணைக்கு
ஒவ்வொரு ஆண்டும் (ஜூன் மாதம் ஆரம்பித்து
மே மாதத்தில் முடிவடையும்) 205 டி.எம்.சி.
தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும்
என்றும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும்
137 டி.எம்.சி. தண்ணீர் அனுப்ப வேண்டும்)
கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம்
ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது
என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு
வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே
அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது.
இதன்பிறகு 25.11.91ல் இடைக்காலத் தீர்ப்பை
எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்ததன்
விளைவாக 3.4.92ல் நடுவர் மன்றம் விளக்கத்
தீர்ப்பு ஒன்றை அளித்தது. இதில் போதிய
அளவு தண்ணிர் உற்பத்தியாகாத ஆண்டுகளில்
ஏற்படும் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட
மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்
என்று குறிப்பிட்டிருந்தது.

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக