சனி, 29 ஏப்ரல், 2017

பறையர் சிறப்பு இறைமறுப்பு சாதி பாணர்

aathi tamil aathi1956@gmail.com

18/7/15
பெறுநர்: எனக்கு
பாடல்: அடலகந் துப்பின்...............
"குரவே தளவே குருந்தே முல்லை"யென்
றிந்நான் கல்லது பூவு மில்லை
விளக்கம்: குரவு தளவு குருத்து முல்லை இந்த நான்கையும் தவிர வேறு சிறந்த
பூக்களில்லை.
பாடல்: கருங்கால் "வரகே" யிருங்கதிர்த் "தினையே"
சிறுகொடிக் "கொள்ளே" பொறிகி"ள ரவரை"யொ
டிந்நான் கல்ல துணாவு மில்லை
விளக்கம்: வரகு, தினை, கொள், அவரை இந்த நான்கையும் தவிர வேறு சிறந்த உணவில்லை.
பாடல்: "துடியன் பாணன் பறையன் கடம்பனெ"ன்
றிந்நான் கல்லது குடியு மில்லை
விளக்கம்: துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்த நான்கையும் தவிர வேறு
சிறந்த குடியில்லை.
பாடல்: ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே.
விளக்கம்: மேலுள்ளவற்ற சிறந்தவற்றைப் போல் எதிரிகளின் யானைகளை முன்
நின்று போர் புரிந்து வென்றவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லுக்கு நெல்லை
குத்தி வழிபடுவதை விட வேறு சிறந்த வழிபாடும் இல்லை என்பது இதன்
பொருளாகும்.
____________
இதனால் இந்த நான்கு பூக்களை தவிர வேறு பூக்களே இல்லை என்றோ இந்த நான்கு
தானியங்களை தவிர வேறு உணவே இல்லை என்றோ இந்த நான்கு குடிகளை தவிர வேறு
குடிகளே இல்லை என்றோ கூறிடவியலாது. இதை பறையர்கள் புரிந்து கொள்ள
வேண்டும். இதை பாடியவர் மாங்குடி கிழார் என அழைக்கப்படும் மாங்குடி
மருதனார் ஆவார். இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
காலத்தவர். இந்த நெடுஞ்செழியன் காலத்தில் அவன் பரதவர் போன்றவர்களையும்
அடக்கியுள்ளான். அப்போது பரதவர் குடியே இல்லை என்று ஆகிவிடுமா என்ன?
மருத(னார்) காலத்தில் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற
பழமொழி ஏற்படும் அளவுக்கு நிலை வளர்ந்தது. அதனால்தான் கோயிலில் மறை ஓதும்
பார்ப்பனர்களான ப(ம)றையர்களை மருதனார் சிறந்த குடி என்கிறார்.
பொதுவாக தலித்தியம் பேசுபவர்கள் பறையர்களை மற்ற தமிழ் குடிகளுக்கு எதிராக
திருப்புவதற்கே இதைப் போல் தவறான கருத்துக்களை அவர்களிடம் பரப்பி
வருகின்றனர். எங்களைத் தவிர வேறு குடியே இல்லை எனச் சொல்வதன் மூலம்
பறையர்கள் மீது மற்ற தமிழ் குடிகளுக்கு வெறுப்பு ஏற்படும். அதையே
தலித்தியத்தால் பயன்படும் வடுகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
_____
இதே போல் ப(ம)ள்ளர்களையும் தலித்தியம் வீழ்த்த முனைப்பு காட்டுகிறது.
இதைப் போல் தமிழ் சாதிகளுக்கு உள்ள சிக்கல்களை எல்லாம் எப்படித்
தீர்ப்பது என எனக்குத் தெரிந்த தீர்வுகளை நூலாக எழுத உள்ளேன்.
பொதுவாக தமிழ் குழுக்களை ஆராய்ந்த மானுடவியலாளர்கள் குறிஞ்சி மேட்டு
நிலத்திலும் நெய்தல் தாழ் நிலத்திலும் இருந்ததால் மேலிருந்து கீழாக
மனிதர்கள் வந்திருப்பர்கள் என எண்ணி குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என
வரிசை வகுத்தனர். அது தவறாகும். குறிஞ்சிக்குப் பிறகு நெய்தல் வந்தது
என்பேன் நான்.
வரலாற்று தொல்லியல் சான்றுகளை வைத்துப் பார்த்தால் குறிஞ்சி நெய்தல்
முல்லை மருதம் எனவே வருகிறது.
இவை எல்லாம் தொல்லியல் சான்றுகளுடன் கீழ்வரும் நூலில் நிறுவப்படும்.
____________________________
"தமிழ் குடிகளின் தோற்றமும், வளர்ச்சியும், வீழ்ச்சியும், மீட்டெழுச்சியும்"
________________________
பாகம் - 1 = தோற்றம்
பாகம் - 2 = வளர்ச்சியும் வீழ்ச்சியும்
மேலுள்ளவை நடந்து முடிந்தவை.
பாகம் - 3 மீட்டெழுச்சி
இது இனி நடக்கப்போவதை தீர்மானிக்கும்.
தோற்றம் என்ற நூல் 11 உட்பகுப்புகளாக
1. குறிஞ்சி நிலத் தோற்றத்தையும்
2. நெய்தல் நிலத் தோற்றத்தையும்
3. நெய்தல் நிலத் தோற்றம் குறிஞ்சியில் ஏற்படுத்தியத் தாக்கத்தையும்
4. முல்லை நிலத் தோற்றத்தையும்
5. முல்லை நிலத் தோற்றம் குறிஞ்சியில் ஏற்படுத்தியத் தாக்கத்தையும்
6. முல்லை நிலத் தோற்றம் நெய்தலில் ஏற்படுத்தியத் தாக்கத்தையும்
7. மருத நிலத் தோற்றத்தையும்
8. மருத நிலத் தோற்றம் குறிஞ்சியில் ஏற்படுத்தியத் தாக்கத்தையும்
9. மருத நிலத் தோற்றம் நெய்தலில் ஏற்படுத்தியத் தாக்கத்தையும்
10. மருத நிலத் தோற்றம் முல்லையில் ஏற்படுத்தியத் தாக்கத்தையும்
11. மருத நிலம் மற்ற நிலங்களை ஆதிக்கம் செலுத்த நிலவுடைமை சமுதாயமாக
காராண்மை நிலை வரை வளர்ந்ததையும்
விளக்கும்.
__________
வளர்ச்சியும் வீழ்ச்சியும் பகுதி
1. காராண்மை நிலை வளர்ந்ததும் அதுவே வடுகக் களப்பிரர் படையெடுப்புக்கு
காரணமானதையும்
2. களப்பிரர் ஆட்சி வீழ்த்தப்பட்டவுடன் மருத நிலத்தில் பதினெண்குடிகளின்
தோற்ற வளர்ச்சியையும்
3. மண்டலம் சார்ந்து குடிகளுக்குள் பகுப்புகள் தோன்றி வளர்ந்தமையும்
4. ஆரியம், திராவிடம், தலித்தியம் இந்த மூன்று கருத்தியல்களும் தமிழர்களை
பிரித்தாண்டு வீழ்த்தியமையும்
விளக்கப்படும்.
______________
மீட்டெழுச்சி என்பது நம் தமிழ் குடிமக்களிடையே நடக்கும் உள் முரண்களை
எப்படி தீர்ப்பது எந்த பொருட்டில் தீர்வுகளை முன்வைக்கும். அவற்றில்
மேற்சொன்ன பறையர் சொல் தொடர்பான விளக்கமும் அடங்கும்.

தென்காசி சுப்பிரமணியன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக