புதன், 31 ஜனவரி, 2018

ராஜேந்திர ராஜராஜ சோழன் பிறந்தநாள் வந்தேறி குழப்பம் துல்லியமாக தெளிவு கல்வெட்டு குடவாயில்

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் எது?

சமீப காலமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம்குறித்து ஆதாரங்களுடன் சில விளக்கங்கள்…
கடந்த ஜூலை மாதம் 24, 25-ம் தேதிகளில் மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் பேரரசராக முடிசூடிய ஆயிரமாவது ஆண்டையும், அவர் பிறந்த ஆடி மாதத்துத் திருவாதிரை நாளையும் ‘கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்’ மிகச் சிறப்பாகக் கொண்டாடி உலகத் தமிழ் மக்களையும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தையும் கங்கை கொண்ட சோழ புரத்தின்பால் ஈர்த்தனர்.
விழா நடந்து முடிந்த பிறகு, சில வரலாற்று ஆர்வலர்கள் ‘சோழர் வரலாறு’என்ற நூலை எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியும், ‘பிற்காலச் சோழர் வரலாறு’ என்ற நூலை எழுதிய சதாசிவப் பண்டாரத்தாரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழி மாதத்து ஆதிரை என்று கூறியிருக்கும்போது, இவர்கள் எப்படி ஆடி மாதத்துத் திருவாதிரை நாளை அவருடைய பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடலாம் எனக் குற்றம் கூறுவதோடு, அது வரலாற்றுப் பிழை என்றும் சாட முற்பட்டுள்ளனர்.
வரலாறு என்பது எழுதி முடிக்கப்பெற்ற ஒன்று அல்ல. இந்தியத் தொல்லியல் துறையால் படி எடுத்துப் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டுகள் அத்தனையும் இதுவரை அச்சில் வெளிவரவில்லை. மேலும், ஆண்டுதோறும் பல நூற்றுக் கணக்கான கல்வெட்டுச் சாசனங்களும் சில செப்பேட்டுச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. புதிய தரவுகள் கிடைக்கும்போது பழைய கருத்துக்களும் முடிவுகளும் நிச்சயம் மாற்றம் பெறும்.
திருவொற்றியூர் கல்வெட்டு:
சாஸ்திரியாரும் பண்டாரத்தாரும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் மார்கழித் திருவாதிரையாக இருக்கலாம் எனக் கணிக்க, அவர்கள் கண்ட சான்று திருவொற்றியூர் சிவாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனமே. ராஜேந்திர சோழனின் 31-ம் ஆட்சியாண்டான கி.பி.1043-ல் சதுரானன பண்டிதர் என்பவர் அந்தக் கோயிலில் 150 காசுகளை முதலீடு செய்து, மார்கழித் திருவாதிரை நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்தார். அதுபற்றிக் கூறும் அந்தக் கல்வெட்டு, ‘திருவொற்றியூருடைய மகாதேவர்க்கு உடையார் ராஜேந்திர தேவர் திருநாள் மார்கழித் திருவாதிரை நாளன்று நெய்யாடி அருள வேண்டும் மிடத்துக்குச் சதுரானன பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்த காசு நூற்று ஐம்பது’ என்று கூறுகிறது.
சிவபெருமான் ஆதிரை நாளுக்கு உரியவன் என்பதைச் செம்மொழித் தமிழ் நூலான முத்தொள்ளாயிரம் வாழ்த்துப் பாடலில், ‘ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் ஊர்திரை மேலி உலகு’ என்று கூறுகிறது.
பண்டு முதல் இன்றளவும் எல்லா சிவாலயங்களிலும் மார்கழித் திருவாதிரை நாளை ஆருத்ரா தரிசனம் என்ற பெயரில் ஆடவல்லான் உலா செல்லும் திருநாளாகக் கொண்டாடிவருவது சேய்மையான மரபாகும். திரு ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் தேவாரப் பதிகம் பாடும்போது ‘ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பா வாய்’ எனக் கூறி மார்கழி மாதத்து ஆதிரை நாளின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்பதைப் பல கல்வெட்டுச் சாசனங்கள் உறுதிசெய்கின்றன. எந்த மாதத்து ஆதிரை என்பதே ஆய்வுக்குரிய கேள்வி. திருவொற்றியூர் சாசனத்தில் மார்கழி ஆதிரை நாளை ராஜேந்திர சோழன் திருநாளாகச் சதுரானன பண்டிதர் கொண்டாடினார் என்ற செய்தியை மட்டுமே அறிய முடிகிறதே அன்றி, அதுதான் அவன் பிறந்த மாதம் என்ற எந்தவொரு குறிப்பும் அந்த சாசனத்தில் இல்லை.
தக்கோலம், திருமழபாடி கல்வெட்டுகள்
சென்னைக்கு அருகே தக்கோலம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் திருவூறல். அங்கு இருக்கும் சிவாலயத்தில் உள்ள ராஜேந்திர சோழனின் மூன்றாமாண்டுக் கல்வெட்டு ஒன்று உடையார் ராஜேந்திர சோழ தேவர் திருநாள் திருவாதிரை நாள் எழுந்தருளும் திங்கட் திருவிழாக்களுக்குரிய (12 மாதத் திருவிழாக்களுக்கும் உரிய) நிவந்தங்கள் பற்றி விவரிக்கிறது. இந்தக் கல்வெட்டு ‘தென்னிந்தியக் கல் வெட்டுச் சாசனங்கள்’ தொகுதி 5-ல் 1378-ம் சாசனமாக இந்திய அரசின் கல்வெட்டுத் துறையால் வெளி யிடப்பட்டுள்ளது.
இதனை நோக்கும்போது மாதந்தோறும் வரும் ஆதிரை நாளை ‘ராஜேந்திர சோழன் திருநாள்’ என்ற பெயரில் கொண்டாடியதை அறிகிறோம். இதே போன்று அரியலூர் மாவட்டம் திருமழபாடி கோயிலில் உள்ள ராஜாதிராஜ சோழனின் 4-ம் ஆண்டு கல்வெட்டில் மாதந்தோறும் ‘ராஜேந்திர சோழ தேவர் திருநட்சத்திரத்துத் திருவாதிரைத் திருநாள்’ என்ற பெயரில் அவ்விழா கொண்டாடப்பட்ட குறிப்பு உள்ளது.
இச் செய்தியை ‘தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனங்கள்’ தொகுதி 5-ல் உள்ள 633-ம் சாசனம் விவரிக்கின்றது. எனவே, ஒரு ஆண்டுக்குரிய 12 மாத ஆதிரை நாட்களும் ‘ராஜேந்திர சோழன் திருநாள்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டதால் நாம் முதலில் கண்ட திருவொற்றியூர் சாசனம் குறிப்பிடும் மார்கழி மாதத்துத் திருவாதிரை ராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பட்டது என்ற குறிப்பைக் கொண்டு அதுதான் அவர் பிறந்த மாதம் எனக் கொள்ள முடியாது. பேரறிஞர்கள் கூறிய அக்கூற்று ஓர் ஊகமேயன்றி உறுதியன்று.
திருவாரூர் கல்வெட்டுக்கள்
திருவாரூரில் உள்ள வீதிவிடங்கப் பெருமான் (தியாகேசர் திருக்கோயில்) திருக்கோயில் மூலட்டானத்தைக் கற்றளியாக எடுப்பித்து, அதற்குப் பொற்றகடுகளைப் போர்த்தியவர் ராஜேந்திர சோழன் என்பதை அக்கட்டுமானத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. அவருடைய தொடர் கல்வெட்டுச் சாசனங்களின் இடையே உள்ள அந்த மன்னரின் 31-ம் ஆட்சியாண்டின் 244-ம் நாளில் பொறிக்கப்பட்ட அவருடைய ஆணையைக் குறிப்பிடும் சாசனத்தில், அவர் பிறந்த மாதமும் நட்சத்திரமும் அவருடைய தந்தை ராஜராஜ சோழன் பிறந்த மாதமும் நட்சத்திரமும் குறிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கல்வெட்டை இந்திய தொல்லியல் துறையினர் 1919-ம் ஆண்டில் எண்:674-ம் சாசனமாகப் பதிவுசெய்து, ஆங்கிலத்தில் ஆண்டறிக்கைக் குறிப்பும் வெளியிட்டுள்ளனர். அதில் மாமன்னர் ராஜராஜன் ஐப்பசி மாதத்து சதய நாளிலும், அவருடைய மகன் ராஜேந்திரன் ஆடி மாதத்துத் திருவாதிரையிலும் பிறந்தவர் என்ற குறிப்பு அந்த மன்னராலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் அதிட்டானத்து குமுதப் படையில் மேற்குத் திசையிலும், தென்திசையிலும் உள்ள அக்கல்வெட்டை இக்கட்டுரையின் ஆசிரியரும், அரியலூர் அரசுக் கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறைத் தலைவருமான பேராசிரியர் இல. தியாகராஜனும் இணைந்து படி எடுத்தனர். அது, கட்டுரையாளரின் ‘திருவாரூர் திருக்கோயில்’ என்ற பெருநூலில் 70-ம் எண் கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பட்டது. அந்த சாசனம் ராஜேந்திர சோழனின் ஆணையை வெளியிடு வதாகும். அதில் திருவாரூர் கோயிலின் மூலஸ்தான முடையாரான புற்றிடங்கொண்டாருக்கு மார்கழித் திருவாதிரை நாள், திருப்பூரநாள், ஆவணி அவிட்ட நாள், ஆண்டுப் பெருவிழா ஆகிய நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டிய பூஜை முறைகளைக் கூறி, பின்பு தன் ‘அய்யர் பிறந்து அருளிய ஐப்பிகைச் சதயத் திருவிழா வரைவுக்குத் திருமுளையட்டவும், தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும், நாம் பிறந்த (ராஜேந்திர சோழன் பிறந்த) ஆடித் திருவாதிரை நாளில் திருவிழா வரைவு குருமுளையட்டவும், தீர்த்தத்துக்குத் திருச்சுண்ணம் இடிக்கவும்…’ கொடுத்த நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வெட்டுச் சான்றால், ஐயம்திரிபற ராஜராஜன் ஐப்பசி சதயத்தில் பிறந்தவர் என்பதும், ராஜேந்திரன் ஆடித் திருவாதிரையில் பிறந்தவர் என்பதும் உறுதியாகின்றன. இங்கு மார்கழி ஆதிரை நாள் ஆரூர் இறைவனுக்குரிய நாளாகச் சுட்டப்படுகிறது.
மேல்பாடி சொல்லும் செய்திகள்
கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ‘மேல்பாடி’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளனர். அந்நூலின் ஆசிரியரான கல்பனா, மைசூர் கல்வெட்டு ஆவணக் காப்பகத்திலிருந்து மேல்பாடி கோயிலிலிருந்த ராஜேந்திர சோழனின் வெளி வராத கல்வெட்டொன்றை ஆய்வுசெய்து தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், அந்த விழா நாள் பூஜை கள்பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளன.
காமரசவல்லியில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டு வைகாசி மற்றும் மார்கழி ஆதிரை விழாக்களைப் பற்றிக் கூறுகிறது. எனவே, 12 மாத ஆதிரை விழாக்களும் ராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பட்டாலும் அவர் பிறந்தது ஆடி மாதத்துத் திருவாதிரையே என்பது அவரே கூறியுள்ள கூற்று. இந்தக் கருத்துக்களை மறுக்க முற்படும் ஆய்வாளர்கள் இங்குக் குறிப்பிடப்படும் திருவாரூர் மற்றும் மேல்பாடி கல்வெட்டுக்களை நேரில் பார்த்த பின்பு அவை ராஜேந்திர சோழனின் ஆணைகள் இல்லை என்பதைச் சான்றுகளுடன் மறுத்துக் காட்டிவிட்டுப் பின்பு, அவை யாருடையவை என்பதை மெய்ப்பித்தாலன்றி மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமே இல்லை.
- குடவாயில் பாலசுப்ரமணியன், தொல்பொருள், கல்வெட்டுத் துறை அறிஞர், ‘ராஜராஜேஸ்வரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: kudavayil@yahoo.com

தமிழகம் போக்குவரத்து துறை 35000 கோடி நட்டத்தில்

aathi tamil aathi1956@gmail.com

23/10/17
பெறுநர்: எனக்கு
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 35000 கோடி நட்டத்துல ஓடுதாம்
மதுரைல மட்டும் தொழிற்சங்கங்களைச் சார்ந்த நடத்துனர் ஓட்டுனர் 180 பேரு
வேலைக்கு வரமாட்டானுகளாம்
ஆனா இவனுகளுக்கு சம்பளம் போட மாசம் 60 லட்சம் ரூவாயாம்
மதுரை மட்டும் இந்த நெலவரம்னா மத்த ஊரில் எத்தனை பேர் எவ்வளவு ரூவா நட்டம்
# வேதனை

நஷ்டம் நட்டம் ஊழல் பஸ் பேருந்து

பர்மா பிலிகான் தமிழர் கிராமம் கோவில் இனப்பற்று பண்பாடு கலாச்சாரம் புலம்பெயர் கள்ளர்

aathi tamil aathi1956@gmail.com

22/10/17
பெறுநர்: எனக்கு
சாரதா தேவி , 7 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
இதுதான் பிலிகான் கோயில்
மலேசியா முருகன் கோயில் போல பர்மா தமிழர்களோட அடையாளம்னே சொல்லலாம்
இக்கோயிலை , பல வருடங்கள் பழமையான தமிழர் வழிப்பாடு குலதெய்வ கோயில் இது
,
பர்மாவில் அழகான ,செழிப்பான ஒரு விவசாய கிராம் தான் 'பிலிகான்" ,90%
தமிழர்கள் வாழும் கிராமம் இது , விவசாயம் தான் மூலத்தொழில்
இங்கு மின்சாரம் இல்ல. குழந்தைகள் படிக்க அரசு பள்ளிக்கூடம் இல்ல , ஆனா
சுய முயற்சி தமிழ் பள்ளி உண்டு
குழந்தைகள் முதல் பெரியவங்கவரை துளியும் பிறமொழி கலப்பின்றி அழகான தமிழ் பேசுவாங்க
" கோயிலை பற்றி சில சிறப்புகள் "
- முணியான்டி கோயில் தமிழர்த்திரு " பெ.ந.குப்புசாமி கடாரத் தலைவர் "
அவர்களால் 1862 ஆண்டில் கட்டப்பட்டது
- அங்காளம்மன் கோயில் தமிழர்த்திரு " இருளாண்டி மழவராயர் " அவர்களால்
கட்டப்பட்டது ,
- முணியான்டி - அங்காளம்மன் என இரு கோயில்களும் அருகாமையிலே உள்ளனர்
- வருடத்தோரும் ஒரே நாளில் இரு கோயிலுக்கும் திருவிழா நடக்கும் , 1000
திற்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு பூக்குழி இறங்குவாங்க
- தமிழர்கள் மட்டுமின்றி பர்மா ,சீனர் போன்ற பிற இனத்தாரும் , பர்மா அரசு
அமைச்சர்கள்வரை பெரிதும் நம்பிக்கையோடு வணஙங்குவாங்க, பூக் குழி
இறங்குவாங்க , ஐயா வுக்கு பலிக்கொடுத்து வழிப்படுவாங்க , நம்பிக்கையோடு
கேட்டால் வேண்டுதல்கள் கண்டிப்பா நிறைவேறும் என பேர்போகும் தெயவம் இது
- திருவழா 10 நாட்கள் நடைப்பெறும், பர்மா தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும்
ஒன்னு கூடிடுவோம் ,குட்டி தமிழ் நாட்டை அப்போது காணலாம் ,
- 365 நாளும் நீங்க எப்ப போனாலும் தலைவாழ இலைப்போட்டு உபசரிப்பாங்க , அது
இரவு 2 மணியானாலும் சரி , அந்த கிராமத்துக்கு போனாலே அவங்க கேட்கும்
முதல் கேள்வி " சாப்பிடீங்களா? மொதல கை கழுவுங்க ,சாப்பிட்ட பிறகு
பேசலாம் " இதுதான்
- ஒரே வரில சொல்லனும்னா பழங்கால தமிழரை நீங்க அங்கே காணலாம்
- தைமாசமானா பொங்கலை பெரிய விழாவா கொண்டாடுவாங்க , குறிப்பா மஞ்சவிரட்டு
சிறப்பாக நடக்கும்
-கோயில் சார்பா எங்கேயும் சென்று யாரிடமும் நன்கொடை வாங்கமாட்டாங்க
,விருப்பமுள்ளவர்கள் கோயில் உண்டியில் போடலாம்,அம்புட்டுதான்
- தமிழகத்தில் இருந்தோ வெளி நாட்டு தமிழர் யாரேனும் வந்தார் கிராமவாசிகள்
விரும்பி கேட்பது ஒன்னே ஒன்னுதான்
" படிக்க தமிழ் புத்தகம் எதும் இருந்தால் கொடுத்துட்டு போங்க, நீங்க
படித்து முடித்த பழைய புத்தகமானாலும் பரவாயில்லை "
இதுதான் பிலிகான் கோயிலும் கிராமம் வாழ் தமிழர்கள் பற்றிய சிறு தகவல்
தொடரும்.....

Bee Palan
பிலிகானில் தீ மிதிப்புதான் விஷேசமாக நடக்குமாம். அந்த காலத்தில்
செட்டியார்கள் கட்டியதாக சொல்வார்கள்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு
சாரதா தேவி
இல்ல அண்ணா , கள்ளர் இனக்குழுவினர் கட்டியது , பிலிக்கான் கிராமமே கள்ளர்
மக்கள்தான் அதிகம் , கோயில் கட்டியவர் "குப்புசாமி கடாரத்தலைவர்" &
இருளாண்டி மழவராயர் , இவரோட கொள்ளு பேத்தியதான் என் சொந்த அண்ணணுக்கு
கட்டிருக்கோம்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Bee Palan பதிலளித்தார் · 1 பதில்
Winston Thangaraja
நான் 1999ல் மொலமியன் போகும்வழியில் ஒரு உயரமான குன்றில் ஒரு பழைய
முருகன் கோயில் பார்த்தேன். கவனிப்பார் அற்றுக் கிடந்தது. 1960 நீவின்
அக்கிரமத்தின் பின் தமிழர்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்து சென்று
விட்டார்களா?

சாரதா தேவி
தொலைக்காட்சி இல்ல , செய்தி தாள் இருக்கு , சாதி உண்டு ,சாதி வெறி
கொலைகள் ,சாதி கலவரங்கள் இல்ல, ஏன்னா தூண்டிவிட ஆரியனுமில்ல
,திராவிடனுமில்ல

Tamilamudhan Amudhan
பராசக்தி படத்தில் பர்மா கலவரம் பார்த்திருக்கிறேன். மீண்டும் அதற்கான
சூழல் வராமல் தடுப்பு நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள்.

Tamilamudhan Amudhan
நீங்க பள்ளிக்கூடம் ஆரம்பிங்க புத்தகங்கள் உங்கள் விலாசம் தேடி வரும்.

Dhanabal Murugesan
பா்மாவில் தமிழர்களின் மக்கள் தொகை தற்பொழது
எவ்வளவு இருக்கும்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · இன்று, 10:51 AM க்கு
சாரதா தேவி
சரியான கனக்கெடுப்பு இன்னும் இல்ல சகோ , குத்துமதிப்பா 15-20 லட்சம் இருக்கும்

புலத்தமிழர் பர்மிய

எல்லாளன் நடவடிக்கை கரும்புலி வான்புலி தாக்குதல் புலிகள் போர் அனுராதபுரம் ஈழம்


aathi tamil aathi1956@gmail.com

22/10/17
பெறுநர்: எனக்கு
எல்லாளன் நடவடிக்கை….

இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…
🔥🔥🔥🔥🔥🔥
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம்
சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை
நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும்
பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும்
தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின்
கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை
காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு
அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு
விளங்கப்படுத்தினான்.

“எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற
ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப
உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம்.
விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்….”
இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது.

“வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு
வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம்.
அப்ப நாங்கள் வெளிக்கிடுவம்.”

இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு
நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள். இந்த
நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின
பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான்.
சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி
கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல்
களைப்படையும். ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. அவர்களின் எண்ணமெல்லாம்
இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின்
சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக
இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள். அங்கு
சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும்.
இப்படி கழிந்தன அந்த நாட்கள்.

அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின்
இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன.
இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை
நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் தான்
தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு
வந்தன.

“நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள்.
எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம்.
உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை
உச்சரிக்கும்.” தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன்
கூடவிருந்து வாழ்ந்தவர்கள். அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும்
தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள்
சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம்
காட்டினார்கள். அந்த இடத்தில் “அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?”
என இளம்புலி கேட்டான்.

“நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று
முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால்
ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல்
நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம
பார்த்துக்கொள்ளுங்கோ.” தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது.

உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள்
செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான்.
அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் கரும்புலி
அணிக்குள் மூன்று பெண் கரும்புலிகளும் இருந்தார்கள். அவர்களில் அறிவுமலர்
என்ற பெண் கரும்புலி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில்
இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள்
எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு
விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட
இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அவள்
மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை
ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி
எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள். இத்தனை
மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை
பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது
புரிந்திருக்கிறது.

நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு
சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை கரும்புலிகள் அணி
நெருங்குகின்றது. கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த
பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள். இவர்கள் வன்னித் தளத்திலிருந்து
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த
தலைவர் “பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?” என்று கேட்டார். “இல்லையண்ணை.
இனித்தான்…” “அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா
முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச்
சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு
நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம
கொண்டுபோகச் சொல்லுங்கோ.”

அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே
சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து
செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக
வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதை நன்கு புரிந்து வீரர்கள்
இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அநுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம்
போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக
எழிலின்பனும் பஞ்சீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக
தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத்
தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ
நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான்.
அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த
காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால்
குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த
காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன்
இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக்
கொண்டிருந்தது. வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை
ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள்,
கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள்.

தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை
அகற்றிக்கொண்டிருந்தார்கள். தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா
என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை
அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க
திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது
அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப்
பிரகாசம். தங்கள் நீண்ட கனவு நிறைவேறப் போவதற்கான ஆனந்தச் பூரிப்பு.

இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கின்றான். “நாங்கள் இறங்கப்போறம்.
இப்ப தொடர்பிருக்காது. விமானத்தளத்தின்ர மையத்துக்குப்போன பிறகுதான்
தொடர்பெடுப்பன்.” இளங்கோ நிலைமையைச் சொல்லி விட்டு அணியுடன்
உள்நுழைகின்றான். நடப்பதை சற்றும்புரியாத விமானப் படைத்தளம் அமைதியாகவே
கிடந்தது. அன்று இரவு பயிற்சி விமானமும், பீச்கிறாவ்ற்றும் வந்து
இறங்கியதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கட்டளைப் பீடத்திற்கு
தெரியப்படுத்தினார்கள். நடக்கப்போவதை அறியாத அந்த விமானம் எரிபொருள்
தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்பியபடி பற்றி எரிவதற்குத்
தயாராயிருந்தது.

உள்நுழைந்த அணி அங்கிருந்த கிறவல் மண்புட்டியை தாண்டும் போதுதான் காவலில்
இருந்த சிப்பாய் முகாமில் மனித உருவங்களைப் பார்த்துத் திகைத்து
நின்றான். பயப்பீதியால் “டோ… டோ…” என்று அவன் கத்தத் தொடங்கினான். சுமார்
இரண்டு நிமிடங்கள் வரை எதிரிச்சிப்பாய் கத்தித் தொலைத்தான். அத்தோடு
அங்கு நிலவிய நிசப்தத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது.

சுபேசனின் ‘லோ’ முழங்கியது. காவலரணில் பட்டு பெருமோசையோடு அது வெடித்துச்
சிதறியது. கரும்புலிகளின் வீரசாகசம் சிங்களத்தின் கோட்டையான
அநுராதபுரத்துக்குள் தொடங்கியது.

எதிரி நிலைகளைத் தகர்த்தபடி வேகமாக அணிகள் உள்நுழைகின்றன. இளங்கோ வேகமான
முறையில் கட்டளைகளைப் பிறப்பிக்க கரும்புலி வீரர்கள் தங்கள் இலக்குகளை
நோக்கி தங்கள் உடலில் சுமந்த நவீனகரமான வெடிபொருட்களோடும் ஆயுதங்களோடும்
ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சமநேரத்தில் வன்னியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தில்
அச்சமென்றால் எதுவென்று தெரியாது, எப்போதும் எதற்கும் துணிந்த வானோடிகள்
தங்கள் இலகுரக விமானத்திலேறி அநுராதபுர வான்படைத்தளத்தை நோக்கி
விரைந்தார்கள்.

வீமன் தனது அணியை அழைத்துக் கொண்டு எம்.ஐ.24ரக உலங்கு வானுர்தி
தரிப்பிடம் நோக்கி முன்னேறினான். இளங்கோ மற்றைய அணியை அழைத்துக்கொண்டு
பிரதான விமானத்தரிப்பு கொட்டகையை நோக்கி ஓடினான். இளங்கோ தானும்
சண்டையிட்டபடி அணியையும் வழிநடத்தினான். எந்தவித பதட்டமுமில்லாமல்
மிகவும் தெளிவான முறையில் இளங்கோவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.
சண்டையென்றால் சோளம் பொரி சுவைப்பதுபோன்ற உணர்வவனிற்கு. பதட்டமென்றால்
என்னவென்று இளங்கோ புத்தகத்தில்த்தான் படித்தறிய வேண்டும். அனுபவத்தில்
அதைப்பற்றி அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனை சண்டைக்
களங்களில் எதிரியைப் பந்தாடியவன். வன்னியில் நடந்த புகழ்பெற்ற
சமர்களிலெல்லாம் அவனின் துப்பாக்கி முழங்கியிருக்கின்றது.

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் ஜெயசிக்குறுப் படையை விரட்டியடித்த பெருஞ்
சமரில் ஒட்டுசுட்டானிலிருந்த கட்டைக்காட்டுப் பாலத்தை சிங்களப்
படைகளிடமிருந்து மீட்பதற்காக எதிரிப்படை மீது அதிரடியாய்ப் புகுந்து
எதிரிகளை மண்ணில் புரளவைத்து கட்டைக்காட்டுப் பாலத்தை எல்லோரும்
வியக்கும்படி கைப்பற்றியவன் இந்த இளங்கோ.

இத்தாவில் சமர்க்களத்தில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள் நுழைந்த
கவசப்படை கவசவண்டிகள் மீது துணிகர தாக்குதலை மேற்கொண்டு ஒரு பவள்
கவசவாகனத்தை மடக்கிப் பிடித்து அதிலிருந்த எதிரிமீது தாக்குதலைத்
தொடுத்து மின்னல் வேகத்தில் அந்த பவள் கவச வாகனத்தில் பாய்ந்து ஏறி அதில்
பூட்டப்பட்டிருந்த 50 கலிபர் துப்பாக்கியைக் கைப்பற்றி அதிலிருந்தபடியே
எதிரியைத் தாக்கி பெரும் சாகசம் நிகழ்த்திய இளங்கோ இந்தக் களத்திலா
அசைந்து கொடுப்பான்?

அநுராதபுர படைத்தளம் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அதிர்ந்துகொண்டிருந்தது.
பெரும் இறுமாப்போடு நீண்ட தடைகளையும் மண் அணைகளையும் காவல்நிலைகளையும்
அமைத்து விட்டு ‘முடிந்தால் புலிகள் புகுந்து பார்க்கட்டும்’ என்று
நினைத்திருந்த எதிரிகளுக்கு ‘முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்’ என்ற
சவாலோடு கரும்புலிகள் விமானங்களை நோக்கி ஓடினார்கள். இந்த விமானங்கள்
மீது எத்தனை கோபம் அவர்களுக்கிருந்தது. எங்கள் தாய் நிலத்தில் எங்கள்
பிஞ்சுக் குழந்தைகள் தசைத் துண்டுகளாய் சிதறவும், எங்கள் தாய்க்குலம்
ஓவென்று கதறி அழுவதற்கும் தினம் தினம் சாவின் வாடையே எங்கள் தாய் நிலத்
தின் வாசல்களில் வீசுவதற்கும் கொடிய எதிரிக்கு உதவுவது இந்த விமானங்கள்
தானே. இந்த விமானங்களை அழிப்பதால் சிதையப்போவது விமானங்கள் மட்டுமல்ல,
சிங்கள அரசினதும் அதன் படையினதும் ஆக்கிரமிப்பு ஆசை நிறைந்த போர்வெறிக்
கனவுந்தான்.

சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திற்குள் விமானத்தளத்தில் நின்ற விமானங்கள்
பெருமோசையோடு வெடித்துச்சிதறி எரிந்து கொண்டிருந்தன. தங்களைக்
காக்கமுடியாத ஆற்றாமையோடு கரும்புலி வீரர்களுக்குக் கட்டுப்பட்டு அவை
கவனமாக சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை  போல எரிந்து கொண்டிருந்தன. அந்த
விமானங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் எங்கள் தேசத்தின் புயல்களின்
வீச்சில் அகப்பட்டு செத்துவீழ்ந்திருந்தார்கள். எஞ்சியோர் அந்தத் தளத்தை
விட்டே ஓடித்தப்பினார்கள்.

அந்த விமானப் படைத்தளத்தின் ஓடுபாதையின் இடது புறமாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த எம்.ஐ – 24ரக உலங்கு வானுார்தியை நெருங்கிய வீமனின்
அணி அந்த உலங்குவானுார்தி மீது தாக்குதலைத் தொடுக்கின்றது. சிங்களப்
படையின் பலம்மிக்க உலங்குவானுர்தியான எம்.ஐ-24 ஒன்று வெடித்துச்
சிதறியபடி எரிந்துகொண்டிருக்கின்றது. மற்றைய எம்.ஐ-24 உலங்குவானூர்தி
மீது தாக்குதல் தொடுத்தபோதும் அது சேதமாகிக்கொண்டே இருந்தது. பற்றி
எரியவில்லை. அதன் மீது தொடர்ச்சியாக வீமனின் அணி தாக்குதலை தொடுத்தது.
இந்தக் கணத்தில் சிங்களப் படையால் விமானத்தளத்தை நெருங்கவே முடியவில்லை.
அவர்களின் கண்முன்னாலேயே அவை வெடித்து பெரும் தீப்பிழம்பை வீசியபடியும்
கரும்புகையை கக்கியபடியும் எரிந்துகொண்டிருந்தன.

மறுபக்கம் இளங்கோ பிரதான விமானத் தரிப்பு கொட்டகையை நோக்கி தனது மற்றைய
அணியை சண்டையிட்டபடி நகர்த்தினான். அந்த கொட்டகை மீது கருவேந்தன் ‘லோ’
வால் தாக்க அங்கிருந்த விமானங்கள் தீப்பற்றத் தொடங்கின. அவர்கள் விமானக்
கொட்டகையையும் ஒடுதளத்தில் தரித்து நின்ற விமானங்கள் மீதும் தாக்க
அவையும் தீப்பற்றி எரியத் தொடங்கின.

அநுராதபுர வான்படைத்தளத்தினுள் எதிரியின் விமானங்களுக்குத் தங்கள் உடலில்
சுமந்து வந்த வெடி பொருட்களால் தாக்கி அவை எரியும் காட்சியை ஆனந்தத்தோடு
பார்த்தபடி நிலைமையை வன்னியிலுள்ள கட்டளைப் பீடத்திற்கு அறிவித்தான்
இளங்கோ. “என்னண்டா வீமனாக்கள் எம்.ஐ-24 ஒண்டை எரிச்சிட்டாங்கள். மற்றது
தாக்கி சேதப்படுத்தியிருக்கு அது எரியேல்ல. இஞ்சால என்ர பக்கம் ஒரு கே-8
விமானமும் இன்னுமொரு விமானத்தையும் ரண்வேயில தாக்கி எரிச்சிருக்கிறம்.
பெரிய கங்கருக்குள்ள நிற்கிற விமானங்களுக்கு அடிச்சிருக்கிறம். தொடர்பில
நில்லுங்கோ பார்த்து அறிவிக்கிறன்.” கட்டளை மையத்திற்கு இளங்கோ நிலைமைகளை
தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வான்படைத் தளத்துள் நடந்த தொடக்கச்
சண்டையின் போது உள்ளிருந்த எதிரிகளின் தடைகளை தகர்த்தெறிந்து எழிலின்பன்,
பஞ்சீலன், சுபேசன், ஆகியோர் தங்களுக்குத் தரப்பட்ட பணியை சரிவர
நிறைவேற்றிய திருப்தியோடு வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீயின் ஒளிப்பிழம்புகள் அந்த
விமானத் தளத்தை சுட்டெரித்துக் கொண்டிருந்தன. சிங்களப் படைகளால்
துளியளவேனும் கரும்புலி வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க
முடியவில்லை. அவர்கள் எத்தனைதான் முயன்றாலும் விமானத்தளம் கரும்புலி
வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முன்னேறிய படையினர்
அடித்துவிரட்டப் பட்டனர்.

சமாதானம் என்ற மாயையைக்காட்டி எங்கள் விடுதலைப் போரை சிதைத்து விட
சிங்களத் தேசம் மும்முரமாக ஈடுபட்டபோது, இவர்கள் எந்த நொடிப்பொழுதும்
கரும்புலியாகி எதிரியின் குகைக்குள் புகுந்து பகைவனுக்கு பெரும் சேதம்
விளைவித்து தலைவனுக்கு பலம் சேர்க்க காத்திருந்தார்கள். தலைவரோடு
கூடவிருந்து அவரின் சுமைகளைத் தாங்கியவர்கள். அந்த உணர்வோடுதான்
எதிரியின் கற்பனைகளைச் சிதைத்துவிட்டு மீண்டும் இங்கு போர்மேகம்
கருக்கொண்டபோது கரும்புலியாய் பிறப்பெடுத்தார்கள். தங்கள் இலக்கை
அழித்தொழிக்கும் அந்த நாளுக்காக அவர்கள் எத்தனை இரவுகள்
காத்திருந்தார்கள். அவர்களின் நெஞ்சில் பிறந்த விடுதலைப்பற்று இன்று
அநுராதபுரத்து வான்படைத் தளத்தை சிதைத்துக் கொண்டிருந்தது.

அநுராதபுர வான்படைத்தளத்தின் மையத்தில் நின்று விமானத்தளத்தை தனது
கட்டுப்பாட்டில் வைத்திருந்தபடி விமானங்கள் நிற்கும் திசைகளுக்கு
கரும்புலிகளை நகர்த்தினான் இளங்கோ. வீமன் மறுபுறத்தே நின்றபடி தனது அணியை
வழிநடத்தினான். இந்த வீரர்களை எதிர்த்துச் சமரிடும் திறன் சிங்களப்
படைக்கு எங்கே இருக்கின்றது?

வீமன் தலைவருக்கு நெருக்கமாக நின்று பணிபுரிந்தவன். தேசத்தின் குரல்
அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மெய்க்காவலர் அணிக்குப் பொறுப்பாக நின்று
செயற்பட்டவன். அந்தப் பெரு மனிதனின் மனதைப் புரிந்து அவரோடு இசைந்துபோய்
அவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் வல்லவனாயிருந்தான் வீமன். ஆனால்
பாதுகாப்பு நடைமுறைகளில் அவன் தளர்வு காட்டியதில்லை. தேசத்தின் குரல்
பாலா அண்ணன் அவர்கள் இங்கு வந்தால் அவர் கேட்பது வீமனைத்தான். அத்தனை
பற்றும் பாச உணர்வும் வீமனிடத்தே அவருக்கிருந்தது. அந்த வீமன்தான் இன்று
அநுராதபுர வான்படைத்தளத்தை அதிரவைத்துக் கொண்டிருந்தான். தங்கள் தீரம்
மிகு செயல்களால் விடுதலைப் போருக்குப் பலம் சேர்த்த கரும்புலி வீரர்கள்
சிலர் தங்கள் உடலோடு சுமந்து வந்த வெடிபொதியை வெடிக்க வைத்து தங்களை
இந்தத் தேசத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டிருந்தனர். நெஞ்சிலே காயமடைந்த
காவலன் அணித்தலைவன் இளங்கோவிடம் அனுமதி பெற்றபின் தன் மார்போடு
பொருத்தப்பட்டிருந்த கந்தகப்பொதியை வெடிக்க வைத்து காற்றோடு கலந்து
போனான்.

அநுராதபுர வான்தளத்தில் அந்த வீரர்கள் மூட்டிய தீ பிரகாசித்து எரிந்து
கொண்டிருந்தது. களத்தில் நின்றபடி அணியை வழிநடத்திய இளங்கோ காயமடைந்தான்.
அவனால் நகரமுடியவில்லை தனது காயத்திற்கு கட்டுப்போட்டு விட்டு அவன்
தெளிவாக கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். அந்தக் கரும்புலிகளுள்
ஒரிருவரைத் தவிர மற்றைய எல்லோரும் எதிரியின் குண்டுமழையால் வீர
வடுவேந்திய போதும் அவற்றிற்குக் கட்டுப் போட்டுவிட்டு தொடர்ந்தும்
சண்டையிட்டனர். காயங்களின் வேதனை அவர்களை வாட்டவில்லை. சிங்களம் எங்கள்
தேசம் மீது புரிந்த கொடுமைகளின் வடுக்கள்தான் அவர்களின் மனதை
வாட்டிக்கொண்டிருந்தது. அதற்காகத்தான் இன்று எதிரியின் கோட்டைக்குள்
முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்களப்படை மீண்டும் தங்கள் தளத்தை கைப்பற்ற முன்னேறுகின்றார்கள்.
இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான். “என்னண்டா ட்ரக்கில வந்து
இறங்கி அடிச்சுக்கொண்டு வாறாங்கள். நாங்கள் திருப்பித் தாக்கிறம்.”
“நீங்கள் உங்கட ஆக்களை வச்சு நல்லாக் குடுங்கோ. எங்கட விமானங்கள்
உங்களுக்கு துணையா இப்ப தாக்குதல் நடாத்துவினம்.” இளங்கோ கட்டளை
மையத்துடன் தொடர்பிலிருந்தான். திடீரென முகாமைச் சூழ இருந்த எதிரிகளின்
ஆயுதங்கள் வான்நோக்கி குண்டுமழையை பொழிந்தன. உண்மையில் அப்போது வானத்தில்
எமது விமானங்கள் தென்படவில்லை. எதிரியின் ராடார் திரையில் எமது விமானம்
தென்படுவதாகத் தகவல் கிடைத்ததுமே பீதியால் கண்மண் தெரியாது
சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் இந்த இரைச்சல்களுக்கூடாகவே
விடுதலைப் புலிகளின் திறன் வாய்ந்த வானோடிகள் தங்களுக்குத் தரப்பட்ட
இலக்கின் மீது கனகச்சிதமாக குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் தளம்
திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

அநுராதபுர வான்தளத்தில் தரையாலும், வானாலும் கரும்புலிகள் தொடுத்த
தாக்குதலால் சிங்களச் சிப்பாய்களும் அவர்களது அதிகாரிகளும் கதிகலங்கி
போயினர். முன்னேறி வந்த சிங்களப் படையினர் எமது வான்படையின் வரவைக்
கேள்வியுற்றதுமே ஒடித் தப்பிக் கொண்டனர். இளங்கோ இந்த நிலைமையை
விமானத்தளத்தின் மையத்திலிருந்தபடி கட்டளை பீடத்திற்கு அறிவித்தான்.

எதிரியின் இலக்குகளை தகர்த்துக் கொண்டிருந்த செந்தூரன் காயமடைந்தான்.
அவனால் இனிச் செயற்பட முடியாத அளவு பாரிய காயம். அவன் இன்று நிறையவே
சாதித்துவிட்டான். அவன் மனதில் நிறைந்த திருப்தியிருந்தது. அவன்
புகழ்மணியிடம் தனது உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டை இயக்கிவிடும்படி
பணிக்கின்றான். அந்தக் கணத்தில் கரும்புலி வீரர்களின் மனத்தில் எழுந்த
உணர்வை எப்படிச் சொல்வது? எத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்து
ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்த வீரர்கள். இன்று பிரியப் போகின்றார்கள்.
ஆனாலும் சாதித்துவிட்டோம் என்ற பெருமிதத்தோடு அவனது ‘சார்ச்சை’
இழுத்துவிட்டான் புகழ்மணி. சில கணங்களில் செந்தூரன் இந்த தேசத்திற்காக
அணுவணுவாக வெடித்து சிதறினான்.

இளங்கோ தங்களால் அழிக்கப்பட்ட விமானங்களின் தரவுகளை சொல்லிக்
கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றினது இலக்கத்தைக்கூட தெளிவாக பார்த்து
அறிவித்துக் கொண்டிருந்தான்.

“என்னண்டா வீமன்ணையாக்கள் ஒரு எம்.ஐ-24ஐ முற்றா எரிச்சிட்டினம். ஓண்டு
சேதத்தோட நிக்குது. அது அடிக்க அடிக்க எரியுதில்லை. என்ர பக்கம் ரக்சி
வேயில ஒரு கே-8 எரிஞ்சு முடிஞ்சுது. அதவிடவும் இன்னொண்டும் வெளியில
எரிஞ்சிருக்கு. பெரிய கங்கருக்குள்ள 3யூ.ஏ.வி உம் ஒரு பெல்லும் எரியுது.
அதைவிடவும் உள்ளுக்க விமானங்கள் எரியுது. ஆனால் நெருப்பு எரிஞ்சு புகையா
கிடக்கிறதால எங்களால பார்க்க முடியேல. விளங்கிற்றுதா?”

“ஓமோம் விளங்கிற்று. நீங்கள் தொடர்பில நிண்டு நிலைமையை அறிவிச்சுக்கொண்டிருங்கோ.”

இளங்கோ சுற்றிவர எரிந்துகொண்டிருக்கும் விமானங்களுக்கு நடுவே காயம்
அடைந்த படி சண்டையை நடாத்திக் கொண்டிருந்தான். இரவு வந்து இறங்கிய பீச்
கிறாவ்ச் அந்தத் தளத்தில் இருந்த கோபுரத்தின் மறைவில் நின்றதை இப்போது
தான் கண்டார்கள். உடனடியாகவே வீமன் தனது கிறனைட் லோஞ்சரால் அதன் மீது
தாக்க அது பற்றி எரியத் தொடங்கியது. இப்போது கரும்புலிகளுக்கு இரட்டிப்பு
மகிழ்ச்சி. பீச் கிறாவ்ற் விமானம் மிகவும் பெறுமதிவாய்ந்தது. அத்தோடு
மற்றைய விமானங்களைவிடவும் இது முக்கியமாக அழிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே
சொல்லப்பட்டுமிருந்தது.

இளங்கோ கட்டளை மையத்துடன் மீண்டும் தொடர்பெடுக்கின்றான். “என்னண்டா இப்ப
‘பீச் கிறாவ்ற்’ ஒண்டை அடிச்சு எரிச்சிட்டம். புதுசா மினுங்கிக் கொண்டு
நிண்டது. வெடிச்சுவெடிச்சு எரியிற சத்தம் உங்களுக்கும் கேக்குமெண்டு
நினைக்கிறன்.?” இளங்கோ ஆனந்த பூரிப்போடு பீச் கிறாவ்ற் வெடித்து எரியும்
சத்தத்தை தொலைத் தொடர்புக் கருவியூடாகக் கேட்குமாறு கட்டளைப்பீடத்திற்கு
தெரிவித்துக் கொண்டிருந்தான்.

சிங்களப் படையின் அந்தப் பெரும் விமானத்தளம் இப்போது கரும்புலி
வீரர்களிடம் மண்டியிட்டுக் கொண்டது. இப்போது அங்கே கரும்புலிகள்
நினைத்தது மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தங்களது
விமானங்களைப் காப்பாற்றும் நப்பாசை சிங்களத்திடம் இருந்து இன்னும்
போகவில்லை. எரிந்து கொண்டிருக்கும் விமானங்களையாவது காப்பாற்றுவோம் என
எண்ணி அவர்கள் தீயணைப்பு வாகனத்தோடு விமானத்தளத்துள் நுழைந்தார்கள்.
அப்போது புகழ்மணி தனது பி. கே ஆயுதத்தால் அவர்கள் மீது தொடர்ச்சியான
தாக்குதலை தொடுக்க அவர்களும் ஓடித்தப்பிக் கொண்டனர். ஆனாலும்
தொடர்ச்சியாக வான் படைத்தளத்தின் எல்லையில் நின்றவாறு கரும்புலிகள் மீது
தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.

இப்போது அந்தத் தளத்தில் பி.கே ஆயுதத்தைவைத்து சுட்டுக்கொண்டிருந்த
புரட்சி காயமடைய அவன் தனது சார்ச்சை இழுத்துவிடுமாறு தர்மினியிடம்
வேண்டிக்கொண்டான். அந்தக் கரும்புலி வீராங்கனை அந்த வீரனுக்கு கடைசி விடை
கொடுத்து அவனது சார்ச்சை இழுத்து விட்டாள். அந்த வீரனும் தனது தாய்
தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டான். அவனது பி.கே ஆயுதத்தை
தர்மினி எடுத்து மதியிடம் கொடுத்தாள். மதிவதனன் இப்போது ஒரு கரும்புலி
வீரனாயினும் அவனொரு கனரக ஆயுதப்பயிற்சி ஆசிரியர். எத்தகைய கனரக
ஆயுதத்தையும் எடுத்தவுடன் கையாளும் திறன் வாய்ந்தவன். அவன் உருவாக்கிய
போராளிகள் இப்போதும் களங்களில் கனரக ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். எந்த
ஆயுதத்தையும் இலகுவாகக் கையாளும் அந்தக் கரும்புலி வீரன் வீரச்சாவடைந்த
சகதோழனின் துப்பாக்கியை எடுத்து ரவைகளை பொழிந்து கொண்டிருந்தான்.

தர்மினி ஒரு துடிப்பான போராளி. அவளும் அந்தக் களத்தில் கண்ணில் காயமடைந்த
போதும் தனது இயக்கத்தை அவள் நிறுத்திக் கொள்ளவில்லை. தனது காயமடைந்த
கண்ணிற்கு கட்டுப் போட்டுவிட்டு அவள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
புலிமன்னனும் கடும் காயத்திற்குள்ளானான். அவனிற்கு இடுப்பிற்கு கீழ்
இயலாமல் போனது. அவனால் நகர முடியாது போனாலும் பெரும் மனவுறுதியைக் கொண்ட
அந்த வீரன் தனது பி.கே ஆயுதத்தால் தொடந்தும் சூடுகளை வழங்கிக்
கொண்டிருந்தான்.

அநுராதபுர வான்படைதளம் எங்கும் பெரும் தீயின் வெளிச்சம். துப்பாக்கி
வேட்டுக்களினதும் குண்டுகளினதும் காதை கிழிக்கும் வெடியோசைகள்.
இவற்றிற்கு நடுவே நின்ற படி கரும்புலிகள். தொடர்ந்தும் சண்டையிட்டார்கள்.
அந்த தளத்தை சூழ இருந்த சிங்கள விமானப்படையால் எதுவும் முடியாது போக
தங்கள் ஆற்றாமையால் மன்னாரிலிருந்தும், வவுனியாவிலிருந்தம் விசேட படை
அணிகளை அநுராதபுரத்திற்கு அழைத்தனர். இப்போது அந்தத் தளத்தில் சண்டை
இன்னும் வலுவுற்றது. எஞ்சியிருந்த கரும்புலி வீரர்கள் மூர்க்கமாகச்
சமரிட்டார்கள்.

இளங்கோவிற்கு மீண்டும் இருமுறை காயம் ஏற்படுகின்றது. அந்தக் காயத்தின்
வலியையும் கடந்து அவன் நிதானமாக கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான்.
“எனக்கு திரும்பவும் ரெண்டிடத்தில காயம் வந்திட்டுது. நான் எனக்கு தந்த
கடமையை சரியாச் செய்திருக்கிறன். அண்ணையிட்டச் சொல்லுங்கோ. நான் என்ர
அணியோட சேர்ந்து சாதிச்சிட்டனெண்டு. நீங்கள் எல்லோரும் அண்ணையை கவனமா
பார்த்துக் கொள்ளுங்கோ. அண்ணைதான் எங்களுக்கு முக்கியம். என்ர
நண்பர்களிட்ட சொல்லுங்கோ நான் என்ர கடமையைச் சரியாக செய்திருக்கிறன்
எண்டு. இனி நீங்கள் தான் அண்ணைக்கு நிறையச் செய்து குடுக்க வேணுமெண்டு
சொல்லுங்கோ…”

இந்த வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகிறது. அதன் பின் அவன்
குரலை கேட்க முடியவில்லை. சற்று முன்தான் வீமனும் அந்த அநுராதபுர
தளத்துள் வெடித்து சிதறி வரலாறான செய்தியை இளங்கோ சொல்லியிருந்தான்.
இளங்கோ அந்த அணியை வைத்து நிறையவே சாதித்து விட்டான். தலைவர் நினைத்ததை
விட அதிகமாய் அவன் சாதித்துவிட்டான். தனது மனதில் எத்தனை பெரும் சுமைகளை
அந்த வீரன் இன்று வரை சுமந்திருக்கிறான். சமர்க்களங்களில் எத்தனை
அர்ப்பணிப்புக்களை கண்டிருக்கிறான். அதன் பதிவுகள் அவனது நாட்குறிப்பில்
இப்படியிருக்கின்றது…

“கடும் சமர் மத்தியிலேயே தலையில் காயம் பட்டு வார்த்தைகள் வெளிவர முடியாத
நிலையிலேயே என் மடியில் தலைவைத்தபடியே என்னைக்கட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்துவிட்டு என் கரம் இறுகப்பற்றியபடியே என் மடியினிலே உயிர்விட்ட
உயிர்த்தோழன் மேஜர் மனோவை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.”

“ஊடறுப்புச் சமருக்காக நெஞ்சுமுட்ட நீருக்குள்ளால் நகர்ந்து கொண்டிருந்த
போது எதிரியின் சரமாரியான செல் மழையில் மார்பில் காயப்பட்ட பெண் போராளி
குப்பி கடிக்க முற்பட்ட போது குப்பியை பறித்துவிட்டு ஒரு கிலோ மீற்றர்
தூரம் நீருக்குள்ளால் தோளில் காவிச் சென்று கரை சேரும் போது என் தோளிலேயே
உயிர் பிரிந்த பெண் போராளியைப் பார்த்து இருக்கின்றேன்.”

இது அவனது குறிப்பு பொத்தகம் சொன்ன அவனின் உணர்வுகள். இந்த உணர்வுகளைச்
சுமந்து தானே இன்று அவன் சமரிட்டான். அவன் மட்டும் என்ன 21 கரும்புலி
வீரர்களும் இப்படிப் பட்ட உணர்வுகளை சுமந்து தானே இன்று கரும்புலியாக
உருவாகியிருந்தார்கள். அந்த உன்னத வீரர்களின் இலட்சிய தாகத்தின்
முன்னாலும் அசையாத மனவுறுதியின் முன்னாலும் நெஞ்சை நிமிர்த்திய வீரத்தின்
முன்னாலும் சிங்களக் கூலிப்படைகளால் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்?
அந்த உன்னத வீரர்களை எதிர்கொள்ளும் துணிவு இவர்களுக்கு
எங்கேயிருக்கின்றது?

எதிரிகள் கலங்கி நிற்க ஆச்சரியத்தோடு வியந்து நிற்க எஞ்சியிருந்த ஒவ்வொர
கரும்புலி வீரனும் மூர்க்கமாக போராடினான். விடிகாலை 3.20 மணிக்கு
தொடங்கிய சண்டை காலை 9.00 மணிவரையும் தொடர்ந்த போதும் சிங்களப் படையால்
உள்நுழைய முடியவேயில்லை. கடைசியாக கவச வாகனங்களை கொண்டு வந்து பெரும்
குண்டு மழை பொழிந்துதான் அவர்களால் தங்கள் வான் படை தளத்தினுள் நுழைய
முடிந்தது. அப்போது தங்களுக்கு தரப்பட்ட பணியை கரும்புலி வீரர்கள்
உச்சமாக நிறைவேற்றி முடித்து வீரச்சாவை அணைத்திருந்தார்கள்.

சிங்கள தேசம் தனது ஆற்றாமையின் வெளிப்பாடாய் தங்கள் கோபங்களை கரும்புலி
வீரர்களின் வித்துடலில் தான் தீர்த்துக்கொண்டது. பாவம் சிங்களப் படைகள்.
சிங்கத்தின் வழிதோன்றல்களுக்கு நாகரீகம் பற்றி புரிந்திருக்க
நியாயமில்லைதான்.

ஆனால் கரும்புலிகள் வென்று விட்டார்கள். தலைவர் சொல்லி விட்டது போல
வெற்றி பெற்ற அவர்களின் உன்னத அர்ப்பணிப்பால் உலகமிப்போது அவர்களின்
பெயரை உச்சரிக்கின்றது. சிறீலங்காவின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவை நவீன
துட்டகைமுனுவாகச் சித்தரித்தபடி ஆழிக்கூத்தாடிய சிங்களத்தின் மீது, நவீன
எல்லாளனாக புகுந்து அவர்களின் துட்டகைமுனு கொட்டத்தை அடக்கி
முறித்ததுதெறிந்திருக்கிறார்கள். அந்த வீரர்கள் தனியே அநுராதபுர
வான்படைதளத்திற்கும் மட்டும் தீ மூட்டவில்லை. பெரும் விடுதலை தீயை பலநூறு
போராளிகளின் இதயங்களில் மூட்யிருக்கிறார்கள். நிச்சயமாய் இனிவரும்
களங்களில் அவர்கள் சிங்களத்தின் தலையில் பேரிடியாய் இறங்குவார்கள்.

நினைவுகளுடன்:- ஈழத்து நிலவன் .
விடுதலைப்புலிகள் (ஐப்பசி, கார்த்திகை 2007) இதழிலிருந்து வாகை.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

விவசாயம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் போகிறது

aathi tamil aathi1956@gmail.com

22/10/17
பெறுநர்: எனக்கு
Premkumar R, 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
கல்வி எப்பொழுது மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு
யாருக்காவது தெரியுமா?
அதற்கு ஆதரவு கொடுத்தது யார்?
அப்பொழுது அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
இவை அனைத்திற்கும் பதில் - # தெரியாது
இப்பொழுது, # விவசாயம் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாறப்போகிறது.
1. விவசாய மானியம் முற்றிலும் நிறுத்தப்படும்
2. இலவச மின்சாரம் நிறுத்தப்படும்
3. மரபணு மாற்றப்பட்ட விதைகள் திணிக்கப்படும்
4. கார்பெர்டே நிறுவனம் விவசாய நிலத்தையும்/ விவசாயியையும் விலைக்கு வாங்கும்
இப்ப, நாம என்ன செய்யப்போறோம்? வழக்கம் போல, மத்திய பட்டியலுக்கு
மாறினப்பிறகு # போராட்டம் ?

வேளாண்மை மாநிலஉரிமை ஹிந்தியா நடுவணரசு

கருணாநிதி கூடங்குளம் போராட்டம் ஒடுக்க 20மணிநேரம் மின்தடடை பிற மாநிலங்களுக்கு கொடுத்தார் மின்சாரம்

aathi tamil aathi1956@gmail.com

22/10/17
பெறுநர்: எனக்கு
கருணாவின் ஆட்சியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்க
திட்டமிட்ட மின்தடையை ஏற்ப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இருபதுமணி
நேரம்வரை மக்களை சிரமத்திற்குள்ளாக்கி தமிழர்களுக்குள் ஒரு குழப்பநிலையை
உருவாக்கியது.ஆனால் இந்த சதியை எந்த தமிழரும் உணரவில்லை.அதே நேரத்தில்
தமிழ்நாட்டில் உற்ப்பத்தி செய்த மின்சாரம் தங்குதடையன்றி பிற
மாநிலங்களுக்கு சென்றது !
இரா அருண்மொழித்தச்சன்

அணுவுலை திமுக