திங்கள், 8 ஜனவரி, 2018

வேளாளர் கூட்டணி நாயக்கர் க்கு எதிராக கலகம்

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
Ravi Subramanian
நற்குடி வேளாளர் - தினம் ஒரு தகவல்
""""""""""""""""""""""""""""""""""""""""""""
சின்ன இருங்கோ என்ற புகழும் பெருமாள் வேள் ( கி.பி 1695 - 1715) தொடர்ச்சி...
""""""""""""""""""""""""""""""""""""""""""
சின்ன இருங்கோவிற்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர் அவர்கள் அழகர் வேள்,
கள்ளபிரான் வேள் என்பவர்கள் ஆவர்.
இந்த நேரத்தில் மதுரையை விஜயரெங்க சொக்க நாதர் என்ற மன்னர் ஆண்டு
வந்தார். இவரது தலைமையை ஏற்காமல் ராமநாதபுரம் கள்ளிக்கோட்டை சிற்றரசன்
இன்னும் சில சிற்றரசர்களை சேர்த்துக் கொண்டு மதுரை பேரரசின் மீது போர்
தொடுத்தான். இதனால் மதுரை மன்னன் வேளாளர் தலைவர் உள்ளிட்ட பல தலைவர்
களிடம் ஆதரவு கோரினான். இதனால் சின்ன இருங்கோ தனது இரண்டு மகன்கள்
தலைமையில் சிறு படையை அனுப்பி வைத்தான். மதுரை பேரரசின் படைக்கு சரியான
தலைமை இல்லாததாலும், சின்ன இருங்கோ மகன்கள் இருவரும் போருக்கு புதிது
என்பதாலும், போரில் தோற்றதோடு மட்டுமின்றி, சின்ன இருங்கோ
மகன்கள்இருவரும் வவீர மரணமும் அடைந்தனர். இந்த இழப்பு வேளாளர்
சமுதாயத்திற்கே பெரிய இழப்பாக இருந்தது. பட்டத்து பிள்ளை சகோதரி
அனைஞ்சிபிள்ளை அம்மாளுக்கும் வாரிசு கிடையாது. இந்த நிலையில்
பாஞ்சாலங்குறிச்சி சிற்றரசின் கீழ் இருந்த பேருரனி மிட்டாவை சேர்ந்த
வர்த்தக ரெட்டி பட்டியில் வாழ்ந்த தலைமை கவுண்டன், எல்லை நாயக்கன்
பட்டியை ஒட்டிய முடித்தானேந்தல் எல்லை கற்களை பிடுங்கியதோடு, தங்கள்
எல்லை அதையும் தாண்டி உள்ளது என வாதாடினான். இதனால் ஏற்பட்ட கலகத்தில்
பட்டத்து பிள்ளையின் பன்னையார் (கணக்கர்) பிச்சப்பிள்ளை என்பவர் கி.பி
1709 ல் தலைமை கவுண்டனால் கொலை செய்யப்பட்டார். பின்னர் இதனை மதுரை
மன்னர் கவனத்திற்கு கொண்டு சென்று மன்னர் நேரடியாக வந்து இருவரையும்
சமாதானம் செய்து எல்லைகளை வரையறுத்து சென்றார். இவ்வாறு 15 ஆண்டுகள் அரசு
பனியாகிய தாசில்தார் பனியையும், பட்டத்து பிள்ளை பனியையும் சிறப்பாக
செய்த சின்ன இருங்கோ 1715 ல் மறைந்தார். இவரது மறைவுக்கு பின் பட்டத்து
பிள்ளையை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் எழுந்தது. இவருக்கும் இவரது
சகோதரிக்கும் வாரிசு இல்லாததால் பெரிய குழப்பம் நிலவியது. இதனால் அனைத்து
கிராம வேளாளர்களும் சிவகளையில் கூடி வேறு வழி இன்றி தலைமறைவான பெரிய
இருங்கோ அருனாசலவேளின் மகள் வள்ளியம்மாளை பட்டத்திற்கு தேர்ந்தெடுத்தனர்.
இவர் பட்டத்து பிள்ளையின் மதினியார் மகனின் மகளேயாவார். இவருக்கும்
பட்டத்து பிள்ளை குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே இவரையோ
இவருக்கு பின்வந்த பட்டத்து பிள்ளைகளையோ,பட்டத்து பிள்ளை குடும்ப
வாரீசுகள் என கூறுவது சிறிதும் பொருத்தமாக இருக்காது.

வெள்ளாளர் வடுகர் பிள்ளை வேளிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக