சனி, 27 ஜனவரி, 2018

கந்தசஷ்டி உடல் உறுப்புகளை பாடுவது கவனம் குவிதல் மெய்யியல் மருத்துவம் அறிவியல்


aathi tamil aathi1956@gmail.com

19/10/17
பெறுநர்: எனக்கு
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன் Vel Murugan உடன்.
பெரும்பாலும் தலைவலிக்கு டைகர்பாம் அமிர்தாஞ்சன் கோடாலித் தைலம் இவைகளைத்
தடவ வலியிலிருந்து உடனடி விடுதலை கிடைக்கவும் நாமும் அந்த மருந்துகளே
தலைவலியைத் தீர்த்து விட்டது என நம்பி விடுகிறோம்
ஆனால் உண்மை என்னவென்றால் மருந்து தடவியபின் ஒரு எரிச்சல் ஏற்படுகிறது
அல்லவா உடனே மூளையானது அந்த எரிச்சல் ஏற்படும் இடத்தை நோக்கி தன் கவனத்தை
குவிக்கிறது இதனால் அங்குள்ள தலைவலிக்கான கரணியங்களும் கட்டுப்பட்டு
தலைவலி தீர்கிறது
கந்த சஷ்டி கவசத்தில் வரும்
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
இந்த வரிகளைப்பாட மூளையானது மேல் சொன்ன அனைத்து உறுப்புகளையும் ஒரு
பார்வை பார்க்கிறது
இதனால் அங்கு உள்ள குறைகள் களையப்படுகின்றன
இது அனுபவத்தில் பலரும் உணர்ந்த உண்மை
12 மணி நேரம் · பொது
ஆனந்த பா ஸ்ரீநிவாஸ் மற்றும் 53 பேர்
Vel Murugan
Super anne thanks ,r u going to tiruchendur for sasti?
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 11:47 PM க்கு
Vel Murugan பதிலளித்தார் · 4 பதில்கள்
ஜாரா கடலூர்
அண்ணே! பின்னி! விட்டீர்கள்!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · நேற்று, 11:47 PM க்கு
ரெகுகுமார் குமரேசன்
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு..
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 11:50 PM க்கு
Vel Murugan பதிலளித்தார் · 2 பதில்கள்
Rajesh Balan
மன அழுத்தம் தான் தலைவலிக்கான காரணம். அது எதில் குறைகிறதோ அதில் வலி
மாயும். என் கருத்து.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 11 மணி நேரம் முன்பு
Edwin Dhason பதிலளித்தார் · 1 பதில்
Edwin Dhason
நான் பல வருடங்களாக ஒற்றை தலைவலியில் அவதிப்பட்டவன். தலைவலி வந்தால்
கட்டாயம் பரசிட்டமோல் மாத்திரை போட்டால் தான் தலைவலி போகும். எப்படியும்
வாரத்திற்கு ஒரு முறை தலைவலி இடது நெற்றி, வலது நெற்றி என மாற்றி மாற்றி
வரும். மாதத்திற்கு எப்படியும் 5 பரசிட்டமோல் உபயோகிப்பேன். 4 வருடங்கள்
முன்னர் எனது நண்பர் சங்கர் அவர்களின் அறிவுரைப்படி ஹீலர் பாஸ்கரின் தொடு
சிகிச்சையில் சொன்ன முறையின் மூலம் தலைவலி நேரத்தில் இரண்டு நெற்றியின்
வலது இடது பக்கவாட்டில் இரண்டு பெருவிரலையும் கொண்டு மூன்று தடவை முன்னே
பின்னே இலகுவாக தேய்க்க தலைவலி சில விநாடிகளில் போயே போயிற்று. இப்ப
கழிந்த நாலு வருடங்களில் முற்றிலும் தலைவலியில் இருந்து விடுபட்டு
விட்டேன். எப்பவாது தலைவலி வந்தால் நன்றாக தூங்கி எழுந்தால் தலைவலி
சரியாகி விடுகிறது.

அக்கு ஆன்மீகம் முருகன் வழிபாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக