சனி, 27 ஜனவரி, 2018

வேந்தன் வழிபாடு மறவர் உழவர் இறந்து வானம் மழை பொழிதல் சைவம் வைணவம் ஆதல் மதம்


aathi tamil aathi1956@gmail.com

20/10/17
பெறுநர்: எனக்கு
அழகன். விம
மருதத்தெய்வம் வேந்தன்:-
வேந்தன் = அரசன்.
நல்வினை செய்தவரின் உயிர்கள் இறந்தபின் மேலுலகத்திற்குச் செல்லுமென்றும்,
உலகில் (மருதநிலத்தில்) அரசனாயிருந்தவன் மறுமையில் மேலுலகத்திலும்
அரசனாவான் என்றும், மருதநில மாந்தர் கருதி, முதன்முதல் இறந்த அரசனையே
வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள். மழை மேலிருந்து பெய்வதால்,
மேலுலக வேந்தனாகிய தங்கள் தெய்வத்தினிடமிர
ுந்தே வருவதாகக் கருதி, மழைவளத்திற்காகவும் அவனை வழிபட்டார்கள்.
நல்வினையாவன வேளாண்மையும் போர்த்தொழிலும். போர்த்தொழிலில் ஒருவன் பிறர்
நன்மைக்கென்று தன் உயிரைக் கொடுத்தலால், அது தலைசிறந்த வேளாண்மையாகும்.
சிறந்த இல்லறத்தார்க்கும் போரில் பட்ட மறவர்க்கும் மறுமையில் வானுலகம்
என்பது, அவர் வேளாண்மையிற் சிறந்தவர் என்னும் கருத்துப்பற்றியே,
“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”
(குறள். 86)
என்றார் திருவள்ளுவர்.
26ஆம் புறப்பாட்டும் இக் கருத்துப்பற்றிய
தே.
“நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க”
(புறத். 93)
என்பதனால், போரிலிறந்தவர் வானுலகம் புகுவர் என்ற கொள்கையறியப்படும்.
உழவுத்தொழில் செய்யும் பள்ளரும் போர்த்தொழிற் குரிய மறவரும், இன்றும்
தங்களை இந்திரகுலத்தாரென்றும், தங்கள் குலமுதல்வன் இந்திரனென்றும்
கூறிக்கொள்கின்றனர்.
அரசனிடத்தில் வேளாண்மையும் போர்த்தொழிலும் ஒருங்கேயுண்டு. அவன்
இம்மையிலும் மழைக்குக் காரணமாகக் கருதப்பட்டான்.
“இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு”
(குறள். 545)
“முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயர்”
(குறள். 559)
என்றார் திருவள்ளுவர்.
வேளாண்மைக்குச் சிறந்த உழவர் குடியிருப்பதும், சிறந்த அரசு முதன்முதல்
தோன்றியதும் மருதநிலமே.
பாலைநிலத்து மறவர் படைஞராகுமுன், மருதநிலத்து உழவரே போர்த்தொழில் செய்து
வந்தனர். அதன் பின்பும் உழவர் போர்த்தொழிலை விட்டுவிடவில்லை.
இதை,“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே”
(மரபு. 77)
என்று தொல்காப்பியங் கூறுவதாலும், மள்ளர், மழவர் என்னும் பெயர்கட்கு
உழவர் மறவர் என்னு மிரு பொருளு முண்மையாலும், உழவர் குலத்தில் ஒரு
வகுப்பார் படையாட்சியென்று பெயர் பெற்றிருப்பதினாலும், மேனாட்டிலும்
கீழ்நாட்டிலுமிருந்த பண்டை அமரநாயக (Feudalism) முறையாலும் அறியலாம்.
பண்டைக் காலத்தில் அரசரையும் தெய்வமாக வணங்கினர் என்பது, இரணியன்,
நேபுகாத்தேச்சார் முதலியோர் சரித்திரத்தாலும், அரசனும் தெய்வமு
மிருக்குமிடம் கோயில் என்று கூறப்படுவதினாலும், அரசனுக்கும் அரசிக்கும்
தேவன் தேவி என்னும் பெயர்கள் வழங்குவதாலும், திரு வாய்க் கேள்வி
திருமந்திர வோலை முதலிய அரசக அலுவற் பெயர்களாலும், பிறவற்றாலும்
அறியப்படும்.
வேந்தன் என்னும் பெயரையே, இந்திரன் என்று ஆரியர் மொழிபெயர்த்துக்
கொண்டனர். இந்திரன் = அரசன். நரேந்திரன், மிருகேந்திரன், கவீந்திரன்
முதலிய பெயர்களை நோக்குக.
நூறு குதிரைவேள்வி வேந்தன் (இந்திரன்) பதவிக்குத் தகுதியாக
ஆரியப்பழமைநூல் கூறும். குதிரைவேள்வி செய்பவன் அரசனே.
கடைக்கழகக் காலம்வரை வேந்தன் வழிபாடு தமிழ்நாட்டிற் சிறந்திருந்ததென்பது,
சிலப்பதிகாரத்தாலும் மணிமேகலையாலும் பிறநூல் குறிப்புகளாலும்
அறியப்படும்.
(ஆயர்பாடியில் வேந்தன் வழிபாட்டை நிறுத்திய) கண்ணன் வழிபாடு வரவரத்
தமிழ்நாட்டில் வலுத்ததினாலும், நகர மாந்தருள் உழவர் சிறுபான்மையானதி
னாலும், வேந்தன் மழைவளம் ஒன்றே தரும் சிறுதெய்வமாதலாலும், சைவம்
திருமாலியம் என்னும் இரண்டும் வீடுபேற்றிற்குரிய பெருமதங்களாய்
வளர்ந்துவிட்டமையாலும், வேந்தன் வணக்கம் பெரும்பாலும் நின்றுவிட்டது.
இதுபோது ஒரோ வோரிடத்துள்ள மழைத் தெய்வவுருவமே பண்டை வேந்தன் வழிபாட்டின்
அடையாளமாயுள்ளது.
மருதநிலத் தெய்வத்துக்குப் பண்டிருந்த பெருமையை, அகத்தியர் வேந்தன்
சிவிகையைச் சுமந்ததாகத் திருவிளையாடற் புராணமும் குமரிமலையை
மகேந்திரமென்று வடநூல்களும் ஐந்திரத்தை 'விண்ணவர் கோமான் விழுநூல்' என்று
சிலப்பதிகாரமும் கூறுவதும், வேந்தன் விழாவை ஒரு சோழன் நிறுத்தியதால்
புகார் கடல்வாய்ப்பட்டதென்ற கொள்கையும் விளக்கும்.
வேந்தனுக்குச் சேணோன் புரந்தரன் என்றும் பெயருண்டு. சேண் உயரம்.
சேணுலகத்தரசன் சேணோன். வானுலகைப் புரந்தருபவன் புரந்தரன். புரந்தருதல்
காத்தல்.
(ஒப்பியன் மொழிநூல் பகுதி-1 நூல் 44,45,46,47)

பாவாணர் சைவம் வைணவம் மன்னன் கடவுள் கடவுளர் அரசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக