திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழிசை சங்கம் கல்லூரி வலை இணையம் இசை தொடர்பெண்

aathi tamil aathi1956@gmail.com

16/10/17
பெறுநர்: எனக்கு
http://www.tamilisaisangam.in

தமிழ் இசையினை என்றும் வளர்க்கும் நிலையான நிறுவனமாகத் தமிழ் இசைச்
சங்கமானது சென்னையில், 1943 ஆம் ஆண்டு, மே திங்களில் ராஜா சர் அண்ணாமலை
செட்டியார் அவர்களால் துவங்கப்பட்டது. தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப்
பண்பாட்டு வளர்ச்சிக்கும், இசை மேதைகளை ஒருங்கிணைக்கும் சங்கமாகவும், இசை
வல்லுநர்களை உருவாக்கும் கல்லூரியாகவும் தமிழ் இசைச் சங்கமானது விளங்கி
வருகின்றது.
தமிழ்ப் பண் ஆராய்ச்சியில் பெரும் பங்கினை தான் தம் பெரும் தமிழ்ச்
சேவையால் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தமிழ்ப் பேரறிஞர்களை
கெளரவப்படுத்தும் விருதான இசைப்பேரறிஞர் விருதை

Dr. வி. மீனாட்சி ஜெயக்குமார்
முதல்வர்
தமிழ் இசைக் கல்லூரி
ராஜா அண்ணாமலை மன்றம்
சென்னை - 600 108
தொலைபேசி : 044 2533 0350, 2534 1425
அலைபேசி : +91 94457 90703
மின்னஞ்சல் : tamilisaikalloori@yahoo.in

தமிழ் பண் ஆராய்ச்சி
உலகமொழிகளுள் தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது. அவ்வாறே தமிழ் இசையும்,
முத்தமிழும் இந்த நாட்டில்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு
வளர்ந்த்து வருவன. தமிழிற்கு பழைய இலக்கணமாக அமைந்த தொல்காப்பியம்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை போன்ற நிலங்களுக்குரிய யாழ்
பற்றிக் கூறுகிறது.
இசை பற்றிய நூல்களுள் மறைந்தன போக எஞ்சியவற்றுள் பரிபாடலில் பாடல்
இசைத்தோர் அவற்றிற்குரியப் பண் அமைத்தோர் போன்ற செய்திகள் கிடைக்கின்றன.

தமிழ் இசை நூல் நிலையம்
தமிழிசைக் கல்லூரி நூலகத்தில் கீழ்க்கண்ட பிரிவுகளின் வரிசையில்
3000-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
இலக்கியம்
சிற்றிலக்கியம்
இலக்கணம்
இசைத் தமிழ் நூல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
கவிதைகள்
தேவார திருப்பதிகங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக