புதன், 31 ஜனவரி, 2018

ஆசிவகம் பற்றி நூல் அமணர் சமணர் வேறுபாடு பிள்ளையார் சொல்லாய்வு சின்னம் 2

aathi tamil aathi1956@gmail.com

22/10/17
பெறுநர்: எனக்கு
சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.
அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும்
பொருள் கொண்ட இச்சொல் , அம்மணம் எனும் ஆடையின்மைக் குறிக்கும் சொல்லின்
திரிவாக அம்மணர் எனச் சுட்டப் பட்டதும் வழுவே.
(அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப் பயிற்சி உடையவர் எனும் பொருள்படும்
அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக
அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை ,
அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை,
அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில்
இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.)
1.    ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்
2.    ஐயன் , ஐயனார் , நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை
நிறத்தை அடைந்தவர்கள்
3.    அண்ணர் (அ) அண்ணல்
ஒப்புநோக்குக:
சித்தன்னவாசல் - அண்ணல் வாயில்
திருவண்ணாமலை - திரு அண்ணர் மலை
அண்ணமங்கலம் - அண்ணல் மங்கலம்
1.    போதி சத்துவர்
2.    மாதங்கர் , மாதங்கி - ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்பவர்
3.    அந்தணர்(அந்தம்+அணர்) - சிவ நெறி தனியாக தமிழகத்தில் இல்லாத
காலத்தில்(எந்தெந்த காலத்தில் என்று பின்பு பார்ப்போம்)
4.    பார்ப்பார்(பார்ப்பு+ஆர்) - சிவ நெறி தனியாக தமிழகத்தில் இல்லாத காலத்தில்
ஆசீவகச் சித்தர்களின் படிநிலைகள் யாவை ?
ஆசீவகச் சித்தர்களின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு
பின்பற்றப் பட்டது.
துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக
மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர்.
ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம்
சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து
கொள்ளலாம்.
இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக்
கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப்
படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில்
உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும் , துறவறப் பயிற்சிகளிலும் பெரிய
பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக்
கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப்
பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப்
படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு
அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.
இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை
நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும் ,
ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18
படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.
ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும்
வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது
குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும்
என்பது ஆசீவகப் பொருளியல்.
ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு
அவரவர்தம் சிந்தனை , செயல் , தகுதி , அறிவுநிலை ,
ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு
நிறங்களாவன:
கருமை & சாம்பல் - துவக்க நிலை – இரவு விண்ணின் நிறம்
நீலம் - இரண்டாம் நிலை – விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்
பசுமை - மூன்றாம் நிலை – கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய
நேரத்திற்கு இருக்கும் நிறம்
செம்மை - நான்காம் நிலை – கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
வெள்ளை - இறுதி நிலை – கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்
இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:
துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய
ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல்
படிநிலையிலிருப்பவர்.
இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி
முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.
கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து
அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற
உணர்ந்தவர்.
ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர
நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.
கரும்பிறப்பில்
கருமை முதல் படி
கருமை இரண்டாம் படி
சாம்பல் மூன்றாம் படி
நீலப் பிறப்பில்
கருநீலம் முதல் படி
நீலம் இரண்டாம் படி
வான்நிறம் மூன்றாம் படி
பசும் பிறப்பில்
அடர்பச்சை முதல் படி
பச்சை இரண்டாம் படி
வெளிர்பச்சை மூன்றாம் படி
செம்பிறப்பில்
செம்மை முதல் படி
இளம்சிவப்பு இரண்டாம் படி
காவி மூன்றாம் படி
மஞ்சள் பிறப்பில்
அடர் மஞ்சள் முதல் படி
இளமஞ்சள் இரண்டாம் படி
பொன்மை மூன்றாம் படி
வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.
இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும்
நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து
நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக்
காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச்
சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற
வேறுபாடு குறிக்கும்.
படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18
படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே
தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும்
ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால்,
பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.
இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில்
முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல
உடையினையும் , அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த
மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள்
உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து
நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது
ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில்
இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின்
உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.
நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும்.
கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக
மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி
கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே
ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான
வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம் ’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை
நிலையையே.
மேலும், புத்த நெறியிலும் ஜைன நெறியிலும் ஆசீவக நெறியின் நிறக்
கோட்பாட்டின் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும்
அணிவர். ஆனால் , ஜைன நெறியின் கொடியில் ஆசீவகத்தின் நீல நிறத்தைத் தவிற
மற்ற நிறங்கள் முறை மாற்றி இருக்கும். அவர்கள் நீல நிறத்த்துடன் கருப்பு
நிறத்தையும் சேர்த்து கருப்பு நிறமாக அவர்கள் கொடியில் கூறுகின்றனர்.
ஆனால் , இந்நிறங்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஆசீவக நெறியின்
நிறக் கோட்பாடுகளின் பொருளாக இருந்தாலும் அவர்கள் வெண்மை நிற உடையை
மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர்.
இங்கு ஆய்தற்குரிய மற்றொரு ஒரு விடயம் என்னவென்றால், கிறித்துவ நெறியில்
உள்ள “Bracelet of Christianity” எனும் கோட்பாடும் இதே நிறங்களைக்
கொண்டவை. அங்கும், இறுதியில் மோட்சம் எனும் வீடுபேறு கோட்பாடு தான்
உள்ளது.
ஆனை(யானை) , தான் பிறக்கும் பொழுது கருப்பு நிறமாக இருக்கும்(முதல்
நிலை). பிறகு அது வளர வளர அதன் நிறம் கருப்பு நிறத்திலிருந்து சாம்பல்(
Grey) நிறத்திற்கு சிறிது சிறிதாக மாறும். ஆனை, தான் குட்டியாக(கருப்பு
நிறம்) இருக்கும் பொழுது, தன் தாயை (சாம்பல் நிறம்) ஒழுக்கத்துடன்
பணிவாகப் பின்பற்றிச் சென்று தன் சிறுவயதிலேயே தன் வாழ்விற்கான
பாடங்களையும் ஆதாரங்களையும் தன் தாயிடமிருந்துக் கற்றுக்கொள்ளும் அறிவைக்
கொண்டது. தாய் ஆனையும் தன் குட்டியானைக்கு ஒழுக்கத்தைக்
கற்றுக்கொடுத்தும் தவறு செய்யும் பொழுது திருத்தவும் குட்டிக்கு
உதவியாகவும் பரிவுடனும் இருக்கும். அந்தக் குட்டியானை , தான்
வளரும்பொழுது அது தன் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களுக்கு விடைதேடி
அலைவதினை இது குறைக்கும். மேலும், தான் கற்றுக்கொண்டதைப் பிற்காலத்தில்
தன் குட்டிக்கும் கற்றுக்கொடுக்கும். மேலும் , ஆனை பிற உயிரினங்களிடம்
பரிவுடன் இருக்கும்.
இதே போல , ஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் உள்ள ஆசீவகர்கள் ,
தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக்
கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப்
பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள ஆசீவகர்களுக்குச்
சொல்லிக்கொடுப்பர். ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே
இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு
விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. ஆசீவகர்கள் பிற
உயிரினங்களிடம் பரிவுடன் இருப்பர்.
ஆனையின் இந்தப் பண்புகளை(மனப்பாங்கை – Attitude) ஒரு ஆசீவகர்
பெற்றால்தான் வாழ்வில் மேன்மை அடைந்து நிறமிலி எனும் தெய்வத் தன்மையை
அடையமுடியுமென்பதால் , ஒவ்வொரு ஆசீவகருக்கும் இப்பண்புகள் முக்கியம்.
அதனால், ஆனையின் தலையையும் மாந்தரின் உடலையும் சேர்த்து ஆசீவக நெறியின்
கடவுளான விநாயகர் உருவாக்கப்பட்டார். ஒவ்வொரு ஆசீவகருக்கும் விநாயகர்
உருவம் ஒரு கடவுளாகவும்(உள்ளே கடப்பது) வாழ்வில் மேன்மை அடைந்து தெய்வத்
தன்மையை அடைய தேவையானவற்றிற்கு ஒரு பற்றுகோலாகவும்(Inspiration)
இருக்கிறது. ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடும் இதிலிருந்தே தோன்றி
வளர்ச்சியடைந்திருக்கலாம்.
ஆசீவக சித்தர்கள் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள். இதற்கு முதன்மையான
தேவையாக இருப்பது மூக்கும் மூச்சுக்குழாயும் தான். ஆனையின்
மூச்சுக்குழாய் நீளமாக இருப்பதால் அது மூச்சுப்பயிற்சியின்
முதன்மைத்துவத்தைக் குறிப்பதாகவும் உள்ளது.
மேலும், ஆசீவக நெறியிலிருந்து(அமணம்) பிரிந்த ஜைன புத்த நெறிகளிலும்
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவக நெறியை அழிக்க முற்பட்ட சிவ நெறியிலும்
விநாயகர் வழிபாடு பொதுவாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கி.பி.
ஏழாம் நூற்றாண்டில் சிவ நெறி ஆசீவக நெறியை அழிக்க முற்பட்டது என்றால் ,
பின்பு எப்படி ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் சிவ நெறியில் வந்தார் என
நீங்கள் கேட்கலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவகர்களை(சமணர்களை) சிவ
நெறியினர் தங்கள் நெறிக்கு மாற்ற முயன்றனர். சில ஆசீவகர்கள் மாறினர்.
பலர் மாறவில்லை. அதனால் , எண்ணாயிரம்(8000) ஆசீவகர்களை கழுவேற்றம் செய்து
கொல்லப்பட்டனர். இப்படி சிவ நெறியில் சேர்ந்த ஆசீவகர்களால் தான் விநாயகர்
வழிபாடு, பிள்ளையார் சுழி, ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு ,
ஐயன்/ஐயர்/அந்தணர்/பார்ப்பார் என்றழைக்கும் வழக்கம், பல அறிவியல்
கோட்பாடுகள் முதலிய ஆசீவக நெறிக் கோட்பாடுகள் சிவ நெறியில் நுழைந்தன.
அதனால் தான் , கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட(ஏதேனும்
இயற்றப்பட்டிருந்தால்) சிவ நெறியாளர்கள் இயற்றிய நூல்களில், விநாயகர்
பற்றிய குறிப்புகள் இருந்திருக்காது.
மேலும், பிள்ளையார்பட்டி(காரைக்குடி) கற்பக விநாயகர் கோயில் சிலை அதன்
மேல் உள்ள பழங்கால எழுத்தை வைத்து கி.மு. 400ஆம் ஆண்டின் காலத்தியது
எனலாம். விநாயகர் வழிபாடு இவ்வளவு பழமையானதாக இருந்தும் கி.பி. 7ஆம்
நூற்றாண்டு வரை(1200 ஆண்டுகள்) விநாயகர் பற்றி சிவ நெறியாளர்கள் இயற்றிய
இலக்கியங்களில் ஒரு பாடல் கூட இல்லையென்றால், விநாயகர் சிவ நெறியைச்
சார்ந்த கடவுள் இல்லை என்றே பொருள்.
மேலும், ஜைன புத்த சிவ நெறிகளில் விநாயகர் வழிபாடு ஏன் செய்கிறோம் என்ற
விளக்கமும் சரியாக இல்லை. ஆனால் , ஆசீவக நெறியில் இருப்பதைப் போல
விநாயகர் அந்நெறிகளிலும் கடவுளாகவோ அல்லது முழுமுதற் கடவுளாக
இருக்கிறார். மேலும், விநாயகரைக் குறிக்கும் அனைத்து பெயர்களும் தமிழ்ச்
சொற்களே.
விநாயகர் = வி + நாயகர் = உயர்ந்த தலைவன்
பிள்ளையார் = பிள்ளை + ஆர் = உயர்ந்தவன்
கணேசன் = கணம் + ஈசன் = கூட்டத்தின் கடவுள்/மக்களின் கடவுள்
கணபதி = கணம் + பதி = கூட்டத்தின் தலைவன்/மக்களின் தலைவன்
விநாயகக் கடவுள்களுக்கு பூசை சமஸ்கிருதத்தில் செய்யும் பொழுது ‘சுக்லாம்
பரதரம் ’ என்றுக் கூறுவர். அப்படியென்றால், என்றால் ‘வெள்ளை நிற உடை
அணிந்தவனே ’ என்று பொருள். சமணத்தில்(ஆசீவகத்தில்) கடை நிலையில்
உள்ளவர்கள் மட்டும் தான் வெள்ளை நிற உடை அணிவர். வெள்ளை நிறத்திற்கு
அப்படி ஒரு சிறப்பு.
மேற்கூறியவற்றை வைத்து, விநாயகர் ஆசீவக நெறியைச் சார்ந்த கடவுள் என்று
நாம் ஆணித்தரமாகக் கூறலாம்.
விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம்.
அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை
வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து
வருகிறது. மேலும் , எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு
முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.
       விநாயகர் ஆசீவக நெறியின் முழுமுதற் கடவுள் எனப் பார்த்தோம். ஏன்
ஒரு ஆசீவக நெறியின் கடவுளை முருகன், சிவன், முதலிய தெய்வங்களை வணங்கும்
முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?. ஏனென்றால், விநாயகர்
ஆசீவக நெறியின் கடவுள். முருகன், சிவன், முதலியவர்கள் தெய்வ நிலையை
அடைந்த ஆசீவக சித்தர்கள்.
அதற்காக , சிவன் என்ற தெய்வம் இல்லை என்பதில்லை. அவரும் தெய்வ நிலையை
அடைந்த ஒரு ஆசீவக சித்தர்தான். அவரைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.
மேலும், ஆசீவக நெறியின் பிற அடையாளங்களான பிள்ளையார் சுழி ,
சுழற்றியம்(ஸ்வஸ்திகா – சத்தியகம் எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து
திரிந்திருக்கலாம்) , தாமரை –
செந்தாமரை, வெண்தாமரை,
முதலியவற்றைப் பற்றி பின்பு பார்க்கலாம்.
மேலதிக விவரங்களுக்கு:
ஆசீவகம்
ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika)
தொடரும்..... ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி
ஆனை(யானை) ஏன் ஆசீவக நெறியின் அடையாளமாக உள்ளது? விநாயகர் எப்படி ஆசீவக
நெறியின் கடவுள் ?
ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்
முனைவர் க. நெடுஞ்செழியன் அணிந்துரை
Share
Add comment 2 comments:
Maasianna September 1, 2014 at 9:28 PM
very good and very intresting,keep it up
Reply
viyasan September 2, 2014 at 5:10 AM

விநாயகர் மதம் ஆசீவகம் வழிபாடு சின்னம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக