சனி, 27 ஜனவரி, 2018

ஊழல் செய்து இருமுறை தண்டனை மீண்டும் பாஜக இணைத்துக்கொண்டது சுக்ராம்


aathi tamil aathi1956@gmail.com

18/10/17
பெறுநர்: எனக்கு
Jose Kissinger
# சுக்ராம். # நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது தகவல் ஒலிபரப்பு துறை
அமைச்சர். இவர் மீது டெலிகாம் கேபிள் வாங்கிய வகையில் ஊழல் புகார். இவரை
பதவியிலிருந்து நீக்க வலியுறுத்திய
# பாஜக 13 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கியது. சுக்ராம் மந்திரிசபையிலிர
ுந்தும் பின்னர் # காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். # சிபிஜ
சோதனையில் இவரது வீட்டிலிருந்து ரூ 3 கோடியே 60 லட்சம் ரொக்கமாக
கைப்பற்றப்பட்டது. இது நடந்தது 1996 ல்.
1997ல் சுக்ராம் ஹிமாச்சல் விகாஸ் காங்கிரஸ் எனும் தனிக்கட்சி
ஆரம்பித்தார். அடுத்து வந்த 1998 சட்டசபை தேர்தலில் இவரது ஹிமாச்சல்
விகாஸ் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்த பாஜக , கூட்டணி
ஆட்சியை சுவைத்தது.
2004 ல் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசுடன் இணந்தார் சுக்ராம்.
பின்னர் ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சுக்ராம் திகார்
சிறையில் அடைக்கப்பட்டார். 2011 ல் தண்டனை குறைக்கப்பட்டது. (பண்டிட்
ஆச்சே, இவர் என்ன அ.ராசாவா?)
இப்படிப்பட்ட சுக்ராமும் அவரது மகன்களும் இன்று ஊழலை ஒழிக்க
பிஜேபியில் சேர்க்கப்பட்டார்கள் வர இருக்கும் ஹிமாச்சல் பிரதேசத்தின்
சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில்.
இது தான் பாஜக வின் ஊழல் ஒழிப்பு யோக்கியதை. காங்கிரஸ் இல்லாத பாரதம்
உருவாக்கும் வழிமுறை
Sukh Ram and sons cross over to BJP
https://m.timesofindia.com/city/chandigarh/sukh-ram-and-sons-cross-over-to-bjp/articleshow/61085523.cms
15 அக்டோபர், 08:00 PM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக