வியாழன், 25 ஜனவரி, 2018

தீபாவளி முன்னோர் வழிபாடு தீவாளி விகடன் பண்டிகை

aathi tamil aathi1956@gmail.com

18/10/17
பெறுநர்: எனக்கு
(17/10/2017)
தீபாவளி அன்று யாரை, ஏன் வழிபட வேண்டும்? #Deepavali
0 0 0
SHARES
தீ பாவளி! இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்தியா
முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒரு
காரணத்துக்காகக் கொண்டாடப்படுகிறது. குஜராத்தியர்கள் தீபாவளியைப்
புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். வணிக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள்
தீபாவளியன்று புதுக்கணக்கு தொடங்குகிறார்கள். வட இந்தியாவில் பெரும்பாலான
மாநிலங்களில் ராமர் வனத்திலிருந்து, அயோத்திக்குத் திரும்பிய நாள் என்று
வழிபடுகிறார்கள். சில மாநிலங்களில் நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த
நாளாகக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டிலும் இதே காரணத்துக்காகத்தான்
கொண்டாடப்படுகிறது.
Advertisement
"தீபாவளி என்பது முன்னோரை அழைத்து சாந்தப்படுத்துவதற்கான நாள்.  'தீவாளி'
என்பதுதான் அதன் சரியான பெயர். முன்னோரை அழைப்பதற்காகவே இந்த நாள்
கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஐப்பசி அமாவாசையன்று அதிகாலையில் எழுந்து,
நல்லெண்ணெயில் தலை குளித்து, தீபம் ஒன்றை ஏற்றி வாளியில் வைத்து வீட்டு
வாசலில் தொங்க விடவேண்டும். பின்னர் உச்சி நேரத்தில் முன்னோருக்குப்
பிடித்த உணவுகளைப் படையலிட்டு அவர்களை அழைப்பது வழக்கம். பின்னர்
கார்த்திகை மாதம் தொடங்கும் கார்த்திகைத் திருநாள் அன்று  வீடெங்கும்
தீபம் ஏற்றி, வெடி வெடித்து, சொக்கப்பனை கொளுத்தி முன்னோர்கள் மீண்டும்
விண்ணுலகம் செல்வதற்கு வழிகாட்ட வேண்டும். கார்த்திகைதான் நம் 'தீபஒளித்
திருநாள்'. அதுதான் நம் புத்தாண்டு என்று சமூக வலைத்தளங்களில் சிலர்
எழுதுகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில், சில இடங்களில் தற்போதும் இப்பழக்கம் உண்டு. ஐப்பசி
மாதம் அமாவாசையன்று அதிரசம் உள்ளிட்ட பலகாரங்களை உச்சிவேளையில்
முன்னோர்களை நினைத்துப் படையலிடுவார்கள். பின்னர் அதனுடன் தேங்காய்,
பழத்தை ஒரு புது பாத்திரத்தில் வைத்து, அதை மஞ்சள் தடவிய நூல்களால்
பிணைத்து உத்திரத்தில் தொங்கவிடுவார்கள். பின்னர், மூன்று நாள்கள்
கழித்து அதை இறக்கி அதில் கட்டப்பட்ட கயிறுகளை வீட்டிலுள்ள அனைவரும்
கைகளில் கட்டிக்கொள்வார்கள். ஒரு வாரத்துக்கு அந்தக் கயிற்றை கழற்றக்
கூடாது. அதேபோல் படையலிட்ட பலகாரங்களையும் வீட்டிலுள்ள அனைவருக்கும்,
உறவினர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பழக்கம் உண்டு. இந்த நாளை 'நோன்பு
நாள்' என்று அழைக்கிறார்கள்.
ஒடிஸா மாநிலத்திலும் தீபாவளித் திருநாள் முன்னோரை வழிபடுவதற்கு உரிய
நாளாகத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது.
"தீ+ஆவளி தான் தீபாவளி ஆனது. அதாவது, தீபத்தை வரிசையாக அடுக்குவது.
ஓடிஸாவில், ஐப்பசி அமாவாசையன்று மாலை இருட்டிய பின்னர் இலையில்
படையலிட்டு முன்னோரை வரவேற்று வழிபடுவார்கள். சிறிது நேரத்துக்குப்
பின்னர் நெய்பந்தம் கொளுத்தி வழியனுப்பி வைப்பார்கள் " என்கிறார்
பண்பாட்டு ஆய்வாளரான ஒரிசா பாலு.
Advertisement
வேலூரிலும், ஒடிசாவிலும் ஒரே மாதிரி தீபாவளி கொண்டாடுவது எப்படி?
" வேலூர் மாவட்டம்தான் ஒரு காலத்தில் வட இந்தியாவின் எல்லையாக இருந்தது.
வடக்கு நுழைவாயிலே வேலூர், திருத்தணி, பெரியபாளையம், குப்பம் பகுதிதான்.
அதனால்தான் நமக்கும், ஒடிசா மக்களுக்கும் பெரும்பாலான பண்பாடுகள் ஒரே
மாதிரி இருக்கின்றன. நம்முடைய முன்னோர் வழிபாடு என்பது, இயற்கையுடன்
தொடர்புடையது. தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை
தொடங்கும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இயற்கை சீற்றங்கள் ஏதும் நிகழக்
கூடாது என்பதற்காகவே முன்னோரை வழிபடும் இத்திருநாளை உருவாக்கினார்கள். "
என்கிறார் ஒரிசா பாலு.
சைவ சிந்தாந்த அறிஞர், 'இறைநெறி' இமயவனின் கருத்தும் அதற்கு உடன்படுகிறது.
"தீபாவளி என்பது பண்டைய காலத்திலிருந்து தொடரும் ஒரு வழிபாடு. தீபத்தை
வரிசையாக ஏற்றி முன்னோர்களை வழிபடும் வழக்கம்தான் தீபாவளி.
பின்னாளில்தான் நரகாசுரன் பற்றிய புராணக்கதை இதனுடன் சேர்ந்து கொண்டது.
தமிழர்களுடைய விழாக்கள் அனைத்தும் பௌர்ணமியில்தான் வரும். அமாவாசையில்
வராது. அமாவாசை என்பது முன்னோர்களை வரவேற்று வணங்குவதற்காக மட்டுமே.
ஐப்பசி
அமாவாசையில் முன்னோர்களை அழைத்து, கார்த்திகை பௌர்ணமியில் சீரும்
சிறப்புமாகக் கொண்டாடி வழியனுப்பும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்துள்ளது.
தற்போதும் தமிழ்நாட்டின் சில இடங்களில் இருக்கிறது. ஒடிசா,
நேபாளத்தில்கூட இப்படித்தான் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டின் பல
பண்பாட்டுக் கூறுகள் உலகின் பல்வேறு இடங்களில் பரவியுள்ளது. அதை நாம்
தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே
தேடிக்கொண்டிருந்தால் ஏதும் கிடைக்காது " என்கிறார் இமயவன்.
பல்வேறு படையெடுப்புகளால் நம் பண்பாடு மற்றும் கலாசாரங்கள்
மட்டுமல்லாமல், நம் பழங்கால வழிபாட்டு முறைகளும் தற்போது பல்வேறு
மாற்றங்களை அடைந்திருக்கின்றன. எந்த ஒரு விழாவையும் தற்போதுள்ள
நம்பிக்கைகளின் வழியாக மட்டும் பார்த்துக் கொண்டாடுவதோ அல்லது அதை
மட்டுமே கருத்தில் கொண்டு எதிர்ப்பதோ கூடாது. ஒவ்வொன்றுக்கும்
பின்னாலுள்ள வரலாற்றை அறிந்துகொள்ள முற்படுவது அவசியம். அப்படிக்
கொண்டாடுவதன் மூலம்தான் நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நம் பண்பாட்டைக்
கொண்டு செல்லமுடியும்.

நாட்காட்டி விழா நவீனன்  நீத்தார் பித்ரு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக