சனி, 27 ஜனவரி, 2018

இராவணன் தளபதி நரகாசுரன் இராமன் ஆரியன் வாட்சப் கதை

aathi tamil aathi1956@gmail.com

18/10/17
பெறுநர்: எனக்கு
இலங்கை வேந்தன் உயர் திரு. இராவண மகாராஜா... மற்றும் அவரது
படைத்தளபதியாகிய "நரகாசுரன்"... பற்றிய உண்மை வரலாறும்... தீபாவளிப்
பண்டிகையின் தோற்றமும்.
➖ஈழத்து நிலவன் ➖
⭕〰〰〰〰〰〰〰⭕

["நம்ப முடியாத வீர சாகசங்களும், ஆபாசமான குறுங் கதைகளும் கொண்ட புராணக்
கதைகள்.. எல்லாம் ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒரு சிலரால் எழுதப்
பட்டவையே... இருந்தாலும் இந்தப் புராணக் கதைகளில் வரும் சில முக்கியமான
கதா பாத்திரங்கள்.. உண்மையாகவே ஒரு காலத்தில் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள்
என்றும்... செவி வழியாக, சந்ததி சந்ததியாகக் கேட்டறியப்பட்ட கதைகள்...
காலப் போக்கில் திரிபு படுத்தப்பட்டு.. பிற்காலத்தில் அவை புராணக்
கதைகளாக உருவெடுத்தன என்றும்.. ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பிற்பட்ட காலத்தில் திரிபு படுத்தப்பட்ட இரண்டு பிரபலமான புராணக்
கதாபாத்திரங்களான "இராவணன்", மற்றும் அவனது படைத் தளபதியான "நரகாசுரன்"
பற்றி நான் படித்த சில நூல்களில் இருந்து எடுத்துக் கொண்ட குறிப்புகளின்
சுருக்கம் தான் இது....

இந்தோனேஸியா, மியான்மார், சைனா, ஜப்பான்.. என்று மொத்தம் ஏழு நாடுகளில்
ஐம்பதிற்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உள்ளன.. ஒவ்வொரு நாட்டிலும் ராமாயணம்
ஒவ்வொரு மாதிரி உள்ளது. சீனர்கள் சீதையை இராவணனின் மகள் என்கிறார்கள். பல
கிழக்காசிய நாடுகளில் இன்றைக்கும் இராவணன் கடவுளாக வணங்கப் படுகிறார்.

இராவணனை அரக்கனாக சித்தரித்து இராமனை மட்டும் வழிபடும் வழக்கம்
இந்தியர்களிடம் மட்டுமே உள்ளது.. இப்படி பல நாடுகளிலும் கடவுளாக
வழிபடப்படும் இலங்கை வேந்தன் இராவணன் ஒரு தமிழன் என்பதை இன உணர்வுள்ள
தமிழச்சியாக இங்கே பதிவு செய்கிறேன்.. எங்களுடைய இராவண மகாராஜா பத்து தலை
கொண்ட அரக்கனோ.. அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்பட்ட காமாந்தகனோ கிடையாது..
அவரைப் பற்றிய பெரும்பாலான உண்மைகள் பிற்காலத்தில் வால்மீகியாலும்,
கம்பனாலும் திரிபுபடுத்தப் பட்டவையே.... "சமணமும் தமிழும்" என்கிற நூலில்
இருந்து நான் இந்த விபரங்களைப் படித்து அறிந்து கொண்டேன்.. யார்
இராவணன்.... எது உண்மையான ராமாயணம் என்பதை மிகச் சுருக்கமாக கீழே எழுதி
இருக்கிறேன். படித்துப் பாருங்கள்.. அந்த நூலில் இருக்கும் குறிப்புகள்
முழுவதையும் எழுதுவதற்கு பல பக்கங்கள் வேண்டும்.. எனவே மிகச் சுருக்கமாக
இராவணன்பற்றிய குறிப்புகளை மட்டும் இங்கே எழுதுகிறேன்."]
🔺©©©©©©©🔺

பெரும்பாலான புராணக் கதைகள்.. கி.மு 9540 காலப்பகுதியில் இன்றைய
ஆப்கானிஸ்தான் ஊடாக இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறிய
ஆரியர்களுக்கும்... இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீகத்
தமிழர்களுக்கும் இடையிலான யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டவையே.. சுர பானம்
அருந்துகிற ஆரியர்கள் "சுரர்கள்" என்று அழைக்கப் பட்டார்கள். சுரபானம்
அருந்தாத தமிழர்கள் "அசுரர்கள்" என்று அழைக்கப் பட்டார்கள்.

இராமாயணம் போன்ற புராணக் கதைகளில் வரும் இராவணன், கும்பகர்ணன் போன்ற
அசுரர்கள் உண்மையிலேயே இந்த தமிழ் மண்ணை ஆண்ட ஆதித் தமிழ் மன்னர்களே
ஆவர். அசுரர்கள் கறுப்பு நிறமானவர்கள் என்றும் ஆஜானுபாகுவான தோற்றத்தைக்
கொண்டவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. பெரும்பாலான ஆதித் தமிழர்கள்
இப்படித்தான் தோற்றமளித்ததாகவும்.. பிற்காலத்தில் ஏற்பட்ட இனக்
கலப்புகளாலேயே தமிழர்களின் தோற்றமும் நிறமும் மாறியது என்றும்... இன்றைய
நவீன விஞ்ஞாணமும் ஒப்புக் கொள்கிறது.

இப்படி ஒருகாலத்தில் அசுரர் எனப்படும் ஆதித் தமிழ் மன்னர்களாக இருந்து...
பிற்காலத்தில் வில்லன்களாக மாற்றப்பட்டவர்களே... உயர்திரு இலங்கை வேந்தன்
இராவண மகாராஜா, மற்றும் அவரது படைத்தளபதி நரகாசுரன், இராவணனின் தம்பி
பீடணன், கும்பகர்ணன், அவருடைய மகன் சேயோன்.. போன்றோர்களாவர். பெரும்பாலான
ஈழத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் இராவணன் மரபு வழி வந்தவர்களே....
இதற்கான பல வரலாற்றுச் சான்றுகள் இலங்கை முழுவதும் நிறைந்து கிடக்கிறது.
தென்னிலங்கையில் "ரோஹண" என்று வரும் பெரும்பாலான ஊர்கள் "ராவண" என்ற
பேரில் இருந்து மருவி வந்தவையே.. இலங்கையை ஆண்ட முதல் ஆதி மன்னன்
ராவணன்தான் என்று சிங்கள ஆய்வார்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இராவணனின் கதை கி.மு 9050 காலப்பகுதியில்... அதாவது இலங்கைத் தீவும்,
தமிழகமும் இரண்டாம் கடற்கோளுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்திருந்த
சமயத்தில் தொடங்குகிறது. இரண்டாம் கடற்கோளுக்கு முந்தைய பண்டைய தமிழகம்
ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது.

பெருவளநாடு, தென்பாலி நாடு, திராவிட நாடு, சேர நாடு, சோழ நாடு.. என அவை
ஐந்து நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கடற்கோள்களால் பெருவள நாடும்,
தென்பாலி நாடும் அழிந்து விட... பிற்பட்ட காலத்தில் இலங்கைத் தீவு தோண்றி
ஈழ நாடு உருவாகியது. அன்றைய காலத்தில் அப்போது ஈழ நாட்டை ஆட்சி புரிந்த
மன்னனே விச்சிரபாகு என்பவனாவான். மன்னன் விச்சிரபாகுவுக்கும், அவனது
மனைவி கேகசிக்கும்... இராவணன், கும்பகர்ணன், பீடணன்... என்னும் மூன்று
ஆண் குழந்தைகளும்... காமவல்லி என்கிற ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள்.

இதில் மூத்த குழந்தையாகப் பிறந்த இராவணன் சிறு வயதிலேயே மிகச் சிறந்த
போர் வீரனாகவும்.. சிறந்த அற நெறியாளனாகவும் இருந்திருக்கிறான்.
பிற்காலத்தில் தந்தை விச்சிரவாகு இறந்து விட இராவணன் இலங்கையின் மன்னனாக
தன்னை முடி சூட்டிக் கொண்டான். உறுதியான உடலமைப்பைக் கொண்ட இராவணன் மிகச்
சிறந்த ஒழுக்க சீலனாகவும் இருந்திருக்கிறான்.. தனது ஒரே தங்கையாகிய
காமவல்லி மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தான்.

அவன் காலத்தில் ஈழ நாட்டில் வாழ்ந்த மக்கள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து
வந்தனர். சிங்கள மொழி ஈழத்தில் அக் காலத்தில் உருவாகியிருக்கவில்லை.
அதைப் போல தமிழகத்திலும் இன்று இருக்கும் கன்னடம், தெலுங்கு, மலையாளம்
போன்ற திராவிட மொழிகளும் அக் காலத்தில் தோண்றியிருக்கவில்லை.. ராவணன்
வாழ்ந்த காலத்தில் ஈழத்திலும், தென் இந்தியாவிலும் தமிழர்கள் மட்டுமே
வாழ்ந்தார்கள்... தவிர, 9000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த இலங்கை
இப்போது இருக்கும் இலங்கையை விட பல மடங்கு பெரிதாகவும் இருந்திருக்கிறது.
பிற்காலத்தில் மாறி மாறி வந்த கடற்கோள்களால் இலங்கையின் பல கரையோரப்
பகுதிகள் அழிந்து போய் விட்டன.

இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆராய்ச்சி செய்த பல ஆராய்ச்சியாளர்களும்
இதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை மன்னனான இராவணன் மலை வளம் காண்பதற்காக கடல் கடந்து தமிழகம் சென்று
தனது தங்கையோடு குமரி நாட்டில் தங்கி இருந்திருக்கிறான். இப்போது
இருப்பதைப் போல அவன் வாழ்ந்த காலப் பகுதியில் இலங்கைக்கும்
இந்தியாவிற்கும் இடையில் ஆழமான கடல் இருக்க வில்லை.. இலங்கையும்
இந்தியாவும் கடற்கோள்களால் துண்டாடப்பட்டு தனித் தனியாக இருந்த
போதிலும்.... தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைத்தபடி ஒடுங்கிய மணல்
திட்டு ஒன்று இருந்திருக்கிறது.. காலப் போக்கில் அந்த மணல்த் திட்டு
கடலுக்குள் அமுங்கி விட்டது. அதையே "ராமர் பாலம்" என்று இப்போது
அழைக்கிறார்கள்.

இந்த மணல்த் திட்டு வழியாக்தான் இராவணன் தமிழகத்தின் குமரிக்குச்
சென்றதும்.. இராமன் இலங்கைக்கு படை எடுத்து வந்ததும் நடந்திருக்கிறது..
அனுமன் போன்ற குரங்குகள் பாலம் கட்டிய கதை எல்லாம் பிற் காலத்தில்
வான்மீகியாலும் கம்பனாலும் புனையப்பட்ட சாகசக் கதைகளே.. மன்னார் முனையின்
வடிவமைப்பே இந்த மணல் திட்டு இருந்ததற்கான மிகச் சிறந்த உகாரணம் என்று பல
அகழ்வாராய்சியாளர்களால் இன்றைக்கும் சுட்டிக் காட்டப்படுகிறது.

இலங்கை வேந்தன் இராவணன் குமரியில் தங்கியிருந்த சமயத்தில் குமரி நாட்டை
சான்றோர் குலத்தவனாகிய "மயன்" என்பவன் ஆண்டு வந்தான். இராவணன் குமரி
நாட்டு மன்னன் மயனின் மகளாகிய மண்டோதரியைக் கண்டு... அவளது அழகில் மயங்கி
காதலுற்று... பிறகு அவளது தந்தையின் அனுமதியோடு அவளை திருமணம் செய்து
கொண்டான். இராவணனுக்கும், மண்டோதரிக்கும் "சேயோன்" என்கிற ஆண் குழந்தை
பிறந்தது. இராணவனின் தம்பி "பீடணன்" இலங்கையை ஆள... இராவணன் பல ஆண்டுகள்
குமரியில் தன் மனைவி மாமனாரோடு தங்கி இருந்தான்.

இந்த சமயத்தில்தான் இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்து ஆரியர்கள்
தமிழகத்தின் எல்லைப் பகுதியான விந்திய மலைக் காடுகளில் குடியேறத் தொடங்கி
இருந்தனர். ஆரியர்கள் வேள்விகளில் மனித உயிர்களை பலியிடும் வழக்கத்தைக்
கொண்டிருந்தனர். விந்திய மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த பூர்வீகத்
தமிழர்கள் ஆரியர்களின் இந்த உயிர் பலியை எதிர்க்க ஆரம்பித்தனர்.

அச் சமயத்தில் விந்திய மலைக் காடுகள் அமைந்திருந்த இடை வள நாட்டை ஆண்ட
தமிழ் அரசியாகிய தடாகையின் வேண்டுகோளை ஏற்று... குமரி நாட்டில் தங்கி
இருந்த ராவணன் தனது படைத் தளபதிகளாகிய சுவாகு என்பவனையும்,
நரகாசுரனையும்... விந்திய மலைக்கு அனுப்பி... அங்கே இருந்த ஆரிய
அந்தணர்களையும், முனிவர்களையும் அடித்து விரட்டி... "புலை வேள்வி"
எனப்படும் உயிர் பலியைத் தடுத்து நிறுத்தினான்.

வேள்வி தடைப்பட்டதால் மனம் வருந்திய "கோசிகன்" எனப்படுகின்ற ஆரிய
முனிவன்... வட இந்தியாவில் உள்ள அயோத்திக்குச் சென்று அக் காலப்
பகுதியில் வட இந்தியாவை ஆண்ட இராமன், லக்குவன் எனப்படுகின்ற அரசர்களிடம்
முறையிட்டான். அக் காலப்பகுதியில் வட இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்த
ஆரியர்களின் மன்னனான.. இராமனும், அவனது தம்பி லக்குவனனும்.. இந்தச்
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தெற்கே தமிழகத்தை நோக்கிப் படை எடுத்து
தமிழகத்தையும் ஈழத்தையும் தமது கட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்தார்கள்.

இதன் படி ஆரிய முனிவன் கோசிகனின் வேண்டுகோளை ஏற்று.. இராமனும் லக்குவனும்
விந்திய மலைக்கு படை எடுத்து வந்து இடை வள நாட்டின் அரசியாகிய தடாகையைக்
கொன்று... அதன் பின்னர் இடைவள நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்தார்கள். அங்கே இருந்தபடியே தெற்கே இருக்கும் குமரி
நாட்டையும், ஈழ நாட்டையும் கைப்பற்றுவதற்கான திட்டங்களைத் தீட்டத்
தொடங்கினார்கள்.

இடை வள நாட்டின் அரசி தடாகையை காப்பாற்ற இராவணனால் அனுப்பப்பட்ட
இராவணனின் படைத் தளபதியாகிய "சுவாகு" போரில் கொல்லப்பட்டான். இன்னொரு
படைத் தளபதியாகிய" நரகாசுரன்" மட்டும் உயிர் தப்பி... அடர்த்தியான
விந்திய மலைக் காடுகளில்... தக்க தருணத்தை எதிர்பார்த்து தனது படைகளுடன்
பதுங்கிக் கொண்டான் .

தனது படைத்தளபதிகளின் ஒருவன் இறந்ததையும் இன்னொருவன் தலைமறைவாகி
விட்டதையும் கேள்விப்பட்ட ராவணன்.. அக்காலப் பகுதியில் இடைவள நாட்டில்
இருந்த தனது தங்கை காமவல்லியின் பாதுகாப்பின் பொருட்டு "கரன்" எனப்படும்
இன்னொரு படைத் தளபதியை இடைவள நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.

ஆனாலும் இராம லக்குவனர்கள் கரனை கொன்றதோடு மட்டுமல்லாமல்... இராவணனின்
தங்கை காம வல்லியை இராமனின் தம்பி லக்குவனன் மான பங்கம் செய்து உடல்
உறுப்புகளை அறுத்துக் கொலை செய்தான்.

தனது தங்கையும் படைத் தளபதிகளும் இறந்த செய்தி கேட்ட இராவணன்..
துடித்துப்போய்.. தன் தங்கையின் சாவுக்கு பழி வாங்கும் பொருட்டு.. மாறு
வேடம் பூண்டு.. இடை வள நாடு சென்றான்.. தனது தங்கை
மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு தண்டனையாக.. ராமனின் மனைவி
சீதையை கடத்தி வந்து.. குமரியில் உள்ள "மீஞ்சிறை" என்னும் இடத்தில்
அவளைச் சிறை வைத்தான்.

தனது மனைவி இராவணனால் கடத்தப்பட்டு மீஞ்சிறையில் சிறை வைக்கப்
பட்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட இராமன்... தனது மனைவி சீதையை
மீட்க.. பெரும் படையோடு குமரி நாட்டுக்கு படை எடுத்து வந்தான். வந்த
ராமனுக்கும், ராவணனுக்கும் குமரி மீஞ்சிறையில் பெரும் யுத்தம் மூண்டது.

போரில் ராமனின் கை ஓங்குவதை உணர்ந்த ராவணன் சீதையையும் தனது மனைவி
மண்டோதரியையும் அழைத்துக் கொண்டு.. தனது தாய்நாடான இலங்கைக்கு பின்
வாங்கிச் சென்று.. சீதையை அசோக வனத்தில் தனது மனைவி மண்டோதரியோடு தங்க
வைத்தான். சீதைக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் இராவணனின் மனைவி
மண்டோதரி அசோக வனத்தில் அவள் கூடவே இருந்து கவனித்து வந்தாள்.

இந்த நேரத்தில் இலங்கையை அக் காலப் பகுதியில் ஆட்சி புரிந்த இராவணனின்
தம்பி பீடணன்... இராவணன் சீதையை சிறைப் பிடித்து வந்தது பிடிக்காமல்..
தனது அண்ணன் இராவணனின் இந்தச் செய்கையால்... இலங்கை அழிந்து விடுமோ என
அஞ்சி... தனது அண்ணனுக்கு எதிராக சதித் திட்டங்களைத் தீட்டத்
தொடங்கினான்.

பின்னர் பீடணன் இராணவனின் போர்கலங்கள், போர் முறைகள்.. மற்றும் படைபலம்
பற்றிய குறிப்புகளோடு... குமரி நாடு சென்று இராமனிடம் போய் சரணடைந்தான்..
இராவணன் தம்பி பீடணன் மூலம் இலங்கை பற்றி அத்தனை விபரங்களையும்...
இராவணனின் போர்த் தந்திரங்களையும் அறிந்து கொண்ட இராமன் ... அதன் பின்னர்
பீடணனோடும் தனது தம்பி லக்குவனோடும் சேர்ந்து பெரும் படையைத் திரட்டி...
அக்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்த மணல் திட்டு
வழியாக இலங்கை வந்து... இராவணனோடு போர் தொடுத்தான்.

இந்த போரில் முதலில் சிறுவனாகிய.. இராவணன் மகன் சேயோன் கொல்லப்பட்டான்..
பிறகு கும்பகர்ணனும்.. அதன் பின்னர் மண்டோதரியும்..கொல்லப்பட்டார்கள்..
இறுதியாக சொந்தத் தம்பி பீடணனின் துரோகத்தால் இராவணனும் கொல்லப்பட்டான்.

இராமனின் படைகள் இலங்கை மா நகரத்தை தீ வைத்துக் கொளுத்தின.. பிறகு
அசோகவனம் சென்ற இராமன் தனது மனைவி சீதையின் கற்பை சோதித்துப் பார்த்து..
அதில் அவன் திருப்தி அடைந்ததன் பிற்பாடு... அவளை அசோக வனத்தில் இருந்து
மீட்டு.... பின்னர் தனக்கு உதவி செய்த இராவணனின் தம்பி பீடணனை இலங்கை
அரசனாக முடி சூட்டி விட்டு திரும்பவும் குமரி நாடு திரும்பினான்.

இந்த நேரத்தல் இராவணன் இறந்த செய்தியை அறிந்த... இடை வள நாட்டின்
விந்தியக் காடுகளில் பதுங்கி இருந்த இராவணனின் படைத் தளபதியாகிய
"நரகாசுரன்".. தனது படையோடு குமரியில் இராமனை எதிரி கொண்டான்.

இராவணனின் படைத் தளபதியாகிய நரகாசுரனுக்கும் இராமனுக்கும் இடையில்
குமரியில் மீண்டும் ஒரு போர் நடந்தது. இந்தப் போரில் இராவண மகாராஜாவின்
கடைசி படைத் தளபதியாகிய நரகாசுரனும்.. கொல்லப்படவே... இலங்கை உட்பட முழு
பாரத நாட்டிற்கும் ராமன் ஏகபோக அரசனாக முடி சூட்டப்பட்டான்.

இராவணனின் கடைசிப் படைத் தளபதியாகிய "நரகாசுரன்" கொல்லப்பட்டு... இந்திய
துணைக் கண்டத்தின் ஏக போக அரசனாக தான் முடி சூடப்பட்ட நாளை... எல்லா
மக்களும் கொண்டாட வேண்டும் என ராமன் அறிவிக்க... அந்த நாளே பிற்காலத்தில்
தீபாவளியாக மாறியது.

தீபாவளியை தீபம் ஏற்றிக் கொண்டாடும் வழக்கம்... பிற்காலத்தில் சமண
மதத்தில் இருந்து இந்து மதத்திற்குள் உள் வாங்கப்பட்டதாகும்.

தீபம் ஏற்றித் தீபாவளியை முதல் முதலில் கொண்டாடியவர்கள் சமணர்களே ஆவர்..
பிற்காலத்தில் பல சமணத் துறவிகள் கழுவில் ஏற்றப்பட்டு.. கட்டாயமாக பல
சமணர்கள் இந்து மதத்தில் இணைக்கப்பட... அவர்கள் மூலம் தீபாவளி அன்று
தீபம் ஏற்றும் பழக்கம் இந்துக்களிடம் வந்திருக்கிறது. தீபம்-ஆவளி என்ற
சொல்லில் இருந்து மருவியதுதான் தீபாவளி..

எங்கள் இலங்கை வேந்தன் இராவண மகாராஜாவின் உண்மையான வாழ்க்கை வரலாற்றை
மையமாக வைத்து.. பிற்காலத்தில் சாகசங்கள் நிறைந்த புராணக் கதையாக
புனையப்பட்டதே ராமாயணம் ஆகும். அதை எழுதிய ஆரியக் கவிஞனான வால்மீகி
இராமனை கதாநாயகனாகவும் ராவண மகாராஜாவை அரக்கனாகவும் புனைந்து.. மக்களைக்
கவருவதற்காக பல அமானுஸ்ய விடயங்களைச் சேர்த்து.. வரலாற்றை மாற்றி எழுதி
ராமாயணத்தை உருவாக்கினான்..

அனுமன் போன்ற பாத்திரங்கள் பிற்காலத்தில் வால்மீகியால்
உருவாக்கப்பட்டவைதான்.... ராமன் வனவாசம் போனதும் அவனது கற்பனைதான்.

பிற்காலத்தில் வந்த கம்பன் அதில் பல பாலியல் கிளுகிளுப்புகளைச் சேர்த்து
ராமாயணத்தை ஒரு ஜனரஞ்சக நூலாக மாற்றினான்.

லக்குவனனால் கொடூரமாக வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட
இராவணனின் தங்கை கம்பனால் கம்பராமாயணத்தில் ஓர் அரக்கியாகச்
சித்தரிக்கப்பட்டாள்.

இராவணனுடைய விமானம், மாய மான் போன்ற அமானுஸ்யமான விடயங்களும் கம்பனின்
கற்பனையே.. தவிர இராவணனை ஒரு சிவ பக்தனாக சொல்வதும் பிற்காலத்தில்
உருவாக்கப்பட்ட கற்பனையே... இராவணன் காலத்தில் சைவ மதமோ, இந்து மதமோ
தோண்றியிருக்கவில்லை.. சிவ வழிபாடு என்பது இராவணன் காலத்துக்குப் பிறகே
இந்தியாவில் உருவானது.

எது எப்படியோ.. "தமிழ் மன்னனாகிய இராவணனின் இறுதிப் படைத் தளபதியாகிய
"நரகாசுரன்".. எனப்படுகின்ற எங்கள் பாட்டனின் இறந்த நாளையே நாங்கள்
ஒவ்வொரு வருடமும் தீபாவளி என்கிற பெயரில்... பட்டாசு வெடித்து புத்தாடை
பூண்டு கொண்டாடுகிறோம்"... என்பது மட்டும் உண்மை.. வட இந்தியாவிலும்,
தென் இந்தியாவிலும் தீபாவளி கொண்டாடப் படுவதைப் போல... இலங்கையில்
தமிழர்களாலும், சிங்களவர்களாலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்
படுவதில்லை... ராமரை வழிபடும் வழக்கமும் இலங்கையில் கிடையாது.

➖ஈழத்து நிலவன் ➖

ஆதி பேரொளி
இது முழுக்க கட்டுக்கதை
 இராமன் தமிழன் என்பதற்கு ஏராளமான சான்று உண்டு
 இராவணன் தமிழன் என்பதற்குத்தான் சான்று கிடையாது

இராமாயணம் புராணம் குமரிக்கண்டம் ராமன் ராவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக