திங்கள், 21 அக்டோபர், 2019

தார்மீகம் சொல்லாய்வு மேன்மையான துணை

vadivelan s vadivelan.madurai@gmail.com

வெள்., 20 ஜூலை, 2018, முற்பகல் 1:32
பெறுநர்: எனக்கு

தமிழ்வேந்தன் தமிழன் > தமிழ்ச் சொல்லாய்வு
தார்மீகம் தமிழ் வார்த்தை தான்...
தார்+மீகம்=தார்மீகம்
தர்(>தரு>தருதல்)>தார்(=தா)
தர்>தரம்>தரமம்>தருமம்>தர்மம்(த
ிரிபு)>தர்மா(திரிபு)
தார்=துணையாக இரு
(தார்+அம்=தாரம்=துணையாக இருக்கும் பண்பைக் கொண்ட ஒன்றைக் குறிக்கும் சொல், துணைவி
ஆ=அடிப்படை, முதன்மை
ஆ+தாரம்=ஆதாரம்=முதன்மைத் துணையாக இருக்கும் பண்பைக் கொண்ட ஒன்று)
அகுவது ஆகும்
அதுபோல, மிகு>மீகு
மீகம்=மேன்மை, உயர்வு, கல்விகேள்விகளில் மேலான நிலை
தார்மீகம்=துணையாக இருக்கும் மேன்மையான நிலை=நேர்மை நிலை(Justness)

சுத்ர பொருளே பூணூல் சூத்திரர் நூல் அணிந்தவர்


aathi1956 aathi1956@gmail.com

வியா., 19 ஜூலை, 2018, பிற்பகல் 4:22
பெறுநர்: எனக்கு
சூத்திரர், எனும் சமக்கிருதச் சொல்லுக்கான பொருளே, ‘நூல் அணிந்தவர்’ என்பதுதான்.
இதற்கான சான்று கீழே தரப்பட்டுள்ளது.
sutra (p. 351) [ s&usharp;-tra ] n. [&root;sîv] V., C.: thread, string, cord (ord. mg.); C.: sacred cord (worn over the left shoulder by the three upper castes);
http://dsal.uchicago.edu/dictionaries/macdonell/ )

முக்காணி ஐயர் குலதெய்வம் உண்டு



aathi1956 <aathi1956@gmail.com>

வியா., 19 ஜூலை, 2018, பிற்பகல் 3:14





பெறுநர்: எனக்கு



பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழ் பார்ப்பனர்களுக்கு குல தெய்வம் உண்டு... திருச்செந்தூர் முக்காணி (நான் அந்த சாதி தான்) .. அதாவது சாதிப் பெயரே முக்காணி தான்..முக்காணி ஐயர் என்று கூட இல்லை...எங்களது குலதெய்வம் கூடப்ப சாஸ்தா...என் தங்கை கணவரின் குல தெய்வம் குருமூர்த்தி விருது நகர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளது...அதை சிவ வடிவம் என்று கூறினாலும் அது லிங்க வடிவில் இல்லை....முக்காணி என்ற சாதிப் பெயரே திருச்செந்தூர் அருகில் உள்ள முக்காணி என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்டதால் வந்திருக்கலாம்


பார்ப்பனர் பார்ப்பனத்தமிழர் தமிழ்ச்சாதி



Aathimoola Perumal Prakash
முக்கானி பேசும் தமிழ் பார்ப்பனத் தமிழா?
முறைப்பெண்ணை திருமணம் செய்பவரா?
28 நிமிடங்களுக்கு முன்பு ·

பாண்டிய ராசன் சட்டத்தரணி
முக்காணி தாய் மாமன் மற்றும் தாய் மாமன் மகனை மகளை திருமணம் செய்து
கொள்வர்...பார்ப்பனத் தமிழ் என்று நீங்கள் கூறுவது சினிமாவில் காட்டும்
பார்ப்ணத் தமிழ் என்றால் அவ்வாறு பேசக் கூடியவர்கள் திருவரங்கத்து
ஐயங்கார் பார்ப்பனர்கள் மட்டுமே அவர்களும் கூட சினிமாவில் காட்டும்
அளவிற்கு பேசுவதில்லை... திருச்செந்தூர் பார்ப்பனர்களிடம் பார்ப்பனத்
தமிழ் மிகக் குறவாகவே இருக்கும்...திருச்சுதந்திரர் பற்றி எனக்குத்
தெரியவில்லை... நாங்கள் எங்கள் தாத்தாவின் காலத்திலேயே திருச்செந்தூரில்
இருந்து மதுரைக்கு வந்துவிட்டோம்... அதனால் எனக்கு விவரமாகத்
தெரியாது...சிறு வயதில் உன் பாட்டியுடன் திருச்செந்தூர் சென்றால்
முருகனைக் கும்பிட்டு விட்டு சுடலைமாடனை வழிபட்டு விட்டு வருவோம்...
எங்கள் பாட்டி தாத்தா வீட்டில் பூசை செய்யும் போது என்றும் சமஸ்கிருத
மந்திரங்கள் ஓதிய தில்லை...கந்தசஷடியும்...தேவாரமுமே ஓதி
வணங்குவர்...வெளி பூசைக்குத்தான் (தொழிலுக்கு) சமஸ்கிருத ஸ்லோகங்கள்
10 நிமிடங்களுக்கு முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது
பாண்டிய ராசன் சட்டத்தரணி
நான் கலப்புத் திருமணம் செய்தவன்
என் மனைவி தமிழ் குறவர்

19/7/18 அன்று, aathi1956 <aathi1956@gmail.com> எழுதியது:

சிவன் பறை பறையர் பறையினர் சைவம்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 19 ஜூலை, 2018, பிற்பகல் 2:53
பெறுநர்: எனக்கு
Suresh N, அழகன் ஆசிரியர் மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
கலிவிருத்தம்..
# திருச்சிற்றம்பலம் ..
வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினார் நான்முகன் மாலுக்கும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும்.
பதப்பொருள் :
அன்னே - தாயே,
வேதமொழியர் - (என்னால் காணப்பட்டவர்) வேதங்களாகிய சொல்லையுடையவர்,
வெண்ணீற்றர் - வெண்மையான திருநீற்றினை அணிந்தவர்,
செம்மேனியர் - செம்மையான திருமேனியை உடையவர்,
நாதப்பறையினர் - நாதமாகிய பறையினையுடையவர்,
என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள், மேலும்,
அன்னே - தாயே,
நாதப்பறையினர் இந்நாதர் - நாதமாகிய பறையையுடைய இத்தலைவரே,
நான்முகன் மாலுக்கும் - பிரம விட்டுணுக்களுக்கும்,
நாதர் - தலைவராவார்,
என்னும் - என்று சொல்லுவாள்.
# விளக்கம் :
நாதப்பறையினர் என்றது, நாத தத்துவத்திடத்து ஒலிக்கும் ஓங்கார ஒலியையே பறை முழக்கமாக உடையவர் என்பதாம். நான்கடிகளும் அளவடிகளேயாய் இருத்தல்பற்றி, இச்செய்யுள்களைக் 'கலி விருத்தம்' என்பர்.
இதனால், இறைவன், நான்முகன் மாலுக்கும் நாதன் என்பது கூறப்பட்டது.
++++
நாத தத்துவத்திடத்து ஒலிக்கும் ஓங்கார ஒலியையே பறை முழக்கமாக உடைய சிவனே போற்றி...
# சிவாய_நம ..

இலக்கியம் 

நான்மறை தமிழ் வேதம் பார்ப்பனர் உரையாடல் விவாதம்

aathi1956 <aathi1956@gmail.com>

செவ்., 17 ஜூலை, 2018, பிற்பகல் 12:32





பெறுநர்: எனக்கு




பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நான்மறை என்பது # சமஸ்கிருத வேதங்களா?...அல்வது # தமிழ் வேதங்களா?....
# சிலப்பதிகாரத்தில் ...
# மதுரை நகரில் அந்தணர்கள் அதிகாலையில் கோயில்களில் நான்மறை வேதம் ஓதினர் என்றுள்ளது...இந்த நான்மறைகள் எவை? வட வேதங்களான ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களா?.. ஏனெனில் அந்தணர் ஓதினர் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதால் இவை சமஸ்கிருத வேதங்களாகத் தான் இருக்கும் என்று மயக்கம் ஏற்படலாம்... ஆனால் அன்று அந்தனர்களால் ஓதப்பட்டவை தமிழ் நான்மறைகளான அறம் பொருள் இன்பம் வீடு தொடர்பான வேதங்களாகத் தான் இருக்க வேண்டும்...

வேதங்களில் கடைசியில் வந்தது அதர்வண வேதமாகும்.அது கி.பி 3 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்கின்றனர் ஆய்வாளர்கள்... அப்படியிருக்கையில் கி.பி.2 ஆம் நூற்றாண்டில் மதுரையில் எவ்வாறு நான்மறை பாடப்பட்டிருக்க முடியும்?... அப்படியென்றால் அந்த நான்மறை என்பவை தமிழ் தான்...

மேலும்....விசய நகரப் பேரரசின் (தமிழ்நாட்டில் நுழைந்த நாயக்கர்கள் அரசு) முதலாம் ஆட்சிக் காலத்தில் ஆந்திரத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் என்னும் 14 ஆவது நூற்றாண்டுகாலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.


வேதம் த்ரயே’ (வேதம் மூன்றே)என்று அமரகோசம் என்ற வடமொழி நிகண்டு நூல் கூறுகிறது.
இதே போன்று ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வடமொழி வேதம் 3 என்றே வருகிறது.
பிறகு எப்படி அது நான்மறையானது என்ற கேள்வி சரியான பதிலில்லாமல் தொங்கித் தொய்கிறது...


இதனெதிராக தமிழ் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு தான் என்பதற்குப் பன்னிரு திருமுறைகளிலிருந்து 135 மேற்கோள்கள் இருக்கின்றன.
வைணவ நாலாயிரத் தமிழும் இதை உறுதி செய்கிறது.
அத்தனையும் பார்க்க இயலாவிட்டாலும் # திருஞானசம்பந்தர் பாடிய பாடல் ஒன்று போதும்! அது வருமாறு:

# சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவ வேடம் தாம்நினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்


கறம்பொருள் இன்பம் வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கே அந்தனர் அன்று மொழிந்த தமிழ்வேதம் என்பதை இப்பாடலில் தெளிவுபடக் காணலாம்.

தமிழ் வேதங்கள் நான்கிற்கும் நூல்கள் எங்கே என்று வெகுநாளாக பலர் கேட்ட வண்ணம் இருந்தனர்.
அவையோ கடல் போல தமிழில் விரிவன.
எனவே தொகுத்துக் காட்டுவார் இல்லை.


வடமொழி வேதங்கள் கூட வேத வியாசரால் தொகுத்த பிறகு தானே புழக்கத்தில் வந்தன.
அவையும் 1930- களில் அச்சுக்கு வந்த பின் தான் அவை யாவை எனத் தெரிந்தது.


அது போல தமிழ் வேதத்தையும் (இருப்பவை தாம்; இல்லாதவை அல்ல) அவற்றையும் தொகுத்து அச்சேற்றும் காலம் வந்துள்ளது....

# அந்தனர் அல்லது பார்ப்பனர்கள் தமிழர்களே அவர்கள் தமிழகக் கோயில்களில் ஓதி வந்தவை சமஸ்கிருத வேதங்கள் அல்ல தமிழ் வேதங்களே...


தெலுங்கர் வருகைக்குப் பின்னரே இங்கு சமஸ்கிருதம் புகுத்தப் பட்டது என்பதும் அது முதலே இங்குள்ள தமிழ்ப் பார்ப்பனர்களும் சமஸ்கிருத வேதங்கள் பயின்றிருக்க முடியும் என்றும் ஆகவே தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தாய் மொழி தமிழ் தான் என்றும் அவர்கள் தமிழர்களே என்றும் அறியலாம்.

1 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி

Ramalingam Thiyagarajan மற்றும் 22 பேர்



காளிங்கன்
வேதங்கள் : எதிர்ப்போரும் மறுப்போரும் ஒரணியா? என்ற எனது கட்டுரை சென்ற மானுடம் இதழில் வெளிவந்துள்ளது நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு

அமீத் அ ர்
ரிக் யதுர் சாம அதர்வன என்பவையே தமிழ் வேதங்கள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்
ரிக் - உருக்கு வேதம். அதாவது இரும்பை உருக்குவது சம்பந்தமான வேதங்களாக சொல்கின்றனர.

யதுர் -அதர்வன. அதிரும் இசைக் கருவிகள் சம்பந்தமான வேதங்கள் தான் எ்கின்றனர்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 18 நிமிடங்களுக்கு முன்பு

காளிங்கன்
உண்மையான வேதங்கள் தைத்திரியமும், பௌடீகமுந் தவலகாரமுஞ் சாமவேமுமாம். இனி இருக்கும், யசுரும் சாமும் அதர்வணமும் மென்பாருமுளர். அது பொருந்தாது - என்கிறார் புகழ் பெற்ற பார்ப்பன உரையாசிரியர் நச்சினார்க்கினியர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 9 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/04/blog-post_98.html?m=0
பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?


வேதம் வேதங்கள் ரிக் பார்ப்பனர்










aathi tamil <aathi1956@gmail.com>

புத., 18 ஜூலை, 2018, பிற்பகல் 12:29






பெறுநர்: எனக்கு








பாண்டிய ராசன் சட்டத்தரணி
# பல் யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்ற பாண்டிய மன்னன்
# கி.மு.5 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவன்...
அவன் # நால்வேதங்களிலும் யாகங்களை அதிகமாகச் செய்ததால் இப் பெயர்
பெற்றான்... சமஸ்கிருத வேதமான # அதர்வண வேதத்திற்கும் முற்பட்ட காலத்தைச்
சேர்ந்தவன் இவன்... அவனது காலத்தில் ஓதப்பட்ட வேதங்கள்
# சமஸ்கிருத வேதங்கள் தான் என்று எந்த ஆதாரமும் இல்லை... சமஸ்கிருதத்தின்
3 வேதங்களும் தமிழ் நாட்டில் அறிமுகமாத காலம் அது... மேலும்
# யூபத்தூண் (யாகத்தின் போது பயன்படுத்தப்படும் # தூபத்தூண் )
# சிந்து # சமவெளி நாகரிக # ஹரப்பா நகரில் கண்டறியப் பட்டுள்ளது.சிந்து
சமவெளி நாகரிகம் சமஸ்கிருத # முதல்
# வேதமான # ரிக் வேதத்திற்கும்
# முந்தைய கி.மு.3500-கி.மு.2500 ஆண்டைச் சேர்ந்தது...
#பல் யாகசாலை முதுகுடுமி பெருவழுதியின் காலத்தில் வாழ்ந்த
# நெட்டியமையார் எனும் புலவர் அம்மன்னன் #யூபத்தூண் வைத்து
நால்வேதங்களில் யாகம் செய்ததைப் பற்றி பாடுகின்றார்.... (புறம்.15)
“நால்வேதத்து
அருஞ் சீர்த்திப்பெருங்கண்ணுறை
நெய்மமலி ஆவுதி பொங்க, பல் மாண்
வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன் களம் பல கொல்?
யா பல கொல்லோ?
பொருள்
உன்னால் தோற்கடிக்கப்பட்ட பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நான்கு
வேதங்களில் சொன்னபடி நெய்யும் பொரியும் போட்டு யூப ஸ்தம்பங்கள் நட்டு நீ
செய்த யாககங்கள் அதிகமா?என்று பாண்டிய மன்னரைக் கேட்கிறார்
நெட்டிமையார்....
# ஆக அவன் ஓதியவை சமஸ்கிருத வேதங்கள் அல்ல அவை தமிழ் நான்மறைகளே என்பதை அறியலாம்



எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

17/7/18 அன்று, aathi1956 <aathi1956@gmail.com> எழுதியது:

தமிழக வணிகம் கர்நாடகா விற்கு தாவுகிறது

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 17 ஜூலை, 2018, பிற்பகல் 5:46
பெறுநர்: எனக்கு
கர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,595 ஏக்கர் தொழிற்பூங்காவில் தமிழகத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்கிற செய்தி கர்நாடக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் தராமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடகாவில், தமிழர்கள் முதலீடு செய்திருப்பது அம்மாநில மக்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்?
இத்தொழிற்பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடந்த ஜுன் மாதம் திறந்து வைத்தபோது ‘கர்நாடகா - தமிழ்நாடு இடையே அரசியல் ரீதியாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து உள்ளன.
இந்நிலையில் பல்வேறு தடைகளைத் தாண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்துள்ள தமிழக முதலீட்டாளர்களுக்கு முழு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் அளிக்கப்படும்.’ என உறுதி அளித்தார்.
இந்த தொழிற் பூங்காவில் கிரானைட், ஜவுளி, தோல், ஆட்டோமொபைல், வேளாண்மை, உணவு பதனிடுதல், ஆயுர்வேத மருந்துகள், சிறு தொழில்கள் இவற்றின் ஆலைகள் அமைக்கப் படுகின்றன.
இன்னும் 6 மாதங்களில் முழுமையாக செயல்பட உள்ள இந்த தொழில் பூங்கா மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கர்நாடக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
தொழில் முதலீட்டைத் திரட்ட, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் முதலீட்டாளர் கூட்டம் நடத்தி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இதன் பின் கடந்த 15 மாதங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 தொழில் முதலீட்டாளர்கள், தங்களது தொழில் விரிவாக் கத்திற்காக தமிழகத்தை தவிர்த்து விட்டு,சாமராஜ்நகர் தொழிற்பூங்காவில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட சாமராஜ்நகர் தொழிற்பூங்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு 1 ஏக்கர் நிலத்தை ரூ.39.5 லட்சத்துக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கியுள்ளது.
இதுவே தமிழக முதலீட்டாளர்கள் இப் பகுதியில் தொழில் துவங்க ஆர்வம் காட்டியதற்கு காரணம் என்று சொல்லப் படுகிறது.
மேலும் கர்நாடகத் தில் நில மதிப்பு, மின் கட்டணம் போன் றவை தமிழகத்தை விட குறைவு என்பதும் ஒரு முக்கிய காரணம்.
கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து, இரண்டு மணி நேர பயண தூரத்தில் தான் உள்ளது. இதுவும் ஒரு முக்கிய அம்சமாகும்.
‘தமிழகத்தில் ஈட்டிய லாபத்தை, மேலும் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பன்னாட்டு நிறுவனங் களைப் போல, உள்ளூர் தொழில்முனை வோரும், வெளி மாநிலத்தில், முதலீடு செய்வது சரியா’ என கேள்வி எழுப்புகின்றனர் தமிழகத்தின் சமூக ஆர்வலர்கள்.
கோவை தொழில் வர்த்தக சபை துணைத் தலைவர் நந்தகுமார், ‘கர்நாடகாவில் கிடைக்கும் மூலப்பொருளைக் கொண்டு, தொழில் செய்யத் தான் அங்கு செல்கிறோம். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள், கூடுதலான தொழில், முதலீடு, அதற்கான பாதுகாப்பு என்பதை முன்னிட்டுதான் கர்நாடகாவில் முதலீடு செய்கின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள தொழில்கள், இடம் பெயர்ந்துவிடாது’ என்று கூறியுள்ளார். பொருளாதார வல்லுனர் ஜோதி சிவஞானம் ‘தமிழகத்தில் இருந்து, தொழில் முதலீடு வெளிமாநிலத்துக்கு செல்கிறது என்றால், அதற்கு அடிப்படை காரணம்,வெளிமாநிலத்தில் நிலவும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தத்தான்.
இந்தியாவில், அன்னிய முதலீடு வரும் அதே வேளையில் நமது நாட்டு முதலாளிகளும் அன்னிய நாட்டில் முதலீடு செய்கின்றனர்.அதுபோலவே தமிழக முதலீடும் கர்நாடகம் செல்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்‘ என்று கூறியுள்ளார்.
தமிழகம் வந்து கர்நாடக முதல்வர் சித்தாராமையா தமிழக முதலீட்டை ஈர்த்ததைப் போல, தமிழக முதல்வரும் கர்நாடகம் சென்று முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அருள்
Issues:
July 2015
Log in or reg

முதலீடு பணக்காரர்

கருணாஸ் தமிழரே அகமுடையார் இமலாதித்தன்

முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவர் கருணாஸ் அவர்களை தேவரே இல்லையென மற்ற முக்குலத்தோர் அமைப்புகளெல்லாம் அவர் அகமுடையார் என்ற ஒற்றை காரணத்தால் பொய் பரப்புரை செய்தார்கள். இன்றைய நிலையில் தெருவுக்கு தெரு முக்குலத்தோர் கட்சிகள் நாளுக்கொன்றாக உருவாகிகொண்டே தான் இருக்கிறது. அதை தவிர அ.இ.பா.பி., மூ.மு.க., அ.இ.மூ.மு.க., அ.இ.மு.பா., ப.தே.க., என பல அமைப்புகள் எப்படியும் ஆளுக்கொரு சீட் ஜெயலலிதாவிடம் கிடைக்குமென வருட கணக்கில் நம்பிக்கொண்டிருக்க, அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முதல்நாள் ஜெயலலிதாவை சந்தித்த கருணாஸ், திருவாடானை தொகுதியை தனதாக்கி கொண்டுள்ளார்.
கருணாஸ் வெற்றி பெறுகிறாரோ, தோல்வியடைகிறாரோ, அதைப்பற்றியெல்லாம் ஆய்வு செய்யவே தேவையில்லை. ஆனால், இத்தனை வருடங்களாக ’வேலுநாச்சியாரின் மறுபிறப்பே’யென ஜெயலலிதாவிற்கு துதிபாடி அம்மா அம்மாவென ஒரு தொகுதியாவது கிடைக்குமென ஆசை ஆசையாய் இருந்த அக்டோபர் மாத தலைவர்களின் கனவில் கல்லெறிந்து, தான் யாரென நிரூபித்து விட்டார் ஜெயலலிதா.
இப்போது கூட கருணாசை ஜெயலலிதா தேர்ந்தெடுப்பதற்கான காரணம் நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் என்பதாலும், சிறந்த பேச்சாளர் என்பதாலும் தான். அதன் பிறகுதான் கருணாசின் சாதிய பின்புலம்.

சென்றமுறை நடிகர் சங்க தலைவராக இருந்த, சரத்குமாரின் இடத்தை தான் கருணாஸ் சமன் செய்ய போகிறார். கருணாஸ் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அவரது சாதி மக்களுக்கு பெரியளவிலான எந்த பயனும் இருக்கபோவதில்லை என்றாலும் கூட, இத்தனை வருடங்களாக மல்லுக்கட்டி அதிமுகவிற்கு முட்டு கொடுத்து கொண்டிருந்த முக்குலத்தோர் தலைவர்களின் இடத்தை தனதாக்கி கொண்ட கருணாஸ் அகமுடையாருக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கள்ளர் வளரி தொடர்பு ஆயுதம் boomarang

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 17 ஜூலை, 2018, பிற்பகல் 1:56
பெறுநர்: எனக்கு

செவ்வாய், 27 மார்ச், 2018

திகிரி / கள்ளர் தடி / வளரி



1) காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, முல்லைத் திணை தலைவன் மால் எனப்படும் மாயோன் 'கள்வன்'. அவன் ஆயுதம் வளரி. (கலித்தொகை)
2) மால் எனப்படும் சோழன் “வளரி படை” உடையவன். (சிலப்பதிகாரம்)
3) கள்ளர்களின் பெயராலேயே “கள்ளர் தடி” என்றே அழைக்கப்பட்டது. (தமிழ் அகராதி)
4) வளைதடி - கள்ளர்களின் திருமணத்தில் முக்கிய அம்சமாக இருந்தது (British archaeologist Robert Bruce)
5) ஆங்கிலேயர்கள் கள்ளர்களின் பெயராலேயே "COLLERY” என்று அழைத்தனர். (Mr.Welsh)
6) புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது. (புதுக்கோட்டை வரலாறு)
7) ஆங்கிலேயர்களுக்கு எதிராக வளரியை கொண்டு கள்ளர்கள் "பெருங்காம நல்லூரில் " தாக்கியதால் வளரி பயன்படுத்த நாட்டில் தடை விதிக்கப்பட்டது. (தமிழ் ஆய்வுக் கட்டுரை)

“வளரியை உருவாக்கியவனும், வீசியவனும், அதை இந்த மண்ணை விட்டு மறைய செய்தவனும் கள்ளனே”


திகிரி, கள்ளர் தடி, வளரி, வளைதடி, பாராவளை, எறிவளை என்ற பெயரால் தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆயுதமே பூமராங் என்பதாகும். பூமாராங் எனும் ஆயுதமானது கையால் வீசியெறியக்கூடிய வகையில் வளைந்த வடிவத்துடன், ஏறக்குறைய பிறை வடிவமாக இருக்கும். ஒரு முனை மிகவும் கனமாகவும் மறுமுனை கூர்மையாகவும் இருக்கும். இதனை மரம், இரும்பு, யானைத்தந்தம் போன்றவற்றால் செய்த வளரி வேட்டையாடுதலுக்கும் இரும்பால் செய்த வளரிப் போர் புரிவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.






வளரியை கனமற்ற நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு தோளுக்கு மேலே பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிந்திட அது இலக்கினைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடமே திரும்பவும் வந்து சேரும். எதிரியைத் தாக்கிவிட்டு வீசி எறிந்தவரிடமே வந்து சேரக்கூடிய அற்புதமான ஆயுதம். திரும்ப வரும்பொழுது கவனமாகக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வீசியெறிந்தவரைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. (தமிழாய்வுக் கட்டுரைகள் (தொகுதி I) ப.31).



போர்புரியும் வீரர்கள் தம் கொண்டையில் வளரியைச் சொருகி வைத்திருப்பர். போர் மூளும்போது கொண்டையிலிருந்து உருவி வளரியின் மூலம் எதிரிகளைப் போரிட்டு வீழ்த்துவர். இத்தகுச் சிறப்புமிகு வளரியினைத் தற்போதும் சில கள்ளர் மற்றும் மறவர் இன மக்களின் பழைய குடும்பங்களில் காணலாம். பூசைக்குரிய பொருளாக வளரியைப் பயன்படுத்துகின்றனர்.


# திருமால் 'கள்வன்' ஆயுதமாகக் கலித்தொகை சுட்டுகிறது.
“மல்லரைமறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்றுஓட உருத்துஉடன் எறிதலின்
கொல்யானை அணிநுதல் அழுந்திய ஆழிபோல்
கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்” (134:1-4)


பொருள்: யானையின் முறத்தைப் போன்ற செவியை மறைவிட மாய்க் கொண்டு பாய்ந்து மாறுபாடு செய்த புலியைச் சினந்து, மறம் பொருந்திய நூற்றுவர் தலைவனான துரி யோதனனைத் தொடையில் உள்ள உயிரைப் போக்குகின்ற வீமனைப் போன்று, தன் நீண்ட கொம்பின் கூர்மையான முனையினால் குத்தி, புலியின் மார்பைப் பிளந்து பகைமை நீங்கிய யானை, அது மல்லரின் மறத்தை அழித்த திருமால் போல் கல் உயர்ந்த அகன்ற சாரலில் தன் சுற்றத்துடனே திரியும்.
Vishnu, 12th century. His wheel was used a returnable weapon (like boomerang) and his conch was used to initiate war - Thanjavur Royal Palace

# சோழ மன்னன்

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் 
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்”



பொருள்: சோழ மன்னன் பொன்னால் செய்த அழகிய வளரி என்னும் போர்ப்படையை உடையவன்

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 1.5


பொருள்: காவிரியை உடைய சோழனது சக்கரம்போல் பொன்போல் தோற்றமளிக்கும்.

இவ்வளரியானது வேட்டைக் கருவியாகவும் பிறரைத் தாக்கும் கருவியாகவும் சங்க காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.


பொன்புனை திகிரி

# நடுகல் கல்வெட்டில்



கூடலூரைச் சேர்ந்தவர்கள் ஆனிரையைக் கவர்ந்து செல்ல முயன்ற போது அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்ளர் குலத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். புறநானூறு பாடலில் ‘மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்’ என்று உள்ளது. கூடல் நகர் ஆட்சி செய்த அகுதை என்ற குறுநிலத் தலைவன் ‘பொன்புனை திகிரி’ (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (‘அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ’) கூறப்பட்டுள்ளது.

# கலிங்கத்துப்பரணி

“களித்த வீரர் விரட்ட நேமி
கண்டு வீசு தண்டிடைக்
குளித்த போழ்து கைப்பிடித்த
கூர்மழுக்கள் ஒக்குமே” (கலிங்கத்துப்பரணி:418)


# புறநானூற்றில்

“எரிகோல் அஞ்சா அரவின் அன்ன “(புறம்.89-5) எனும் அடியில் உள்ள எரிகோல் என்பது இங்கே வளரியைச் சுட்டுகின்றது.
வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக் “குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம்.339:4)” எனும் அடி குறிப்பிடுகின்றது.


# ஐங்குறுநூற்று


மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் (ஐங்குறு.421:1-2)


வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில் ‘காவலர்’ எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார்.




பிரிட்டிஷ் தொல்லியல் நிபுணர் ராபர்ட் புரூஸ் ஃபுட் அவர்கள் கள்ளரின் மணமகள் மற்றும் மணமகன் குடும்பங்களுக்கு இடையில் வளரி பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் வளைதடியை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வரும் வழக்கமும் இவர்களிடையே இருந்துள்ளது என்றும் திருமணத்திற்கு முன் வளைதடியை இருவீட்டாரும் மாற்றிக் கொள்வதும் உண்டு என்றும் கூறுகிறார்.

# புதுக்கோட்டை மன்னர்கள்

புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர். புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது.



சின்ன மருது காளையார்கோவிலின் கோபுரத்தை பெரிதாக கட்டியபோது வைத்தியலிங்க தொண்டைமான் அழைத்து கோபுரம் எப்படி என கேட்க இவர் ஒரு பனைமரம் அளவே உள்ளது என வேடிக்கையாக கூறினார். அதற்க்கு மருது என்ன பனைமரம் அளவா எப்படி சொல்கிறீர்கள் என வினா எழுப்ப. ஒரு வளரியை வாங்கி தான் பனைமரம் அளவு வளரி வீசுவேன் என வைத்தியலிங்க தொண்டைமான் வளரியை கோபுரத்தின் மேல் வீசி அந்த கோபுரத்தை தாண்டி வீசி எறிந்து காட்டினார் என ஒரு சம்பவம் தெரிவிக்கின்றது.

தளசிங்க மாலையில் சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயர் கொண்ட ஒருவனோடு வளரி போர் புரிந்து அவன் தலையையே தம் வீரக்கழலில் அணிந்து கொண்டனர் எனும் செய்தியைக் கூறுகின்றது.

“விஜய சேதுபதி (கி.பி.1710-1725) மன்னர் தனது மகள் அகிலாண்டேஸ்வரியைச் சிவகங்கைக்கு மணமுடித்து அனுப்பி வைத்தபோது சீர்களில் ஒன்றாகத் தம் குலமரபு ஆயுதமான வளரியையும் அனுப்பி வைத்ததாகக் கல்வெட்டு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி II, ப.43).



கள்ளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வளரியைப் பயன்படுத்தியதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார். வளரியைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிகவும் அஞ்சினார்கள் என்றும் இதனாலேயே போர் முடிந்ததும் கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாகவும் சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I), ப.40).


ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வளரியை பயன்படுத்தி ஆங்கிலேயர்களுடன் மருது சகோதரர்கள் சண்டையிட்டார்கள்.






கி.பி.1915 இல் மதுரை மாவட்டத்தில் கொண்டு வரப்பெற்ற குற்றச்சட்டத்தை எதிர்த்துப் பிறமலைக் கள்ளர் சமுதாயம் கி.பி.1921-இல் கிளர்ந்தெழ உசிலம்பட்டி வட்டம் பெருங்காம நல்லூரில் பெருங்கிளர்ச்சி வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இக்கிளர்ச்சியின்போது இம்மக்கள் பயன்படுத்திய ஆயுதம் வளரியாகும். இதன் காரணமாக இவ்வாயுதத்தைப் பயன்படுத்த ஆங்கில அரசு தடை விதித்தது. வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்களைக் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தினர். எனவே இதனை வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, மணிமாறன், 2016, ப.41).

வளரியைப் பூமராங் எனும் பெயரில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபோர்ஜினியர்கள் பயன்படுத்தி வருவதாகச் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழ் நாட்டில் பயன்படுத்த பட்டது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் மூலம் இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்விரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் திராவிடரும் அபோர்ஜினியரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என்ற முடிவினைக் கருதியுள்ளனர். மேலும் இங்குக் கண்டெடுத்த மண்டை ஓடுகளில் ஒன்று திராவிடருக்கும் மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் முன்னோருக்கும் உரியது என ஜி.எலியட் ஸ்மித் கூறியுள்ளார்.

இவ்வாறு சிறப்புமிக்க ஆயுதமான வளரி தற்போதும் பாதுகாப்பாகவும் கண்காட்சியாகவும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் ராமவிலாசத்தில் தொல்லறிவியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இவ்வளரி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நன்றி
சே. முனியசாமி - முனைவர்பட்ட ஆய்வாளர்