திங்கள், 21 அக்டோபர், 2019

சோழன் தலைமையில் மூவேந்தர் கூட்டணி படை இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 16 ஜூலை, 2018, முற்பகல் 10:32
பெறுநர்: எனக்கு
கார்த்திகேயன் பாண்டியர் மதுரை
# நலங்கிள்ளியின்_போர்த்திட்டம்
சோழன் நலங்கிள்ளியின் படை வலம்வருமோ என்று எண்ணி வடபுலத்து அரசர்கள் தூங்காமல் கிடந்தனர் என்கிறார் புலவர் கோவூர் கிழார்.
# புறநானூறு_31
அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன.
இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது.
நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்ட
ாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது.
போரை விரும்பும் உன் வீரக்கழல்
# மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர்.
கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர்.
பாடல்
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்
பாசறை அல்லது நீ ஒல்லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே;
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர்,
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய;
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,
குண கடல் பின்னது ஆக, குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து,
நெஞ்சு நடுங்கு அவலம் பாய,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
Meanings: சிறப்புடை மரபின் – due to great tradition, பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – like the appearance of materialism and pleasure that follow righteousness, இரு குடை பின்பட – two umbrellas follow (those of the other 2 great kings), ஓங்கி ஒரு குடை – high, one umbrella, உருகெழு – bright, splendid, மதியின் – like the moon, நிவந்து – is high, சேண் விளங்க – shines far, நல் இசை வேட்டம் வேண்டி – desiring good fame, வெல் போர்ப் பாசறை யல்லது – other than victorious battle camps, நீ அல்லாயே – you are not, நுதி முகம் மழுங்க – sharp tips to get blunted, மண்டி – approaching rapidly, ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு – your elephants attack protected enemy forts, அடங்கலவே – they cannot be controlled, போர் எனில் – if it is war, புகலும் புனை கழல் மறவர் – your warriors wearing beautiful bravery anklets desire (battles), காடிடைக் கிடந்த நாடு – countries with forests, நனி சேஎய செல்வேம் அல்லேம் என்னார் – they do not complain that they have to go to far-away lands, கல்லென் விழவுடை ஆங்கண் – celebrating loud festivals there, வேற்றுப் புலத்து – in the enemy countries, இறுத்து – staying, குண கடல் பின்னதாக – eastern ocean behind you, குட கடல் வெண் தலைப் புணரி – white-capped the waves of the western ocean, நின் மான் குளம்பு அலைப்ப – hitting the hooves of your horses, வலமுறை வருதலும் உண்டு என்று – that you may circle the earth with strength, that you may circile the earth victoriously, அலமந்து – distressed, நெஞ்சு நடுங்கு – trembling hearts, அவலம் பாய – sorrow spreading, துஞ்சாக் கண்ண – with eyes that do not sleep, வட புலத்து அரசே – the kings of the northern countries
2 மணி நேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக