திங்கள், 21 அக்டோபர், 2019

சிவன் பறை பறையர் பறையினர் சைவம்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 19 ஜூலை, 2018, பிற்பகல் 2:53
பெறுநர்: எனக்கு
Suresh N, அழகன் ஆசிரியர் மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
கலிவிருத்தம்..
# திருச்சிற்றம்பலம் ..
வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினார் நான்முகன் மாலுக்கும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும்.
பதப்பொருள் :
அன்னே - தாயே,
வேதமொழியர் - (என்னால் காணப்பட்டவர்) வேதங்களாகிய சொல்லையுடையவர்,
வெண்ணீற்றர் - வெண்மையான திருநீற்றினை அணிந்தவர்,
செம்மேனியர் - செம்மையான திருமேனியை உடையவர்,
நாதப்பறையினர் - நாதமாகிய பறையினையுடையவர்,
என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள், மேலும்,
அன்னே - தாயே,
நாதப்பறையினர் இந்நாதர் - நாதமாகிய பறையையுடைய இத்தலைவரே,
நான்முகன் மாலுக்கும் - பிரம விட்டுணுக்களுக்கும்,
நாதர் - தலைவராவார்,
என்னும் - என்று சொல்லுவாள்.
# விளக்கம் :
நாதப்பறையினர் என்றது, நாத தத்துவத்திடத்து ஒலிக்கும் ஓங்கார ஒலியையே பறை முழக்கமாக உடையவர் என்பதாம். நான்கடிகளும் அளவடிகளேயாய் இருத்தல்பற்றி, இச்செய்யுள்களைக் 'கலி விருத்தம்' என்பர்.
இதனால், இறைவன், நான்முகன் மாலுக்கும் நாதன் என்பது கூறப்பட்டது.
++++
நாத தத்துவத்திடத்து ஒலிக்கும் ஓங்கார ஒலியையே பறை முழக்கமாக உடைய சிவனே போற்றி...
# சிவாய_நம ..

இலக்கியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக