சனி, 27 ஜனவரி, 2018

யானை பயிர் அழிப்பு கவலை இல்லை சத்தியமங்கலம் தமிழர்கள் காடு விலங்கு


aathi tamil aathi1956@gmail.com

18/10/17
பெறுநர்: எனக்கு
கருப்பன் வந்தான்... சாப்பிட்டுட்டு போய்ட்டான்! : வியக்கவைக்கும்
மலைவாழ் மக்களின் தெளிவு
Tuesday, 17 Oct, 3.16 am
சத்தியமங்கலம்: 'கருப்பன் வருவான்...சாப்பிட்டுட்டு போவான்' அதற்கெல்லாம்
ஒப்பாரி வைக்க கூடாது. அவன் எல்லைக்குள் வாழும், நமக்கு கேட்பதற்கு உரிமை
கிடையாது' எனக் கூறி, வியக்க வைக்கின்றனர் மலைவாழ் மக்கள்.ஈரோடு
மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியை, 2013ல், புலிகள் காப்பகமாக மத்திய
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவித்தது. தமிழத்திலேயே அதிக
பரப்பு கொண்டதாக, சத்தியமங்கலம் வனப்பகுதி உள்ளது. மொத்தம், ஏழு
வனசரகங்கள் உள்ளன.விரும்பி உண்ணும்பரந்து விரிந்த வனப்பகுதியில்,
மக்களின் கண்களில் அதிகம் தென்படுவது மான் மற்றும் யானைகள் தான்.
வனப்பகுதி மற்றும் அதை ஒட்டிய பட்டா நிலங்களில் கரும்பு, வாழை,
மக்காச்சோளம், ராகி, கோஸ் உள்ளிட்டவற்றை அதிகளவு பயிரிட்டு
வருகின்றனர்.கரும்பு, வாழை மற்றும் ராகி பயிர்களை யானைகள் விரும்பி
உண்ணும்.
இதனால், யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி,
இழப்பீடு கேட்டு போராட்டம் செய்யும் நிலையில், மலைப் பகுதிகளில் வாழும்
மக்கள், யானைகள் பற்றி தெளிவான பார்வையில் உள்ளனர்.கடம்பூர் மலைப்
பகுதியில் வாழும் பேச்சியம்மாள் கூறியதாவது:பொதுவாக, கருப்பன் - யானை,
வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதை விட இரு
மடங்கு, நாங்கள் வாழும் மலைப்பகுதி தோட்டங்களை தான் சேதப்படுத்துவான்.
இதற்கு நாங்கள் ஒப்பாரி வைப்பதும் இல்லை. இழப்பீடு கேட்டு போராடியதும்
இல்லை. காரணம், ஆண்டாண்டு காலமாக, மலைப்பகுதியில் மட்டுமே வாழும்
கருப்பன்கள் வேறு எங்கு செல்ல முடியும்.நமக்கு இங்கு பிரச்னை என்றால்,
நகரப் பகுதிக்கு இடம் மாறலாம்.
அவை பிரச்னை என்றால், எங்கு செல்லும். கருப்பன்கள் சுயநலத்தோடு சேதம்
செய்வதில்லை. அதுவும் வறட்சி காலங்களில், வனப்பகுதிகளில் உணவு கிடைக்காத
போது தான், தோட்ட பயிர்களை சாப்பிடும்.ஆக்கிரமிப்புகடந்த ஒரு மாதமாக மழை
பெய்கிறது. எந்த இடத்திலாவது, யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதாக செய்தி
வந்துள்ளதா.
அதுதான் கருப்பன்... எங்கள் சாமி. ஆண்டுக்கு ஒருமுறை படையல் வைத்து, சாமி
கும்பிடுகிறோம். பயிர்கள் சேதமாகும் போது, அந்த சாமியே நேரில் வந்து
சாப்பிட்டதாக நினைத்து கொள்வோம்.
அவன் வாழும் இடத்தை ஆக்கிரமித்து விட்டோம். எனவே கருப்பன் வருவான்...
சாப்பிட்டுட்டு போவான்... அதை கேட்பதற்கு நமக்கு எந்தவித உரிமையும்
இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.சுற்றும் பூமி, மனிதர்களுக்கு மட்டுமே
சொந்தமானதில்லை.
புழு, பூச்சி, விலங்குகளுக்கும் சொந்தம். பேச்சியம்மாளின் கருத்து,
இதைத்தான் சொல்கிறது.

விலங்குநேயம் மனிதநேயம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக