சனி, 29 ஏப்ரல், 2017

நாடார் வளர்ச்சி காமராசர் பிறக்குமுன்பே சாதி சாணார்

aathi tamil aathi1956@gmail.com

26/6/15
பெறுநர்: எனக்கு
நாடார்கள் வளர்ச்சி பெற காமராஜர் உதவினாரா?
=====================================
நான் சில மாதங்களுக்கு முன்பு பிற்பகல் 2
மணியளவில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன்,
அப்போது எனக்கு முன்னர் இருக்கையில் இருந்தவர்கள்
இப்படி தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதில்
ஒருவர் கூறினார், இன்றைக்கு காந்தி ஜெயந்தி
மற்றும் காமராஜர் நினைவு நாள் என்று, உடனே
மற்றொருவர் இந்த காமராஜ் தனது சாதியினருக்கு
வணிகம் மற்றும் கல்வி வளர்ச்சி ஆகியவைகளில்
ஈடுபட நன்றாக திட்டம் போட்டுக் கொடுத்துவிட்டு
சென்று விட்டார் என தெரிவித்தார். இதே தொனியில்
ஃபேஸ்புக்கிலும் பதிவுகள் இடப்படுகின்றன.
ஆனால் உண்மை என்ன? கள் இறக்கும் தொழிலில் இருந்து
நாடார்கள் பதினேழாம் நூற்றாண்டு இறுதியில்
வணிகப் பாதையில் இறங்கினர், நாடார்களின் ஆறு
நகரங்கள் என்று அழைக்கப்படும் விருதுபட்டி,
சிவகாசி, அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி,
திருமங்கலம் மற்றும் சாத்தங்குடி ஆகிய நகரங்களில்
வணிகச் சாத்து அமைத்து வணிகத்தை பெருக்கிக்கொண்ட
ு இருந்தனர். திருவாங்கூர் சமஸ்தானம் தொடங்கி வட
மேற்கில் பழனி வரையிலும், வட கிழக்கில் தஞ்சாவூர்
வரையிலும் வணிகச் சாத்தினை அமைத்துக் கொண்டு
சென்றனர். வெள்ளாளரும், பட்டுநூல் காரர்களும்
அதிகமாக வசித்த மதுரை நகரில் அவர்கள்
வடுகர்களிடம் இருந்து நீண்ட தர்க்கத்திற்கு பின்னர்
திருமலை நாயக்கன் அரண்மனையை சுற்றியுள்ள
சிதிலமடைந்த அகழிப் பகுதியை விலைக்கு வாங்கி,
தூர்த்து வணிகச் சாத்து அமைத்தனர்.
உப்பு, பனைவெல்லம், கருவாடு, நாட்டு மருந்து,
பயிறு வகைகள், தானிய வகைகள், ஓலைப் பொருட்கள்
இவை தான் நாடார்களின் வணிக பொருட்கள்.
நாடார்களின் வணிகப் பயணம் தமிழர் நாட்டில் மாட்டு
வண்டித் தொடர்கள் மூலம் நீண்டு பரவியது. இதற்குள்
முழுமையாக ஒரு நூற்றாண்டு ஓடி விட்டது.
சாணார்கள் என்று கேவலமாக ஆதிக்க சாதியினரால்
தூற்றப்பட்ட நாடார்கள் வணிகத்தில் உயர்ந்தனர்.
எனினும் ஆதிக்க தமிழ் சாதியினரும், வந்தேறி
வடுகரும் தாங்கவண்ணா கொடுமைகளை இழைத்த வண்ணம்
இருந்தனர் இக்கொடுமைகளாலும் நாடார்கள் தொடர்ந்து
வணிகத்தில் முன்னேறிச் செல்வதை தடுக்க இயலவில்லை
. பெருந்தலைவர் காமராஜர் இப்போதும் பிறக்கவில்லை.
1814 ஆம் ஆண்டு கமுதி நகரத்தில் நாடார்கள்
தங்களது வணிகச் சாத்தினை கொள்ளையர்களிடமிருந்து
பாதுகாக்கும் விதமாக பேட்டை முறையை
உருவாக்கினர். அதன் விளைவாக தமிழர் நாட்டில் 96
நகரங்களில் பேட்டைகள் உருவாயின. 1821 ஆம் ஆண்டில்
சிவகாசி நகரம் நாடார்களின் தலைமை கேந்திரமாக
விளங்கியது. நாடார்கள் தாம் வசிக்கும் ஊர்களில்
காவல் தெய்வமான பத்திரகாளிக்கு பெரும் கோவில்கள்
எழுப்பினர். கமுதி, அருப்புக்கோட்டை, சிவகாசி,
சாத்தூர், பாலையம்பட்டி, விருதுபட்டி ஆகிய
ஊர்களில் அம்மன் கோவில்களுடன் சிவன் கோவில்களும்
எழுந்தன. கிறிஸ்தவ நாடார்கள் தங்களுக்கென
சர்ச்சுகள் உருவாக்கினர். திருநெல்வேலி கிறிஸ்தவ
நாடார்களின் கோட்டையாக திகழ்ந்தது. நாடார்கள்
பெரும்பான்மையாக வசித்த நகரங்களிலும்,
கிராமங்களிலும் மகமைச் சாவடிகளும்,
உறவின்முறைகளும் உருவாயின. இப்போதும்
பெருந்தலைவர் காமராஜர் பிறக்கவில்லை.
கல்வியின் அவசியத்தை உணர்ந்த நாடார்கள்
தங்களுக்கென பள்ளிகளை கோவில்களுக்கு
அருகாமையில் எழுப்பினர். தமிழினை எழுதவும்
படிக்கவும், கணக்கு வழக்குகளை கவனித்துக்
கொள்ளவும் 1830 களில் ஆறு நகரங்களிலும் பள்ளிகள்
துவக்கப் பட்டன. 1860'ல் பாளையம்கோட்டை கிறிஸ்தவ
நாடார்கள், நாடார்களுக்கான கிறிஸ்தவ பள்ளியினை
அமைத்தனர், அதனை தொடர்ந்து 1885'ல்
விருதுபட்டியில் இருந்த நாடார் பள்ளி,
க்ஷத்திரிய வித்தியாசாலை என்ற பெயர் மாற்றம்
பெற்று உயர் நிலை பள்ளியாக பரிணாமம் பெற்றது.
1889'ல் கமுதி க்ஷத்திரிய வித்தியாசாலாவும்,
1891'ல் சிவகாசியிலும், 1895'ல் அருப்புக்கோட்டை
யிலும் துவக்கப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக
பரிணாமம் பெற்றன. இப்போதும் பெருந்தலைவர்
காமராஜர் பிறக்கவே இல்லை. 1909 'ல்
திருமங்கலத்தில் க்ஷத்திரிய வித்தியாசாலை
துவங்கப்பட்டது. இந்த இரு நூறு ஆண்டுகளில்
நாடார்கள் தங்களை வளர்த்து வலுப்படுத்தியதோடு
சமூக புரட்சிகளிலும் ஈடுபட்டனர். இதன் விளைவாக
அரசர்கள் கட்டிய கோவில்களுக்குள் நுழையும் உரிமை
பெற்றனர். காமராஜர் 1903'ஆம் ஆண்டு தான்
பிறக்கிறார். அவரைத் தேடி பொறுப்புக்கள் 1954 ஆம்
ஆண்டு தான் வருகிறது. இப்போது சொல்லுங்கள்
நாடார்களை வளர்த்து விட்டது காமராஜரா
என்று ?????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக