சனி, 29 ஏப்ரல், 2017

கர்நாடகா தமிழகம் முதலமைச்சர் பட்டியல் காவிரி கன்னடர் இனவெறி நதிநீர் அணை நீதிமன்றம்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
இப்ப்டியாக மத்திய மாநில அரசுகள் காவிரி
பிரச்சனையை கால்ப்பந்து விளையாடிய
போது கர்நாடகா மேலும் ஒரு கோல்
அடித்தது, அதாவது 1983 ஆம் ஆண்டு ஏகஞ்சி
அணை திட்டத்தை நிறைவேற்றியது.
1982 இல் கர்நாடகாவில் ராமகிருஷ்ண கெட்டே
தலைமையிம் ஜனதா அரசு அமைந்தது.
1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட
போது, ராஜிவ் காந்தி காங்கிரஸ் அரசின்
பிரதமரானார்.
1987 டிசம்பர் இறுதியில் எம்ஜிஆர் இறந்த
போது, வி.என்.ஜானகி அதிமுக அரசின்
முதல்வர் ஆனார்.
1988 ஆம் ஆன்டு ஜனவரி 31 ஆம் தேதி
வி.என்.ஜானகி தலைமையிலான் அதிமுக(ஜ)
அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர்
ஆட்சி அமல் படுத்தப்பட்டது.
1988 அக்டோபர் மாதம் தொலைபேசி ஒட்டு
கேட்ட பிரச்சனையில் ராமகிருஷ்ண கெக்டே
பதவி விலகி எஸ்.ஆர்.பொம்மை கர்நாடகா
ஜனதா அரசின் முதல்வர் ஆனார்.
1989 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த
தேர்தலில் வெற்றி பெற்று கருணாநிதி
தலைமையில் திமுக அரசு அமைந்தது.
1989 ஏப்ரல் மாதம் தேவகவுடா தலைமையில்
கர்நாடகாவில் ஜனதா கட்சி உடைந்து,
எஸ்.ஆர்.பொம்மை ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
குடியரசு தலைவர் ஆட்சி அமல்
படுத்தப்பட்டது.
1989 நவம்பரில் நடந்த பொது தேர்தலில்
ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ்
அரசு தோற்க்கடிக்கப்பட்டு, விஸ்வநாத்
பிரதாப் சிங் தலைமையில் தேசிய முன்னனி
அரசு அமைந்தது. கர்நாடகாவில் வீரேந்திர
பாட்டில் தலைமையில் காங்கிரஸ் அரசு
அமைந்தது.
1990 அக்டோபரில் கர்நாடகாவில் வீரேந்திர
பாட்டில் பதவி விலகி எஸ்.பங்காரப்பா
காங்கிரஸ் அரசின் முதல்வர் ஆனார்.
1990 நவம்பரில் மத வெறியை தூண்டி பாபர்
மசூதியை இடிக்க கிளம்பிய எல்.கே.அத்வானி
பிகாரில் கைது செய்யப்பட்டதாலும், மண்டல்
குழு அறிக்கை அமல் படுத்தப்பட்டதாலும்,
மத வெறி கொண்ட சமூக நீதிக்கு எதிரான்
பஜக தேசிய முன்னனி அரசை கவிழ்த்தது.
வி.பி.சிங் பதவி விலகினார். பின்னர் ஜனதா
தளத்தில் இருந்து பிரிந்து 54 எம்.பி.க்களை
கொண்டு சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற
பெயருடன் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர்
ஆட்சி அமைத்தார்.
1991 ஜனவர் 30 ஆம் தேதி தமிழ் நாட்டில்
கருணாநிதி தலைமையிலான திமுக அரசு,
ஜெயலலிதா மற்றும் ராஜிவ் நிர்பந்தத்தால்
கலைக்கப்பட்டு குடியரசு ஆட்சி அமல்
படுத்தப்பட்டது.
1991 மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சி,
சந்திரசேகர் அரசுக்கான ஆதரவை விலக்கிக்
கொண்டதால், சந்திரசேகர் பதவி விலகினார்.
1991 ஜீன் மாதம் நடந்த பொது தேர்தலில்
வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி
பி.வி.நரசிம்மராவ் தலைமையில் மத்திய
அரசை அமைத்தது. தமிழ் நாட்டில்
ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி
அமைந்தது.
1992 நவம்பரில் கம்யூட்டர் வாங்கிய ஊழலில்
பங்காரப்பா பதவி விலகி, கர்நாடகா காங்கிரஸ்
அரசுக்கு வீரப்ப மொய்லி முதல்வரானார்.
1994 நவம்பரில் நடந்த கர்நாடகா தேர்தலில்
காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு,
எச்.டி.தேவகவுடா தலைமையில் ஜனதா தள்
அரசு அமைந்தது.
1996 மே மாதம் நடந்த பொது தேர்தலில் தமிழ்
நாட்டில் ஜெயலலிதா அரசு தோற்க்கடிக்கப்ப
ட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு
அமைந்தது.
மத்திய அரசுக்கு எந்த கட்சியும்
பெரும்பான்மை பெறாததால் வாஜபாய்
தலைமையில் சிறுபான்மை பஜக அரசு 13
நாட்கள் பதவியில் இருந்தது.
பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா
தலைமையில் ஐக்கிய முன்னனி அரசு
அமைந்தது.
கர்நாடகாவில் தேவகவுடாவிற்கு பின்
ஜெ.எச்.பட்டேல் ஜனதா தள் அரசின்
முதல்வரானார்.
1997 ஏப்ரல் தேவகவுடா பதவி விலகியதால்
இந்திர குமார் குஜ்ரால் ஐக்கிய முன்னனி
அரசின் பிரதமரானார்.
1997 நவம்பரில் காங்கிரஸ் ஐக்கிய முன்னனி
அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டதால்
குஜ்ரால் தலைமையிலான அரசு பதவி
விலகியது.
1998 மார்ச் மாதம் நடந்த பொது தேர்தலில்
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில்
என்.டி.எ. அரசு அமைந்தது.
1999 மார்ச் மாதம் ஜெயலலிதா கலகம் செய்து
வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை வில்க்கி
கொண்டதால், வாஜ்பாய் தலைமையிலான
என்.டி.எ. அரசு பதவி விலகியது.
1999 செப்டம்பரில் நடந்த பொது தேர்தலில்
வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில்
மீண்டும் என்.டி.எ. ஆட்சி அமைந்தது.
கர்நாடகாவில் ஜனதா தள் அரசு தோற்க்க்டிக்கப்
பட்டு, எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில்
காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
2001 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த
தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று
ஜெயலலிதா முதல்வரானார்.
2001 செப்டம்பர் மாதம் ஜெயலலிதா ஊழல்
வழக்கில் தணடனை பெற்றிருந்ததால் உச்ச நீதி
மன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாடு முதல்வரானார்.
2002 மார்ச்சில் நிதிபதிகளுக்கு லஞ்சம்
கொடுத்து ஊழலுக்கான தண்டனைகளில்
இருந்து விடுதலை பெற்று, ஜெயலலிதா
மீண்டும் தமிழ் நாட்டின் முதல்வரானார்.
2004 மே மாதம் நடந்த பொது தேர்தலில்
வாஜ்பாய் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு
மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய
ஜன்நானயக கூட்டனி அரசு அமைந்தது.
கர்நாடகாவில் தரம் சிங் த்லைமையில்
காங்கிரஸ் அரசு அமைந்தது.
2006 ஜனவரியில் கர்நாடகாவில் காங்கிரஸ்
அரசு கவிழ்க்கப்பட்டு எச்.டி.குமாரசாம
ி தலைமையில் ஜனதா தள்(கே) அரசு
அமைந்தது.
2006 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த
தேர்தலில் ஜெயல்லிதாவின் அதிமுக அரசு
தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி
தலைமையில் திமுக அரசு அமைந்தது.
மேலே குறிப்பிட்ட ஆட்சி மாற்றங்களாலும்,
கர்நாடகா அரசின் ஏமாற்று வேலைகளாலும்,
அரசியவாதிகளின் அலட்சியதாலும் காவிரி நீர்
பிரச்சம்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
ஆனால் கர்நாடகா மற்றும் தமிழ் நாடு
அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கு
பேச்சுவார்த்தை என் சொல்லிக் கொண்டு
டெல்லி, சென்னை, பெங்களூர் என சுற்றுலா
சென்று அனுபவித்துதான் மிஞ்சியது.
கர்நாடகா தமிழ் நாட்டை ஏமாற்றுவதில் பல
வழிகளையும் கையாண்டது

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக