சனி, 29 ஏப்ரல், 2017

மட்டக்களப்பு தமிழ் கல்வெட்டு கிமு 2 ஈழம் மண்மீட்பு அகழ்வாராய்ச்சி

aathi tamil aathi1956@gmail.com

15/7/15
பெறுநர்: எனக்கு
Melchi Jasper
மட்டக்களப்பில் முக்கிய கல்வெட்டு.
==============================
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச
செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் மக்கள் குடியிருப்புக்க
ளை அண்மித்த பிரதேசத்தில் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முன் தமிழைப் பேச்சு
வழக்கு மொழியாகக் கொண்ட தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததை உறுதி செய்யும்
சாசனங்கள், அவர்களின் சமய,பண்பாட்டு வழமைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள்
என்பன கண்டுபிடிக்கப்பட்டு வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர்
சி.பத்மநாதன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ள
து.
இச்சாசனங்கள் மூலமாகவும், இதற்கு முன் வெல்லாவெளிப்பிரதேசத்தை அண்மித்த
பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்கள் மூலமாகவும் வெல்லாவெளியை
மையமாகக் கொண்ட சிற்றரசு ( வேள்புலம் ) ஒன்றினை அமைத்திருந்தனர் என்பது
உறுதியாகின்றது.
இச்சாசனங்களில் 3 தலைமுறைகளைச் சேர்ந்த வேளிர்களின் பெயர்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன.இதன் மூலம் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே ஆதி
தமிழ் மக்கள் மட்டக்களப்பை ஆட்சி செய்துள்ளனர் என்பது புலனாகின்றது.
http://todayjaffna.lk/12967

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக