சனி, 29 ஏப்ரல், 2017

முற்கால பாண்டியர் பல்லவர் கு முன்பே குடவரை சோழர் கு முன்பே தேர்தல் சமணர் கொலை பொய் கழுவேற்றம் குடவோலை

aathi tamil aathi1956@gmail.com

22/7/15
பெறுநர்: எனக்கு
சமயம்
முதலாம் பாண்டியப் பேரரசில்
சமணம் , சைவம் , வைஷ்ணவம் ,
பௌத்தம் போன்றவை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன.
முதலாம் பாண்டியப் பேரரசின் முற்பாதியில் சமணம் பாரிய செல்வாக்கைப்
பெற்றுத் திகழ்ந்தது. சமண இலக்கியங்களும் பல தோன்றின. சமண சமயத்தின்
செல்வாக்கை அவர்களின் குகைகள் பாண்டிய நாடு முழுவதும் காணப்படுவதை வைத்தே
அறியலாம். சமண முனிவர்களின் குகைகள் ஆனைமலை, அழகர்மலை, நாகமலை,
திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கரடிப்பட்டி, முத்துப்பட்டி,
பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, சித்தன்னவாசல் போன்ற இடங்0களில்
காணப்படுகின்றன. அரிகேசரி மாறவர்மன் சுந்தர பாண்டியன் என அழைக்கப்பட்ட
கூன் பாண்டியன் ஆட்சியில் சமணர் கழுவேற்றம் நடந்ததாகக் கூறப்பட்டாலும்
வரலாற்றாய்வாளர்களால் அவை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பத்தாம்
நூற்றாண்டிலும் சமண சமயம் ஓரளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்தது
கழுகுமலைக் கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது. சமண சமயத்தில் பெண்களும்
சமயக்குறத்தி என்ற பெயரில் ஈடுபட்டார்கள்.
முதலாம் பாண்டியப் பேரரசின் பிற்பாதியில் சைவமும்
வைஷ்ணவமும் செல்வாக்குப் பெறத்தொடங்கின. சைவத்துக்கு நாயன்மார்களும்
வைணவத்துக்கு ஆழ்வார்களும் தோன்றி அச்சமயங்களை வளர்த்தார்கள்.
அரிகேசரி வேந்தனும்
மங்கையர்க்கரசியும் பாண்டிய அமைச்சர் குலச்சிறையாரும் 63 சைவ
நாயன்மார்களில் மூவர் ஆனார்கள். [3]
தேர்தல்
கோயில் ஆட்சிமுறைத் தேர்தலை கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலேயே
பாண்டியர்கள் அறிமுகப்படுத்திவிட்டார்கள். பின்னர் பத்தாம் நூற்றாண்டில்
சோழர் இதை பரலவலாக்கினார்கள். அந்த விதத்தில் பாண்டியர்களின் தேர்தல்
முறையே தமிழகத்தின் மிகப்பழைய தேர்தல் முறை எனலாம். இதை ஆய்வாளர்கள்
பாண்டியன் மாறன் சடையன் என்பவனின் மானூர் கல்வெட்டைக் கொண்டு
உறுதிப்படுத்துகின்றனர். [6]
கட்டிடக் கலை [7][8]
இவர்களின் ஆட்சிகள் ஏராளமான குடைவரை கோயில்கள் தமிழகத்தில் கட்டப்பட்டன.
பல்லவர்களுக்கு முன்னரே
பாண்டியர் குடைவரை கட்டிடக் கலையில் சிறப்புற்று இருந்தனர்.
[3] ஜைனம், சைவம் , வைணவம் போன்றவற்றுக்கு குடைவரைகள் கட்டப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக