|
27/7/15
| |||
Kathir Nilavan
'தமிழ்த்தேசியப் போராளி' நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள்
27.7.1879
1937ஆம் ஆண்டு இராசாசி அரசு இந்தி திணிப்பை எதிர்த்து தமிழறிஞர்கள்
போர்க்கோலம் பூண்டனர். அவர்களுள் முதன்மையான போராளி நாவலர் சோமசுந்தர
பாரதியார் ஆவார்.
எட்டையப்புரத்து அரசரின் நன்மதிப்பை பெற்று விளங்கிய எட்டப்ப
பிள்ளைக்கும் முத்தம்மாளுக்கும் மகனாக 27.7.187ஆம் ஆண்டு சோமசுந்தரம்
பிறந்தார்.
எட்டையபுரத்து அரண்மனையில் பணியாற்றிய சின்னச்சாமி ஐயரின் மகன்
சுப்பிரமணியனும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சிறு வயது
முதல் இணை பிரியா நல்ல நண்பர்கள். தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று
சேர்த்தது. இரண்டு பேரும் பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தனர். அப்போது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவருவொருவர் அரண்மனைக்கு வருகை தந்ததோடு
ஈற்றடியில் பாடல் எழுதித் தரும் படி கேட்டார். இவர்களின் பாடலில் வியந்து
போன புலவர் "பாரதியார்" எனும் பட்டத்தை இருவருக்கும் வழங்கினார். அன்று
முதல் சுப்ரமணியன் 'சுப்பிரமணிய பாரதி' என்றும், சோமசுந்தரம் 'சோமசுந்தர
பாரதி' என்றும் அழைக்கப்பட்டனர்.
சோமசுந்தர பாரதியார் 1905இல் தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலில்
ஈடுபட்ட போது வ.உ.சி.யோடு நெருக்கம் கொண்டதன் காரணமாக இந்திய விடுதலை
மீது தீராப்பற்று கொண்டார். வ.உ.சி. தொடங்கிய கப்பல் நிறுவனத்திலும்
பொறுப்பு வகித்தார். பிரித்தானிய அரசு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர்
மீது தொடுத்த இராசதுரோக வழக்குகளை எதிர்கொண்டு வாதாடினார்.
அதன் பிறகு 1933ஆம் ஆண்டு வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார். அண்ணாமலை
அரசரின் விருப்பத்திற்கிணங்க அண்ணாமலைப் பல்கலை.யில் தமிழ்த்துறை
பேராசிரியராக பணியாற்றினார். அப்போது தான் 1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு
'தீ' கொழுந்து விட்டெரிந்தது.
27.8.1937இல் இராமகிருஷ்ண மட மாணவர் இல்ல விழாவில் பங்கேற்ற முதல்வர்
இராசாசி 'இந்தி பாடநூல்கள் வெளியிடப்படும்' என்று அறிவித்தார். அப்போது
அதனை கண்டித்து முதன் முதலாக குரலெழுப்பியவர்கள் உமா மகேசுவரனாரும்,
சோமசுந்தர பாரதியாரும் தான்.
27.8.1937இல் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உமா மகேசுவரனார் முதல்
கண்டனக் கூட்டத்தை நடத்தினார். அதன்பிறகு சென்னையில் இந்தி எதிர்ப்பை
பதிவு செய்த முதல் குரல் சோமசுந்தர பாரதியின் குரலாகும்.
5.9.1937இல் சென்னை செளந்தர்ய மண்டபத்தில் பாரதியார் தலைமையில் கூட்டம்
நடைபெற்றது. அதில் பாரதியார், "இந்தி மொழி, இலக்கண இலக்கியச்
சிறப்பில்லாத வெறுமொழி, அம்மொழி பயிலுவதால் தமிழ்மொழியும், தமிழர்
மொழியும், தமிழர் நாகரிகமும் கெட்டு விடும்.
தமிழ்ப்பள்ளிக் கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்குவதைக் தமிழ் மக்கள்
முழு வன்மையோடு கண்டித்து ஒழிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும்
உடனே தீவிரமாய்ச் செய்திடல் வேண்டும்.
அதுவே தமிழர் வீரமுடையவர் என்பதைக் காட்டும். அவ்வெதிர்ப்பினால் ஏதாவது
கேடு வருமானால் அதனை பெறத் தாம் முன்னணியில் இருப்பேன்" என்று இரத்தம்
துடிதுடிக்கப் பேசினார். இக்கூட்டத்தில் இரா.பி.சேதுப் பிள்ளை, சுவாமி
சகஜானந்தர், டி.ஏ.வி.நாதன், உமா மகேசுவரனார், சி.என். அண்ணாதுரை, பண்டிதை
நாரயணியம்மை ஆகியோர் கலந்து கொண்டனர்.
4.10.1937இல் அடுத்த படி நிலையாக சென்னை கோகலே மண்டபத்தில் நடந்த
மாபெருங் கூட்டத்திற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் பாரதியாரின்
உரை கோடை இடியாய் முழங்கியது. அக்கூட்டத்தில் தான் அண்ணாதுரை முதன்
முறையாகப் பேசினார்.
சென்னையில் நடைபெற்று வந்த தொடர் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் பாரதியாரின்
முயற்சியால் சென்னையைத் தாண்டி பல்வேறு மாவட்டங்களுங்கும் பரவத்
தொடங்கியது. 26.12.1937ஆல் திருச்சியில் பாரதியார் தலைமையில் நடைபெற்ற
சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு இந்தி எதிர்ப்புப் போரை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்தியது. 2500க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற பேரணி
முதன் முறையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தான் பெரியாரும் முதன்
முறையாக பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
28.5.1938இல் அதே திருச்சியில் மீண்டும் மந்திராலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. அதில் பேசிய பாரதியார், "சத்தியாகிரகம் அதில் வெற்றி
கிடைக்கா விடில் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்குவதைத் தவிர வேறு
வழியில்லை" என்று போர் முரசம் கொட்டினார். இந்தி எதிர்ப்பு வாரியம்
உடனடியாக உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பாரதியார், செயலாளராக
கி.ஆ.பெ.விசுவநாதன், அதன் உறுப்பினர்களாக உமா மகேசுவரனார்,
ஈ.வெ.ரா.பெரியார், ஊ.பு.செளந்தர பாண்டியன், கே.எம்.பாலசுப்பிரமணியம்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பாரதியார் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, நாள் தோறும் மறியல், நாள் தோறும்
சிறை என்ற நிலைக்குப் போராட்டம் வளர்ந்தது. தொடர் போராட்டங்கள் இராசாசி
அரசை கலங்கடிக்கச் செய்தது. இந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் இரண்டு
கோரிக்கைகள் தமிழர்களிடத்தில் வலுப் பெற்று நின்றன.
1.மொழிவழித் தமிழ் மாகாணம்
2. தமிழ்நாடு தமிழருக்கே
இவ்விரண்டு கோரிக்கை உருவாக்கத்திலும் பாரதியாரின் பங்கு அளப்பரியது. தன்
வாழ்நாளின் இறுதி வரை இக் கோரிக்கைகளின் மீது உறுதியான நம்பிக்கை
கொண்டிருந்தார். அது போலவே, ஆரிய எதிர்ப்பில் எந்தளவிற்கு தீவிரம்
காட்டினாரோ அதே அளவிற்கு திராவிடர் அடையாள எதிர்ப்பிலும்
தீவிரங்காட்டினார். தமிழ்மொழி, தமிழின அடையாளத்தை ஒருபோதும் அவர்
விட்டுத்தரவில்லை.
சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களில் தசரதன் குறையும் கைகேயி நிறையும்,
சேரர் தாய முறை, சேரர் பேரூர், தமிழும் தமிழரும் ஆகியவை முக்கியமான
நூல்களாகும்.
27.7.1959 இல் பாரதியாரின் 80ஆவது அகவை நிறைவு விழா மதுரையில்
'தமிழ்ச்செம்மல்' கி.பழனியப்பனார் (ஐயா பழ.நெடுமாறன்) தந்தையார்
முயற்சியில் வெகு சிறப்பாக நடத்தப்பட்ட நிகழ்வே அவரின் இறுதி
நிகழ்வாகும்.
14.12.1939இல் சங்கம் வளர்த்த மாமதுரையில் அவர் தமது தமிழ் மூச்சை
நிறுத்திக் கொண்டார்.
"தமிழ்த்தேசிய போராளி" சோமசுந்தர பாரதியாருக்கு வீரவணக்கம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக