சனி, 29 ஏப்ரல், 2017

மருதுபாண்டியர் மரணம் தோல்வி துரோகம் ஆங்கிலேயர்

aathi tamil aathi1956@gmail.com

20/7/15
பெறுநர்: எனக்கு
Karthi Keya Pandian
மருது சகோதரர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகனாக சிவகங்கை
அரணமனையில் நடமாடி வந்த கருத்தான் , எதிரிகளின் கைக்கூலியாக மாறி அரண்மனை
ரகசியங்களை அடிக்கடி எதிர் தரப்புக்குத் தெரிவித்து வந்த்தை வெங்கண
உடையாணன் கண்டுபிடித்து நிருபிக்க முடியாத்தால் கருத்தான் அந்தக்
குற்றச்சாட்டிலிருந்து தப்பித்தான் ஆனாலும் அவனின் வஞ்சக நடவடிக்கைகள்
தொடர்ந்தன.
படமாத்தூர் கௌரி வல்லபர் ஜமீன்தாராக பொறுப்பேற்றவுடன் கருத்தான் அரண்மனை
யின் முக்கிய அதிகாரி போல திகழ்ந்தான்
சின்னமருது மறைந்திருந்த இடம் பற்றிய தகவலை,கர்னல் அக்னியூவுக்கு
ஓற்றர்கள் மூலம் செய்தி அனுப்பியவன் கருத்தான்,சின்ன மருதுவைக் கைது
செய்ய ஒரு படையை கருத்தானோடு அனுப்பி வைத்தான் கர்னல் அக்னியூ
1801 ஆம் ஆண்டு புரட்டாசித்திங்கள் 19ம் நாள் சின்ன மருதுவுக்குத்
துரதிருஷ்ட நாள் ,வாளையும் வளரியையும கையில் கொண்டு எதிரிகளோடு மோதினார்
சின்னமருது.பிரிட்டிஷ் படைவீர்ர்களோடு இருந்த கருத்தான் மறைந்திருந்தவாற
ு துப்பாக்கியால் சின்னமருதுவின் காலில் சுட்டான்,சின்ன மருதுவும் அவரின்
சகாகளும் சோழபுரத்தில் கைது செய்தனார்,
வாத நோயினால் தாக்கப்பட்ட பெரிய மருது மயங்கிய நிலையில் மதகுபட்டி
எனும்எனும் ஊரை அடுத்துள்ள ஓக்கூர் எனும் இடத்தில் இருக்கும் தகவல்
கருத்தானுக்குக் கிடைத்தது,கர்னல் அக்னியூக்குப் பெரிய மருதுவை அடையாளம்
காட்டியவன் கருத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக