சனி, 29 ஏப்ரல், 2017

இன்ஜின் இல்லாமல் யாழ் அமெரிக்காவுக்கு பாய்மரக் கப்பல் 1936 அன்னபூரணி மேலும் சில தகவவல்கள் கடல் 2

அமெரிக்க கடற்படையில் வல்வெட்டித்துறை அன்னபூரணிஅம்மாள் கப்பல் !

https://eelamaravar.wordpress.com/2017/03/12/annapoorani-ship/amp/
One of Robinson’s little-known adventures involved the purchase in Colombo Ceylon of the Annupoorunyamal an Indian copy of a full rig ged NewEngland clipper in miniature. Which he had first seen on his circumnavigation in Svaap. Returning to India later. he found the ves sel bought her outfitted her at Colombo. and with an all Indian crew he and his first wife Florence sailed her back to Gloucester. There. the Florence C. Robinson. as the Annapooranyamal had been renamed. startled the natives when the Hindu crew flew kites from the deck to celebrate the safe passage.
The clipper was used as a rigging model for the sailing ships Robinson’s firm was then building. along with working fishing boats. Then came World War II. and his yard was taken over and expanded for Navy vessels. At the peak. More than six hundred men were em ployed and some two hundred ships were built. Just prior to the defe nse effort. Robbie had purchased in Ceylon a beautiful full rigged ship and had it brought to Gloucester as a model for designing and restoring classic old vessels. Later he sent this vessel to Tahiti to be operated in partnership with Henri Grand.
The Circumnavigators – by Don Holm CHAPTER – 9
Image may contain: 1 person
Image result for the Florence C. Robinson. … Continue readingImage may contain: outdoor
அன்னபூரணி அம்மாள்!….
அன்னபூரணிஅம்மாள் என குறிப்பிடப்படும் மேற்படி இக்கப்பல் 1930ஆண்டு வல்வெட் டித்துறை மேற்குத்தெரு வாடியில் சுந்தரமேஸ்திரியாரால் கட்டிமுடிக்கப்பட்டது. இங்கு வாடி என அழைக்கப் படுவது கப்பல் கட்டப்படும் தளமாகும். இதனையே ஆங்கிலத்தில் லுயசன என அழைப்பார்கள். இக் கப்பல் ஆங்கிலேயரின்Baltimoreஅல்லது NewEngland clipper ரக கப்பலாகவே கட்டப் பட்டிருந்தது. 1856இல் வல்வெட்டித்துறையின் சமூகச் சிற்பி எனப்போற்றப்படும் பெரியவர் வெங்கடாசலம் பிள்ளையால் முல்லைத்தீவுக்கு தென்கிழக்காக(கப்பல்திட்டு எனஇவ்விடம் இன்றும் அழைக்கப் படுகின்றது) கடலில் மூழ் கியிருந்த King Of Atlantic எனும்கப்பல் மீட்டெடுக்கப்பட்டது. இக்கப்பல் பிரித்தானியா வில் கட்டப்பட்டதும் ஆங்கிலேயரு க்கு சொந்தமானதுமாகும். வங்காளவிரகுடாவிலி ருந்து மீட்கப்பட்ட மேற்படிகப்பலை அடியொற் றியே அதன்பின்னாக வல்வெட்டித்துறையில் பல கப்பல்கள் கட்டப்பட்டு வந்தன. அவ்வாறே அன்ன பூரணிஅம்மாளும் கட்டப் பட்டிருந்தது. அன்ன பூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபா ளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடி களாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப் படும் பெண்தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும்.
90 அடி நீளமும் 19அடி அகலமும் 90தொன்கள் கொள்ளளவும் கொண்ட அன்னபூரணி அம்மாள் முழுவதும் உள்ளூர் வேப்பமரத்தினால் கட்டப்பட்டி ருந்தது. இரண்டாயிரம் வருடவரலாறு கொண்ட வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதி(1852) முதல் இருபதாம்நூற்றாண்டின் முன்னரைப்பகுதி(1942)யான ஏறக்குறைய தொண்ணூறாண்டு காலம்வரை இருநூறுக்கு மேற்பட்ட கப்பல்கள் பர்மாவுடனான அரிசிவர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன. எனினும் வல் வெட்டித்துறையின் பொற் காலங்களில் ஒன்றென வர்ணிக்கப்படும் இக்காலத்திலிருந்த நூற்றிமுப் பத்தி நாலு(134) வரையான கப்பல்களின் பெயர் விபரங்களே இன்று எமக்கு கிடைத்துள்ளன. இவ் வாறான பாய்க்கப்பல்களில் ஒன்றே அன்னபூரணி அம்மாள் ஆகும். எனினும் இக்கப்பலொன்றே அமெ ரிக்காவைக் கடந்து பசுபிக்சமுத்திரத்தில் அமைந் திருந்த தாஹிற்றிவரை சென்ற தனிப்பெரும் சிறப் புடையது.(மேற்காணும் ஆங்கிலகுறிப்பினைப் பார்க்க) இந்துசமுத்திரம் அத்திலாந்திச்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தைச்சுற்றிய அன்ன பூரணிஅம்மாளின் கடற்பயணம் கீழைத்தேய மக்களின் குறிப்பாக ஈழத்தமிழரின் அழிக்க முடியாத பெருமை யாகும். நம்நாட்டு கப்பற் கலை யின் சிறப்பினை ஐரோப்பாகடந்து அமெரிக்கா வரை எடுத்துக்கூறிய அன்னபூரணிஅம்மாளை அடியொற்றி கப்பல்கள் மற்றும் கடற்கண்ணி அகற்றும் கப்பல்கள் என இருநூறுவரையான கப்பல்கள் அமெரிக்ககடற்படைக்காக இரண்டாம் உலகமகாயுத்தகாலத்தில் திரு.William Albert Robinson என்பவரினால் உருவாக்கப்பட்டன. இதன்விவர ணமே மேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் William Albert Robinson இலங்கை யின் புகழ்பெற்ற வல்வெட்டித் துறை மண்ணின் வரலாற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கும் அற்புத மனிதர். அமெரிக்காவின் வடமாநிலங்களில் ஒன் றான Wisconsin மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்திருந்த Kenosha நகரத்தில் 13 August 1902 இவர் பிறந்திருந்தார். EllaHuegin எனும் தாயின் ஏகபுதல்வனான இவருடைய தந்தையார் midwestern newspaper வெளியீட்டாளர் ஆவார்;. 32 அடி நீளமான Svaap எனும்படகில் முதன்முதல் உலகத்தைசுற்றிய துணிச்சலான கடலோடியெனப் பெயர்பெற்றவர் வில்லியம் அல்பேட் றொபின்சன் ஆவார். தனது இருபத்தைந்தாவதுவயதில் 10 June 1928இல் அமெரிக் காவின் NewYork நகரில் இருந்து Swaap என்றதனது Ketch ரகபடகில் இவர் புறப்பட்டார். ஸ்கிப்பர் தரசான்றிதழ் பெற்றஇவர் 32.000மைல்கள் பயணம்செய்து உலகத்தை சுற்றியபின் 24 Novem ber 1931இல் மீண்டும் தலைநகரான NEWYORK இனை அடைந்திருந்தார். சிறிய படகொன்றில் முழு உலகினையும் முதலில் சுற்றிவந்த இக்காலத்தில் வங்காளவிரிகுடாவில் பயணம்புரிந்த அன்ன பூரணி அம்மாளை முதன்முதலாக இவர் கண்டு கொண்டார். அதன் அழகினையும் உறுதியான கட்டுமானத்தையும் கண்ட சிறந்தகடலோடியான றொபின்சன் அதன்மீது மையல்கொண்டார். இதன் காரணமாக மீண்டும் அதனைத்தேடி இலங்கை வந்த றொபின்சன் 1937இல் அதனைக் கொள்வனவு செய்து அமெரிக்காவிற்கு கொண்டுசென்றார். றொபின்சன் அன்னபூரணியை பார்த்துதுமுதல் இதனை விரும்பி கொள்வனவு செய்தது எவ்வாறு என்பதை 1972இல் தான் எழுதிவெளியிட்ட சுநவரசn வுழ வுhந ளுநய எனும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு சிறப்பாக குறிப்பிடுகின்றார்.

I had seen several of them while homeward bound in 1931 on my circumnavigation with Svaap. One in particular had come racing in through the narrow entrance to Colombo harbor in Ceylon under full sail – so beautifully proportioned that it was impossible to judge her size until she approached the anchorage. Later I measured her and took her off the lines. She was a direct descendent of an early nineteenth century British naval brig, ninety feet on deck, complete with all the rigging and fittings of her ancestor. To complete the picture, her crew sang lusty sea-chanties in an incongruous biblical English while warping the ship into place with her traditional capstan and bars.
And this is how it came about that a reincarnation of an almost forgotten type of sailing ship arrived in Glouchester that warm summer day in 1938. I had found her tucked away between monsoons in the tiny harbor of near Jaffna, after combing the Indian peninsula and Ceylon and bought her in exchange for a carload of paper money worth $9000, bales of it that filled the entire of back of an ancient open Buick. Her Hindu crew sailed her to Colombo with me through the harrowingly narrow lift bridge of Pamban Channel, which separates Ceylon from India.
வில்லியம் அல்பேட் றொபின்சனுடனான அன்ன பூரணிஅம்மாளின் இச்சாதனைப் பயணத்தின் போது சூயெஸ்கால்வாயினைக் கடந்து மத்திய தரைக்கடலில் மேற்குநோக்கி பயணம் செய்த போது ஏற்பட்டபுயலில் சிக்கியகப்பல் பின்புறமாக பாலஸ்தீனத்தின் ஹைபா(Haipaர்) நகரம்வரை அடித்துச்செல்லப்பட்டது. (பெய்ரூத் நகரத்தின் தெற்காக அமைந்திருக்கும் Haipa நகரம் 1949 இல் உருவாகிய இஸ்ரேலின் எல்லைக்குள் இன்று அடங் கியுள்ளது) இவ்வாறு பல்லாயிரம்மைல் தூரத்தை யும் பலகடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 01 ஓகஸ்ட் 1938 திங்கட் கிழமை அமெரிக்காவின் Massachusettsஆ மாநிலத்திலுள்ள Gloucester துறைமுகத்தில் நிறைவுபெற்றது. தென் னாசிய நாடொன்றில் கட்டப்பட்டு பிரதானமாக காற்றின்துணையுடன் இயங்கும் கப்பலொன்று ஐரோப்பாகடந்து Atlanticயு கடல்வழியே அமெரிக்கா வைக் கடந்து பின்னர் பசுபிக்சமுத்திரத்திலும் பயணம் சென்றது உலகவரலாற்றில் இவ்வாறு ஒரேயொருமுறை தான். இச்சாதனைப் பயணம் பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine என A. Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான Gloucester Time இல் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணியின் நீண்ட கடற்பயணம் முன்பக்க செய்தியாக வெளிவந்திருந்தது. அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும் போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவை யாகும். கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இச் செய்தியிதழ்களே இலங்கையிலிருந்து அன்ன பூரணி அம்மாள் அமெரிக்காவந்த சாதனையின் ஆதாரங்களாக எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்தன.
யாழ்ப்பாண குடாநாட்டின் வடதிசையில் வங்காள விரிகுடாவின் அருகாமையில் தனது புவியியல் அமைவிடத்தை கொண்டிருப்பது வல்வெட்டித் துறை பட்டினமாகும். இதனால் வாடைக்காற்றென அழைக்கப்படும் வடகீழ்ப் பருவப்பெயற்சிகாற்றின் எழும் பாரிய அலை களின் தாக்குதலினால் இக் காலங்களில் இதன்கரைகளில் கப்பல்கள் தரித்து நிற்பது கடினமாகும். இதனால் அக்காலங்களில் வல்வெட்டித்துறைக் கப்பல்கள் பாக்குநீரிணை யின் அருகாமையில் அமைந்திருக்கும் ஊர்காவற் துறை(kaits)க்கு கொண்டுசென்று பாதுகாப்பாக கட்டப்படும். இக்காலங்கள் ஒக்டோபர் முதல் ஜனவரி வரையானதாகும். இதனை தீபாவளிமுதல் தைப்பொங்கல் வரையான காலமாக வல்வெட்டித் துறை கடலோடிகள் வகுத்துக்கொள்வர்.
வல்வெட்டித்துறையிலிருந்த பலகப்பல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமான மூடைகள்வரை கொள்ளும் பாரிய அளவுடையதாயிருந்தன. இவைகள் பெரியகப்பல்கள் எனவும் ஐயாயிரம் முதல் பத்தாயிரம்மூடைகள் கொள்ளக்கூடிய கப்பல்கள் நடுத்தரக்கப்பல்கள் எனவும் ஆயிரம் முதல் ஐயாயிரம்மூடைகள் கொள்ளளவு கொண் டவை சிறியகப்பல்கள் எனவும் அழைக்கப்பட்டன. ஆயிரத்திற்கும் குறைவான மூடைகளை கொள் வனவாய்; கொண்டவை தோணிகள் எனப்படும். கப்பலின் அளவிற்கேற்ப பாய்மரங்கள் மற்றும் பாய்களின் தொகை அதிகரித்து காணப்படும். இத்தகைய அதிகரிப்பிற்கு ஏற்றவாறு மாலுமி களின் தொகையும் அதிகரிக்கும். இவ்வாறே கப்பலின் நீளம் அகலம் உயரம் என்பவற்றின் மூலம் அதன் கொள்ளளவு தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய நவீனகப்பல்களும் அவற்றின் கொள் ளளவு கொண்டே எத்தனை அல்லது எவ்வளவு தொன்நிறை கொண்டதென அழைக்கப்படு கின் றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறே பர்மாவுடனா ன அரிசிவர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வல்வெட்டித் துறை கப்பல்களும் அவைகள் தாங்கிச் செல்லும் அரிசிமூடைகளின் எண்ணிக்கை கொண்டு வகுக் கப்பட்டன. பர்மாவில் இருந்து கொண்டுவரப்படும் அரிசிமூடைகள் ஒவ்வொன் றும் 164 இறாத்தல் நிறை கொண்டவையாகும். இம்மூடைகள்யாவும் உத்தரவாதப்படுத்தப்பட்ட பச்சைக்கோட்டு சாக்கு களில் நிறைக்கப்பட்டி ருந்தன.
கப்பலின் பாய்கள்(Rigged) பாய்மரங்களின்(Masts) அளவுகள் மற்றும் வடிவங்களை கொண்டு கப்பல் மற்றும் தோணிகளின் வகைகள் மாறுபடுகின்றன. மேற்கூறிய பாய்கள் மற்றும் பாய்மரங்கள் தேவை க் கேற்றவாறு மாற்றப்படக்கூடியன. தமிழில்பொது வாக பாய்க்கப்பல்கள் என இவை அழைக்கப்படு கின்றன. எனினும் இவ்வகைக்கலங்களில் நீளத் தால் கூடியவை ‘தீர்கா’ எனவும் உயரத்தால் கூடிய வை ‘உன்னதா’ எனும் பெயர்களால் கப்பல்சாத்தி ரத்தில் வேறுபடுத்தப்படுகின்றன. இவ்வகை நீர் வழிக்கலங்களில் இரண்டுபாய்மரம் கொண்ட கப் பல் களின் பெயர்கள் Ketch, Schooner, Brig, Brigan tine
மற்றும் Hwrmaphrodite Brig என ஆங்கிலத்தில் பலவகைப்படுத்தப்பட்டுள்ளன. அன்னபூரணி அம்மாள் ஆரம்பத்தில் ஸ்கூனர்(Schooner
) வகையினதாகவே சுந்தரமேத்திரி யாரால் கட்டப்பட்டுள்ளது. ஸ்கூனர்வகை கப்பல்களின் பாய்கள்யாவும் எப்பொழுதும் கோணவடிவுடன் காணப்படும். இது 1937தை மாதமளவில் அமெரி க்காவின் பிரபல கடலோடியான திரு. William Albert Robinson என்பவரால் கொள்வனவு செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்பட்டது. Robinson னினால் கொள்வனவு செய்யப்பட்ட பின் அன்னபூரணிஅம்மாள் அவரது காதல்மனைவியின் Florence C Robinson எனும் பெயருடன் 27.02.1937இல் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவை நோக்கிய தனது சாதனைப்பயணத்தை ஆரம்பித்தது. அச்சாதனைப்பயணம் பின்வருமாறு அமைந்திருந்தது.
27.02.1937 வல்வெட்டித்துறையில் கொழும்புநோக்கி புறப்படுதல் 7நாட்கள் கடந்து
04.03.1937 கொழும்பிலிருந்து பயணம் ஆரம்பம் 23நாட்களின் பின்
27.03.1937 ஏடன்(யேமன்)துறைமுகத்தை அடைதல். இங்குதங்கியகாலம் எட்டுமாதங்கள்.
18.10.1937 ஏடனிலிருந்து புறப்படுதல். 14நாட்களின் பின்
01.11.1937 போர்ட்சூடானை அடைதல். 43நாட்கள் தரித்து நின்றபின்
13.12.1937 போர்ட்சூடானிலிருந்து புறப்படுதல் 13நாள் பயணத்தின் பின்
26.12.1937 சூயெசை அடைதல். 13 நாட்கள் தங்கியபின்பு
09.01.1938 சூயெஸிலிருந்து புறப்படுதல் 1நாள் பயணத்தின்பின்பு
10.01.1938 எகிப்தின் இஸ்மாலியாவை அடைதல். 20நாள் தங்கியபின்
30.01.1938 இஸ்மாலியாவில் இருந்து புறப்படுதல். அதேநாளில்
30.01.1938 போர்ட்செயிட்டை அடைதல். 20நாள் தங்கியபின்
20.02.1938 போர்ட்செயிட்டிலிருந்து புறப்படுதல். 1மாதப்பயணம் இவ்விடக்காலத்தில் மத்தியதரைக் கடலில் புயலில் அகப்படுதல்.
21.03.1938 கிறீற்தீவின் கன்டியாதுறைமுகம் சென்றடைதல். 39நாட்களின்பின்
29.04.1938 கன்டியாவிலிருந்து புறப்பாடு 39 நாட்களின்பின்
02.06.1938 ஜிப்ரேர்ரர் சென்றடைதல். 8நாட்களின்பின்பு
09.06.1938 ஜிப்ரேர்ரரிலிருந்து புறப்படுதல். 42 நாட்களின் பின்பு
21.07.1938 போர்முடாவின் ஹமில்ரன்துறைமுகத்தை சென்றடைதல். 3நாட்களின்பின்
24.07.1938 ஹமில்ரனிலிருந்து புறப்படுதல். 7நாட்களின் பின்பு
01.08.1938 அமெரிக்காவின் மசேசூசெட்மாநிலத்தின் குளேசெஸ்டர் துறைமுகத்தை வந்தடைதல்.
அன்னபூரணிஅம்மாளின் புதியபெயரான Florence C Robinson என்பதில் குறிப்பிடப்படும் c என்பது Crane எனும் பெயரின் முன்னடையாகும். அமெரிக் காவின் முன்ணணிச்செல்வந்தராக அக்காலத்தில் திகழ்ந்தவர் Richard Teller Crane Jr ஆவார். இவர் தனதுதந்தையரான Richard Teller Crane இனால் சிக்காக்கோவில் 1855 ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்துஇயங்கும் “Crane Manufacturer Of Plumbing Fixtures” எனும் பெரும்நிறுவனத்தின் பரம்பரைவழிவந்த உரிமையாளர் இவராவார். இவருக்கும் இவரது மனைவியான Florence Crane இற்கும் ஒரேமகளாக அவதரித்தவரே Higgenbotham Crane ஆவார். எனினும் Higgenbotham Crane
இவரதுதாயான Florence Crane பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்பட்டுவந்தார். 25 Feb 1909 அமெரிக்காவின் சிக்காக்கோநகரில் பிறந்த இவரை எமதுகடலின் கதாநாயகனான William Albert Robinson மணந்தபின்Florence Crane Robinson என இவர் அழைக்கப்படலானார். 1931ஆம் ஆண்டின் இறுதியில் தனதுசகோதரன் Cornelius Grane ஏற்பாடுசெய்த விருந்தொன்றிற்காக தமது மாளிகைக்கு வருகைவந்த William Albert Robinson ஐ முதன்முதலாக சந்தித்ததுமுதல் Florence Grane
அவர்மீதுகாதல் கொண்டிருந்தார். இதன்தொடராக 1933 Feb 18 ல் இவர்களுடைய திருமணம் நடை பெற்றது. 1937 ஒக்டோபர் 18 முதல் 20பெப்ரவரி 1938 வரை ஏடன் முதல் PortSaidவரை சுயஸ் கால்வாயை கடக்கும்வரை அன்னபூரணிஅம்மாளில் இவரும் பயணம்செய்தார். இக்காலங்களில் வல்வெட்டித் துறை மாலுமிகளுக்கு இவர் ஆங்கிலம் கற்பித் தமை குறிப்பி டத்தக்கது. 1939 இல் இவர்களுடைய ஏகபுதல்வனான கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Chrictoper ColumbuChristoper Columbus) பிறந்திருந்தார்.
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காநோக்கி புறப்பட்ட அன்னபூரணிஅம்மாளின் இச் சாதனைப் பயணத்தில் எம்மவரான தண்டையல் கனகரத் தினம் தம்பிப்பிள்ளை தலைமையில் ஆரம்பத்தில் எட்டுக்கடலோடிகள் இணைந்திருந்தனர். எனினும் வெவவேறு காரணங்களிற்காக இடையில் சிலர் விலகிக்கொள்ள அமெரிக்காவரையான பயணத் தில் ஐந்து கடலோடிகள் முழுமையாக பங்கேற்றி ருந்தனர்.
இவர்களின் முழுமையான பெயர்கள் பின்வருமாறு
கனகஇரத்தினம் தம்பிப்பிள்ளை வயது 48 தண்டையல்
தாமோதரம்பிள்ளை சபாரத்தினம் வயது 28 முதல்நிலை அதிகாரி
ஐயாத்துரை இரட்ணசாமி வயது 24 இரண்டாம்நிலை அதிகாரி
சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை வயது 28
சிப்பந்தி
பூரணவேற்பிள்ளை சுப்பிரமணியம் வயது 29 சமையல்வேலை
ஐயாத்துரை தில்லையம்பலம் (ஜிப்றேர்ரர்வரை சென்றவர்)
சேதுநாராயணபிள்ளை நவரத்தினராசா வயது22 (ஏடன்வரை சென்றவர்)
நடராசா(இப்பெயருக்குரியவர் யாரென்று அடை யாளம் காணப்படவில்லை)
சாண்டோ சங்கரதாஸ் (ஏடன்வரை சென்றவர்)
மேற்படி கப்பல்மாலுமிகளான இவர்களைப்பற்றி அன்னபூரணிஅம்மாள் அத்திலாந்திச் சமுத்திரத் தை கடந்து அமெரிக்காவை அடைந்தகாலத்தில் வழிகாட்டியாக செயற்பட்ட Captan Ducan a Maccuish
கூறிய கருத்துக்கள் 02.08.1938 Gloucester Time எனும் பத்திரிகையிலிருந்து பின்வருமாறு
‘இந்துக்களான இவர்கள் முதல்தரமான மாலுமி கள். காலணி எதுவும் அணியாத பாதங்களுடன் செயற்படும் திறன்மிக்கவர்கள். உயர்ந்த பாய்மரங் களில் பயமின்றி பக்குவமாக ஏறிப்பாய்களை கட்டு ப் படுத்துவதில் வல்லவர்கள். தமிழ் பேசுபவர்கள். பாதாதி கேசம்வரை இரும்பைஒத்த உடலமைப்பு கொண்டவர்கள். தலையில் தலைப்பாகை அணிந் து தம்தண்டையலுக்கு நம்பிக்கையும் பணிவும் உள்ளவர்களாக செயற்பட்டனர். அவரை ‘பிள்ளை’ என மதிப்புடன் அழைத்தனர். சிவன் தங்கள் அரு கில் இருந்து தம் மை அணைத்துக்காப்பார் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். வெள்ளிக்கிழமை தேறும் விளக்கேற்றி தம்மததோத்திரங்களை பாடி வழிபடும் வழக்கம் உடையவர்கள். இத்தகை யவர் களின் பயணம் இடையில் தோன்றிய கடும் பனிப் புகை மூட்டத்தினால் தடுமாறியது. மேற்கொண்டு தக்கபாதை எதுவெனக் கண்டு கப்பலை நகர்த்த முடியாது என்பதையும் நகர்த்தினால் எங்கேனும் மோதும் அபாயம் உண்டெனவும் உணர்ந்தனர். இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். தென் னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்பவர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழ். அகன்றநாசி சுருண்ட மயிர் கறுப்புநிறம் அளவானஉயரம் உடையவர்கள். கப்பல்கட்டுவதிலும் கடலோடு வதிலும் இவர்கள் தலைசிறந்தவர்கள். அவர்கள் யாபேரும் பிரிட்டிஸ்குடிமக்களாக இருந்தமையால் றொபின்சனின் பொறுப்பில் அமெரிக்காவிற்குள் வருவதற்கு இவர்களுக்கு தடைகளேதும் இருக்கவில்லை.’
மேற்படி குறிப்பி;ட எம்மாலுமிகளை அமெரிக்கா விற்கு அழைத்துச்சென்றவர் William Albert Robinson
ஆவார். 1939 March இல் இலங்கையில் இருந்த American Consuler எழுதியகடிதத்தில் குறிப்பிட்ட மாலுமிகளைப்பற்றி பின்வரு மாறு கூறியுள்ளார்.
‘ஒரேநேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆறு ஆட்களை என்னுடன் வைத்திருந்தேன். முழுப் பயணத்தின் போதும் இவர்கள்தான் நான் வைத்தி ருந்த ஓரேகப்பல் சிப்பந்திகள். அதில் ஒருவர் சமை யல் வேலை பார்த்தார். மற்றவர்கள் திறமையான கடலோடிகள். அதை விட சிறப்பென்னவென்றால் எனக்கும் எனதுமனைவிக்கும் தேவையான எல்லா வசதிக ளையும் செய்து கப்பல் ஓட்டுதல்பற்றி அதிகளவு கற்றறிந்ததோடு ஆங்கிலமும் கற்றார் கள். பயணத்தின் இறுதியில் இருவரைத்தவிர மற்றவர்கள் ஆங்கிலம் சரளமாகப் பேசினார்கள்.
பயணத்திற்கு தேவையான பாய்மரவேலை தச்சுவேலை வர்ணம்பூசுதல் கப்பலை செலுத்துதல் ஆகியவேலைகளில் எனக்கு நன்குஉதவினார்கள். இலங்கையிலிருந்து இத்தகைய கப்பல்சிப்பந்தி களை அழைத்துசெல்லும் எனக்கு பைத்தியமென்று சிலர் கூறியதும் எனக்கு ஞாபகம் உள்ளது. நான் அதைப்பற்றி கவலைப்பட்டது கிடையாது. அவர்கள் எல்லோரும் சிறந்த குணமுடையவர்கள். என்னு டைய மனைவியும் அவர்களைப்பற்றி இதே உணர் வுடனே இருக்கின்றார்.’
மேற்கூறிய William Albert Robinson தான்எழுதிய நூல்களின் பலஇடங்களிலும் நமது மாலுமிக ளைப்பற்றியும் அன்னபூரணி அம்மாளைப் பற்றியும் நிறையவே குறிப்பிட்டுள்ளார். எனினும் மேற்படி அவரது இக்கூற்றுக்கள் 26 march 1939 திகதியிட்ட Times Of Ceylon பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
1938 ஓகஸ்டில் அமெரிக்கா சென்றடைந்த எம்மவர் கள் அங்கிருந்த புகழ்பெற்ற New York இன் Skygraf
தொடர்ந்தநாட்களில் Robin son னின்மனைவியான Florence Grane உடைய குடும்பச்சொத்தான Grane Beach உடன்கூடிய Grane Estate இல் அமைந்திருந்த Great House இற்கு அழைத்துச் செல்லப்பட்டு எமது வல்வெட்டித்துறை மாலுமிகள் விருந்துபசாரத்து டன் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டு நன்கு கௌரவிக்கப்பட்டனர். மேற்கூறிய Grane Estateஆனது 2100 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந் துள்ளது. இன்றும் பயணிகளை கவர்ந்திழுக்கும் அப்பிரதேசம் 59 அறைகளைக் கொண்ட அமெரிக் காவின் இரண்டாவது பிரமாண்டமான மாளிகை யாகும். இதனால் இன்றும்இது The Great GraneHouse எனவே அழைக்கப்படுகின்றது. அம்மாளிகையின் வடகிழக்கு வாசல் அத்திலாந்தி பெருங்கடலினை நோக்கியதாக அமைக்கப் பட்டுள்ளமை அதன் சிறப் பம்சமாகும். இதன் கிழக்காக Ipswich துறை முகம் அமைந்துள்ளது.
அமெரிக்கா செல்வதற்காக Schooner கப்பலாக இருந்த அன்னபூரணிஅம்மாள் Brigantine ரக கப்ப லாக மாற்றப்பட்டுள்ளமை பற்றி முன்பே குறிப்பிட் டுள்ளோம். இதுபற்றியகுறிப்பு அன்னபூரணி அம் மாள் அமெரிக்கா சென்றபோது 1938 ஆகஸ்ட் 02ந் திகதி வெளியாகிய அமெரிக்காவின் Boston Globe பத்திரிகையில் A.Barrows எழுதிய Voyage Ended By Brigantine……..என்ற கட்டுரையில் காணப் படுகின் றது.அத்துடன் Six Ceylonese From The Seafaring Town Of valvettithurai in NorthCeylon என எம் தாயான வல் வெட்டித்துறையை மட்டுமல்லாது இலங்கைத் தீவையும் அமெரிக்காவிற்கு எழுபத்தி யெட்டு வருடங் களிற்குமுன் முதன்முதல் அறிமுகப் படுத்திய பெருமையும் Brigantine Florence C Robinson எனும் பெயருடனான அன்னபூரணி அம்மாளையே சாரும்.
இந்நிலையில் ஈழத்தமிழரின் அமெரிக்கக் கண்டம் வரையான புலப்பெயர்வும் புதிய தொழில்நுட்ப மாக உலகினை எங்கும் ஆக்கிரமித்திருக்கும் கணணியின் கூகிள்வழி தேடு தல் செயற்பாடும் அன்னபூரணி அம்மாளைப்பற்றி இதுவரைநாம் அறியாத மேலும் பலதகவல்களைத்தந்து மேன் மேலும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றன. வல் வெட்டித்துறை சமூகத்திற்கான சாதனையாக மட்டுமே ஒருசிலரால் இதுவரை பார்கப்பட்டுவந்த அன்னபூரணி அம்மாளின் கடற்பயணம் ஈழத்தமிழ ருக்கு மட்டுமல்லாது முழுஇலங்கைக்குமான பெருமை யென்பதை தொடர்ந்து கிடைத்துவரும் ஆதாரங்களும் அதுபற்றிய செய்திகளும் இன்று உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத் தில் 15.08.2016 அமெரிக்க ஸ்ரீலங்காப் படையினர் இணைந்துநடத்திய ‘ஒப்ரேசன் பசுபிக்ஏஞ்சல்’ நிகழ்வின் ஒருகட்டமாக இடைக்காடு மகாவித்தி யாலயத்தில் அமெரிக்கதூதுவரான அதுல்ஹேசப் ஆரம்ப உரை யாற்றியிருந்தார். அவரதுஉரையில் 1813இல் அமெரிக்கமிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம்உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்கப்பலில் அமெரி க் காவின் குளோஸ்ரர் துறைமுகம்வந்த வல்வெட்டி த்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதை பின்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் கடல் வழிப்பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப் பிடத்தவறவில்லை. 1938 ஓகஸ்டில் அமெரிக்கபத்திரிகைகள் குறிப்பிட்டதனையே எழுபத் தெட்டுவருடம் கடந்து 2016 ஓகஸ்டில் அமெரக்கதூதுவரான அதுல்ஹோசப் இவ்வாறு மீளவும் நினைவூட்டியுள்ளார்.
Brigantine Florence C Robinson
குறிப்பிட்ட Brigantine வகை கப்பல்கள் மற்றும் தோணிகள் என்பன இரண்டு பாய்மரங்களுடனும் ஆகக்கூடியவாறு பதினாறுபாய்களுடனும் பயணிப் பவையாகும். குறிப்பாக முன்னிருக்கும் பாய்மர மான தன்மரம் அல்லது திலிங்கத்து மரத்தின் (Foremast) பாய்கள் செவ்வக வடிவினதாகவும் அத ற்கு முன்னிருக்கும் அணியத்து பறுவான் மற்றும் பின்னிருக்கும் இரண்டாவது பாய்மரமான கலிமரம்(MainMast) உட்பட கப்பலில் கட்டப் படும் ஏனைய அனைத்துப்பாய்களும் கோணவடிவுடையதாகவும் காணப்படும். பிறிக்கைன் ரைன் வகைக்கப்பல்கள் நீரைக் கிழித்து வேகமாக செல்லக்கூடியவை. இதனால் இவை பெரிதும் போர்க்கப்பல்களாகவும் திமிங்கில வேட்டைக்கும் பயன்பட்டன.
அன்னபூரணிஅம்மாளின் அதிகூடியவேகம் பதினெட்டு கடல்மைல்களாகும். இது செங்கடலில் எட்டப்பட்டது என A.Barrows எழுதிய Voyage Ended By Brigan tine…….. என்ற கட்டுரை கூறுகின்றது. இது சாதாரணபாய்க்கப்பல்களின் வேகத்தைவிட இரு மடங்கு அதிகமாகும். வல்வெட்டித்துறையில் கட்டப் பட்டகப்பல்கள் மற்றும் பின்னர் கட்டப்பட்ட வள் ளங்கள் ஆரம்பகாலங்களில் முழக்கணக்கிலும் பின்னர் அடிக்கணக்கிலும் கட்டப்பட்டவையாகும். எனினும் இவை கப்பல்சாத்திரத்தில் உள்ளவாறு முடிவுறா எண் களுடன் அரைஅங்குலம் அல்லது முக்கால் அங்குலம் அதிகமாக இருக்குமாறு
‘நீளத்தின் காற்பங்கு அகலம்
அகலத்தின் அரைப்பங்கு உயரம்’
என்னும் அளவுத்திட்டத்தில் கட்டப்பட்டவையாகும். இன்று எமக்கு கிடைத்திருக்கும் அன்னபூரணி அம்மாள் Aboard a Ninety-Foot Teak wood Trading Vessel Named the Annapooranyamal என கப்பலை அமெரி க்கா கொண்டு சென்றவரான William Albert Robinson தனது To The Great Southern sea எனும் நூலின் முன் னுரையில் குறிப்பிட்டுள்ளார். எனினும் அன்ன பூரணியின் தாஹிற்றி பயணம்பற்றி எழுதப்பட்ட Tahiti Bound நூலின் 3ம்பக்கத்தில் She was89’ on Deck with a33’ Jibboom. Giving Her Overall Length 122’. She had a 19’ Beam and drew only8’ எனும் குறிப்பு காணப்படு கின்றது. அத்துடன் Tahiti பயணத்தில் Captin ஆக பணியாற்றிய Sterling Hayden எழுதிய Wandere நூலி ன் 228ம்பக்க குறிப்பொன்று The Little Ship – She is only 89 feet long was built in Ceylon என காணப்படுகின் றது. இவைகளின்மூலம் அன்னபூரணியின் நீளம் 89 – 90 அடிகளிற்கு இடைப் பட்டதாகவும் அகலம் 19 அடியாகவும் இருந்துள்ளது புலனாகின்றது. இது மேற் குறிப்பிட்ட ‘நீளத்தின் காற்பங்கு அகலம்’ என்ற சாதாரண அளவுத் திட்டத்தைவிட சற்றேரக் குறைய 3அடிகள் அகலம் குறைவானதாகும். இதன் மூலம் அன்னபூரணிஅம்மாள் கட்டப்படும்போதே வேகமாக செல்லக்கூடியவாறு
‘அகலம் கூட வேகம் குறையும்
அகலம் குறைய வேகம் கூடும்’
என்பதற்கிணங்க ‘தீர்கா’ வகை கப்பலாகவே சுந்தர மேத்திரியாரால் கட்டப்பட்டுள்ளது தெரியவரு கின் றது. இதன்காரணமாகவே அமெரிக்கா சென்றடை ந்த அன்னபூரணி அம்மாளில் இறுதியாக கடமை யாற்றிய Captan Ducan a Maccuish அவர்கள் 02 Aug ust 1938 இல்வெளிவந்த அமெரிக்காவின் Gloucester Time பத்திரிகையூடாக அன்றைய அமெரிக்காவின் படகுப்போட்டி சாம்பியனும் Capton Benpine இனால் செலுத்தப்படும் கனடா வைச்சேர்ந்த Blue Nose எனும் படகுடன் Florence C Robinson என்ற அன்ன பூரணி அம்மாள் போட்டியிடத்தயாராக இருப்பதாக சவால்விட்டுள்ளமை தெரியவருகின்றது.
இக்கட்டுரையாக்கத்திற்கான மூலங்கள்.
To The Great Southern sea by Albert William Robinson
Return to the sea by Albert William Robinson
Tahiti Bound by Donald J. Langley and Holly Blake
Wanderer by Sterling Hayden
The Boston Globe Time 02.08.1938
Gloucester Time 02.08.1938
Times Of Ceylon 26.03.1939
Ceylon Today 20.08.2016
கப்பல் சாத்திரம்
நாவாய் சாத்திரம்
வரலாற்றில் வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை ஊரின்னிசை
மற்றும்பல இணையத்தள பத்திரிகைகள் கட்டுரைகள் மற்றும் நூல்கள்.
விரைவில் வெளிவரஇருக்கும் ‘அமெரிக்க கடற்படையில் அன்னபூரணிஅம்மாள்’ எனும் நூலின் சுருக்கமே இக்கட்டுரையாகும்.
-பொன்.சிவா(சிவகுமாரன்)
10.03.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக