சனி, 29 ஏப்ரல், 2017

மாமுனி மாயன் கணபதி ஸ்தபதி ஆய்வு மெக்சிகோ ஆசாரி கம்மாளர்

aathi tamil aathi1956@gmail.com

15/7/15
பெறுநர்: எனக்கு

மனிதனால் முழுமையாக அறியபடாத அறிவியல்.....



இன்று இன்னும் மனிதனால் முழுமையாக அறியபடாத மிகவும் குழப்பமான ஒரு அறிவியல் பகுதி "TIME AND SPACE RELATIVITY "
சில ஆண்டுகளுக்கு முன்னால் தான் நாம் அணு (ATOM )என்கின்ற ஒரு விஷயத்தை அறிந்தோம் . அனால் இவற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முதாதையர் மாமுனி மயன் தன ஐந்திறத்தில் அழகாக எடுத்துரைத்துள்ளார் .மேலும் மாயனை பற்றி டாக்டர் கணபதி ஸ்தபதியார் என்ன கூறுகிறார் என காண்போம் .
மயன் இயற்றிய ஐந்திரம் என்ற இலக்கண நூலில் மொழி இலக்கணம் மட்டுமல்லாமல் ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, இசைக்கலை மற்றும் நாட்டியக்கலை ஆகிய கலைகளின் இலக்கணங்களும், அவற்றைச் சார்ந்த அறிவியல் நுட்பங்களும் பெருமளவில் வருகின்றன. எனவேதான் தொல்காப்பியர் அவற்றை முழுமையாக எடுத்தாளாமல் மொழியிலக்கணத்தை மட்டும் பிரித்தெடுத்துத் தன்னுடைய மொழி இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இணைத்துக் கொண்டார்.
மேலும் ஐந்திரத்தில் காலம், இடம் (Time and Space) என்ற விஞ்ஞான நுட்பங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மற்றும் ஒளி, ஒலி நுட்பங்களுடன் அணுவியல் (Atom) நுட்பங்கள் பற்றிய விஞ்ஞானக் கருத்துக்களும் அதில் இடம் பெற்றுள்ளன. அணுவின் தத்துவத்தை மயன் நன்கு அறிந்திருந்தான். அணுத்திரள் ஒலியே எழுத்தொலி சிறப்பாம் என்பது மயன் திருவாக்கு. மயன் தமது ஐந்திரத்தை அணுக்கலைநூல் என்று ஓர் இடத்தில் குறிப்பிடுகிறான். அணுவின் ரகசியத்தை நன்கு அறிந்த மயன் ஓர் இலக்கிய அறிஞர் மட்டுமல்ல, சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை வல்லுநர். அது மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி என்று கூறுகிறார் டாக்டர் கணபதி ஸ்தபதியார். அணுவின் அசைவிலிருந்து பிறந்ததுதான் நடராஜரின் திருஉருவம். அந்த நடராஜரின் தத்துவத்தை விளக்கும் நூல்தான் மயன் எழுதிய பெருநடச்செந்நூல். இன்று உலகம் முழுவதும் காணப்படும் சிற்ப, ஓவிய, கட்டடக் கலை மரபுகளுக்கு மயன் மரபே மூலம் என்பது டாக்டர் ஸ்தபதியார் கருத்து. இதற்குரிய தடயங்கள் பலவற்றை அவர் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். வாஸ்து மரபின் தந்தை மயன் என்றும், அவன் தென்னாட்டிலே குறிப்பாக மகேந்திரகிரியில் வாழ்ந்தவன் என்றும், அவனது கலாச்சாரம் பல்வேறு பெயர்களில் பல்வேறு நாடுகளில் வாழ்கிறது என்றும்; இந்திய நாட்டு மயனும் அமெரிக்க நாட்டு மாயனும் ஒருவரே என்றும் டாக்டர் ஸ்தபதியார் பல்வேறு ஆதாரங்களோடு கூறியுள்ளார். இதற்காக அமெரிக்க நாட்டினர் அழைப்பின் பேரில் டாக்டர் ஸ்தபதி அவர்கள் மெக்சிகோ சென்று களஆய்வு செய்து அப்பகுதியில் காணப்படும் மிகப்பழமையான மாயன் நாகரிகத்தில் நமது மயனின் கைவண்ணங்களைக் கண்டுபிடித்து, வியப்பூட்டும் பல தகவல்களை நமக்குத் தருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக