சனி, 29 ஏப்ரல், 2017

900 இது தொண்ணூறே தொள்ளாயிரம் இல்லை தொன்பது தொண்பது எண்ணியல் இலக்கம் கணிதம் கணக்கு அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

22/4/15
பெறுநர்: எனக்கு
பண்டைய தமிழ் எண் 9 = தொண்டு
பண்டைய தமிழ் எண்ணியலில் ஒன்பது என்ற சொல்லே
கிடையாது. பரிபாடலிலும் வேறு சில சங்க
இலக்கியங்களிலும் எட்டிற்கு அடுத்து பயன்படுத்த
பெற்றுள்ள சொல் "தொண்டு" என்பதாகும். தொண்டு
என்றால் துளை. அதாவது ஓட்டை. நம் உடல் ஒன்பது
ஓட்டைகளை கொண்டது.
9 - தொண்டு
90 - தொண்பது
900 - தொண்ணூறு
9000 - தொள்ளாயிரம்
என்னும் எண்களைக் குறிக்கும்
தொண்டு(ஒன்பது)
தொள் - தொண்டு = தொளை.
தொண்டு - தொண்டி = தொளை.
மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப்
பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற
அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி
ஒன்பதாகியது.
ஒன்றெனஇரண்டென மூன்றென நான்கென
ஐந்தெனஆறென ஏழென எட்டெனத "தொண்டென"
----------------------------------------- பரிபாடல்
3 , வரி 75 -79"தொண்டு"
தமிழில் பத்து பத்தாக எண்ணும் போது எண்பதுக்கு
அடுத்து ஒன்பது என்று வராமல் ஏன் தொண்ணூறு என்று
வருகிறது? நூறு நூறாக எண்ணும் போது
எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல்
தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறது? ஒன்று ஒன்றாக
எண்ணும் போது எட்டுக்கு அடுத்து வர வேண்டிய
உண்மையான எண் எது?
முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, எட்டு
என்ற எண்ணிற்கு பின்புள்ள எண்ணை மாற்றியதால்
எண்பதுக்குப் பின் தொண்ணூறும், எண்ணூறுக்குப் பின்
தொள்ளாயிரமும், எட்டாயிரத்துக்குப் பின்
ஒன்பதாயிரமும் மாறிவிட்டன.
ஒரு சிறு குழந்தைக்கு எண்களைச் சொல்லிக்கொடுக்க
ும்போது அந்த குழந்தை ஐயத்தோடு கேட்கும்.
எண்பதுக்கு பிறகு ஒன்பது தானே?
நாம் உடனே அதெல்லாம் தவறு எண்பதுக்கு பிறகு
தொண்ணூறு தான் என்று சொல்லிக்கொடுப்போம்.
தமிழ்த்தேசிய இனம் பல அந்நியர்களின்
படையெடுப்பிற்கும்
ஆக்கிரமிப்பிற்கும் ஆளாக்கப்பட்டு மொழி,
கலை,
கலாச்சாரம்,
பண்பாடு,
பாரம்பரியம்,
பொருளியல்,
வரலாறு என்று அத்தனையும் பாழாக்கப்பட்டு
சீரழிக்கப்பட்டது என்பது தான் உண்மை.
எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப…
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்றார்
வள்ளுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக