சனி, 29 ஏப்ரல், 2017

கன்னடர் மீது போர் பாரதிதாசன்

aathi tamil aathi1956@gmail.com

21/4/15
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள்
21.4.1964
கன்னடர் பணிவு காட்டும் வரை மூளட்டும்
அறப்போர்!
கன்னட இனவெறியர்கள் தமிழர்களின்
காவிரிநீர் உரிமையை தடுத்திட பல்வேறு
தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இந்த
கன்னட இனவெறி இன்றைக்கு முளைத்ததல்ல. இது
பாரதி தாசன் காலத்திலே வேர் விட்டுள்ளது.
1962ஆம் ஆண்டு ஏப்ரல் 28இல் பெங்களூரில்
இசை மேதை எம்.எஸ். சுப்புலெட்சுமி
இசைக்கச்சேரி நடைபெற்றது. அப்போது
எம்.எஸ்.சுப்புலெட்சுமி தமிழில் பாடக்
கூடாது என்று கன்னட இன வெறியர்கள்
கறுப்புக்கொடி காட்டியதோடு கூட்டத்தை
நடத்த விடாது கூச்சலிட்டனர். அப்போது
இதைக் கண்டு பாரதிதாசன் கொதித்தெழுந்து
கண்டன வடிவில் பாடல் எழுதினார்:
"கன்னடர் தம் மூர்க் கவின் விழாவுக்கே
இன்னிசை பாட எம்.எஸ்.சுப்பு
இலக்குமி தன்னை இட்டுக் கொண்டு
போயினர்.
கச்சேரி தொடங்கும் போது
நாயினம் நடுவில் குலைப்பது போலக்
கன்னடர் ஒருபால் கூடி "என்னமாய்த்
தமிழ்மகள் இங்கு தலை காட்டினாள்" என்று
கூச்சலிட்டனர் ஆச்சா போச்சா
என்றார்- தமிழை எதிர்த்தனர். தமிழரை இழிவு
செய்து பேசினர். பழிபல கூறினர்,
தம்முயர்வு கூறித் துடித்தனர்.
உலகு புகழ் வாய்ப்பாட்டுத் தலைவி மேல்
வெறுப்புக் காட்டினர். கறுப்புக்
கொடியும்
காட்டினர். தங்கள் கீழ்மை காட்டினர்....
இன்றைய ஆட்சியாளர் இதனை வெட்ட
நினைப்பதில் வியப்பே இல்லை
கன்னடர் இன்று காட்டிய கையிருப்பு
ஆட்சியாளரின் தூண்டலின் விளைவே
நாமிதை விட்டு வைத்தால் நல்லதா?
கன்னடர் பணிவு காட்டும் வரைக்கும்
மூளட்டும் அறப்போர்!
தமிழே ஆளட்டும் நாவலந் தீவனைத்தையுமே!"
-பாரதிதாசன்.
 https://m.facebook.com/photo.php?fbid=763796180401931&id=100003146695085&set=a.120522324729323.22331.100003146695085&refid=28&_ft_=qid.6140206609594692381%3Amf_story_key.-1892996685594394028&__tn__=E&fbt_id=763796180401931&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_7d1a5856a43d464842ab18f49ca6abd5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக