சனி, 29 ஏப்ரல், 2017

மறைமலை 1931லேயே அர்ச்சகர் தலித் பெண்ணுரிமை தமிழறிஞர்

aathi tamil aathi1956@gmail.com

19/7/15
பெறுநர்: எனக்கு
மறைமலையடிகள் பிறந்த நாள்
15.7.1876
முற்போக்கான பத்து தீர்மானங்கள்
1931ஆம் ஆண்டு மறைமலையடிகள் அவர்கள் உருவாக்கிய "பொதுநிலைக் கழகம்"
முற்போக்கான பத்து தீர்மானங்களை நிறைவேற்றியது. அத் தீர்மானங்கள்
ஒவ்வொன்றும் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றிய முடை நாற்றமெடுக்கும் தீய பழக்க
வழக்கங்களுக்கு சாவு மணி அடித்தது. அத் தீர்மானங்கள் பின் வருமாறு:
1. மடத்துத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயச்
சடங்குகள் கற்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.
2. கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியவை பெறவும் நிற்கவும்
கோயில் தலைவர்கள் இடம் செய்தல் வேண்டும்.
3. பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதவர்) எல்லோரையும் தூய்மையாகத்
திருக்கோயில்களிற் சென்று வழிபாடாற்றப் பொது மக்களும் கோயில் தலைவர்களும்
இடம் தரல் வேண்டும்.
4. கோயில்களில் பொது மாதர் திருப்பணி செய்தல் கூடாது.
5. வேண்டப்படாதனவும் பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு
முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தம் அற்றனவும் ஆகிய திருவிழாக்களையும்
சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும்
வேண்டப்படுவதுவுமான சடங்கும் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல்
வேண்டும்.
6. சாரதா சட்டத்தை உடனே செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.
7. கைம்பெண்ணைத் தாலியறுத்தல், மொட்டையடித்தல், வெண்புடவையுடுத்தல்,
பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத்தக்க
இச்செயல்களை நீக்குதல் வேண்டும். கைம்பெண் மணம் முற்காலத்தில்
இருந்திருப்பதாலும் நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயல்
முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
8. சாதிக் கலப்பு மணம் வரவேற்கத்தக்கது.
9. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.
10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக