சனி, 29 ஏப்ரல், 2017

தாலி திருமணம் இலக்கியம் சங்ககால

aathi tamil aathi1956@gmail.com

18/7/15
பெறுநர்: எனக்கு
# தாலி தமிழர் பண்பாடே##
தாலியறுப்பும் அதற்கு அஞ்சி தாலி திரிபும் செய்பவர்கள் கவனிக்கவும்,
அகவாழ்க்கையை நெறிப்படுத்தாதோரும் அகவாழ்க்கையை அறியாதோர் பலரும் இன்று
தாலி திரிபையும்,தாலியறுப்பையும் செய்துவருகின்றனர்,
தாலி தமிழர் பண்பாடு தான் என்று பெருந்தச்சன் தென்னன் மெய்மன் ஐயா
அவர்கள் சில சான்றுகளை முன்வைத்துள்ளார்,
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் சிறு குழந்தையாக இருக்கும்போதே,
போருக்குத் தலையேற்றுச் செல்ல நேர்கிறது கழுத்தில் தாலி அணிந்திருப்பது
புறநாணூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது,
அடிக்கடி கழற்றாமல் ஆணோ பெண்ணோ அணியும் எந்த அணிகலனுக்கும் தாலி என்பது
பொதுப்பெயர்,
தார் பூண்டு தாலி களைந்தன்றும் இலனே
பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே
(புறம்-77:6-7,செம்மொழி-ம.வே.பசு-பக்கம்-849)
அந்த குழந்தை அரசனாக வளர்ந்து திருமணம் ஆகியபின் மனைவியைப் பிரிந்து,
போருக்குச் சென்று நெடு நாட்கள் பாசறையில் இருக்கின்றான்,
குழந்தையில்லாத அவன் மனைவி தன் காது,கழுத்து,கைகளில் இருந்த அனைத்து
அணிகளன்களையும் களைந்து விட்டு,
மூன்று அடையாளங்களை மட்டும் விட்டு வைத்திருக்கிறாள் அவற்றுள் ஒன்று
தாலியாகிய ஆரம்,
மற்றொன்று இடது மணிக்கட்டில் கட்டப்பட்ட "கடிகை நூல்"என்னும் காப்புக்
கயிறு மூன்றாவது சங்கு வளையல்கள்,
ஆரம் தாங்கிய அவர் முலை யாகத்துப்
பின் அமை நெடுவீழ் தாழத்துணை துறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி
நெடுநீர் வார் குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையோடு கடிகைநூல் யாத்து
(நெடுநல்வாடை 136-142,செ.மொழி
-ம.வே.சு-பக்-157)
மணமான இளம்பெண் 'வாழ்வரசி'என்று அழைக்கப்படுகிறாள்,அது ஒரு வழக்குச் சொல்,
'வாவரசி'என்பது அதன் பயன்பாட்டு வடிவம் தமிழர் மரபில் வாவரசியின்
அடையாளம் 'தாலி'என்பதற்கு ஆராய்ச்சி தேவையில்லை எவரது சான்றிதழும்
தேவையில்லை.
# # பெருந்தச்சன் தென்னன் மெய்மன் ஐயா.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக