சனி, 29 ஏப்ரல், 2017

திமுக பற்றி கண்ணதாசன் வனவாசம் அண்ணாதுரை கருணாநிதி

கருணாநிதியுடனான நட்பு
 
கண்ணதாசன் எழுதிகிறார்….
 
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம்.ஜி. சக்கரபாணியின் தொடர்பு அவனுக்கு கிடைத்தது. அவர்தான் கருணாநிதி என்கிற பெயரை முதலில் அவனுக்கு அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின் வசனங்களைப் பற்றி, அவனிடம் அடிக்கடி சொல்லுவார். ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு, அவனும் சக்கரபாணியும் ‘அபிமன்யு’ படம் பார்க்கப் போனார்கள். அந்தப் படத்தின் வசனங்களைக் கருணாநிதி எழுதியதாகச் சக்கரபாணி சொன்னார்.
அந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நாளல்ல… ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல அந்தப் படத்தை அவன் பார்த்தான். “காணாமல் காதல்” என்பார்கள். அந்தக் ‘காதலே’ பிறந்துவிட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது…! “மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று, சக்கரபாணியிடம் சொன்னான்.
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாகக் “கோயம்புத்தூர் லாட்ஜில்” சந்தித்ததும், ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனுக்கு ஏற்பட்டது. அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் துவங்கினார். ‘மாடர்ன் தியேட்டர்ஸில்’ மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.
 
ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறிகொடுத்தது போலிருக்கும். ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்குப் பாசம் வளர்ந்தது. அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால், அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே.
 
பார்த்தீர்களா, இருவரும் எவ்வாறு ஆரம்பத்தில் நட்பாக இருந்துள்ளார்கள் என்று. தவிர கவிஞர் அக்கால கட்டத்தில் அண்ணாவின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். அதனாலேயே கடவுள் பக்தியை விட்டார், சுயமரியாதை கொள்கைகளை ஏற்றார். தொடர்ந்து திராவிட இயக்க தலைவர்கள் இரவு நேர சாகசங்களை படியுங்கள். எச்சரிக்கை, மனதை திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.
 
கருணாநிதி மற்றும் அண்ணாவின் இரவு நேர சாகசங்கள்
 
கவிஞரே! நீங்கள் தொடருங்கள்,
 
அந்நாளில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரபல இயக்கமாக இல்லை.வாடகைக் கார் டிரைவர்களுக்கும், அந்தக் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவர்களைப்  பற்றியோ எதுவும் தெரியாது. அவனும் தலைவனும் ஓர் நாள் இரவு, ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக்கொண்டு பெண் வேட்டையில் ஈடுப்பட்டார்கள்.
ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள், மடமடவென்று வந்து காருக்குள் ஏறிக்கொண்டார்கள். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்?  அத்தனையையும் ஏற்றிக்கொண்ட வாடகைக் கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.
திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள்.  காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக்கூட பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவைக்குறைவாகவும் போய்விடக்கூடும்.
ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கேட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை.
“மேடையில் என்னென்னவோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”
“நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”
“உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபையெல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”
இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் தலைவர்கள் பலரும், ஒழுக்கமற்றவர்களென்றும் காமுகர்களென்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும்போது அவனுக்குக் கொஞ்சம்கூட கோபம் வருவதில்லை!
 
காரணம் – அதுதான் உண்மை! அரசியலையே அவர்கள் வேடிக்கையாகத்தான் நடத்தினார்கள். கட்சியினுடைய ஆரம்ப காலமான
 
அக்காலத்திலும் ஒரு தலைவர் இன்னொரு தலைவரைக் கேலி செய்வதே வாடிக்கையாக இருந்தது! “நீ இப்படி செய்யலாமா?” என்று ஒருவரைக் கேட்டால், “ஏன் அவர் மட்டும் என்ன யோக்கியராம்?” என்று” பளிச் சென்று பதில் சொல்வார்கள்.
பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்கின்ற தொண்டர்கள் அன்றும் சரி, இன்னும் சரி, அவ்வளவு உத்தம்மானவர்கள். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் பரிதாபமாக இருக்கும். “இந்தத் தலைவர்களை நம்பியா நீங்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறீர்கள்!” என்று கேட்கத் தோன்றும். தவறுகளையே செய்து கொண்டிருக்கும் தலைவர்கள், அந்த உத்தமமான தொண்டர்களை மிரட்டுவார்கள்.
உள்ளூரிலேயே ‘ஐம்பது ரூபாய் கொடுத்தால்தான் கூட்டத்திற்கு வருவேன்’ என்பார்கள். வாடகைக் காருக்குப் பணம் கொடுக்கும்படி மிரட்டுவார்கள். தன் மனைவியின் தாலிச்சரட்டை விற்றுவிட்டு, தலைவரின் வழிச்செலவுக்குப் பணம் கொடுத்த ஒரு தொண்டனை அவன் அறிவான். ஈட்டிக்காரனிடம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி ஒரு கூட்டத்தை நடத்தினான் ஒரு தோழன். அந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்த ஒரு பேச்சாளர் பணத்தையும் வாங்கிக்கொண்டு
வெளியூருக்குப் போய்விட்டார்.
கூட்டத்திற்கு அவர் வராததால் ஏமாந்த அந்தத் தோழன் ‘கோ’வென்று அலறி அழுது கொடிகளையெல்லாம் பிய்த்துக் கீழே போட்டான். ஜனநாயகத்தின் போலித்தனம் அவனுக்குத் தெரியலாயிற்று.
அவனுடைய நண்பர் (வேறு யார் கருணாநிதி தான்) சரியான அரசியல்வாதி! தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பதுபற்றி அற்புதமான வசனங்கள் எழுதுவார். ஆனால் ஒரு பிச்சைக்காரனுக்குக்கூட கையைவிட்டுக் காலணாக் கொடுத்ததில்லை.
தொழிலாளர்களையும், அவர்கள் ரத்தம், நரம்புகளையும் பற்றித் துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார். அவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.
 
தான் முன்னேறுவதுபோல் இன்னொருவனும் முன்னேறி விடாமல் இருக்க சகலவிதமான வழிகளையும் கையாளுவார். ஏன், வயிற்றுப்பாட்டுக்காக விபச்சாரத் தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தைக் கொடுத்துக் காரியமும் முடிந்தபின், சத்தம் போட்டு அந்தப் பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர்.
 
சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து. அந்தச் சந்திலேதான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார். மூத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றும் இருவர் கன்னியர். அவனும் அந்தத் ‘துள்ளுத்தமிழ்த் தோழனும்’ இன்னும் ஒரு தற்கால எம்.எல்.ஏ.யும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தார்கள்.
மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார். அந்தச் சிறிய வீடு, மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இரவு பதினொரு மணி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து பரபரப்பஅன பேச்சுக்குரல் எழுந்தது. நேரம் ஆக ஆக, அது வாக்குவாதமாக வளர்ந்தது. ‘கலாரசிகர்’ வெளியிலே வந்தார். கையிலிருந்த துண்டைத் தலையிலே கட்டிக்கொண்டார். நாட்டு வைத்தியிரைத் தட்டி எழுப்பினார்.
“உன் பெண் சரியாக நடந்துகொள்ளவில்லை. மரியாதையாகப் பணத்தைத் திருப்பிக்கொடு” என்றார். “போலீசைக் கூப்பிடுவேன்” என்று மிரட்டினார். போலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்தக் கலாரசிகர் மறந்தே போனார். இறுதியில் ரூபாய் நூற்றைம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளை விட்டார். பின், ஒரு வாரம்வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே அவர் கொண்டாடினார். அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர, அடுத்து அதே மாதிரிக் காரியத்திற்குத்தான் பயன்பட்டதது.
விடுதலை இயக்கத்தின் பிரமுகர்களைக் கவனியுங்கள். எப்படியோ அப்பாவிப் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையைக் கவனியுங்கள். சமுதாயத்தின் இருண்ட பகுதியை ஒளிமயமாக்கப் புறப்பட்ட அவர்கள், பொழுது இருண்டபிறகுதான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள்.
எந்தெந்தத் துயரங்களிலே இந்தச் சமுதாயம் ஆழ்ந்து கிடக்கிறதென்று அவர்கள் புலம்புவார்களோ, அந்தத் துயரங்கள் பலவற்றிற்கு அவர்களே தான் காரணம் ஆனார்கள்.
அந்த நேரத்தில் அவன் அவர்களைப்பற்றி அதிகம் ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டேதான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள்.
இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே (யாரென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்) அதைத்தான் செய்கிறார் – என்று அந்தச் செய்திகள் கூறின! கலாரசிகரும், இன்றைய எம்.எல்.ஏ. ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை அவனுக்கு விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ. முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான். அது இது:
ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம்  பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிற்அது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.
கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவைழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவஅ ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப்  பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.
போலி சீர்திருத்தவாதிகள்
அந்த அரசியலிலேயே அவன் ஊர்ந்து சென்றாலும் சில விசயங்களில் அவன் எச்சரிக்கையாக இருந்தான். கழகதிற்கென்றே ஒரு தனித்தமிழ் நடை உண்டு. அண்ணாத்துரையின் நடையைப் பின்பற்றி, எல்லோருமே ஒரே மாதிர் ‘துள்ளு தமிழ்’ எழுதுவார்கள். எழுதியவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது. கதை ஒன்றில் தொடங்கி, பிறகு அதைக் கட்டுரையாக விரிக்கும் அலுத்துப்போன முறையை அனைவருமே கையாண்டார்கள்.
அவற்றில் எதையும் அவன் படிப்பதில்லை. காரணம், அந்த நோய் தன்னையும் பற்றிக்கொள்ளக்கூடாது என்பதுதான். தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்தியக் கோபம் வரும். ஒருநாள் அவர், புதிதாக வெளியாகிருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னல் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார்.
ஒரு புத்தகத்தை விரித்தான். நல்ல பண்பாடு உள்ள கதை அது! “வாழ முடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகிருந்தது. கதையென்ன தெரியுமா? விவரமாக சொல்கிறேன்.
மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு. மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள்.  கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபளவென்று வெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனிய்ஆக இருக்குமவள் திருமணத்திற்காகக் காத்துக் கிடக்கிறாள். இரவுகள் வந்துபோகின்றன; திருமணம் வரவில்லை. ஒவ்வொர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர். அவளோ கல்யாணமாகாதவள்; அப்பனோ மனைவியை இழந்தவன். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறார்.
பண்பாடற்றவர்களெனக் கருதப்படும் வெளிநாட்டவர் கூட, வறுமையைச் சித்தரித்துக் கதையெழும்போது, பண்பாட்டோடு எழுதினார்கள்.
ஆனால், மகளைக்  கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் ‘முற்போக்குக்’ கதாசிரியர்.
தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக்கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான். அந்த நூல்களில், பலரிடம் கெட்ட ஒருத்தியை பளபளப்பாக வருணித்திருந்தார் கட்சியின் மூலத் தலைவர்.
சமுதாயத்தில் தாழ்ந்துகிடப்போர், மேலெழ வேண்டும் என்ற நன் நோக்கத்திற்கு, இவை எவ்வகையில் துணை புரியும்? எழுதுகின்றவ்அனின் வெறித்தனத்தை இவையுணர்த்துமேயல்லாது, நாட்டுக்கு என்ன பயன் தரும்? பொது இடத்திலோ, குலமகளிர் மத்தியிலோ வைக்கக் கூடாத அளவுக்குப் பகுத்தறிவு வீரர்கள் புத்தகமெழுதுவானேன்?
பண்பு குன்றாத பங்கிம்சந்திரர், சாகாவரம் பெற்ற சரத்சந்திரர், நாடக அமைப்பில் கதையெழுதிய ரவீந்திரநாத் தாகூர் இவர்களெல்லாம், வங்காளம் போற்றிப் புகழும் இலக்கிய மேதைகள். இவர்களுடைய கதைகளையெல்லாம் படிக்கும்போது பண்பாட்டுக்குப் பெயர்போனது உலகத்திலேயே வங்காளம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. வங்கத்தின் இருண்ட பகுதியை அவர்கள் காட்டவே இல்லை. ஒளி முகுந்த குடும்ப வாழ்க்கையையே உன்னதமாகச் சித்தரித்தார்கள்.
கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஒருவன், தன் குடும்பம் முழுவதும் தன்னிடத்தே பக்தி கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணும் ஒருவன், தான் வங்காளத்தில் பிறந்திருகக்கூடாதா என்று ஆசை கொள்ளும் அளவுக்கு, வங்க இலக்கிய ஆசிரியர்கள் கதைகளைச் சமைக்கின்றனர்.
மாளிகையைப் பார்க்க வந்தவன் மாட்டுக் கொட்டகையை ரசிப்பதுபோல், ஒளி உலகைக் காணவந்த சீர்திருத்தவாதிகள், இருண்ட பகுதிகளையே சுவைத்து எழுதினார்கள். அவற்றை ‘ஆபாசம்’ என்ற கணக்கில் அவன் சேர்க்க வரவில்லை. அவை என்ன பயன் தரும் என்பது தான் அவன் கேள்வி. அன்றிலிருந்தே, கட்சியின் முக்கியஸ்தர்கள் எழுதும் கதை, கட்டுரைகளை அவன் படிப்பதில்லை.
ஓடிப்போனவள் கதையும், உருப்படாதவள் வாழ்க்கைச் சித்திரமும், ஆட்டங்கண்ட கிழவனுக்கெழுந்த ஆசையும், அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும் நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.
இளைஞர்களை அந்த மயக்கம் பற்றியது உண்மை. வெளியிலிருந்து வந்த விமர்ச்சனங்களை வெறுத்தொதுக்கி அவற்றை இளைஞர்கள் விரும்பிப் படித்தார்கள். நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயத்தின், அழிவுக் காலம் அதிலேதான் தொடங்கிற்று என்றும் சொல்லலாம்.
கருணாநிதியின் குள்ளநரி தந்திரம்
நெல்லை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக விளங்கிய தோழர் கே.வி.கே. சாமி, தனியாகச் சில கூட்டங்களில் பேசவேண்டுமென்று அவனை அழைத்திருந்தார். அவனது திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. பொது வாழ்க்கையில் பிடிப்பில்லாத நிலையிலேயே அவன், அந்தக் கூட்டங்களில் பேச ஒப்புதலளித்திருந்தான். நாளை கூட்டம். இன்று அவன் புறப்பட்டாக வேண்டும்.
“இன்று நான் தூத்துக்குடிக்குப் புறப்படுகிறேன்” என்று அவனுடைய நண்பருக்குச் சொன்னான். “நீ தனியாக போய் என்ன பேசமுடியும்? உனக்கு என்ன பேசத் தெரியும்? எதற்கிந்த வீண் வேலை? வர இயலவில்லையென்று தந்தி கொடுத்துவிடு” என்றார் அவர். தன்னைத் தவிர யாருக்கும் பேரும் புகழும் வரக்கூடாதென்பதிலே அவர் மிகுந்த அக்கறை காட்டுவார். இன்னொருவன் முன்னுக்கு வராமலிருப்பதெஎ, தான் வாழ் வழியென்பது அவரது சித்தாந்தம்.
இவை அவனுக்குத் தெரிந்திருந்திருந்தும் கூட, தூத்துக்குடிக்குப் போகாமலிருக்க முடிவு கட்டினான். அந்த முடிவுக்கு இன்னொரு காரணம், அவனது சோம்பலுமாகும். ‘வர இயலவில்லை’ என்று தூத்துக்குடிக்குத் தந்தி கொடுத்தான். கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டன. அன்று மாலை அந்த அரசியல் நண்பர், வடசென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. அதற்கு அவனையும் அழைத்துச் சென்றார்.
கவனித்தீர்களா! அவரை அவர் கூட்டத்துக்கு போகவிடாமல் செய்து விட்டு இவர் கூட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். இங்கு இன்னொரு சம்பவத்தை சொல்லியாக வேண்டும். அச்சம்பவத்தை தான் ஜெயலலிதா சில நாட்களுக்கு முன் தன் அறிக்கையில் சொல்லியிருந்தார். புதிதாக தொடங்கப்படவிருந்த தி.மு.க கட்சிக்காக ஒரு கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது கண்ணதாசனும் கருணாநிதியும் சேலத்தில் இருந்து சென்னை வந்து, பின் திரும்பி செல்கையில் முதல் வகுப்பு கட்டணத்தில் ரயில் பயணம் செய்தார்கள். இருந்த பணம் ரயில் டிக்கெட்டிற்கும் காப்பி, சிகரெட்டிற்கும் சரியாக இருந்தது. கண்ணதாசனுக்கோ பசியை அடக்க முடியவில்லை. அப்போது இவர்கள் அருகில் இருந்த வயதானவர் கழிவறைக்குச் சென்றார். அப்போது கருணாநிதி வயதானவர் அங்கு வைத்துவிட்டுச் சென்ற பழக்கூடையை காண்பித்து, ‘திருடலாமா’ என்று கேட்டார். தமிழின தலைவனின் யோக்கியத்தை நீங்களே பாருங்கள்!
போலி திராவிடம் – அண்ணாவின் சரிவு
கண்ணதாசன் தொடருகிறார்; 
அவன் மேடை மீது ஏறிவிட்டால் சாமியாடும் பூசாரியைப்போல் ஆடித் தீர்ப்பான். ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ – என்ற முழக்கத்தின் ஓசை நயம் அந்தப் பிஞ்சு மனத்தின் ஆசை நயத்துக்கும் தூபம் போட்டது. பின்நாளில் திரு. சம்பத் சொன்னது போல் ‘அது ஒரு பயங்கரமான அரசியல் மோசடி’ என்பதை யாரும் சிந்திக்கக்கூட இல்லை. கட்சியின் மீது நம்பிக்கை; கருத்துக்களின் மீது நம்பிக்கை; தலைவர் மீது பக்தி – அது ஒரு கட்சியாக இல்லை; மதமாகவே இயங்கிற்று.
1957-ல் நடைபெற்ற திருச்சி மாநில மாநாடு அவன் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் கட்சியின் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் சரியத் தொடங்கிய கட்டம் அதுதான். அந்த மாநாட்டிலேதான் – தான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லவென்றும் – பார்பனீயத்துக்கே எதிரியென்றும் அண்ணாத்துரை பேசினார். அந்தப் பேச்சுக்குக் காரணம் உண்டு. முன்னாலெல்லாம் பதவி தேடுவோர் – பட்டுப் பூச்சிக்கள் – வெட்டுக் கிளிகள் என்று பேசி வந்த அவர் – அந்த மாநாட்டில் தேர்தலில் கலந்து கொள்வது பற்றி ஓட்டெடுப்பு நடத்தினார். ‘கலந்துகொள்ள வேண்டும்’ என்பதற்குச் சாதகமாக ஓட்டுகள் கிடைத்தன. அது எதிரிப்பார்த்ததுதான். அந்த நம்பிக்கையோடுதான் அவர் வாக்கெடுப்பு நடத்தினார். ஆகவே மாநாடில் தனது இறுதிப் பேச்சை வாங்கப் போகிற ஓட்டுக்குச் சாதகமாகத் திருப்பினார்.
பார்ப்பனர்கள் என்னதான் ஆதிக்க வெறியர்களாய் இருந்தாலும் – அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதல்லவா? அந்த ஓட்டும் அவருக்குத் தேவை அல்லவா? அதுவும் அது கூட்டமாக வந்து விழுகிற ஓட்டு அல்லவா? அதோடு அந்த நேரத்தில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசோடு முரண்டிக் கொண்டிருந்தார் அல்லவா!
விடுதலை வீரன் அண்ணாத்துரை ராஜ தந்திரியாகத் தொடங்கினார். சமுதாயக் கருத்துக்கள், நாத்திகக் கருத்துக்கள் மெல்ல அவரிடம் இருந்து விடைபெறத் தொடங்கின. கொள்கையின் முதற்கட்டச் சரிவை துவக்கி வைத்தது திருச்சி மாநில மாநாடு.
அண்ணாவின் ‘நேர்மை’ கருணாநிதியின் ‘சுய’மரியாதை
இந்த நிலையில் சென்னை மாநகர் மன்றத் தேர்தல் வந்தது. பொதுத் தேர்தல் முடிந்து திருக்கோஷ்டியூரில் அவன் தோல்வியுற்று, சென்னைக்குத் திரும்பிய உடனேயே சென்னையில் திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் வெற்றியைக் கண்டான். அப்போதே ‘தென்றலில்’ ஒரு தலையங்கம் எழுதினான். ‘அடுத்த மாநகர் மன்றத் தேர்தலில் முன்னேற்றக் கழகத்தவரே மேயராக வருவார்’ என்று அதில் அவன் குறிப்பிட்டான்.
அந்த நம்பிக்கையைத் துணைகொண்டு இப்போது தேர்தல் வேலைகளில் இறங்கினான். அந்தத் தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்காக அதிகம் உழைத்தவர்கள் அவனும் நடிகர் டி.வி.நாராயணசாமியுமேயாவர். உடலுழைப்பு, வாகன உதவி, பொருள் உதவி அனைத்தும் அவர்கள் இருவருமே செய்தார்கள். சிவகெங்கைச் சீமைப் படம் வெளிவருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் தேர்தல் நடந்ததால் அவன் கையில் அதிகப் பணப்புழக்கம் இருந்தது. பல தொகுதிகளில் இவன் தன் பணத்தைச் செலவழித்தான். காய்கறிகளுக்குப் போடப் பட்டிருந்த வரிகளையே பிரச்சாரத்திற்குப் பொருளாகக் கொண்டான். அவன் எதிர்பார்த்ததுபோல் தி.மு. கழகம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அண்ணாத்துரையே திகைத்தார். ஏனென்றால் அவர் எதிர்பார்க்கவில்லை. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலர் அவனது கம்பெனிக்கே முதலில் வந்து அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போனார்கள்.
கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை. அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள்போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.  கருணாநிதி பேசுகிறார். அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர்போல் பேசுகிறார். இவ்வளவுபேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்.
அடுத்தாற்போல் அண்ணாத்துரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். காங்கிரசை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக்கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்ப்பித்தார்.
“நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக் கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்.” கூட்டத்தில் பெருத்த கையொலி. ‘கருணாநிதி வாழ்க!’ என்ற முழக்கம். அவன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.
பெரிய ஜாதிக்காரனையும் சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான். அண்ணாத்துரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார். அவரை வரம்புமீறிப் புகழ்ந்துகொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப்பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.
அவன் நேரே அவரிடம் போனான். “என்ன அண்ணா! இப்படிச் சதி செய்துவிட்டீர்கள்?” என்று நேருக்கு நேரே கேட்டான். “அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்” என்றார். “அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?” என்று அவன் கேட்டான். “அட சும்மா இரு. அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
அவன் அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே நடக்கலானான். அவன் கண்களில் நீர் மல்கிற்று. பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும். உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.
உட்கட்சிக் குழப்பம் – சுயநல தலைவர்கள்
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக லாயிட்ஸ் ரோட்டில் ஒரு கட்டத்தில் கூடினார்கள். அன்றைக்குச் சம்பத்தின் கைதான் வெகுவாக ஓங்கியிருந்தது. அன்று அவர் விரும்பியிருந்தால் – அவர்தான் பொதுச் செயலாளர். அப்படி இருந்தது அன்றைய நிலைமை. அண்ணாத்துரையே நடுங்கிக்கொண்டிருந்தார். துணைக் குழுக்களுக்கான தேர்தல் அங்கு நடந்தபோது எல்லாக் குழுக்களிலும் சம்பத்தின் ஆதரவாளர்களுக்கே ஏராளமான வாக்குகள் கிடைத்த.
மதியழகனைப் பொதுச்செயலாளராக்குவது என்று சம்பத் எடுத்துக்கொண்ட. முடிவிற்கு, அங்கே பெருத்த ஆதரவிருந்தது. கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும் கலங்கிப்போய் இருந்தார்கள். எல்லோரும் சம்பத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாத்துரை சம்பத்தை தனியே அழைத்துக்கொண்டு போனார். உண்மையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். “இந்தத் தடவை மட்டும் நான் பொதுசெயலாளராக இருந்துவிடுக்கிறேன். நமக்குள்ளே தகராறு இருப்பதாக யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.
தன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட ஒரு மனிதர், தன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறார் என்ற உடனேயே சம்பத் செய்த முதற் பெருந்தவறு இதுதான். அவரைச் சுற்றி இருந்த பலபேரும் உறுதியாக நின்றபோது – அவரது இளகிய நெஞ்சம் அண்ணாத்துரையின் கண்ணீருக்குப் பணிந்துவிட்டது. பிறகு சம்பத்தே தன் ஆதரவாளர்களிடம் அண்ணாத்துரைக்கு விட்டுக் கொடுக்குமாறு கூறினார். அண்ணாத்துரை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லாயிட்ஸ் ரோடு பொதுக்குழுவிற்குப் பிறகும் கட்சியில் சம்பத்தின் கையே ஓங்கி இருந்தது. அதைத் தகர்க்க அண்ணாத்துரை ரகசியமாகத் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் பொதுக்குழுவில் கண்ணீரைக் காட்டி தான் பெற்ற வெற்றியை கம்பீரமான வெற்றியாகக் கருதி திராவிடநாடு இதழில் மறைமுகமாக ஒரு கட்டுரை எழுதினார்.
அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி,
தி.மு.கழகத்தில் ஒருவரையொருவர் மறைமுகமாகத்
தாகி எழுதுவது மிகவும் அதிகம். அது
தொண்டர்களில் பலபேருக்குப் புரியாது.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் புரியும். அந்தப்
பாணியில் அண்ணாத்துரை சம்பத்தைக் கேலி செய்து
ஆப்பிள் கார்ட் என்ற பெர்னாட்ஷா நாடகத்தை மையமாகக்
கொண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘எல்லோரும்
இந்நாட்டு மன்னர்’ என்பது அதன் தலைப்பாகும். அதை
அவன்கூடப் படிக்கவில்லை. பொதுவாக அவன்
அண்ணாத்துரையின் திராவிடநாடு பத்திரிகை உட்பட
எந்த தி.மு.க பத்திரிக்கையையும் படிப்பதில்லை.
காரணம் – அவர்களில் சத்தற்ற தமிழ்நடை தன்னைப்
பற்றிக்கொள்ளக்கூடாதே என்ற பயம்.
அந்தக் கட்டுரை வெளிவந்த திராவிடநாடு இதழை
அவன் முதலில் பார்க்கவில்லை. அவனது
துணையாசிரியர் தியாகன் அதைப் படித்துவிட்டு
அவனிடம் கொண்டுவந்து காட்டினார். “ இந்தப்
‘போனார்ஜியஸ்’ என்ற பாத்திரம் புயலார் என்ற பெயரில்
மாற்றப்பட்டு சம்பத்தைக் கேலி செய்வது போல்
எனக்குத் தோன்றுகிறது” என்று அவர் சொன்னார். அவன்
அதை முழுக்க படித்துப் பார்த்தான். பொதுக்குழுவில்
சம்பத் ஏமாந்துவிட்டதாகவும் தான் பெற்றி
பெற்றுவிட்டதாகவும் மறைமுகமாக அண்ணாத்துரை
அதில் கூறியிடுப்பதைக் கண்டுபிடித்தான்.
அண்ணாவின் ஆசிர்வாதத்துடன் கருணாநிதியின்
ரவுடித்தனம்
தீர்மானங்கள் தயாரிப்பதில் சம்பத் கைதேர்ந்தவர்.
முறையற்ற தலைவர்களை தீர்மானங்கள் மூலமே அவர்
சித்ரவதை செய்வார். லாயிட்ஸ் ரோடு பொதுக்குழு
நடப்பதற்கு முன் நடைபெற்ற மாயவரம்
பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கொண்டுவந்து
அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் அலற
வைத்தவர் அவர். ஆகவே- இந்தத் தடவை வேலூர்ப்
பொதுக்குழுவுக்கு தீர்மானம் தயாரிக்கிறார்
என்றால்  – அது கண்டிப்பாகப் பரபரப்பை உண்டுபண்ணும்
என்பது அவனுக்குத் தெரியும்.
சம்பத்தின் ஆதரவாளர்கள் எல்லாம் வேலூர்ப்
பொதுக்குழுவில் இந்தத் தீர்மானங்களை விவாதிப்பது
பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால்
அவர்களுக்குத் தெரியாமலேயே கருணாநிதி
ரகசியமாக ஒரு வேலை செய்து கொண்டிருந்தார்.
பொதுக்குழுவில் பெரும் ரகளை செய்வது என்று
முடிவு கட்டி அண்ணாத்துரையின் ஆசீர்வாதத்தையும்
பெற்றுக்கொண்டு மேல்மட்டத்தில் இருந்த
அண்ணாத்துரையின் ஆதரவாளர்களுக்கெல்லாம்
தெரிவித்துவிடு, மற்றப் பொதுக்குழு
உறுப்பினர்களை ஊர் ஊராகப் போய்ச் ச்ந்தித்து
ஒவ்வொருவரையும் தயார் செய்து உருப்பினர் அல்லாத
அடியாட்கள் சிலரையும் ஏற்பாடு செய்துகொண்டு பல
கார்களில் எல்லோரையும் ஏற்றி முதல் நாளே
வேலூருக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டு –
தானும் அங்கேயே வந்துவிட்டார். இந்த ரகளைக்கு
அண்ணாத்துரையும் கருணாநிதியும்
திட்டமிட்டிருந்தது சம்பத் கோஷ்டியினரில்
யாருக்குமே முன்கூட்டித் தெரியாது.
“செயற்குழுவில் அடிதடி நடக்கிறது. சம்பத்தை
எல்லோரும் அடிக்கிறார்கள்” என்று சொன்னார். அவன்
கலங்கிவிட்டான். அங்கிருந்து காரை
எடுத்துக்கொண்டு செய்ற்குழு நடக்குமிடத்திற்குச்
சென்றார்கள். செயற்குழுவில் கலந்துகொண்டிருந்த
எம்.பி. சுப்பிரமணியன் (எம்.எல்.ஏ) இறங்கி வந்தார்.
மதுரை சண்டியர் ஒருவர் சம்பத்தின் சட்டையைப்
பிடித்ததாகவும் கருணாநிதி சத்தம் போட்டுத்
திட்டியதாகவும் இரண்டு நடிகர்கள் முண்டா
பனியனோடு வந்து நின்றதாகவும் அண்ணாத்துரை
அழுததாகவும் அவர் சொன்னார்.
“உனக்காகவது சொத்து சுகம் இருக்கிறது சம்பத்.
அரசியலை விட்டால் வேறு எங்களுக்கு தொழில் ஏது?”
என்று அன்பழகன் பரிதாபமாகக் கேட்டாராம்.
கட்சியில் இந்தக் குழப்பம் வந்ததனால் ‘வசூல் வேலை’
தடைப்படுகிரது என்று பலபேர் ஆத்திரமாக
இருந்தார்களாம்.
“இப்போழுதே கட்சியில் இருந்து எல்லோரும்
ராஜிநாமாச் செய்யவேண்டும்” என்றொருவர் கூறினார்.
மதியழகன்தான் இதில் தீவிரமாக இருந்தார். சம்பத்
எல்லோரையும் அமைதிப்படுத்தினார். சம்பத் செய்த
இரண்டாவது தவறு இது. தனது ஆதரவாளர்களின்
ராஜிநாமா யோசனையை அன்றைக்கே அவர்
ஒப்புக்கொண்டிர்உந்தால் அண்ணாத்துரையும்
கருணாநிதியும் சம்பத்திடம் சரணடைய
வேண்டியதிருக்கும். காரணம் அன்று
பெரும்பான்மையான ஆதரவு சம்பத்துக்கே இருந்தது.
நீலிக்கண்ணீர் வடித்து சம்பத்தின் ஆதரவாளர்கள்
பலபேரைத் தன்பக்கம் இழுப்பதற்கு அண்ணாத்துரைக்கு
ஒரு வாய்ப்பை சம்பத் கொடுத்துவிட்டார்.
கருணாநிதி ஒன்றும் அறியாத கன்னிபோல்
உட்கார்ந்திருந்தார். அண்ணாத்துரை உருக்கமாகவே
தனது பேச்சை ஆரம்பித்தார். “கட்சியில் குழப்பம்
வந்து ஏதாவது ஆகுமென்றால் என்னை உயிரோடு காண
முடியாது” என்று அவர் கூறியதும், “ஐயோ அண்ணா”
என்று சிலபேர் அழுதார்கல். அழுதவர்களின் நடிப்பு,
அண்ணாத்துரையின் நடிப்பையும் மிஞ்சி நின்றது.
அவன் மட்டும் புன்னகை புரிந்துகொண்டிருந்தான் .
உண்மைக்கும் நடிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை
ஓரளவு கண்டுகொள்ளக் கூடியவன்தானே அவன். அவன்
சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பலபேர்
ஆத்திரமாகக் கத்தினார்கள்.
 அந்த வகையில் அண்ணாத்துரை மிகத் தெளிவாக
இருந்தார். ஆனால். கட்சியை எப்படியும் உடைத்தே
தீருவது என்று முடிவு கட்டியிருந்த கருணாநிதி
அந்தக் கூட்டங்கள் நடைபெறாமல் தடுப்பதில்
முனைந்தார். பலவீனமான அண்ணாத்துரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக