சனி, 29 ஏப்ரல், 2017

பெரம்பலூர் mrf காவிரி நீர் கொள்ளை நதிநீர் நீர்வளம் உறிஞ்சல் பெப்சி கோலா கத்தி காவேரி ஆறு சுரண்டல் கார்ப்பரேட்

aathi tamil aathi1956@gmail.com

19/5/15
பெறுநர்: எனக்கு
பெரம்பலூர் மாவட்டத்தை சுடுகாடாக
மாற்றபோகும் MRF… நாம் என்ன
செய்யப்போகிறோம்…?
பெரம்பலூர் அருகிலுள்ள நாரனமங்கலத்தில்
MRF தொழிற்ச்சாலைக்கு நிலம்
கையகப்படுத்தும்போது நடந்த
கண்நீர்கதைகளை இப்பொழுது கூட அந்த
பகுதிகளில் வசிக்கும் மக்களை கேட்டால்
நமக்கு நெஞ்சே வெடித்துவிடும்… நில
உரிமையாளரான கணவன் வெளிநாட்டில் கூலி
வேலை செய்யும்போது மனைவியை மிரட்டி
“power of attorney” வாங்கி நிலத்தை
பிடுங்கிய கதைகளெல்லாம் உண்டு.
அவ்வாறு MRF நிறுவனத்துக்கு நிலம்
கையகப்படுத்தும்போது அரசு கூறிய
மிகமுக்கியமான காரணம், பெரம்பலூர்
மாவட்ட மக்களுக்கு வேலை கிடைக்கும்
என்பதுதான். ஆனால் எந்தனை பெரம்பலூர்
மாவட்ட மக்களுக்கு வேலைகொடுத்தார்கள்
என கணக்கிட்டால் மனவேதனை மட்டும்தான்
மிஞ்சும்.
அவ்வாறு வேலைகொடுத்தாலும் பத்து
ஆண்டுகளில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நோய்
வந்து இறந்துபோகும் அளவுக்கு ஒரு
மோசமான வேலைதான் தரப்படுவது
உண்டு.கேரள மாநிலத்தவருக்கே டெக்னிகல்
துறைகளில் முன்னுரிமை தரப்படுவது
என்பது இங்கு எழுதப்படாத விதியாக
உள்ளது.
தமிழக அரசால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு
என அறிவிக்கப்பட்ட கொள்ளிடம்
கூட்டுக்குடிநீரின் பெரும்பகுதி
நாரணமங்கலம் MRF தொழிற்சாலைக்கு
திருப்பி விடப்படுகிறது என்பது நம்மில்
எத்தனைப்பேருக்கு தெரியும்…? தினமும்
லட்சக்கணக்கான லிட்டர் கொள்ளிடம் ஆற்றின்
குடிநீர் MRF தொழிற்ச்சாலை உபயோகத்துக்கு
திருப்பிவிடப்படுவதால்தான் பெரம்பலூர் நகர்
மக்களுக்கு வாரம் ஒருமுறையோ…
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையோ
தண்ணீர் தரப்படுகிறது என்பதாவது நமக்கு
தெரியுமா..?
தனியார் தொழிற்ச்சாலைக்க
ு தங்குதடையின்றி கொள்ளிடம் குடிநீரை
வழங்கும் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு ஏன்
வழங்க வில்லை என்பதன் காரணம் என்ன…?
பல ஆண்டுகளாக பெர்மபலூர் மாவட்ட மக்கள்
அனைவருக்கும் வழங்கப்படும் என அரசால்
அறிவிக்கப்பட்டு, இன்றளவும் கொள்ளிடம்
கூட்டுக்குடிநீர் திட்டம் ஒரு கனவாக இருக்க
காரணம் , பல லட்சம் லிட்டர் குடிநீர்
MRFநிறுவனத்திற்கு மடை மாற்றி
விடப்படுவதுதான் காரணம் என நம்மில்
எத்தைனைப்பெருக்கு தெரியும்,,,?
சரி தண்ணீரைத்தான் அவர்கள் திருடுகிறார்கள்
, அதற்கு மாவட்ட நிர்வாகமும்
துணைபோகிறது என்றால் அடுத்த பெரிய
ஆப்பு பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு
காத்திருக்கிறது . ஆம்…. நாரணமங்கலம் MRF
தொழிற்ச்சாலை தனக்கென தினமும் 50 மெகா
வாட் அனல் மின்சாரம் தயாரிக்க இருக்கிறது.
இதற்கென தினமும் 1100 டன் நிலக்கரி
எரிக்கப்பட உள்ளது. இதற்கென தினமும் பல
லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் கொள்ளிடம்
ஆற்றிலிருந்து ஆரசு தரப்போகிறது.
ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்திற்கென
கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கென
வரும் தண்ணீரில் பெருமளவு MRF
தொழிற்ச்சாலைக்கு திருட்டுத்தனமாக
வழங்கப்பட்டு வரும் நிலையில் , அனல் மின்
நிலையத்திற்கென இன்னும் பல லட்சம் லிட்டர்
தண்ணீர் திருடப்பட உள்ளது , அரசின்
அனுமதியோடு. ஏற்கனவே குடிதண்ணீர்
தட்டுப்பாட்டில் தவிக்கும்பெரம்பலூர்
மாவட்டத்திற்கு இதுதான் பெரிய இடி… MRF
ன் அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டால்
பெரம்பலூரில் இனி மாதத்திற்கு ஒருமுறை
குடிநீர் வந்தாலும் ஆச்சர்யப்படுவதி
ற்கில்லை. மாவட்டத்தின் மற்ற கிராம
மக்களுக்கு காவிரி குடிநீர் என்பது
கனவாகப்போகிறது.
யப்பா நம் நிலமெல்லாம் தப்பியது.. என, MRF
தொழிற்ச்சாலையை சுற்றியுள்ள
மக்களெல்லாம் நினைத்தால் இனி அதற்கும்
வழி இல்லை. பெரம்பலூரில் வீட்டு
மனையோ , அல்லது முதலீடு நோக்கில்
பிளாட் போன்றவை வாங்குபவர்களின் முதல்
சாய்ஸ் பெரம்பலூரிலிருந்து திருச்சியை
நோக்கிய சிறுவாச்சூர், நாரணமங்கலம்
மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்தான்.
ஏனென்றால் கல்வி நிறுவனங்கள் முதல்,
புதிதாக அமைக்கப்பட்டுவரும் அனைத்து
தனியார் வணிக நோக்க திட்டங்களும்
இப்பகுதியை நோக்கியே உள்ளது. இப்படி பல
கணக்கு போட்டு இப்பகுதிகளில் நிலம் வாங்க
முனைபவர்கள் அதிகம்… ஆனால் அதற்கும்
இப்பொழுது ஆப்பு ரெடியாகி இருக்கிறது.
நிலக்கரியை எரித்து நாரணமங்கலம் MRF
தொழிற்ச்சாலையில் மின்சாரம்
தயாரிக்கும்போது காற்றில் பரவும்
கரித்துகள்கள் தொழிற்ச்சாலையை
சுற்றியுள்ள நிலங்களிலும் வீடுகளிலும்
படியும்… அவ்வாறு படியும்போது விலை
நிலங்கள் பாழாகும் வாய்ப்பு ஏற்படும்…
விவசாயத்தையே நம்பி வாழும்
விவசாயிகளுக்கு இது முதல் இடி என்றால் ,
MRF தொழிற்ச்சாலையை சுற்றியுள்ள
சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு
நுரையீரல் புற்று நோய் உட்பட பல
வியாதிகள் தாக்க வாய்ப்புள்ளது.
இதன் பாதிப்பு நமக்கு இருக்காது என மற்ற
பகுதி மக்கள் நினைத்தால் அவர்களைவிட
ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
ஏனெனில் நிலக்கரியை எரிக்கும்போது
காற்றில் கலக்கும் சல்பர், கார்பன்டை
ஆக்சைடு போன்ற வாயுக்களால் பெரம்பலூர்
மாவட்ட பகுதிகளில் அமில மழை பெய்யவும்
வாய்ப்பு உள்ளது. தனால் விளைநிலங்கள்
பாழாவதொடு மக்களுக்கு தோல் புற்றுநோய்
வரவும் வாய்ப்பு உள்ளது. இதெல்லாம்
மாவட்ட நிவாகத்திற்கு தெரியாமலா
நடக்கபோகிறது என்கிறீர்களா…?
இதுபோன்ற, பொதுமக்களை பாதிக்கும்
திட்டங்களை மக்களின் கருத்தை அறிந்துதான்
செயல்படுத்த வேண்டும் என்பது அரசின்
பொது நிலைப்பாடு. அதன்படி நாளை காலை
( புதன்-மே 2015) பத்து மணிக்கு
நாரணமங்கலம் கிராமத்தில் பொதுமக்களின்
கருத்து கேட்பு கூட்டம் நடக்க இருக்கிறது
என்பது நம்மில் எத்தனைப்பேருக்க
ு தெரியும்….?
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட
மக்களுக்கு பெரிய அளவில் தெரியப்படுத்த
வேண்டிய கடமை மாவட்ட நிர்வாகத்திற்கு
உண்டு. ஆனால் கடமைக்கு ஒரு திருட்டு
கூட்டம் நடத்தி மக்களின் ஒப்புதலைப்பெற்ற
ு விடலாம் என மாவட்ட நிர்வாகம் கணக்கு
போட்டதா எனத்தெரியவில்லை. இது
தொடர்பாக அரசு இணைய தளத்தில்
வெளியிடப்பட்ட அறிவிப்பு கூடசில சமூக
ஆர்வலர்களால் தான் இப்போது தெரிய
வந்துள்ளது. அதன் சாரம்சம் இதுதான்,…
Proposed 50 MW (2×25 MW) Coal based
Captive power plant,
Public Hearing…
Naranamangalam Village, Alathur Taluk,
Perambalur District.
20.05.2015 @10.00 AM
Panchayat Union Elementary School,
Naranamangalam Village, Alathur Taluk,
Peramabalur District.
http://www.tnpcb.gov.in/publichearing.htm ..
என்னப்பா தல சுத்துதா…? சரி நம்மால்
எதாவதுசெய்ய முடியும் என
நினைக்கிறீர்களா..? நாளை அதாவது மே-20 ,
காலை பத்துமணி அளவில் பெரம்பலூர்
மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில்
mrf அனல் மின் திட்டம் தொடர்பான
பொதுமக்கள் கருத்துகேட்ப்பு கூட்டம்
நடைபெற உள்ளது. இந்திய குடிமகன் யாரும்
இந்தகூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின்
எதிர்ப்பை பதிவு செய்யலாம்…
நம் குழந்தைகள் நலமுடன் வாழ
இதைக்கூடவா நாம் செய்ய மாட்டோம்…?
திட்டம் தொடர்பான pdf கோப்பு - http://
www.tnpcb.gov.in/pdf_2015/
MRFLtdnaranmagalm17042015.pdf
 https://m.facebook.com/story.php?story_fbid=436633906497536&id=100004527914629&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக