சனி, 29 ஏப்ரல், 2017

கிராமம் வேர்ச்சொல் காமம் சொல்லாய்வு ஈழம்

aathi tamil aathi1956@gmail.com

19/6/15
பெறுநர்: எனக்கு
சமசுகிருத 'கிராம' என்ற சொல் தமிழ் காமம்
என்ற சொல்லிலிருந்து வந்ததா?
காமம் என்றால் காதல்/அன்பு என்ற பொருளும்
உண்டு;கிராமத்து மக்கள் அன்புடன்
இருப்பார்கள் என்பதால் அவர்கள் வாழும்
ஊர்கள் காமம் என்றழைக்கப்பட்டனவா?
பி.கு:இலங்கையில் கதிர்காமம்,வலிகாமம் என
ஊர்கள் உண்டு;
 காம்+அன்=காமன் - ஆண்பால்
காம்+இ=காமி, காம்+இனி=காமினி - பெண்பால்
காம்+அம்=காமம் - பண்புப்பெயர்
காமம் என்றால் ஒன்றாகக் கூடியிருக்கும்
பண்பு...உணவு, உடை, பாதுகாப்பான
உறையுள், இவற்றிற்காகச் சுற்றித் திரிந்த
நாடோடி வாழக்கை உழவுத் தொழிலின்
கண்டுபிடிப்பால் நிலையானது...உழவுத்
தொழிலை கமம் என்றழைப்பர்...குறிஞ்சி
நிலத்திலிருந்தும் முல்லை நிலத்திலிருந்தும்
மக்கள் கூட்டம் கூட்டமாக மருத நிலத்தை
நோக்கி இடம் பெயர்ந்தனர்...உழவுத் தொழில்
செய்யும் நிலத்தில் மக்கள் ஒன்றாக
ஒற்றுமையாக வாழந்ததால் அவ்விடத்திற்கு
காமம் என்று பெயர்...இந்த காமம் என்ற சொல்
தான் காமம்>க்ராமம்>கிராமம்(தமிழ் மொழிக்கு
ஏற்றவாறு மாற்றுதல்) என்று
ஸங்ஸ்க்ருதத்தில்(சமஸ்கிருதம்)
திரிந்தது...பாண்டிச்சேரி பக்கம் கூட
கதிர்காமம் என்றொரு ஊர் உள்ளது...
காமம்>க்ராமம் திரிபுக்கான மொழியியல்
ஒப்பாய்வு :
பரமம்>ப்ரம்மம்>பிரம்மம்
பயணம்>ப்ரயாணம்>ப்ரயாண்>பிரயாணம்
கமம்(உழவுத்தொழில் செய்யும் இடம்)>காமம்
(மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து வாழுமிடம்,
உதாரணம் கதிர்காமம்)>க்ராமம்>க்ராமா>கிராமம்
மெது>ம்ரெது>ம்ரிது>மிருதுபடி>ப
்ரடி>ப்ரதி>பிரதி
பிசனை>ப்ரிசனை>ப்ரஷனா>பிரச்சனை
பதிட்டை>ப்ரதிட்டை>ப்ரதிஷ்டை>பிரதிஷ்டை
சுதி(ச்(ஸ்)+உ+தி)>ஸுதி(ஸ்+உ+தி
)>ஸ்ருதி>சுருதி
பரதேசம்(>பரதேசி)>ப்ரதேசம்>பிரதேசம்
பாட்டி>ப்ராட்டி>பிராட்டி
கதம்>க்ரதம்>க்ருதம்>கிருதம்
பாகதம்(பா+கதம்)>ப்ராக்ருதம்>பிராகிருதம்
சங்கதம்(சம்+கதம், சம்கதம்)>சங்க்ர
ுதம்>சங்ஸ்க்ருதம்(இன்னும் சில பிராமணர்கள்
பயன்படுத்தும் உண்மையான
ஒலிப்பு)>சம்ஸ்கிருதம்(தற்கால
ஒலிப்பு)>சமஸ்கிருதம்
கண்ணன்>க்ரண்ணன்>க்ரஷ்ணன்(ண்>ஷ் திரிபு
விண்ணு>விஷ்ணு, விண்ணவம்>வைஷ்ணவம்,
விண்ணவி>வைஷ்ணவி போல)>க்ருஷ்ணன்>
கிருஷ்ணன்
இது போல் தமிழ்-சம்ஸ்கிருத சொற்றிரிபுகள்
இதுவரை 20 வகைகள் உள்ளன...
சிலர் காமம் என்ற சமஸ்கிருதச் சொல்லின்
தமிழ்ச் சொல் இன்பம் என்பார்கள்...இத
ு தவறான பார்வை...சமஸ்கிருதத்தில் உள்ள
குறைந்தபட்சம்(குறைந்தபக்கம்) முக்கால்
வாசிச் சொற்கள் தமிழ்ச் சொற்களாகவோ
திரிந்த தமிழ்ச் சொற்களாகவோ தமிழ் வேர்
கொண்ட சொற்களாகவோ இருக்கும்...காமம்
என்ற சொல்லும் இன்பம் என்ற சொல்லும்
வேறு வேறு அருத்தங்களைக்
கொண்டவை...திருக்குறளில் இரண்டு மூன்று
குறட்பாக்களில் இவ்விரண்டு சொற்களும்
பயின்று வருவதைக் காணலாம்...உதாரணமாக,
திருக்குறளின் 1330ஆவது குறளான "ஊடல்
காமத்திற்கு இன்பம்" என்ற குறட்பாவை
எடுத்துக்கொண்டால் காமம், இன்பம் ஆகிய
இரு சொற்களும் ஒரே குறட்பாவில் வருவதைக்
காணலாம்...இதிலிருந்தே காமம், இன்பம் ஆகிய
சொற்களின் அருத்தம் வேறு வேறு என்று
அறிந்துகொள்ளலாம்...
தொகுத்தது · பிடித்திருக்கிறது · 8 ·
முறையிடு · 28 மே
Arutchelvan Thiru
காமம் என்றால் நிறைவு என்று பொருள்.கம்மம்
என்றால் வேலை செய்பவர்கள்
வாழுமிடமென்று பொருள்.கம்மாளர் என்றால்
வேலைசெய்பவர் என்று பொருள்.இந்தியில்
காம் என்றால் வேலையென்று பொருள்.கதிர்கம்
மம்>கதிர்காமம்.கம்மம்>கம்பம்.க
ம்மம்>க்ராமம்>கிராமம்.பெர்மிங்காம்,பெத்லகாம்
என்று உலகெங்கும் இச்சொல் பரவியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக