சனி, 29 ஏப்ரல், 2017

கலைச்சொற்கள் ஆங்கிலத்திற்கு இணையாக தமிழ்ச்சொல் இணையம் கலைச்சொல் நவீன புதிய சொற்கள் சொல்லாய்வு வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

19/6/15
பெறுநர்: எனக்கு

கொழுப்பு(2), நிணம்(24) சொற்களுடன் இறைச்சிக்கொழுப்பைக் குறிக்கும் பிறதொடர்களும் சங்கஇலக்கியங்களில் உள்ளன. இப்பொழுது பின்வருமாறு கொழுப்பின் வகைகள் குறிக்கப்படுகின்றன.
கொழுப்பு – lipid   (வேளா., பயி., சூழி.,மீனி.,மனை.,கால். ) ; fat  (வேளா., மனை.,மரு.); adipose ( பயி.,);  cholesterol  ( மரு.); கொழுப்புஅமிலங்கள்–triglycerides (மனை.);
உயர்மாவுச்சத்து – triglycerides (மரு.). இப்பொழுது நாம் அமிலம் என்று சொல்வதைச் சங்கஇலக்கியங்கள் காடி(6) என்றே குறிப்பிடுகின்றன. ஆதலின் சங்கச் சொற்கள் அடிப்படையில் கொழுப்பு வகைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
நிணம் – cholesterol
கொழுப்பு – fat
கொழுமை – adipose
கொழுமைமெய்ம்மி – adipose tissue
கொழுமியம் – lipid
கொழுப்பி – kinch
முந்நெய்மை – triglycerides
வெளிப்புறகொழுமியம் – surface lipid
எளியகொழுமியம் – simple lipid
கூட்டுக்கொழுமியங்கள் –   compound lipids
வருவிக்கொழுமியங்கள் – derived lipids
செறிகொழுப்பு – saturated fat
கொழுப்புக்காடி – fatty acid
செறிகொழுப்புஅமிலம் – saturated fatty acid
செறிவுறாக்கொழுப்புக்காடி – unsaturated fatty acid
முதன்மைக்கொழுப்புக்காடிகள் – major fatty acids
முதிராக்கொழுப்பு – crude fat
விலங்குக்கொழுப்பு – animal fat
நொதுமல்கொழுப்பு – neutral fats
கொழுப்புக்கரைஉரனிகள்- fat-soluble vitamins
செறிவுறாப்பன்னிலைக்கொழுப்புக்காடி – poly unsaturated fatty acid
கொழுமிகை (பருவுடல்) – obesity
கொழுமியஈரடுக்கு – lipid bilayer
கொழுமியஉயிரியச்சேர்மி- lipid biosynthesis
கொழுமியக்குமிழி – lipid vesicle
கொழுநெய்- fatty oil
கொழுநெய்விதை –   fatty oil seed
கரைகொழுமியம் – soluble lipid
படலக்கொழுமியம் – membrane lipid
கொழுப்புநீர்மவினைமி – fat liquoring agent
புலனாகாக்கொழுப்பு – invisible fat
மீநிலைக்கொழுமியம்– hyperlipidemia
மீநிலைமுந்நெய்மை – hypertriglyceridemia
மீநிலைக்கொழுமியப்புரதம் –   hyperlipoproteinemia
பால்கொழுமியம் – galacto lipid
மாவின்கொழுமியம் –   flour lipid
வகுத்தூண்நிணம்
நிணக்கல் – cholesterol stone
நிண மிகை –  cholesterolemia
வெண்ணெய்க்கொழுப்பு –   butter fat
குருதிநிணம் –   blood cholesterol
குருதிக்   கொழுமியம் –  blood lipid
கொழுமைஉயிர்மி- adipose cell
கொழுமையுடைமை – adiposity
உயரடர்கொழுமிப்புரதம் – high density lipo protein
கொழுப்புஉயிர்மி – fat cells
கொழுமிப்பெயர்வு – lipid migration
நீள்தொடர்முந்நெய்மை –   low density lipo protein
நீள்தொடர்முந்நெய்மை – long chain triglyceride
குருதிநீர்மக்கொழுமியம் –   plasma lipids
கொழுப்புஉருஅமைவு – plasticity of fats
ஊனீர்நிணம் – serum cholesterol
கட்புலக்கொழுப்பு – visible fat
கொழுமிச்சிதைவு – lipolysis
கொழுப்புநொதி – lipase
மென்கொழுப்பு – soft fat
மடிக்கொழுப்பி – udder kinch
கொழுப்புச்சுரப்பி – sebaccous gland
கொழு, கொழுப்பு, நிணம், என்னும் சங்கச் சொற்களின் அடிப்படையில் அடிப்படைக் கலைச் சொற்களைக் குறிப்பிட்டிருந்தாலும் பிற இடங்களில் வேறுபாடின்றிக் கொழுப்பு என்றே பயன்படுத்துவர். எனவேதான் இங்கே வேறு சில கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. இவை தொடர்பான அனைத்துச் சொற்களையும் குறிப்பிடின் பலநூறுகளைத் தாண்டும். எனவே, அடையாளமாகத்தான் சில குறிக்கப்பெற்றுள்ளன. இங்குள்ள சொற்களின் அடிப்படையில் பிற சொற்களையும் உணர்ந்து பயன்படுத்தலாம்.
Cholesterol-01

கலைச்சொல் தெளிவோம்! 2.] பொரித்தலும் வறுத்தலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 2.] பொரித்தலும் வறுத்தலும் 

– இலக்குவனார் திருவள்ளுவன்



broiledfood
kalaicho,_thelivoam01

(குஞ்சு)பொரித்தல்-hatch/hatching(வேளா.,பயி.,மனை.,கால்.);  fry/frying(கால்., மனை., வேளா., வங்., மீனி., தக.); puff(மனை.);
வறுத்தல்-fry/frying(மனை.,கால்.); roasting (புவி., மனை., கால்., தக., வேதி., வேளா.)
என்று   அடைகாத்துக் குஞ்சுபொரித்தல், வாணலியிலிட்டு வறுத்தல், தீயிலிட்டு வாட்டுதல், என ஒரே சொல்லையே வெவ்வேறுவகைக்குக் குறிப்பிடுகின்றனர்.
 roastedfish
சங்கக்காலத்தில் கருனை(4) எனப் பொரித்தகறியைக் (Any preparation which is fried) குறிப்பிட்டுள்ளனர்.
கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு (நற்றிணை367.3)
[கரிய கண்ணையுடைய கிழங்கின் பொரிக்கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத்திரளை]
பசுங்கண்கருனைச்சூட்டொடுமாந்தி (புறநானூறு : 395.37)

உண்
மண்டையகண்டமான்வறைக்கருனை, (புறநானூறு : 398.23-24)
பரல்வறைக் கருனை, காடியின் மிதப்ப ( பொருநர் ஆற்றுப்படை: 115)
பொரி்த்த கறி வகை போல் மற்றோர் உணவுவகை அணலில் வாட்டி உண்பதாகும்.
மனைவாழ்அளகின்வாட்டொடும்பெறுகுவிர்
(பெரும்பாண்ஆற்றுப்படை :256) [மனையின்கண்வாழும் பெட்டைக்கோழியின் இறைச்சி]
இவற்றின் அடிப்படையில் அணலில் வாட்டித்தரப்படும் இறைச்சியை வாட்டூன்எனலாம்.  வறுக்கப்படும் மரக்கறிவகைகளை பொரிக்கறி, வறுகறி என்றும் இறைச்சி வகைகளை வாட்டூன், சூட்டூன் என்றும் வேறுபடுத்தலாம்.
broiled+food02
குஞ்சுபொரித்தல் – hatch / hatching
கருனை – fry / frying
கருனைச்சோறு – fried rice
கருனைமீன் – fried fish
கருனைக்கோழி – fried chicken
நிணக்கருனை – shallow fat frying
வாட்டூன்   – fried mutton / chicken
பொதிபொரி – puff
வறுகறி – roasted foods
வறுவல் – chips
பொரிக்கறி – frying vegetables
சூட்டூன் – broiled meat

வழக்குரைஞர்- lawyer
வாதுரைஞர்- pleader
வழக்குத் தொடுநர்/வழக்காளர்- prosecutor
ஆவண மாக்கள் / ஆவணச்சான்றர் /ஆவணர்- notary public


8.] மலையியல் கலைச் சொற்கள்


  மலை தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
  குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், மலையியல் என்பன போன்று குறிஞ்சியியல் என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும்.
  சங்கச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையோ பிறமொழிச்சொற்களையோ நாம் காண இயலாது. சான்றாக எதிரரொலிக்கும மலையைச் சிலம்பு என்றனர். ஆனால், அத்தகைய வகைப்பாடு பிற மொழியாளரிடம் இல்லாததால் நாம் பொருள் விளக்கம்தான் அளிக்க இயலும். பின்வரும் சொல் ஒவ்வொன்றுமே கலைச்சொல் என்பதை உணர்ந்து உரிய துறை ஆசிரியர்கள் இவற்றைப் பயன்படுத்தி நூல்கள் எழுத வேண்டும்.
அடுக்கம் (range) (72),
அடுக்கல் (range) (5),
அருப்பம் (small hill) (13),
அரைமலை (Middle of a mountain slope) (1),
அறை (huge rock) (78),
அறைவாய் (mountain pass) (1),
இகுப்பம் (large boulders, hillock) (1),
இறும்பு (foothill) (21),
ஏகல்(high hill) (3),
ஓங்கல் (mountain top) (13),
கடறு (mountain slopes) (9),
கது (mountain cleft)(8),
கல்(rock) (245),
கல்லளை (mountain caves) (3),
கவாஅன் (slopes) (32),
கன்முழை (mountain cavern)(1),
கிழிப்பு (mountain cleft) (1),
குடுமி(Summit or peak of a mountain ) (26),
குவடு(Hillock ) (1),
குன்று ( mountain) (180),
கோடு(Summit of a hill ),(hill) (167),
சாரல் (mountain slopes)(99),
சிகரம் (peak)(1),
சிமையம் (peak) (2),
சிலம்பு(mountain which has resound or echo) (128),
சென்னி (peak) (44),
நவிரம் (peak) (2),
பிளப்பு (mountain cleft) ,
பிறங்கல்(hillock ) (20),
பெருங்கல்(rock ) (28),
பொறை(small hill) (51),
மலை(mountain) (337),
முகடு (peak) (5),
முகை(mountain cave) (134),
வசி (mountain cleft) (8),
வரை(big mountain) (379),
விடர் (mountain cleft) (33),
விடரகம் (mountain caves) (29),
விடரளை (Cleft in a mountain cave) (1),
விண்டு (mountain) (8),
விலங்கல் (blocking mountain) (3)
வெற்பு (hill) (20),
முதலானவை அனைததும் மலையியல் கலைச் சொற்களே.

கலைச்சொல் தெளிவோம் 19: காழ்நீர் –coffee

  தேயிலையிலிருந்து ஆக்கும் நீரைத் தேநீர் எனச் சுவையாகச் சொல்கிறோம். ஆனால் காப்பி(coffee) என்பதற்கான சரியான சொல் வழக்கில் வராமையால் காப்பி என்பதே நிலைக்கிறது. காப்பிக் கொட்டையில் இருந்து உருவாக்குவதால் கொட்டை வடிநீர் எனச் சொல்லப்பட்டது வேறு வகையாகத் தோன்றி மக்கள் நாவில் இடம்பெறவில்லை.
கன்றின் குளம்படி போன்று உள்ளதால் காப்பி எனப் பெயர் பெற்ற மூலச் சொல் அடிப்படையில் குளம்பி எனச் சொல்லப்பட்டதும் இதனால் குழம்பிப் போவதாகக் கூறிப் பயன்பாட்டுத் தன்மையை இழந்துள்ளது.
காழ் எனில் கொட்டை எனப் பொருள். காழ்(115)அரைக்கப்பட்டுப் பெறப்படும் தூளில் இருந்து உருவாக்கப்படும் சுவை நீரைக் காழ்நீர் என்று சொல்லலாம். தீஞ்சுவையுடைய நீர் தீம்நீர் > தீநீர் என்றும் சொல்லலாம்.   ஆனால், தவறான பொருள் கொள்ளாத வகையில் இப்பொருளைப் புரிந்து யாவரும் பயன்படுத்தினால் தேநீர், தீ நீர் என்னும் சொல்லிசை முறையால் இச்சொல்லே
காழ்நீர்/ தீநீர் –காப்பி(coffee)
- இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus



கலைச்சொல் தெளிவோம் 185 – 194(அறிவியல் துறைப் பெயர்கள்)


  1. மின்னணுவியல் – electronics: மின் சுற்றுகளின் பெருக்கத்தை ஆராயும் பயன் முறை அறிவியல் துறை
186. அகச் சுரப்பியியல் – endo crinology: தொண்டைச் சுரப்பி முதலிய அகச் சுரப்பிகளை ஆராயும் துறை
  1. பூச்சியியல் – entomology: பூச்சிகளை ஆராயும் துறை
  2. நொதித் தொழில் நுட்பவியல் – enzyme technology:தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும் தூய்மையானதுமான நொதிகளின் வினையூக்கப் பயனை ஆராயுந்துறை
  3. நொதியியல் – enzymology: அறிவியல் முறையில் நொதிகளை ஆராயும் துறை
  4. கொள்ளை நோயியல் – epidomology: கொள்ளை நோய்களுக்குக் காரணமானவற்றை ஆராயும் துறை
  5. பணிச்சூழியல் – ergonomics: வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இயந்திரங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராயும் துறை
  6. ஒழுக்கவியல் – ethics: வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய ஒழுக்க நெறிமுறை பற்றிய துறை
  7. மாந்த இனவியல் – ethnology: மாந்த இனங்கள் அவற்றுக்கிடையே உள்ள உறவுகள் ஆகியவற்றை ஆராயும் துறை
  8. திணைத் தாவர இயல் – floristics: திணைத் தாவரங்களைப் பற்றி ஆராயும் துறை:
- இலக்குவனார் திருவள்ளுவன்


கலைச்சொல் தெளிவோம் 195 – 204(அறிவியல் துறைப் பெயர்கள்)

  1. மரபு இயைபியல் – genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை:
  2. மரபு வழியியல் – geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை:
  3. புவி வேதியியல் – geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை
  4. புவி வடிவ இயல் – geodesy: புவி மேற்பரப்பை படமாக்குதல் , அளவிடுதல் ஆகியவை பற்றி ஆராயும் துறை
  5. புவியியல் – geography: புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும் துறை
  6. புவி வளரியல் – geology : புவி வரலாறு, வளர்ச்சி,   திணை உயிர்கள் ஆகியவற்றை ஆராயும் துறை
  7. புவி இயற்பியல் – geo physics: புவியையும் அதன் காற்று வெளியையும் இயற்பியல் முறைகளில் ஆராயும் துறை
  8. மூப்பியல் – gerontology: உயிரியல் தொகுதிகளில் மூப்பு முறைகளை ஆராயும் துறை
  9. மகளிர் நோயியல் – gynaecology: பெண்கள் நோய்கள் பற்றி ஆராயும் துறை
  10. குருதியியல் – haematology: குருதி அமைப்பு,   தோற்றம்,   வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயும் துறை

கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்


கருவிகள் 1600 : 961-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்

961. நிலைத்தடை நேர்மின் திறன்மானிconstant-resistance dc potentiometer
962.நிலைநீர்மப் பாகுமைமானிstokes viscometerசெங்குத்துக் கண்ணாடிக்குழாயில் நீர்மம் நிலையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கேபிரியேல் இசுடோக்கு ( Sir George Gabriel Stoke :13.08.1819 – 01.02.1903) என்னும் அயர்லாந்து நாட்டைச் சார்ந்த கணக்கியல் இயற்பியலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. நிலைநீர்மப் பாகுமைமானி எனலாம்.
963.நிலைநீரியல்அளவிhydrostatic gauge
964.நிலைப்பிலா ஈர்ப்புமானிastatized gravimeter
965.நிலைமின் சுழல் நோக்கிelectrostatic gyroscope
966.நிலைமின் திறனமானிelectrostatic wattmeter
967.நிலைமின் மின்வலி மானிelectrostatic voltmeter
968.நிலையக நோக்கிstatoscope
969.நிலையிலி ஈர்ப்புமானிastatic gravimeter
970.நிலையிலி காந்தமானிastatic magnetometer
971.நிலையிலி திறனமானிastatic wattmeterகாந்தப் பாதிப்பிலாதது
972.நிலையிலி மின்கடவுமானிastatic galvanometer
973.நிழல் ஒளிமானிshadow photometer
974.நிற ஒளிமானி  colour photometer
975.நிற ஒளிநோக்கிchromascope
976.நிற கலப்புக்கருவிchromatoscope
977.நிற நோக்கிchromoscopeவேறுவேறு நிற வடிவங்களை இணைத்து நோக்குவதற்குரிய கருவி. பொறியியல்   தொழில் நுட்பத்துறையில்   நிறச்செறிவு பகுப்பாய்வி என்றும் இயற்பியலில் நிறங்காட்டி என்றும் குறிக்கின்றனர். சுருக்கமாகவும் பிற ஒத்த   கலைச்சொற்கள் அடிப்படையிலும் நிறநோக்கி எனலாம்.
978.நிற விளக்க நுண்ணோக்கிcolor-translating microscope
979.நிறஒப்புமானிTintometerநிறக்கலவைமானி , நிறஏற்றமானி,வண்ணச் சாயல்மானி , மென்னிறச்சாயல் அளவைக் கருவி எனப் பலவாறாகக் கூறப்படுகின்றது. நேர் மொழிபெயர்ப்பாக இவை அமைகின்றன. நிறம் தரும் பொருளின் தன்மையை ஆராயவும் ஒப்பிடவும் உதவும் கருவி. எனவே, நிறஒப்புமானி எனலாம்.
980.நிறம்மாறு கதிரியமானிchromoradiometer
981.நிறமாலை ஈரமானிspectral hygrometer
982.நிறமாலை உடனொளிர் மானிspectro fluorometer
983.நிறமாலை ஒளிமானிspectra photometer/ spectro photometer
984. நிறமாலை ஒளிர்வு ஒளிமானிspectra pritchard photometerஒளிர்வுப் பரப்பை அளவிடும் ஒளிமின் கருவி. நிறமாலை ஒளிர்வு ஒளிமானி.
985.நிறமாலை முனைவுமானிspectro polarimeter
986.நிறமாலை வெங்கதிர்மானிspectrobolometerகதிரியக்க அலைநீளத்தை வரையறுப்பதற்கான, அலைமாலை நோக்கியும்   வெங்கதிர்மானியும் இணைந்த கருவி.
987.நிறமாலை வெயில்மானிspectro pyrheliometer
988.நிறமாலைநோக்கிspectroscope
989.நிறமாலைமானிspectrometerஅலைமாலை அளவி(-இ.), கதிர்நிரல் அளவி(-இ.), நிறமாலைமானி(-ஐ.), திருசிய மானி(-ஐ.),             நிறமாலை அளவி(-ஐ.), வண்ண அளவுமானி(-ஐ.), வண்ணப்பட்டைமானி(-செ.) , நிறமாலைக்கருவி என ஒவ்வொருவகையாகக் குறிப்பிடுகின்றனர். நிறமாலை ஒளிஅலை நீளத்தை அளவிடும் கருவி.
990.நிறமானிchromatoptometerகண்கள் நிறங்களை உணரும் திறனை அளவிடும் கருவி.
991.நிறமிலித் தொலைநோக்கிachromatic telescope
992.நிறவரைவிchromatograph
993. நிறைநீராவி வெம்மிமானிJoly steam calorimeterஇயோவான் இயோலி( John Joly :1857–1933)   என்னும் அறிவியலாளர் பெயரில் அழைக்கப்படும் இக்கருவியைப் பணி அடிப்படையில், நிறைநீராவி வெம்மிமானி எனலாம்.
994. நீட்சி மானிtensometer
995.நீர் ஊடுருவுமானிinfiltrometer
996.நீர் வெம்மிமானிwater calorimeterநீரின் வெப்பநிலை உயர்ச்சியில் வானலை நிகழ்வெண் திறன் கணக்கிடுவது.
997.நீர்ப்பயன்மானிwater-meterகுடியிருப்பு மனைகள், வணிகக்கட்டடங்கள் முதலானவற்றிற்குக் குழாய் மூலம் வரும் நீரின் பயனளவைக் கணக்கிடும் கருவி. நீர்மானி என்றால் ஐடிரோமீட்டர் / hydrometer எனத் தவறாக எண்ணலாம். வடிகால் நீரளவி(-செ.) என்றால் சாக்கடைநீர் / drainage எனத் தவறாகக் கருதலாம். எனவே, நீர்ப்பயன்மானி எனலாம்.
998.நீர்-பாய்வு வெயில் மானிwater-flow pyrheliometer
999.நீர்ம அடர்த்திமானிarcometerஅதன் திரண்மத்திலும் பருமத்திலும் (mass and volume) ஏற்படும் இழப்பை அளவிடுவதன் மூலம் நீர்மத்தின் அடர்த்தியைக் கணக்கிட உதவுவது.
1000.நீர்ம அடைப்பு மானிliquid-sealed meter
- இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக