|
19/6/15
| |||
ஜெயமோகன் : சாி, இந்த இசையமைப்பு
தமிழ்நாட்டுக்கு உாியது என்பதற்கு என்ன ஆதாரம் ?
நா. மம்மது *. நமது பண்டைய இலக்கியங்களே முதல்
ஆதாரங்கள். ஆபிரகாம் பண்டிதர் அதை விாிவாக
நிறுவியிருக்கிறார்.
நான்கு வகை நிலங்களாக இயற்கையைப் பிாித்தது
தமிழ் மரபு. நான்கிற்கும் கருப்பொருள் உாிப்
பொருள் வகுத்தது. இது நமது கலை
இலக்கியஙகளுக்கெல்லாம் பொதுவான இலக்கண
அடிப்படையாகும். நான்கு நிலத்திற்கும் தனியாக
நான்கு பெரும்பண்கள் கூறப்பட்டுள்ளன. நான்கு
பெரும் பண்களும் நான்கு சிறுபண்களும் வகுத்துக்
கூறப்பட்டுள்ளன. நான்கு நிலங்களும், பாலையாகத்
திாிபு கொள்ளும் போது அதற்கும் பெரும்பண்
சிறுபண் வகுக்கப்பட்டுள்ளது.
பண்கள் தான் இராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி
அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். அதை
மெட்டு என்றும் கூறலாம். நான்கு நிலத்திற்கும்
உாிய பெரும்பண்களை பாலை என்கிறோம். அதை
வடமொழியில் ஜாதி என்பார்கள். அதாவது உயர்ந்தது
என்று பொருள்.
நமது பழந்தமிழ் இலக்கியங்களில் ஏழ்பெரும் பாலை
என்பது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. சிலம்பு
(உரையாசிாியர்கள்) கூறும் வட்டப்பாலை முறையில்
ஏழ் பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் பண்டிதரே.
ஏழ்பெரும் பாலைகளாவன : 1. செம்பாலை 2.
அரும்பாலை 3. கோடிப்பாலை 4. மேற்செம்பாலை 5.
படுமலைப்பாலை 6. செவ்வழி 7. விாிம்பாலை இந்த
ஏழு பண்களையும் வட்டப்பாலை முறையில் அமைத்துக்
காட்டியவர் பண்டிதரே. வட்டப்பாலை முறையில்
ராகங்கள் எப்படி அமைகின்றன என்று கண்டடைந்து
சொன்னதே பண்டிதருடைய முக்கியமான சாதனையாகும்.
அதற்கு முன்புவரை இந்தராகங்களை எந்த பெயரில்
எவர் பாடிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அவை
எப்படி உருவாகின்றன என்ற கணக்கு
தெரிந்திருக்கவில்லை.
ஜெயமோகன் :ஒரு பழைய பண் இன்று எப்படி ஒரு
ராகமாக உள்ளது என்பதற்கு ஓர் உதாரணம் காட்ட
முடியுமா ?
நா. மம்மது *. எல்லாருக்கும் புாிகிற, தொிந்த
உதாரணம் சொல்கிறேனே. சிலப்பதிகாரத்தில்
ஆய்ச்சியர் குரவை என்ற பாடல்பகுதி வருகிறது.
அது முல்லைத் தீம்பாணி என்று
குறிப்பிடப்படுகிறது. (பாணி என்றால் பாணன்
குரல்) அதில் இரண்டு வகை. பொருந்தேவ பாணி,
சிறுதேவ பாணி 'சாிகபத ' என்பது அதன் சுரம்
குடந்தை சுந்தரேசனார் அதற்கு சுவரம் அமைத்துப்
பாடியுள்ளார். பொதுவாக அவர் சிலப்பதிகாரப்
பாடல்களை நிறைய சுவரப்படுத்தி
பாடியிருக்கிறார். 'அய்ந்திசைப்பண் ' என்று ஒரு
நுாலும் எழுதியிருக்கிறார்.
இந்த முல்லைத் தீம்பாணிதான் இன்றைய மோகனராகம்.
இளையராஜா திரைப்படப் பாடல்களில் மிக அதிகமாகப்
பயன்படுத்திய ராகம் இது. மிகவும் சுகமான ராகம்.
பாய்பாடிக் காண்பியுங்கள்.
ராஜா முகமது (பாடுகிறார். நாகூர் ஹனிபாவை
நினைவுறுத்தும் கனத்த உரத்த குரல். அறை முழுக்க
நிரம்பும் கார்வை)
பாண்டியர் ஊஞ்சலில் ஆடிவளர்ந்த
பைந்தமிழ் அமுதமே நீ - அம்மா ....
வேதசகாயகுமார் : கர்நாடக இசை என்ற பெயர் எப்படி
வந்தது ?
நா. மம்மது *. தியாகராஜர் சென்னையைத் தாண்டிப்
போனதே இல்லை. ஒருமுறை திருப்பதி போனதாக
தகவல். அவர் பாடியதெல்லாம் இங்கே இருந்துதானே ?
கர்நாடக இசை என்ற பெயரெல்லாம் பிற்பாடு வந்தது.
பெயர் மாறினால் என்ன ? ருக்மிணி தேவி அருண்டல்
சின்னமேளம் அல்லது சதிர் கச்சோியை பரதநாட்டியம்
என்று பெயர் மாற்றினார். பெயர் மாறினால் மரபு
மாறுமா ? கேரளத்திலிருந்து திருவிழா
ஜெய்சங்கரும் ஆந்திராவிலிருந்து லால்குடி
ஜெயராமனும் ஒரே இசைதானே பாடுகிறார்கள் ?
ஜெயமோகன் : நாங்கள் குற்றாலத்தில் 3 வருடத்திற்கு
முன்பு ஒரு கவிதைப் பட்டறை நடத்தினோம். தமிழ் -
மலையாள இளம் கவிஞர்களை உரையாட வைத்தோம்.
அப்போது பி. ராமன் என்ற இளம் கேரளக் கவிஞர்,
அவருக்கு மரபிசை தொியாது. அவர் இசையை முழுக்க
நாட்டுப்புற பாடல்களிலிருநது பெற்றுக்
கொண்டிருந்தார். கேரள வள்ளப்பாட்டு (தோணிப்பாட்டு)
ஒன்றைப் பாடினார். உடனே தமிழ்க் கவிஞரான எம்.
யுவன் அது ஆனந்த பைரவி என்றார். ஏற்றப்பாட்டைப்
பாடியதும் சங்கராபரணம் என்றார். மலையாளக்
கவிஞருக்கு வியப்பாக இருந்தது.

search கர்நாடக சங்கீதம் தமிழிசையே வேட்டொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக