சனி, 29 ஏப்ரல், 2017

காவிரி கன்னடர் மறித்து விவசாயம் பெருக்கினார் கிருஷ்ணா நீர் வீணாகிறது இனவெறி கர்நாடகா நதிநீர் அணை

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
மேலும் கேரளாவில் உற்பத்தியாகும் 140
டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக
காவிரியில் கலக்கிறது. ஆக கர்நாடகம்,
தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு
மாநிலங்களும் காவிரி சமவெளி
மாநிலங்களாகக் கருதப்படுகின்றன.
தமிழகத்தில் காவிரி விவசாயம் தொன்மை
வாய்ந்தது. உலகிலுள்ள பெரிய நதிதீரங்களில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
நடைபெறும் பழமை வாய்ந்த
விவசாயங்களோடு ஒப்பிடத்தக்கதாகும்.
மேலும் தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம்
காவிரி சமவெளியில் இருக்கின்றது.
கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும்,
கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி
சமவெளியில் இருக்கின்றன. 1971ம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 28 லட்சம்
ஏக்கர் பாசனப்பகுதி காவிரி நீரினால்
பயன்பெற்றது. அன்றைய சூழலில் கர்நாடகா 7
லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை
பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்க
து. அன்றைய சூழலில் காவிரியில்
உற்பத்தியாகும் தண்ணீரின் ஆண்டு சராசரி
அளவு 671 டி.எம்.சி. ஆக இருந்தது.
 தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி
ஒன்றுதான் பெரியநதி. ஆனால், கர்நாடகாவில்
காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம்
கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது.
இந்நதி மூலம் மட்டுமே ஆண்டுக்கு 734
டி.எம்சி. தண்ணீர் (காவிரியில் உற்பத்தியாகும்
நீரைவிட 63 டிஎம்சி அதிகம் கர்நாடகாவிற்கு
கிடைக்கிறது) மேலும் இங்கு உற்பத்தியாகும்
2000 டிஎம்சி நீர் எதற்கும் பயன் இல்லாமல்
நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்து
வீணாகிறது. இது மட்டுமன்று கேரளாவில்
உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி
நதி மூலமாக காவிரியில்தான் கலக்கிறது.
இந்த அளவு நீரைதான் தமிழகத்தில்
மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர்
வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி
பரம்பரையாகவே காலங்காலமாக
பயிர்செய்யப்படும் குறுவை சம்பா
சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட
வேண்டிய நீரின் அளவு என்பது
குறிப்பிடத்தக்கது

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக