சனி, 29 ஏப்ரல், 2017

ஈவேரா தனித்தமிழ்நாடு பிறகு மனமாற்றம்

aathi tamil aathi1956@gmail.com

3/5/15
பெறுநர்: எனக்கு
நிலா நிலா
1938-இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று
ஈ.வெ.ரா. சொன்னதாக அவரது பற்றாளர்கள்
கூறிவருகிறார்கள்! இஃது உண்மையென்றால்,
‘திராவிடநாடு’ கோரிக்கையை முன்னெடுத்து ஏன்
குறுக்குச்சால் ஓட்டவேண்டும்? தனித் தமிழ்நாடு
கோரிக்கையை முன்வைத்துப் போராடியிருந்தால்,ஒருக்கால் வெற்றி பெற்றிருக்கலாம்.
வெற்றிபெறவில்லையென்றாலும்,அவரது கோரிக்கையை
முன்வைத்து,அவரது ப்ந்யரைச்சொல்லித்
தனித்தமிழ்நாட்டுக்கான போராட்டத்தைத் தமிழ்க்
குமுகம்முன்னெடுத்திருக்கும். 

ஆனால் ‘திராவிட
நாடு’ வேண்டுமெனக்கேட்டு, ஈ.வெ.ரா.திட்டமிட்டே
தமிழர்களைத் திசைதிருப்பி விட்டார்.
அதையேதான்
துரைஅண்ணாவும்[அண்ணாத்துரை],தாம் இருக்கும்வரை
செய்தார்.
 திராவிடநாடு கிடைக்காது என்பதை
அறிந்தும்,மொழிவழி மாநிலம் பிரிவதைக்
கடுமையாக எதிர்த்தார் ஈ.வெ.ரா.
 “தமிழ்நாட்டைத்
தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதும்,தமிழரசு,தமிழராட்சி,தமிழ்மாகாணம், என்று பேசப்
படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக்
குலைப்பதற்காகவும்,குறைப்பதற்காகவும்
செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள்
உணரவேண்டும்.” {ஈ.வெ.ரா.,விடுதலை 11.01.1947}

என்பதே அவரது உளறல்! அதன்படியே,
மொழிவழிமாநிலப் பிரிவினைக்கான
போராட்டத்தில்தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாமெனப்
பின்வருமாறு கூறி ஈ.வெ.ரா.தடுத்தார்.
 “மொழிமாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும்,விபரீதத்தையும் முன்னரே பலதடவை எடுத்துக்
காட்டியுள்ளேன். மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில்
தமிழர் கலந்துகொள்ள வேண்டாம்.” {ஈ.வெ.ரா.
விடுதலை 21.04.1947}

அத்துடன்,அந்தக் காலகட்டத்தில் ‘தமிழ்,தமிழர்,த
மிழ்நாடு’ எனப் பேசிவந்தோரெல்லாம்
{கி.ஆ.பெ.விசுவநாதம், ம.பொ.சி........} “
பித்தலாட்டக்காரர்கள்”, என்றும் “கருங்காலிகள்”
என்று ஈ.வெ.ரா .தூற்றினார்.
வழக்கறிஞர்-பா.குப்பன் நூல்தொகுப்பு.

ஈ.வே.ரா மண்மீட்பில் உதவினாரா? வேட்டொலி 
ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக