சனி, 29 ஏப்ரல், 2017

தாலி உடை ஆடை யைக் குறிக்கும் நாண்

aathi tamil aathi1956@gmail.com

18/7/15
பெறுநர்: எனக்கு
தாலியும் தமிழரும்.....
(எனக்கும் நண்பர்களுக்குமான உரையாடலை கேள்வி பதில் வடிவில் கொடுத்துள்ளேன்).
சங்க இலக்கியத்தில் தாலியின் மறுபெயர்கள் என்ன?
தாலி, நாண், புதுநாண், வேலம்பழ வடிவம், வேழி மற்றும் கடிகை நூல் என்று
திருமண சடங்கு பற்றிய பாடல்களில் பயன்படுத்தப்பட்
டுள்ளது.
தாலியை எதை வைத்து தயாரித்தனர்?
தாலி - தாலம் என்ற பனை ஓலை.
புது நாண், நாண் - நாணலை கயிராக்கி. (கோரை புல் போன்றது நாணல்).
வேலம் பழ வடிவானது - தாலியின் வடிவம் வேப்பம்பழ வடிவில் இருந்துள்ளது.
(பண்டைய நாணயங்களும் இதே வடிவில் இருந்துள்ளதாக புறநாறு பாடல்
உணர்த்துகிறது.)
வேழி - நாணல் போன்று இதுவும் ஒரு புல். (வேழம் என்ற புல்லை உண்பதால்
யானைக்கு வேழம் என்ற பெயரும் உள்ளது).
கடிகை நூல் -கடிகை என்பது கோர்வை என்பதை குறிக்கும். (நான்மணி கடிகை
என்பது நான்கு பொருள்களை உள்ளடக்கியது என பொருள்படும்). பொதுவாக பூ
கோர்க்கவும், உருத்திராட்சையை கோர்க்கவும் கடிகை நூல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்டதா?
தங்கம் வெள்ளி போன்றதா? என்பது பற்றிய விளக்கம் இல்லை.
மேற்கூறியவற்றில் தாலம் எனும் பனை ஓலையில் செய்யப்பட்ட தாலியை எவ்வாறு
கட்டமுடியும்? உடைந்து விடாதா?
நிச்சயமாக பனை ஓலையை கயிறாக மாற்றி கழுத்தில் கட்ட முடியாது.
அப்படியானால் தாலி, நாண், வேழி மற்றும் கடிகை நூல் என அனைத்தும்
கழுத்தில் கட்ட பயன்படவில்லையா? அல்லது தாலி என்பது தவறான இடை செருகலா?
தாலி என்பது தவறான இடை செருகல் அல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட சங்க கால
புழவர்களால் ஒரே பொருளை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அப்படியானால் தாலி என்பது எதை குறிக்கின்றது?
புறநானூற்று பாடலில் குழந்தைக்கும் தாலி அணிவிக்கபடும் எனவும், எப்போதும்
கழட்டாமல் அணியும் அணிகலனையே தாலி என முன்னோர் அழைத்துள்ளனர் எனவும்,
மரபு வழி தமிழ் தேசிய இயக்கத்தாரால் வெளியிடப்பட்ட கட்டுரையில்
தெரிவிக்கப்பட்ட
ுள்ளது.
அக்கட்டுரைப்படி தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அணிகலன்.
அப்படியானால் எப்போதும் கழட்டாமல் அணிய வேண்டும் என கூறப்பட்ட ஆணக்கும்
பெண்ணுக்கும் பொதுவான அணிகலன் எது?
ஆணாயினும் பெண்ணாயினும் எப்போதும் கழட்டாமல் இருப்பது உடை மட்டுமே.
அப்படியானால் தாலி என்பது உடையை குறிக்கும் சொல்லா?
(இதற்கான விளக்கம் கிடைக்க நீண்ட நாட்கள் போராடினோம்).
வேங்கையொத்த வேடனொருவன் வேழியில்லா வேந்தனான். என்ற ஒரு வரி எங்கோ படித்த
நியாபகம். அதன் விளக்கமே தாலியின் உண்மையினை உணர உதவியது.
வேங்கையொத்த வேடன் - கொடூட எண்ணங்கொண்ட வேடன்.
வேழியில்லா வேந்தன் - உடையணியாத சித்தன்/மன்னன். (உடையணியாத சித்தர்களே
பேரமணர்கள்).
நிச்சயமாக தாலி, வேழி மற்றும் நாண் இவையனைத்தும் உடைகள் தயாரிக்க ஆதியில்
பயன்படுத்தப்பட்
டவை. இவற்றை ஒருங்கிணைத்து கட்ட பயன்பட்டது கடிகை நூல்.
அப்படியானால் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உடையை உணரத்தும் தாலி
எவ்வாறு திருமணத்தின் போது பெண்ணுக்கு மட்டும் அணிவிக்கப்பட்டது?
ஆணாயினும் பெண்ணாயினும் பிறந்தவுடன் அரை நாண் கட்டப்படுவது பிறப்புறுப்பை
மறைக்கும்படியான உடைகளை அணிய, குறிப்பிட்ட வயது வந்த உடன் (சிறு
வயதிலேயே) திருமணம் செய்யும் வழக்கத்தின் காரணமாக முழு நாண் எனப்படும்
தாலியை பெண்ணுக்கு அணிவித்து முழு உடலையும் மறைக்க வேண்டிய தேவை
பெண்களுக்கு மட்டுமே உள்ளதால், திருமண நாளில் முழு நாண் என்ற முழு
உடலையும் மறைக்கும் தாலி (உடை) அணிவிக்கப்பட்டிருக்கும்.
இடை எப்படி உறுதிபடுத்துவது?
பெண் வீட்டார் எவ்வளவு சொத்துடையவர் என்றாலும் பெண்ணின் கழுத்தில்
கட்டப்படும் தாலி மணமகன் வீட்டாரது என்பது வழக்கம். பெண்ணின் உடலை
மறைத்து பெண்மையை காக்கும் பொருப்பு கனவனது கடமை, இதனால்கனவனது
வருமானத்தில் வாங்கிய தாலிக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றும் திருமண நாளன்று கட்டப்படும் புடவையை வாங்குவது ஆண்
வீட்டாரே. அப்புடவைக்கு பெயரும் கோரை புடவையே. (கோரை என்பது நாணல் போன்ற
புல்).
மேலும் ஆடையை சரியாக அணியாமல் தெருக்களில் உலவும் பெண்களை நாணம்
இல்லாதவள் என்பது, உடையில்லாதவள் என்பதை தானே குறிக்கின்றது.
அப்படியானால் நாணால் உருவான உடையை உடுத்தாது நிர்வானமாக பொது இடங்களில்
செல்லவோரை நாணம் (வெட்கம் கெட்ட சென்மம்) இல்லாதவர் என்று கூறுவது இதனால்
தானா?
நிச்சயமாக நாணல் உடையை அணியாதவரையே நாணம் இல்லாதவர் என நம் முன்னோர்
தூற்றியுள்ளனர். இப்போது பலவகையான உடைகள் உருவாகிவிட்டதால் இவ்வழக்கம்
மறைந்து விட்டது.
தாலி அறுந்து விட்டால் கனவன் இறந்து விடுவான் என கூறுவதன் காரணம்?
மனைவி நாணம் இல்லாது பொது இடங்களில் உலவினால் கனவன் இருந்தும் என்ன பயன்
என்பதை உணர்த்தவே இவ்வாறு கூறப்பட்டிருக்கும். பெண்ணின் கற்பை காக்க
முடியாத ஆண் உயிரோடு இருத்தல் இழுக்கு.
மேலும் மனைவியானவள் உறவின பெண்களுடன் இணைந்து அவ்வப்போது தாலியை
மாற்றுவதும் உடையை மாற்றுவதையே உணர்த்துகிறது.
ஆனால் நாண், வேழி, தாலி என பல பெயர்கள் உருவாக காரணம் என்ன?
குறிஞ்சி மற்றும் முல்லை போன்ற பகுதிகளில் நாண் விளையாது. ஆனால் வேழம்
விளையும் இதனால் இவர்கள் வேழியை (வேலி, வேழி வெவ்வேறு சொற்கள்) உடையாக
உடுத்தியிருப்பர்.
மருதம் நிலபகுதியில் நாண் அதிக அளவில் விளையும் அதனால் நாண் இங்கு பயன்
படுத்தப்பட்டிருக்கும்.
பாலை மற்றும் நெய்தல் நிலப்பகுதிகளில் தால் எனும் பனை வளர்ந்திருக்கும்
அதனால் இங்கு தாலி பயன்பாட்டில் இருந்திருக்கும். இருக்குமிடத்தில்
கிடைப்பதை வைத்து வாழ பழகு என்பதே தமிழரது கலாச்சாரம்.
இவ்வழக்கத்தில் எப்படி மஞ்சள் இணைந்தது?
மஞ்சள் மற்றும் பருத்தி பயிரிட பழகிய பின், நீண்டகாலம் உழைக்கும் பருத்தி
ஆடைகளை திருமணத்திற்கு பயன்படுத்தும் போது மஞ்சள் மற்றும் குங்குமம்
போன்றவை வழக்கத்தில் இணைந்திருக்கும்.
மஞ்சள், குங்குமம் மற்றும் பருத்தியின் மருத்துவ குணத்தினாலும்
பயன்படுத்த எளிதாக இருந்ததாலும் மற்ற உடைகளை விடுத்து பருத்தி ஆடைகளை
வழக்கப்படுத்தியிருப்பர்.
(பழயன கழிதலும் புதியன புகுதலுமே தமிழர் பண்பாடு).
இவ்வாறு தான் அரைநாண் வெள்ளிக்கும் முழுநாண் தங்கத்திற்கும் மாறியிருக்குமா?
காலசுலர்ச்சியில் பரிணமித்தவையே தங்கத்தாலியும், வெள்ளி அரை நாணும்.
அதிலும் தங்க நகைகளை அனைவரும் அணிய விரும்பியதால் தாயத்து கட்டிய தாலி
வழக்கத்திற்கு வந்திருக்கும்.
தாலியில் இணைக்ப்படும் ரத்தினங்களின் காரணம?
ரத்தினங்கள் கனவனது செல்வ வளமையை எடுத்துக்காட்டும். மேலும் ரத்தினங்கள்
உளவியல் ரீதியாகவும் செயல்படும். உண்மையில் விரலி மஞ்சள் இணைத்து அணிவதே
மிகச்சிறந்த அறிவார்ந்த செயல்.
காலசுலர்ச்சியில் தாலி இவ்வாறு மாற்றம் அடைந்திருந்தாலும் அதன் தேவை
இல்லாத போதும் எதனால் பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்?
திருமண சடங்கின் உச்சமாக விளங்கியது தாலி கட்டும் வழக்கமே. அதன் தேவை
இப்போதும் உள்ளதள்ளவா.
தாலியின் தேவை இப்போதும் உள்ளதா எப்படி?
(தமிழ் திரைபடங்களையும், தொடர் நாடகங்களையும் பார்பவருக்கு இக்கேள்வி எழக்கூடாது.)
திருமணம் முடிந்துவிட்டது என்பதை உறுதிபடுத்தும் உச்ச சடங்கு
தாலிகட்டுவது தானே. (சாப்பிட மட்டுமே செல்வோருக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை).
அரசாங்கமே பதிவு திருமணம் செய்து வைக்கும் போது தாலி கடட்டாயம் கட்ட வேண்டுமா?
தாலி தேவையா இல்லையா என்ற கேள்வியினால் தானே தமிழரது மரபு பண்பாடு
விளங்கியது. அதற்காகவாவது தாலி தேவையே.
அப்படியானால் திருமணம் முடிந்த பின் தாலி அவசியமில்லை தானே?(வசை சொல்
வாங்காமல் போக மாட்டான் போல)
தாலிகயிறு அவசியமா அவசியமில்லையா என முடிவெடுக்கும் உரிமை அதை சுமக்கும்
பெண்ணுக்கானது. ஆனால் உடையை சரியாக அணிவது அவர்களது கடமை. ஆண்களுக்கும்
சேர்த்துதான்.......
நன்றி......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக