சனி, 29 ஏப்ரல், 2017

ஈவேரா வன்னியர் சாதி ஆதரவு

athi tamil aathi1956@gmail.com

20/7/15
பெறுநர்: எனக்கு
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி எம்.எல்.ஏ; எம்.பி.களுக்கு 13.3.1952 அன்று
பெண்ணாடத்தில் ஈ.வெ.ரா. தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சிக்கு உடல்நலம் சரியில்லாததால் ஏ.கோவிந்தசாமி
எம்.எல்.ஏ., வரவேற்றுப் பேசினார்..வன்னியர்கள் தங்கள் முன்னேற்றம்
கருதிதான் சங்கம் அமைத்திருக்கிறோமே தவிர - மற்றவர்களோடு மோதிக்
கொள்வதற்கோ வகுப்புவாதம் பேசவோ அல்ல என்று பேசினார் கோவிந்தசாமி.
பின்னர் பெரியார் பேசியது.
வகுப்புகள் நிலைபெற்று இருக்கும் வரை; அந்தந்த வகுப்பினர் அந்தந்த
வகுப்புகளின் உணர்ச்சியுடன், அதாவது வகுப்பு வாதத்துடன் பாடுபட்டால்தான்
வகுப்புகள் முன்னேற முடியும்.உதாரணமாக - 25 ஆண்டுகளுக்கு முன்பு
இழிந்திருந்த நாடார் வகுப்பு; அவர்களது வகுப்பு உணர்ச்சி பெற்று;
வகுப்பின் அடிப்படையில் காரியம் செய்து வந்ததினால்; இன்று நல்ல நிலையை
அடைந்திருக்கிறார்கள் என்றும்;
எனவே பார்ப்பான் -வகுப்புவாதம் கேவலம் இழிவானது என்று சொல்வதற்கு பயந்து
கொண்டு -நாம் நம்மை வகுப்புவாதிகள் அல்ல என்று சொல்லிக் கொள்வது
கோழைத்தனம்.வகுப்புவாதம்தான்; வகுப்புவாதம் இல்லாவிட்டால் முன்னேற
முடியாதே.. என்று விளக்கினார்.
(22.3.1952 விடுதலை இதழில் பெரியார் பேச்சின் மேற்கண்ட பகுதியை
வெளியிட்டுவிட்டு; முழுபேச்சு பின்னர் வெளிவரும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. 1952ஆம் ஆண்டு ஏப்ரல் முதலான இதழ்கள் பெரியார்
திடலிலேயே இல்லை. அதனால் முழு பேச்சு அதற்கு பின் வெளியானதா என்பது
தெரியவில்லை).
இப்படி எல்லாம்சாதிகள் அந்தந்த சாதி உணர்வோடு இருக்க வேண்டுமென 1952இல்
சாதி உணர்வை நியாயப்படுத்தி பேசிய பெரியார் -சாதிக்கு ஒரு கட்சி இருப்பது
அவமானம் என்றும் அதை ஒழித்த காமராசரின் தனித் திறமையைப் பாராட்ட வேண்டும்
என 1954இல் பேசலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக