வியாழன், 27 ஏப்ரல், 2017

சோழிய பிராமணர் தகவல்கள் பார்ப்பனர் சோழர் அமைச்சர் பிரம்மராயர்

aathi tamil aathi1956@gmail.com

28/7/15
பெறுநர்: எனக்கு
Nadesapillai Sivendran
ராஜ ராஜனின் படைத் தளபதி கிருஷ்ணன் ராமன் ஒரு பிராமணர் என்பது
தெரியும்.பிராமண சாதிகளில் இருந்து எவராவது படைத்தளபதிகளாக வந்தால்
அவர்களுக்கு அப்பட்டம் அளிக்கப்படும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் பிரம்மராயர்கள் என்பவர்கள் சோழியப் பிராமணர்களில் ஓர் உட்சாதியினர்
என்றும் அன்றைய காலத்தில் பொதுவாக அரசு பணிகளில் இருந்திருக்கிறார்கள்
என்றும் அவர்கள் எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அந்தப் பட்டப் பெயரால்
அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
இன்று பிரம்மராயர்கள் திருவாரூர் கோயிலில் உதவிப்பணிகள்
செய்கிறார்கள்.பூசை செய்பவர்கள் நயினார் எனப்படும் வேறு பிரிவினராகும்.
பொன்னியின் செல்வனில் சுந்தரச்சோழரின் அமைச்சரான அநிருத்தப்
பிரம்மராயரையும் பலருக்கும் நினைவிருக்கும்.
அவரும் அப்பிரிவில் இருந்து வந்தவரே.
அது சரி.பிரம்மராயர்கள் சத்திரியர்களா?பிராமணர்களா? வர்ணம் குழம்பும் இடம்.
சாதிகள் மாறுவதில்லை.வர்
ணத்தை விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம் என்பதற்கு இதுவும்
எடுத்துக்காட்டாக இருக்கக்கூடும்.

கிருஷ்ணன் ராமன் இராஜேந்திரன் காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்.மாராயன்
அருண்மொழி என்ற அமைச்சன் கிருஷ்ணன் ராமனின் மகன். இராஜேந்திரன் அவனுக்கு
உத்தம சோழ பிரம்மராயன் என்ற பெயரிட்டு அழைத்திருக்கிறான்.

மேலும் பாலமன்னாரி பிராமணர்கள் தான் பின்னாளில் சத்திரிய பிராமணர்களாக
உருவெடுத்தனர்...

கிருஸ்ண ராமன் ப்ருஹத்சரணம் = பெரியதிருவடி சாதின்னு நினைக்கேன்

குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய திருவாரூர் திருக்கோயில் என்ற நூலில்
பிரம்மராயர்களைப் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக