சனி, 29 ஏப்ரல், 2017

ஈவேரா காமராசர் இகழ்ந்ததும் பாராட்டியதும் இரட்டைநாக்கு ஈ.வே.ரா

aathi tamil aathi1956@gmail.com

20/7/15
பெறுநர்: எனக்கு
தேர்தல் நடந்தபோது பெரியார் அவர்கள்,"அடித்துக் கொல்லப்பட வேண்டிய
நச்சுப் பாம்பு" என்று காமராசரைப் பற்றி விடுதலையில் கட்டுரை எழுதினார்.
அது மட்டுமல்ல பெரியார் கூறிய நச்சு பாம்புகள் பட்டியல் இதோ ,
கு.காமராஜ், பி.டி. அனந்த சயனம் அய்யங்கார்,பி.எ
ஸ்.குமாரசாமி ராஜா,தேனி ஏன்.ஆர்.தியாகராசன், வி.வி.கிரி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி.


 ஆட்சியமைத்த மறுநாளே, பெரியார் கீழ்க்கண்ட தலையங்கத்தை எழுதியுள்ளார்.
***சாதி ஒழிப்புக்கு இது நல்ல தருணம். திரு.காமராசர் அவர்கள்
முதலமைச்சராகி இருக்கிறார்.அவர
ுக்கு ஜாதியை ஒழிப்பதில் தனி அக்கறை உண்டு என்பது நமக்குத் தெரியும்.
இதுபற்றிப் பலதடவைப் பேசி இருக்கிறார்.
இப்பேர்பட்டவர், இனி செய்கை மூலம் தன் லட்சியத்தைப் பெறவேண்டும். இதற்கன
கால்கோள் விழவை நடத்திவிட்டார் என்றே நாம் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட
சாதிக்காகவே என்று தோன்றிய இரண்டு அரசியல் கட்சிகளைக் கலைத்துவிட்டார்.
காங்கிரசு கட்சியையே எதிர்த்து நின்று தேர்தலில் வெற்றி பெற்ற உழைப்பாளர்
கட்சி; பொதுநலக் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் காங்கிரசுக் கட்சிக்கு
வெண்சாமரம் வீசும் கட்சிகளாக ஆக்கிவிட்ட தனித் திறமைக்காகப் பாராட்ட
வேண்டும்.
அரசியல் துறையில் இக்காரியம் எப்படிக் கருதப்பட்ட போதிலும்; தனி
சாதிக்காக ஒரு அரசியல் கட்சி என்ற அவமானத்தைப் போக்கிவிட்ட வகையில்;
சமுதாயத்துறையில் இக்காரியம் வரவேற்கப்பட வேண்டியதுதான் என்பதே நம்
கருத்து.
சாதி ஒழிப்பு உணர்ச்சியை மக்களிடையே பரப்புவதற்கு இது ஒரு நல்ல தருணம்.
சுயமரியாதைக் காரருக்கும் இது ஒரு நல்ல தருணம். சட்ட திட்டங்கள் மூலம்
முதலமைச்சர் இக்காரியத்தைச் சாதிக்கலாம். வழக்கமான பிரச்சாரத்தின் மூலம்
சுயமரியாதைக் காரர்கள் இவருக்கு உதவியாக இருக்கலாம்.
புத்தர்கள்; சித்தர்கள்; பிரம்ம சமாஜ் தலைவர்கள்; சமுதாயச்
சீர்திருத்தவாதிகள் ஆகிய பலரால் சாதிக்க முடியாத ஒரு காரியத்தை ஒரு
சாதாரண முதலமைச்சர் வெற்றிகரமாக செய்து முடிததுவட்டார் என்ற நிலை
ஏற்பட்டால்; இந்திய வரலாற்றிலேயே இடம் பெறக்கூடிய சாதனை அல்லவா இது?
(15.4.1954 விடுதலை தலையங்கம்)(தேசிய முரசு மாத இதழ் வெளிட்டபடி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக