சனி, 29 ஏப்ரல், 2017

இந்திய புலிகள் போர் அமைதிப்படை கருணா பொய்

aathi tamil aathi1956@gmail.com

20/7/15
பெறுநர்: எனக்கு
தமிழரசன் அப்துல்காதர்
பிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி! தமிழ் இளைஞர்களை கொன்றவர்கள்
தேசியவாதிகள்!- தமிழினத் துரோகி கருணா !
இந்திய இராணுவம் முல்லைத்தீவு காட்டுப் பகுதியை சுற்றி வளைத்த போது 40
மட்டக்களப்பு போராளிகளுடன் சென்று முற்றுகையினை உடைத்து விடுதலைப்
புலிகளின் தலைவரை காப்பாற்றிய நாங்கள் இன்று துரோகிகள். அன்று இந்திய
இராணுவத்துடன் சேர்ந்து எமது இளைஞர்களைக் கொன்றவர்கள்
தேசியவாதிகளாக்கப்பட்டுள்ளதாக தமிழின விரோத மகிந்தாவின் சிங்கள அரசில்
பிரதியமைச்சராக உள்ள விநாயக மூர்த்தி முரளிதரன் என்ற கருணா
தெரிவித்துள்ளான் .
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும்
நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. அப்போது இவ்வாறு தெரிவித்துள்ளான் .
````````````````````````````````````````````````````
இன்று தமிழ் மறவர் புலிப்படையை சார்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற மனப்பால்
தன்மையில் இந்த பொய்யான தகவலை கருணா கூறியுள்ளான் ...உண்மையில் நடந்தது
என்ன ?
இந்திய காடையர்களின் ராணுவம் முல்லைத்தீவை முற்றுகையிட்ட நேரம்
...கருணாவின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால் தலைவரால் அழைக்கப்பட்டு
விசாரணையில் இருந்த நேரம் ......
தலைவரை சுற்றி நான்கு அடுக்கு பாதுகாப்பில் புலிகள் ஈடுபட்டிருந்தனர்
.....கூர்க்கா ரெஜிமெண்டை சார்ந்த கேணல் பஸ்கி என்பவர் வீரத்துடன்
புலிகளை நோக்கி முன்னேறி வருகிறார் .....
முதல் அடுக்கில் பாதுகாப்பில் இருந்த புலிகளின் அன்பிற்குரிய மேஜர் கமல்
அண்ணை மற்றும் கேப்டன் காதர் ,கேப்டன் சலீம் போன்ற வீரர்களும்
....(கேப்டன் காதர் ஒரு கப்பல் வழக்கில் இந்தியாவால் கைது செய்யப்பட்டு
சென்னை சிறையில் இருந்தவர் ) பிப்டி குணா (fifty caliper gunaa )
(கோவையில் வைத்து தமிழக போலீஸ் கைது செய்ய முற்பட்ட சமயம் மற்ற இரு
தோழர்களுடன் சயனைட் குப்பி கடித்து வீர மரணம் அடைந்தார் வருடம் 1991
இறுதியில் )மற்றும் எனது அண்ணன் ஒருவர் ஆகியோர் இரண்டு பிரிவாக பிரிந்து
சண்டை செய்தனர் ..இதில் மேஜர் கமல் அண்ணன் மற்றும் மட்டக்களப்பை சார்ந்த
ஒரு மாவீரர் மற்றும் இன்னொரு மாவீரரும் இதில் வீரசாவடைகின்றனர் .
எதிர் தரப்பில் இந்திய ராணுவத்தின் கேணல் பஸ்கியும் இந்திய ராணுவத்தை
சார்ந்த காடையரும் கொல்லப்படுகின்றனர் ...
மேஜர் கமலின் வீர மரணத்தால் கோபம் கொண்ட பிரிகேடியர் சொர்ணம் அண்ணை படையை
ஆக்ரோசத்துடன் வழிநடத்தி இந்திய எதிரிகளை பின்னங்கால் பிடரியில் அடிக்க
விரட்டி அடித்தார் .......தலைவரை எதிரிகள் நெருங்காத வாறு பாதுகாத்தார்
....
இந்த நேரத்தில் துரோகி கருணா ..தலைவரின் பாதுகாப்பில் நன்றாக உண்டு
கொழுத்து இருந்தான் என்பதுதான் உண்மை ..
வரலாற்றை இட்டுக்கட்டும் துரோகிகளின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போட
நாங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றோம் என்பதை தெள்ளத் தெளிவாக
நினைவுப் படுத்துகிறோம் .......
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !
தொடரும் ....
தமிழரசன் ;
25 ஜூன் 2014 ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக