|
1/8/15
| |||
கி. பி ஆயிரத்திற்கும் முந்தைய காலக் கலவெட்டுக்களில் 'தெலுகு' எனும்
சொல்லையோ, கல்வெட்டுக்களைய
ோ காணமுடியாது. பதினோராம் நூற்றாண்டிலிருந்துதான், தெலுகு பூமிபாலருலு,
தெல்கரமாரி, தெலிங்ககுலகால, மற்றும் தெலுகு நாளேடான மாதவிகெறிய போன்ற
குறிப்புகளெல்லாம் கணப்படுகின்றன. பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகே
தெனுகு எனும் சொல் வழக்கில் வரத்தொடங்கியது. திரிபற்ற நிலையில், மக்கள்
பேசிவந்த 'கொடுந்தமிழில்' இலக்கியம் படைக்கத் தொடங்கினர்.
இக்கொடுந்தமிழ்தான் இலக்கிய மொழியாகவும் மாறியது. இதுவும் 'இலக்கியம்
கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்' எனும் தொல்விதிப்படியே நடந்தது. காலகாலமாக
மக்கள் பேசுவதை அப்படியே எழுதத் தொடங்கிவிட்ட நிலையில், இக்
கொடுந்தமிழும் அழிந்து அதற்கோர் புதுப் பெயரும் தோன்றியது. இப்படியே இவை
பின்னர் கன்னடம், தெலுகு, மலையாளம், துளு எனவாகிப் பின் அவற்றுக்கென
இலக்கணமும் வரையப்பெற்றன. தமிழுக்கு அன்று பிடித்த சனிதான், அவற்றோடான
தொப்புள்கொடி அறுக்கப்பட்டதும். மெழிக்குப் புதுப் பெயர்
தோன்றியதென்றால், புது இனமும் தோன்றியதென்பதுதானே உண்மையாகிறது?
இப்படிப் பேச்சு மொழியைக் கொண்டு இலக்கியம் படைக்கப் போய்த்தான் தமிழும்
பலவாறாகச் சிதைவடைந்து பன்மொழியாகவும் பல்லினமாகவும் பிரிந்தது ஐயா! இதனை
அறியாமல் இந்தப் புத்திலக்கியவாதிகள் இன்று மக்கள் பேசுவதைப்போலவே
'புதுமொழியில்' எழுதுகிறார்கள், மற்றவரையும் எழுதச் சொல்கிறார்கள்.
இப்படியே, தமிழறிவு குன்றிய இற்றைத் தமிழனும் தன் பேச்சில் பிறமொழிச்
சொற்களை மிகுதியாகக் கலந்து பேசிவருகிறான். இன்னும் சில் அறிவுப்
பெருந்தகைகளோ, நல்ல தமிழ்ச்சொற்களைக் கற்றிருந்தும் வேற்றுமொழிமீதான மாய
ஈர்ப்பால், அவற்றை இன்னும் நன்றாய்க் கலந்து பேசவும் சொல்கிறார்கள்.
கவனம்! இன்று தங்லீசு என வெறும் வேடிக்கைக்காய்ச் சொல்லப்படும் பெயரும்,
ஒருநாள் நிலைத்து, அதுவும் ஒரு மொழியாய், அதனைப் பேசுபவரும் ஒரு இனமாய்
ஒருநாள் ஆகக்கூடும். ஆக, நல்ல தமிழிலேயே இனி உரையாடுவீர், இதற்காய்
நல்லதமிழ் கற்பீர்,
தமிழ் இனி மீண்டெழும் நண்பர்களே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக