திங்கள், 24 ஏப்ரல், 2017

மதுவிலக்கு சங்ககாலம் மணிமேகலை கள் சாராயம் இலக்கியம்

tamil aathi1956@gmail.com

9/8/15
பெறுநர்: எனக்கு
பசிப்பிணி யென்னும் பாவியை இப்பாரினின்றும் ஒழிக்க முயன்றாள் ஆதிரை; அவள்
கணவனாய சாதுவன், மது என்னும் அரக்கனை இம்மாநிலத்தினின்றும் அகற்ற
முயன்றான், ஒரு நாள், கப்பலேறி வங்க நாட்டுக்குப் புறப்பட்டான்.
நடுக்கடலிற் கப்பல் செல்லும் பொழுது ஒரு சுழல் காற்று எழுந்தது. மரக்கலம்
சின்னபின்னமாகச் சிதைந்து தாழ்ந்தது.
கருங்கடலில் மிதந்த சாதுவன் கையில் ஒரு பாய்மரம் அகப்பட்டது. சிலநாள்,
இரவு பகலாக அலைகளால் மொத்துண்டு அலைந்த அம் மரம், ஒரு தீவிலே அவனைக்
கொண்டு சேர்த்தது. அங்கே, நாகர் என்னும் வகுப்பார் வாழ்ந்து வந்தார்கள்.
விலங்குகளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை இல்லை. தம்முள் ஒருவனைத்
தலைவனாகவும் குருவாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் ஆண்கரடி
போன்றவன். அவள் மனையாள் பெண்கரடி போன்றவள். கரையிலே ஒதுக்கப்பட்ட சாதுவனை
நாகர் சிலர் கண்டார்கள்; நரமாமிசம் கிடைத்ததென்று, நாக்கு ஊறினார்கள்;
தம் குருநாதனிடம் அவனைக் கொண்டு சென்றார்கள்.
பசியால் மெலிந்து, குளிரால் நலிந்த சாதுவனைக் குருநாதன் கூர்ந்து
நோக்கினான்; "நீ யார்? இங்கு வந்த காரணம் என்னை? என்று நாக நாட்டு
மொழியிலே வினவினான். அந்த மொழியை அறிந்திருந்த சாதுவன் கருங்கடலில்
நேர்ந்த துன்பத்தை உருக்கமாக எடுத்துரைத்தான்.
அந்நிலையில் குருநாதன் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது. அருந்துயருற்ற
நம்பிக்கு நாட்பட்ட கள்ளும் நல்ல ஊனும் கொடுக்கும்படி அவன் அருகே நின்ற
நாகரைப் பணித்தான்! அவ்வுரை கேட்ட சாதுவன் திடுக்கிட்டான் இருகையாலும்
செவியைப் பொத்திக் கொண்டு 'ஐயனே! கள்ளும் ஊனும் வேண்டேன்' என்று உறுதியாக
உரைத்தான். அவ்வுரை கேட்ட குருநாதன் வியப்படைந்தான்; 'கள் என்ற சொல்லைக்
கேட்ட பொழுது துள்ளி மகிழாத உள்ளமும் உண்டோ? நாவுக்கினிய ஊனையும், கவலையை
ஒழிக்கும் கள்ளையும் விலக்கலாமோ?' என்று வெகுண்டு வினவினான்.
இது கேட்ட சாதுவன் மதுபானத்தின் தீமையைக் குருநாதன் மனங்கொள்ள
உணர்த்தலுற்றான்; "ஐயனே! மானிடப்பிறவியில் நாம் அடைந்துள்ள செல்வங்களுள்
எல்லாம் சிறந்தது அறிவுச்செல்வமே ஆகும். அவ்வறிவாலேயே நன்மை தீமைகள்,
குற்ற நற்றங்கள் இவற்றைப் பகுத்து உணர்கின்றோம். இத்தகைய அறிவை
வளர்க்கின்றவர்களே மேலோர்; அதனைக் கெடுக்கின்றவர் கீழோராவர். மதுபானம்
நம் அறிவிவை மயக்குகின்றது; நாளடைவில் அதனைக் கெடுத்துவிடுகின்றது.
'செய்யத் தக்கது இது, செய்யத் தகாதது இது' என்று பகுத்தறியும் திறமையை
இழந்துவிட்டால் மாலுமியில்லாத மரக்கலம் போல நமது வாழ்க்கை நெறி
கெட்டொழியும்.
இதனாலேயே,
"மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்"
என்று சாதுவன் எடுத்துரைத்தான

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக