திங்கள், 24 ஏப்ரல், 2017

ஐயர் ஆரியர் சொல் வேர்ச்சொல் சொல்லாய்வு இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

9/8/15
பெறுநர்: எனக்கு
பார்க்கவன் தமிழன்
ஐயர்.
_________________________
ஐயர் என்பது ஐயன் என்னும் பெயரின் பன்மை. ஐயன் என்னும் பெயருக்கு 'ஐ' என்பது பகுதி.
ஐ என்பது வியப்புப் பொருள்பற்றிய ஓர் ஒலிக்குறிப்பு இடைச்சொல். இன்னும்,
வியக்கத்தக்க பொருள்களைக் கண்ட விடத்து, 'ஐ' என்பது தமிழர்க்கு,
சிறப்பாய்ச் சிறார்க்கு இயல்பு.
“ஐவியப்பாகும்”
(தொல். உரி. 89)
என்பது தொல்காப்பியம்.
ஐ + அன் = ஐயன். ஐயன் என்பான் வியக்கப்படத் தக்க பெரியோன்.
வியக்கப்படத்தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரிதாகவேயிருக்கும்.
ஒருவ னுக்குப் பெரியோராயிருப்பவர் கடவுள், அரசன், முனிவன், ஆசிரியன்,
தந்தை, தாய், அண்ணன், மூத்தோன் என்னும் எண்மராவர். இத்தனை பேரையும் ஐயன்
என்னும் பெயர் குறிப்பதாகும்.
தந்தை, ஆசிரியன், மூத்தோன், என்னுமிவரைக் குறிக்குந் தன்மையில்,. sire
என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஐயன் என்பதை ஒப்பிடலாம்.
ஐயன் என்னும் பெயர், இயல்பாய் நின்று பொதுவாகக் கடவுளையும், ஆர்
விகுதிபெற்றுச் சாத்தனாரையும், பெண் பாலீறு பெற்றுக் காளியை அல்லது
உமையையும்; நூல் வழக்கில் பெரியோன் என்னுங் கருத்துப்பற்றி அரசனையும்,
தெய்வத் தன்மையுள்ளவன் என்ற கருத்துப்பற்றி முனிவனை யும், பின்பு அவனைப்
போல அறிவு புகட்டும் ஆசிரிய னையும்; உலகவழக்கில், பறையர் என்னும்
குலத்தார்க்குத் தந்தையையும், தம், தன் முதலிய முன்னொட்டுச் சொற்களில்
ஒன்றைப் பெற்று அண்ணனையும் விளிவடிவில் மூத்தோன், பெரி யோன்
என்னுமிவரையுங் குறிப்பதாகும்.
அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவரென
நீதிநூல்களிற் குறிக்கப்படுவர். குரவர் பெரியோர். ஐயன் என்னும் பெயர்
ஐங்குரவர்க்கும் பொது வாகும்; தாயைக் குறிக்கும்போது பெண்பாற்கேற்ப ஐயை
என ஈறு மாறி நிற்கும். ஆகவே, ஐயன் என்னும் பெயர் பெரியோன் என்னும்
பொருளையே அடிப்படையாகக் கொண்ட தாகும்.
ஆசிரியன், அல்லது குரு என்னும் பொருளில், கிறிஸ் தவப் பாதிரிமாரும் ஐயர்
என்றழைக்கப்படுகின்றனர்.
பார்ப்பனருக்கு ஐயர் என்னும் பெயர் முனிவர் என்னும் கருத்துப்பற்றி
வந்ததாகும். முதன் முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த காசியபன் போன்ற ஆரியப்
பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ் முனிவரை ஒருபுடையொத்தமை பற்றி ஐயர் எனப்பட்
டனர். பின்பு அது விரிவழக்காய், கபிலர், பரணர் போன்ற வர்க்கும்,
தில்லைவாழந்தணர் போன்ற பூசாரியர்க்கும், இறுதியில் எல்லாப்
பார்ப்பனருக்கு
மாக வழங்கி வருகின்ற
து.
ஆங்கிலேயர் வருமுன் தமிழ்நாட்டிலாண்ட பல தெலுங்கச் சிற்றரசர்க்குத்
துரைகள் என்று பெயர். பாஞ்சாலங்குறிச்சித் துரை என்ற வழக்கு
இன்னுமுள்ளது. ஆங்கிலேயர் முதலாவது “கீழிந்தியக் கும்பனி” (East India
Company) அதிகாரிகளாய்த் தமிழ் நாட்டில் ஆட்சியை மேற் கொண்டபோது துரைகள்
எனப்பட்டனர். பின்பு அப் பெயர் மேனாட்டார் எல்லார்க்கும் பொதுப்
பெயராகிவிட்டது.
ஒரு குலத்தலைவனுக்குரிய சிறப்புப்பெயர், நாளடை வில் அக் குலத்தார்க்கே
பொதுப் பெயராதல் இயல்பு. நாட்டாண்மையும் ஊராண்மையும்பற்றி யேற்பட்ட நாடன்
(நாடான், நாடார்), அம்பலகாரன், குடும்பன் என்னும் தலை வர் பெயர்கள்
நாளடைவில் முறையே சான்றார், வலையர், பள்ளர் என்னும் குலத்தார்க்கே
பொதுப்பெயர்களாகி விட்டன. வடார்க்காட்டுப் பகுதியிலுள்ள இடையர்க்கு, அவர்
முன்னோருள் ஒருவன் ஓர்அரசனிடம் அமைச்சனாயிருந்தமைபற்றி, மந்திரி என்னும்
பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஐயர் என்னும் பெயரும்
பார்ப்பனருக்கு வழங்குவதாகும்.
ஐயன் என்னும் தனித் தமிழ்ப்பெயரை ஆரியன் என்னும் ஆரியப் பெயரின்
சிதைவாகச் சிலர் கூறுகின்றனர். ஆரியன் என்னும் பெயருக்கு
வணங்கப்படத்தக்கவன் என்று ஆரியர் பொருள் எழுதிவைத்திருப்
பதினாலும், தமிழ் நாட்டிற் பிற் காலத்தில் ஆரியர்க்குத் தலைமையேற்பட்டதி
னாலும், ஆரியன் என்னும் பெயர் ஐயன் என்னும் பெயர் போல, பெரியோன் என்னுங்
கருத்தில் ஆசிரியன், ஆசாரியன் முதலியோரைக் குறித்ததேயன்றி வேறன்று.
'ஆரியற் காக வேகி' என்று கம்பரும், இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக
“யார்கொல் அளியர் தாமே யாரியர்” என்று (குறுந். 7) பெரும்பதுமனாரும்,
முறையே, வணங்கப் படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ஆரியன் என்னும்
பெயரை வழங்கியிருப்பது, வடநூற் கருத்துப்பற்றிய அருகிய நூல்வழக்கேயன்றி,
ஐயன் என்னும் பெயர்போலப் பெருவாரியான தமிழ்நாட்டுலக வழக்கன்று.
ஐயன் என்னும் பெயர் ஆரியன் என்னும் பெயரின் சிதைவாயின் இவ் வொரே பெயரைத்
தந்தை பெயராகக் கொண்ட பறையர் ஆரியராதல் வேண்டும். தனித் தமிழரும்
பார்ப்பார்க்கு மிகச் சேயவருமான பறையர் அங்ஙனமாகா மையின், 'ஐயன்' என்னும்
சொல் 'ஆரியன்' என்னும் சொல்லின் சிதைவன்று.
'Ar' (to plough) என்பதை ஆரியன் என்னும் பெயருக்கு வேராகக் கொள்வர் மாக்சுமுல்லர்.

யார்தான் ஆரியர் வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக